சமுத்திரக்கனி ரசிகன் நான்.. – பாலா Vs பாலா என்னை நடிகராக ஒத்துக்கலை..? – சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனி ரசிகன் நான்.. – பாலா Vs பாலா என்னை நடிகராக ஒத்துக்கலை..? – சமுத்திரக்கனி

*சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் – இயக்குனர் பாலா.*

அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில் தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று ஏப்ரல் 27 ஆம் தேதி காலை வடபழனியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பாலா, பாபி சிம்ஹா, நடிகர் சூரி, இயக்குனர் பாண்டியராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பிருத்தவி போலவரபு – தயாரிப்பாளர் பேசுகையில்…

சமுதிரக்கனி அண்ணனின் உதவி இல்லாமல் இந்த படத்தை என்னால் தயாரித்து இருக்க முடியாது. இந்தப்படம் உருவாக மிக முக்கியக்காரனமாக இருந்தவர் கனி அண்ணந்தான். தந்தை மகன் உறவுச் சிக்கல் குறித்து பேசும் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது கட்டாயம் மக்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

நடிகை மோக்‌ஷா பேசுகையில்…

தமிழில் இது என்னுடைய முதல் படம். எனக்கு தமிழ் திரைப்படங்களை மிகவும் பிடிக்கும் தமிழ் ரசிகர்களையும் பிடிக்கும் தமிழ்ரசிகர்கள் கட்டாயம் ஆதரவு கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நடிகர் தீபக் பேசுகையில்…

கனி சார் எடுக்கக்கூடிய நடிக்கக்கூடியப் படங்கள் எப்போதும் சிறந்த கருத்துகளை அடங்கிய படங்களாக இருக்கும் இந்த படத்திலும் நல்ல கருத்துகளோடு வருகிறார் என்று ரசிகர்களைப் போல் நானும் நம்பிக்கையாக இருக்கிறேன் படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.

நடிகர் ஹரிஷ்.

ஒரு நேர்மையான கதைக் களத்தோடு இந்தப்படம் வருகிறது. எப்போதும் possitive vibe உடையவர் கனி அண்ணன்.எல்லா படங்களைப் போலவும் இந்தப் படத்திற்கு அவரது முழு உழைப்பை அளித்திருப்பார் கட்டாயம் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

நடிகர் பாபி சிம்ஹா.

ராமம் ராகவம் படத்தின் இயக்குநர் தன்ராஜ் என்னுடைய நண்பர். கடுமையாக உழைக்கக்கூடியவர் 7
மகனுக்கும் அப்பாவுக்கும்மான உறவு பற்றிய கதையை என்னிடம் சொன்னார். வியப்பாக இருந்தது.

அப்பா கதாபாத்திரம் யார் என்று கேட்டேன் கனி அண்ணன் என்று சொன்னார். இனி இந்தப் படம் அவருடையது.. இந்தப் படத்தை அவர் எப்படி கொண்டு போகிறார் என்பதை மட்டும் பாருங்கள் என்றேன்.

அதைப் போலவே இந்த படம் அருமையாக வந்திருக்கிறது என்று நம்புகிறேன் படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில்…

என் கூட பிறக்காத அண்ணன் கனி அண்ணன். கதைகளைத் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு அலுவலகமாக செல்வோம். அப்படி சசி குமார் அண்ணன் அலுவலகத்தில் எனக்கு முன்பாக அமர்ந்திருந்தார் வாவா உனக்கு முன்னாடியே வந்துட்டேன்னு சொன்னாரு. அப்படிதான் அண்ணனோடு எனக்கு அறிமுகம் .

