தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அம்பகரத்தூர் அருள்மிகு பத்ரகாளி அம்மன் தேவஸ்தானம் மகிஷ சம்ஹார நினைவு பெருந்திருவிழா 2019 வை முன்னிட்டு நாளது 28.5.2019 நடந்த பிரபல திரைப்பட இசையமைப்பாளர் கலைமாமணி பரத்வாஜ் குழுவினர் வழங்கும் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் அம்பகரத்தூர் பத்திரகாளி அம்மன் கோயிலின் மகிமை பற்றிய ஆன்மீக பாடலை அம்பையை சேர்ந்த கனடா வாழ் ஸ்ரீராம் அவர்களின் வரிகளில் கலைமாமணி பரத்வாஜ் அவர்களின் இசையமைப்பில் அபிநயா சரவணன் குரலிசையில் பாடல் தொகுப்பினை இசையமைப்பாளர் பரத்வாஜ் அவர்கள் வெளியிட நிர்வாக அதிகாரி சுந்தர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
கோயில் அறங்காவலர் வாரிய தலைவர். கே. பாஸ்கரன், இராமலிங்கம் (எ) இளமாறன், துணை தலைவர். செயலாளர். பி. கலியபெருமாள் (எ) ரமேஷ், பொருளாளர். v.p. காமராஜ், உறுப்பினர். கே. ஐயா சாமி அவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் திரு. ராதாகிருஷ்ணன், கோயில் கட்டடக்கலை நிபுணர் Ar.N.சரவணன், உள்ளூர் நாடக கலைஞர்கள் திரு. ராஜேந்திரன், காளிதாஸ் மற்றும் K.R.M. பள்ளி உரிமையாளர் முருகேசன், கோயில் அதிகாரி திரு. ஆனந்த் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
Music composer Bharadwaj Orchestra happened at Karaikal Ambagarathur temple