கேரளாவில் என்ஜிகே சூட்டிங்; சூர்யாவின் டூயட்டை படமாக்கும் செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா படத்தை செல்வராகவன் இயக்குகிறார் என்ற செய்தி வந்தவுடனே அனைவரின் எதிர்பார்ப்பும் அதிகரித்த்து.

ஆனால் நாள் ஆக ஆக அதன் மீதான எதிர்பார்ப்பு குறைய ஆரம்பித்தது.

காரணம் படத்தின் தகவல்கள் சரியாக வரவில்லை. மேலும் சூட்டிங்கையும் சில மாதங்கள் நிறுத்தி வைத்தனர்.

இதனிடையில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்க சென்றுவிட்டார் சூர்யா.

தற்போது மீண்டும் என்ஜிகே சூட்டிங்கை தொடங்கியுள்ளார் செல்வராகவன்.

இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கேரளாவில் கொச்சி அருகேயுள்ள மட்டாஞ்சேரி பகுதியில் நடைபெற்று வருகிறது.

சூர்யா மற்றும் ரகுல் பிரீத் சிங் நடிக்கும் ஒரு பாடலை இங்கே படமாக்குகிறார்களாம்.

மற்றொரு நாயகியாக சாய்பல்லவி நடிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Suriyas NGK movie last shoot schedule happening at Kerala

சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்தநாளில் *பேட்ட* பட டீசர் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த டிசம்பர் மாதம் தொடங்கியது முதல் ரஜினியின் பேட்ட பட செய்திகள் இணையத்தை கலக்கி வருகிறது.

டிசம்பர் 3ல் மரண மாஸ் பாடல், பின்னர் டிசம்பர் 7ல் தலைவர் பைலா, அதனையடுத்து டிசம்பர் 9ல் அனைத்து பாடல்களையும் வெளியிட்டனர்.

அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நாளை டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

எனவே அடுத்த அதிரடியாக ரஜினி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பேட்ட பட டீசரை நாளை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, சசிகுமார், நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, மூத்த இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

2019 பொங்கலுக்கு பேட்ட பராக் என அறிவித்துள்ளனர்.

நாளை தன் பிறந்த நாள் அன்று சென்னையில் இருக்க மாட்டேன். எனவே தன் ரசிகர்கள் நேரில் வந்து ஏமாற வேண்டாம் என ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

Petta Teaser will be released on Rajinis Birthday at 11am

நடிகர் சதீஷ் ரகசிய திருமணமா..? வைரலாகும் கல்யாண போட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் படங்களில் நடித்துள்ளவர் காமெடி நடிகர் சதீஷ்.

இவர் ஒரு பெண் கழுத்தில் தாலி கட்டும் ஒரு போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குனர் பிஜி முத்தையா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டு திருமண வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்,

அது நிஜ திருமணம் அல்ல. உண்மையில் ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட சீன் என நடிகர் சதீஷ் கூறியிருக்கிறார்.

Actor Sathish marriage photo goes viral

நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல படாத பகுதிகளில் நடிகர் ஆதி உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் விவசாய மக்களுக்கு பல இளைஞர்கள்” பொது சேவை மையங்கள்”நிவாரண பணிகளை மேற்க்கொண்டு வரும் நிலையில்- நடிகர் ஆதி மற்றும் அவரின் குழு’ புயலால் பாதிக்கப்பட்ட”மற்றும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல படாத பகுதிகளை கண்டறிந்துள்ளனர்.

“பேராவூரணி” அறந்தாங்கி” பகுதியை சுற்றியுள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த’புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 520 குடும்பங்களுக்கு, மிகவும் முறையாக அந்தந்த குடும்ப ஆவணங்களை கொண்டு” தற்போதைய முக்கிய தேவையான சுமார் 5டன் எடை கொண்ட பொருட்கள் – தார்பாய் – சோலார் லைட்- கொசுவலை – போர்வை – மருந்துகள்-மற்றும் உணவு பொருட்கள் 1-12-2018 அன்று வழங்கினர்.