பசங்க படத்தில் அன்பு அப்பாவின் கதாபாத்திரத்திற்கு கனி அண்ணா தான் டப்பிங் பண்ணி கொடுத்தார். அண்ணன் கிட்ட ஒரு குணம் இருக்கிறது.
பெரிய கம்பெனி கிட்ட வாங்கி இல்லாதவங்களுக்கு கொடுப்பாரு சின்ன கம்பெனி புது இயக்குநர் படத்திற்கு சும்மா நடித்து கொடுப்பார். அப்படி நான் என்னுடைய பல படங்களுக்கு உதவி இருக்கிறார்.

தன்னுடைய படமாக இருந்தாலும் சரி வேறொருவர் இயக்குகிற படமாக இருந்தாலும் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுக்கக்கூடியவர். இந்த படத்திலும் அவருடைய உழைப்பை டீசரில் பார்க்க முடிந்தது. இந்தப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.

நடிகர் தம்பி ராமையா பேசுகையில்..

அரசியலில் கிங்மேக்கர்கள் எத்தனை காலம் கடந்தும் தடம் பதிப்பார்கள், அதுபோல தமிழ் சினிமாவில் ஹீரோ மேக்கர்ஸ் பாலா சார், தம்பி பாண்டிராஜ் ஆகியோர்கள்.

அன்பினால் எல்லோரிடமும் உறவுக்காரராக மாறிவிடுபவர் சமுத்திரக்கனி என்னுடைய அருமை தம்பி. அவர் இந்த படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இன்றய சூழலில் அப்பா செண்ட்மெண்ட் திரைப்படங்கள் தேவைப்படுகிறது. படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.

நடிகர் சூரி பேசுகையில்…

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடி இங்க ஹிட் ஆனது போல தெலுங்கில் பெரிய ஹிட். அந்த காமெடியை தன்ராஜ்தான் நடித்ததாக சொன்னார். அப்போதிலிருந்து அவர் என்னுடைய நம்பராக அறிமுகமானார்.

அப்பா மகன் உறவு தொடர்பான கதையம்சம் கொண்ட படங்கள் தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை. இந்தப்படமும் கட்டாயம் வெற்றி பெரும். ஒரு படம் எடுப்பதை விட மக்களிடம் கொண்டு சேர்பதுதான் சிரமமாக இருக்கிறது.

இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்ல நிறைய சிரமம் எடுத்துள்ளனர். கனி அண்ணன் நெகட்டிவாக பேசினதா நான் கேட்டதே இல்லை.. உங்கள் உழைப்பு இந்தப்படத்திலும் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன் படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.

இயக்குனர் தன்ராஜ் பேசுகையில்…

இந்த நாளுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் நன்றி. சிவபிரசாத் எழுத்தாளரின் கதை இது. இந்த கதை குறித்து கனி அண்ணனிடம் கூறினேன். கதையை நீயே இயக்க வேண்டும் என்று கூறினார். எனக்கு ஒரு தயக்கம் இருந்தது நான் நடித்த படங்களில் வேலை பார்த்த இயக்குனர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டதை வைத்து படத்தை இயக்கி இருக்கிறேன். சமுத்திரக்கனி அண்ணன் இல்லையென்றால் இந்த படம் உருவாகி இருக்காது.

அண்ணனைப் போல நல்ல கதைகள் ஆதரித்து ஊக்கம் அளித்தால் சினிமாவிற்கு நல்ல திரைப்படங்கள் வரும். ஒவ்வொருவரும் தன் அப்பாவோடு வந்து கட்டாயம் இந்தப் படத்தை பாருங்கள்.

சமுத்திரக்கனி பேசுகையில்…

நெகிழ்வான தருணம். ஒவ்வொரு தகப்பனும் ஒரு சகாப்தம். 10 அப்பா படம் பண்ணிட்டேன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. இதுவும் அப்படியான வேறொரு கதை.

தன்ராஜிக்கு தகப்பனும் இல்லை தாயும் இல்லை. தானே உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

சாட்டை படத்தின் ஒரு நிகழ்ச்சியில் போது தம்பி ராமையா கதறி அழுதார்.. அப்போது அவர் சொன்னார்.. யாருடைய துணையும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தோம்.. இன்று உழைத்து ஜெயித்து காட்டி விட்டோம்” என்றார்.

