பொள்ளாச்சியில் முகாமிட்டுள்ள சூர்யாவின் என்ஜிகே டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவை இயக்குகிறார் செல்வராகவன் என்ற அறிவிப்பு வந்த உடனே எல்லாராலும் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இப்படத்திற்கு என்ஜிகே எனத் தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

ஆனால் படத்தின் சூட்டிங் மட்டும் முடியாமல் இழுத்துக் கொண்டே போனது.

அதற்குள் கே.வி. ஆனந்த் படத்தில் நடித்துவிட்டு வந்துள்ளார் சூர்யா.

தற்போது மீண்டும் என்ஜிகே சூட்டிங்கில் கலந்துக் கொண்டு நடித்து வருகிறார் சூர்யா.

சில தினங்களுக்கு முன் கேரளாவில் நடைபெற்ற இதன் சூட்டிங் தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யாவுடன் ரகுல் பரீத் சிங், சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

தென்னிந்திய நடிகர்களில் தனுஷ் முதலிடம்.; புதிய சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டில் நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என கலக்கி வருபவர் தனுஷ்.

இளம் வயதிலேயே தேசிய விருது பெற்றதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இதனையடுத்து பாலிவுட் படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அமிதாப் பச்சன் உடன் இணைந்து ஷமிதாப் படத்திலும் நடித்தார்.

இதனையடுத்து ஹாலிவுட் படத்திலும் நடித்தார். இதனால் நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் தன் படங்களின் தகவல்கள் ட்விட்டரில் பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவரை ட்விட்டரில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை தற்போது 8 மில்லியனை கடந்துள்ளது.

அதாவது 80 லட்சத்திற்கும் அதிகமானோர் ட்விட்டரில் பின்பற்றுகின்றனர்.

இதன் மூலம் தென்னிந்திய நடிகர்களில் பாலோயர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீசாக உள்ளது.

Dhanush reached 8 million followers in Twitter and He became first in Sound Indian actors

Breaking தனுஷையும் ஜெயிலுக்குள் கொண்டு வந்த ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளாராக ஜி.வி. பிரகாஷ் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது வசந்தபாலன் இயக்கும் ஜெயில் படத்தில் நாயகனாகவும் இசையமைப்பாளராகவும் பணி புரிந்து வருகிறார்.

இதில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்ணதி நாயகியாகவும், பள்ளிப்பருவத்திலே நாயகன் நந்தன் ராம், பசங்க பாண்டி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் உள்ள ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருப்பதாகவும் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஜிவி. பிரகாஷ்.

நல்ல நண்பர்கள் 8 வருடத்திற்கு பிறகு இணைந்துள்ளோம் என அதில் தெரிவித்துள்ளார்.

Dhanush sings in GV Prakashs Jail movie

அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களை இயக்கும் வினோத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஸ்வாசம் படத்தை முடித்துவிட்டு அஜித் யார் படத்தில் நடிப்பார்? என்பதே பலரின் கேள்வியாக இருந்தது.

இத்தனை நாள் காத்திருப்புக்கு அதிரடி தகவலாக அஜித்தின் 59 மற்றும் 60 ஆகிய இரண்டு படங்களையும் வினோத் இயக்கவுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த இரண்டு படங்களையும் மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இதில் அஜித் 59 படம் அமிதாப் நடித்த பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாக உள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

முக்கிய கேரக்டர் ஒன்றில் அஜித்தின் நண்பராக டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

இந்த தல 59 படத்தை 2019ல் ஆண்டில் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி வெளியிட திட்டம் தீட்டியுள்ளனர்.

இதனையடுத்து தல 60 படத்தை 2019 ஜீலையில் தொடங்கி 2020 ஆம் ஆண்டில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

பிக்பாஸ் ஜோடி சினிமாவில் இணைந்தது; ஆரவ் உடன் ஓவியா ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்களின் செய்கைகளால், மக்கள் கவனத்தை ஈர்த்து இடைவிடாது தலைப்பு செய்திகளிலேயே இருந்தனர் ஆரவ்வும், ஓவியாவும். அவர்களது ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டமான செய்தி வந்திருக்கிறது. ஆரவ்வின் ‘ராஜபீமா’ படத்தில் ஒரு நீட்டிக்கப்பட்ட சிறப்பு தோற்றத்தில் ஆரவுடன் இணைந்து நடிக்கிறார் ஓவியா. இந்த சிறப்பு கதாபாத்திரத்தில் ஓவியா நடிப்பதால் ஒட்டுமொத்த குழுவினரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் நமக்கு இன்னொரு சந்தோஷம் கலந்த ஆச்சர்யத்தையும் அளிக்கிறார்கள். ஓவியா படத்தில் நடிப்பதோடு, ஒரு குத்துப்பாட்டுக்கு ஆரவ்வுடன் ஜோடியாக நடனம் ஆடுகிறார். கடந்த இரண்டு நாட்களாக பொள்ளாச்சியின் அழகிய பகுதிகளில் இந்த பாடல் வெற்றிகரமாக படம் பிடிக்கப்பட்டது. மேலும், ஜனவரி மாதம் ஓவியா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. மேலும் அவர் திரையில் தோன்றும் நேரம் (ஸ்கிரீன் டைம்) படத்தின் சிறப்பம்சமாக இருக்கும்.