மேலும் அங்கு சென்று பார்த்ததில் மிக பெரிய பேரிடரை சரி செய்யவும்” விவாசாய மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பவும்”அனைவரும் ஒன்று சேர்ந்து உதவி செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

தன் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்பு செயலியை வெளியிடும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“நமது உயர்திரு. ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு Peace for children அறக்கட்டளையும் அதன் அனைத்து உறுப்பினர்களும் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளின் சார்பாகவும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

மிக சிறப்பான இப்பிறந்தநாளை மேலும் முக்கியமான ஒன்றாக்க இந்நாளில் எங்களது கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் (TOLL FREE NUMBER) குழந்தை பாதுகாப்பிற்கான ஒரு செயலியையும் (APP) வெளியிடுகிறோம்.

இந்நன்னாளில் இதை வெளியிடுவதற்கு ஒப்புதல் கொடுத்த உயர்திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு மீண்டும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.”

வெங்கட் பிரபு தரும் *பார்ட்டி*யில் எல்லோரும் கலந்துக்கலாம்; என்ஜாய் பண்ணலாம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிச்சயமாக, வெங்கட் பிரபுவின் ஒவ்வொரு படமும், அது எந்த வகை படமாக இருந்தாலும் சரி, அது ஒரு பார்ட்டி உணர்வை வழங்கும். தற்போது அவருடைய படத்தின் பெயரே ‘பார்ட்டி’ என்பதால் அது மிகப்பெரிய பொழுதுபோக்கை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. வழக்கமாக குழந்தைகளை யாரும் ‘பார்ட்டி’க்கு அழைக்க மாட்டார்கள். ஆனால் வெங்கட் பிரபு அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். ஆம், வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்த்து மகிழும் ஒரு அழகான பொழுதுபோக்கு விழாவாக இருக்கும்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா கூறும்போது, “வெங்கட் பிரபு பெரியவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நினைத்து மிகைப்படுத்தி எந்த படத்தையும் எடுத்ததில்லை. அவரது முந்தைய திரைப்படங்களை பார்த்தாலே மிகவும் தெளிவாக தெரியும், அவரின் இலக்கு எப்போதும் அனைத்து தரப்பு மக்களுக்குமான படத்தை தருவது தான். நிச்சயமாக, பார்ட்டி படத்தின் கதை நடக்கும் பின்னணியால் படம் கிளாமர் விஷயங்களை கொண்டிருக்கும். சிபிஎஃப்சி உறுப்பினர்கள் எங்கள் படத்தின் முதல் பார்வையாளர்களாக இருந்து படத்தை சரியாக மதிப்பிட்டிருப்பது எங்கள் குழுவுக்கே மகிழ்ச்சியளிக்கிறது.

படத்தின் கதையை பற்றி தயாரிப்பாளர் டி சிவா கூறும்போது, “கதையை பற்றிய எதையும் இப்போது வெளிப்படையாக கூறமுடியாது. ஆனால், ஒரு புத்தாண்டு கொண்டாத்தின் போது கதை நடக்கிறது. அதில் நிறைய கதாபாத்திரங்கள், ட்ராமா, ஆக்‌ஷன், காமெடி மற்றும் வெங்கட் பிரபுவின் பேக்கேஜ் நிச்சயமாக இருக்கும்” என்றார்.

பார்ட்டி படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், சம்பத் ராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரேம்ஜி அமரனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஒரு முழுமையான பார்ட்டி உணர்வை உருவாக்கியுள்ளது. ஃபிஜி தீவுகளை ராஜேஷ் யாதவ் தனது ஒளிப்பதிவால் மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். பிரவீன் KLன் சிறப்பான எடிட்டிங் படத்தை சரியான வேகத்தில் கொண்டு செல்லும்.

More Articles
Follows