‘போராளி’ படத்தில் ஒன்றாக பணிபுரிந்தோம். இன்று கதையின் நாயகனாக வளர்ந்து விட்டார் சூரி. அவருடைய படத்தில் நான் நடித்திருக்கிறேன்.

எனக்கு பிடித்த இயக்குனர் பாலா.. அவருடைய படங்களில் என்னை நடிக்கவே அழைக்க மாட்டார்.. ஒருவேளை என்னை ஒரு நடிகராக ஒத்துக்கலையே என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருக்கும்.. நானும் அவரிடம் கேட்டு இருக்கிறேன். நேரம் வரட்டும் என்பார்.. இப்போது ‘வணங்கான்’ படத்தில் என்னை நடிக்க வைத்து இருக்கிறார் பாலா.

அப்பா என்றாலே ஒரு வேதியல் மாற்றம் நிகழும்.. அப்பா கதை என்றாலே வாங்க கேட்போம் பண்ணுவோம் என்று சொல்லி விடுவேன்… வெறும் நம்பிக்கையை மட்டுமே வைத்திருப்பவர்கள் சிறப்பாக படம் பண்ணிடுவாங்க.. தன்ராஜை அப்படி நம்பி இந்த படத்துக்குள்ள வந்தேன்.

ஒவ்வொரு தகப்பனுக்கும் மகனுக்கும் உள்ள உறவுக்குள் அவ்வளவு சிக்கல்கள் இருக்கு. இன்னும் 10 படம் கூட பண்ணலாம்.

தயாரிப்பாளரை நான் பார்த்ததே இல்லை. படபிடிப்பில்தான் முதல் முறையாம பார்த்தேன். என்னைப் பார்க்காமலே என் மீது நம்பிக்கை வைத்த தம்பி. மாபெரும் உறவோடு வந்து இருக்கிறார் வாழ்த்துகள் தம்பி.

இந்த படத்தை இயக்க தன்ராஜ் வேரொரு இயக்குநரை அழைத்து வந்தார். இந்த படத்தை எடுக்க ஒரு நல்ல இயக்குநரை கொண்டு வாருங்கள் என்றேன். இயக்குனர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகச் சொன்னார் நீயே படம் பண்ணுனு சொன்னேன் இயக்குனராக மாறி இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு ஒரு வெளிச்சம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இயக்குனர் பாலா பேசுகையில்…

சமுத்திரக்கனியின் மாபெரும் ரசிகனாக நான் வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நடிகனாக அவர் நிரூபித்து விட்டார். அவருடைய உழைப்பிற்கும் நான் ரசிகன்தான். கடுமையாக உழைக்கக்கூடியவர்.

மற்றவர்களுக்கு உதவக்கூடிய அவருடைய தன்மை எனக்கு வியப்பாக இருக்கும். உதவுவதில் அவருக்கு பெரிய மனசு இருக்கு. இந்த படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.”

Samuthirakani speech at Ramam Raghavam Teaser launch

இளம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் மெகா ‘ஸ்டார்’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் மெகா ‘ஸ்டார்’ கூட்டணி

*கவின்+யுவன்+ இளன் கூட்டணியின் இளமை ததும்பும் ‘ஸ்டார்’ பட முன்னோட்டம்*

‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றி பெற்றத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்டார்’ எனும் திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

கலை இயக்கத்தை என். வினோத் ராஜ்குமார் கவனிக்க.. படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார்.

பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்மன்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. வி. எஸ். என். பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் பி. ரூபக் பிரணவ் தேஜ், சுனில் ஷா, ராஜா சுப்பிரமணியன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்திருக்கிறது. அதிலும் நடிகர் கவின் இளம் பெண்ணாக தோன்றும் பாடல் காட்சி.. ரசிகர்களிடத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னோட்டத்திலும் ரசிகர்களை கவரும் பல காட்சிகள் இடம் பிடித்திருப்பதால்.. இதற்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மூன்றெழுத்து படைப்பாளிகள் மூவரும் ஒன்றிணைந்து, ‘ஸ்டார்’ எனும் மூன்றெழுத்தில் இளமை ததும்பும் படைப்பை வழங்கி இருப்பதால்.. இளைய தலைமுறையினர் மற்றும் இணைய தலைமுறையினரிடத்தில் இந்த முன்னோட்டத்திற்கு ஆதரவு அபிரிமிதமாக பெருகி வருகிறது.‌

இதனால் எதிர்வரும் மே 10 தேதியன்று வெளியாகும் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு .. அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் எக்கச்சக்கமாக எகிறி இருக்கிறது.

Yuvan ilan and Kavin combo Star movie trailer

ஆசை காட்டும் ஆடம்பர லைப்… ‘ராபர்’ ஆக மாறிய வில்லேஜ் பாய்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரை தாக்கிய மக்கள்..; ‘மெட்ரோ’ பட ஸ்டைலில் ராவ்வாக வரும் ‘ராபர்’.; கவிதாவுக்கு சிவகார்த்திகேயன் ஆதரவு

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘ராபர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. ‘மெட்ரோ’ சத்யா நாயகனாக நடிக்கும் ‘ராபர்’

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’.

இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.

இப்படத்தின் கதை என்ன?

பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன். ஒரு கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி வேலை தேடி வருகிறான் நாயகன்.

சென்னையின் பகட்டும் பளபளப்பும் அவனைக் கவர்கின்றன. மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கை மேல் அவனுக்குப் பிரமிப்பும் ஈர்ப்பும் வருகின்றன. தானும் இது போல் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

ஆசை வெட்கம் அறியாது; அதை அடையும் வழியின் ஆபத்தையும் உணராது .நாயகன் தன் விருப்பத்தை அடையும் வழி கடினமாக இருக்கவே குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கிறான்.. ‘உலக மக்களின் துன்பங்களுக்குக் காரணம் ஆசையே’ என்றார் புத்தர்.

நாயகனின் ஆசை பேராசையாகி வெறியாக மாறுகிறது. அவனது குறுக்கு வழி திருட்டு வழியாக மாறுகிறது. ஆம். அவன் திருட்டுத் தொழிலில் இறங்குகிறான்.

நாயகன் தேர்ந்தெடுத்த பாதை அவன் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதே ‘ராபர்’ படத்தின் கதை.

இப்படத்தின் கதை, திரைக்கதையை ‘மெட்ரோ’ , ‘கோடியில் ஒருவன்’ படங்களின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

‘ராபர்’ படத்தை தனது இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் எஸ் .கவிதா தயாரித்துள்ளார். இவர் ஊடகத்துறையில் சுமார் 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறவர். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களையும் ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார்.

‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்ற ஆல்பத்தையும் உருவாக்கி உள்ளார். நடிகர் ஜனகராஜை பிரதான பாத்திரம் ஏற்க வைத்து ‘தாத்தா’ என்கிற குறும்படத்தையும் தயாரித்துள்ளார்.. அந்தப் படம் ஷார்ட் ப்ளிக்ஸ் சேனலில் விரைவில் வெளியாக உள்ளது.

தயாரிப்பாளர் கவிதா ‘ராபர்’ படம் பற்றிப் பேசும்போது,

“உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பதால் காட்சிகளும் உண்மைக்குப் பக்கத்தில் இயல்பாக இருக்கும்.

‘ராபர்’ படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

அப்படி ஒரு காட்சியை செம்மஞ்சேரி குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது படத்தில் திருடனாக நடித்துக் கொண்டிருந்த துணை நடிகரை உண்மையான திருடன் என நினைத்து அப்பகுதி மக்கள் தாக்கி விட்டனர்.