‘ராஜாபீமா’ மனிதன் – மிருக முரண்பாடுகளை சுற்றி உருவாகும் ஒரு திரைப்படம். நரேஷ் சம்பத் இயக்கும் இந்த படத்தை எஸ்.மோகன் தயாரிக்கிறார். பாலக்காடு, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அழகிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. மிக வேகமாக படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரை நகர்ப்புற (Semi urban) பின்னணியில் படமாக்கப்படும் முதல் மனிதன், விலங்கு சார்ந்த திரைப்படம் என்பது ராஜாபீமாவின் இன்னுமொரு முக்கியமான சிறப்பம்சம்.

சிவகார்த்திகேயன் எதற்கும் தயங்கவில்லை.. – *கனா* ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு நடிகர் மற்றும் இயக்குனர் பல்வேறு வகையான படங்களை எடுத்து ரசிகர்களை மிரள வைத்தாலும், அதில் மிகப்பெரிய பாராட்டு ஒளிப்பதிவாளர்களையே சாரும். குறிப்பாக, தினேஷ் கிருஷ்ணன் போன்ற ஒரு மாயாஜால வித்தைக்காரர், பல்வேறு வகை திரைப்படங்களில் வெவ்வேறு வகையிலான வண்ணங்களை சிறப்பாக கையாண்டு, தன் தனித்துவமான திறன்களை நிரூபித்தவர், கனா எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று கூறுகிறார். குறிப்பாக, கனாவின் காட்சி விளம்பரங்களில் கேமரா கோணங்கள் மற்றும் டோன்களின் மாறுபாடுகளை பார்க்கலாம். இந்த படத்தின் கதையே இரண்டு வெவ்வேறு பின்னணிகளில் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று கிராமப்புற பின்னணி, மற்றொரு கிரிக்கெட் மைதானம் இவை இரண்டுமே ஒளிப்பதிவாளருக்கு வேலைப்பளுவை அதிகமாக்கியிருக்கிறது. கிரிக்கெட் ஸ்டேடிய காட்சிகள் தொழில்முறை கேமரா குழுவினர் உதவியுடன் மல்ட்டி கேமரா செட் அப் மூலம் படமாக்கப்பட்டது. கிரிக்கெட் பந்தின் சின்ன அசைவுகளை கூட மிக துல்லியமாக படம் பிடித்திருக்கிறது. ஆனாலும், தினேஷ் கிருஷ்ணனுக்கு இது ஒரு இரட்டை சுமையாக இருந்தது.

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் கூறும்போது, “இந்த பெருமை எல்லாம் அருண்ராஜா காமராஜ், அவரது உதவி இயக்குனர்கள் மற்றும் ஸ்டோரிபோர்டு கலைஞர்களையே சாரும். படப்பிடிப்பின் சவால்களையும் அழுத்தங்களையும் நான் உணரும் முன்பே, அவர்கள் என்னென்ன படம்பிடிக்க வேண்டும், எது தேவை என்பதை தெளிவாக்கி உதவினார்கள். இது கிரிக்கெட் போட்டிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்போது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

கானா ஒரு எமோஷனல் திரைப்படம் மட்டுமல்ல, ஏராளமான துணிச்சலான தருணங்களும் உள்ளன. வழக்கமாக, உணர்வுப்பூர்வமான காட்சிகள் க்ளோஸ் அப் ஷாட்களை கோரும். மிக வேகமாக நடக்கும் கிரிக்கெட் போட்டிகளிடையே உணர்வுகளை படம் பிடிக்க, சமநிலையை பேண கஷ்டமாக இருந்தது. மேலும், சத்யராஜ் சார், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற பிரம்மாண்டமான, சிறந்த நடிகர்கள் நடிக்கும்போது, எனது பொறுப்பு அதிகமானது. இருப்பினும், ஒரு திறமையான குழுவின் முயற்சியாலும், ஒரு தெளிவான நுண்ணறிவாலும் எங்கள் வேலை எளிதானது.

எனது கருத்துக்களுக்கு முழுமையாக மதிப்பளித்து, வேண்டியதை செய்து கொடுத்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. அவர் எதற்க தயங்கவே இல்லை. அவரது ஒரே நோக்கம் நல்ல தரமான படத்தினை வழங்குவது தான். அதனால் செலவழிக்க ஆர்வமாக இருந்தார். நான் எப்போதும் அவரது தோற்றத்தை திரையில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது புதிய தோற்றத்தை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்து, அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள கனா, வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

More Articles
Follows