இது படத்தின் காட்சிகள் இயல்பாக இருப்பதற்கான ஒரு சின்ன உதாரணம் என்று சொல்வேன்.

நகர்ப் பகுதிகளில் குறிப்பாக மாநகரங்களில் நடைபெறும் குற்றச் செயல்களின் பின்னணியில் கஞ்சா, மது மற்றும் போதைப் பொருள்களின் புழக்கம் இருப்பதாகக் குற்றவியல் சார்ந்த புள்ளி விவரம் கூறுகிறது..

இது போன்ற போதைப் பழக்கங்கள் இளைஞர்களை முன்னேற விடாமல் , சிந்திக்க விடாமல் குற்றச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. அதைப் பார்ப்பவரை உணரவைக்கும்படி இந்தப் படம் அமைந்திருக்கும்.

இந்த’ ராபர்’ திரைப்படம் படத்தின்’ டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ‘எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

மே மாதத்தின் இறுதியில் ராபரை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்கிறார்.

இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே ‘மெட்ரோ’ படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.
இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.

படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் NB, கலை PPS விஜய் சரவணன், நடனம் ஹரி கிருஷ்ணன்.

அருண் பாரதி, லோகன், ஜோகன் சிவனேஷ் ,மெட்ராஸ் மீரான், சாரதி எழுதிய பாடல் வரிகளை அந்தோணி தாசன், வித்யா கல்யாணராமன், ஜோகன் சிவனேஷ் ஆகியோர் பாடியுள்ளார்கள்.

இவ்வாறு ஆர்வமுள்ள திறமைக் கரங்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு எஸ். எம். பாண்டி இயக்கி உள்ளார்.

கோடை விருந்தாக இப்படம் மே மாதம் இறுதியில் வெளியாகும் வகையில் படப்பிடிப்புக்குப் பிந்தைய மெருகேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Sivakarthikeyan launches Robber look and wishes Kavitha

ஆக்ஷனில் விளாசிய விஷால்.. ‘ரத்னம்’- படத்திற்கு தென்னிந்தியாவில் ரத்தின கம்பளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆக்ஷனில் விளாசிய விஷால்.. ‘ரத்னம்’- படத்திற்கு தென்னிந்தியாவில் ரத்தின கம்பளம்

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் ரத்னம்.. விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் ஹரியுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து வெளியாகி உள்ள திரைப்படம் ரத்னம். உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

இதில் விஷாலுடன் பிரியா பவானி சங்கர் சமுத்திரக்கனி யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க சுகுமாரன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

கனல் கண்ணன் மற்றும் பீட்டர் ஹெயின் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளனர். வழக்கம்போல ஆக்சன் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் விஷால். இது ஆக்ஷன் ரசிகர்களையும் விஷால் ரசிகர்களையும் அதிகளவில் கவர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது.

6 முதல் 60 வயது வரை என அனைவரும் கொண்டாடும் வகையில் இருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அனைத்து இடங்களிலும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து மாபெரும் வெற்றி பெற்றது.

அந்த வரிசையில் ரத்னம் திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையை படைக்கும் என கூறப்படுகிறது. விஷாலின் திரைப்பயணத்தை ‘ரத்னம்’ திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு கொண்டும் செல்லும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Rathnam movie got huge response in South India

ஐடி வேலை.. ஆனாலும் ‘ஹாஃப் பாட்டில்’ ஆல்பம் ஆசை..; ரவீனாவுடன் இணைந்த எழில்வாணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐடி வேலை.. ஆனாலும் ‘ஹாஃப் பாட்டில்’ ஆசை..; ரவீனாவுடன் இணைந்த எழில்வாணன்

*”ஹாஃப் பாட்டில்” ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பு!!*

ES Production & Macha Swag Dance தயாரிப்பில், தீபன் மற்றும் வைபவ் இசையில், எழில்வாணன் வடிவமைத்து உருவாக்கியிருக்கும் ஆல்பம் பாடல், ”ஹாஃப் பாட்டில்”.

இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. எழில்வாணன் EV, பிக்பாஸ் ரவீனா & ரேணுகா (சிறப்பு தோற்றம் ) இணைந்து நடித்துள்ளனர். மான்சி & EV இணைந்து நடன அமைப்பைச் செய்துள்ளனர்.

இணையத்தில் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்பாடலின் குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர்

*இயக்குநர், நடிகர், எழில்வாணன் EV பேசியதாவது….*

இந்த பாடலை விளம்பரப்படுத்தும் பொருட்டு பிரபலங்கள் யாரையாவது அழைக்கச் சொன்னார்கள் எனக்கு பேர் தெரிந்த பிரபலம் நீங்கள் தான் அதனால் தான், உங்களை அழைத்து உங்கள் முன்னிலையில் பாடலை விளம்பரப்படுத்துகிறோம்.

இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் முருகன் அண்ணா, சுரேந்தர் அண்ணா, விஜய் அண்ணா இந்த மூவரும் தான் காரணம், எல்லா இடத்திலும் இவர்கள் எனக்காக நின்றிருக்கிறார்கள். எந்த ஒரு காரியம் என்றாலும் உன்னால் முடியும் செய் எனத் தைரியம் தந்திருக்கிறார்கள்.

நான் அமெரிக்காவில் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறேன், இந்த துறை மீதான காதலில் தான் இதைச் செய்ய ஆரம்பித்தேன், யார் வேண்டுமானாலும் எந்த துறையில் வேண்டுமானாலும் அவர்கள் விரும்பினால் சாதிக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் தான் இதைச் செய்கிறேன்.

என் படக் குழுவினர் எனக்கு மிக உறுதுணையாக இருந்தார்கள். தீபக் மற்றும் வைபவ் இருவரும் எனக்கு இரண்டாவது முறையாக இசையமைக்கிறார்கள். எடிட்டர் கலைவாணனும் நானும் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றுகிறோம்… அவர் எனக்கு ஒரு மேஜிக் (Work) எடிட்டிங் செய்து கொடுப்பார் அது அவ்வளவு அழகாக இருக்கும் அவருக்கும் எனது நன்றி…

இரண்டு வருடங்கள் முன்பே இதற்கான நடன அமைப்பை உருவாக்கி விட்டேன், இந்த பாடலுக்கு ரவீனா சரியாக இருப்பார் என்று அவரை அணுகினேன்.. அவர் உடனடியாக பண்ணலாம் என ஒத்துக் கொண்டு செய்தார். இந்த பாடலின் கரு காதல் தான், காதலர்களுக்கு இடையில் பிரச்சனைகள் வரும்போது மனம் விட்டுப் பேசினால் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்த்துவிடலாம். அதைத்தான் ஒரு கருவாக வைத்து இந்த பாடலை உருவாக்கி இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் இந்த பாடல் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் எல்லோரும் பாடலுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

*நடிகை ரவீனா பேசியதாவது*

எங்களை ஆதரிக்க வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த ஆல்பம் பாடலின் ஷூட்டிங் வெறும் சில மணி நேரங்களிலேயே முடிந்துவிட்டது. அத்தனை திட்டமிடலுடன் நடந்து முடிந்தது. ஷூட் ரொம்ப ஜாலியாக நடந்தது. எப்போதும் உடன் நடிக்கும் நடிகர்கள் கலைஞர்கள் நம்மை காம்போர்ட்டபிளாக வைத்துக் கொண்டால் நாம் சிறப்பாக வேலை செய்வோம், அந்த வகையில் இந்த படக்குழுவினர் என்னை மிகச்சிறப்பாகப் பார்த்துக்கொண்டனர். எழில்வாணன் மிகத் திறமைசாலி இந்த பாடலின் முழு வேலைகளையும் அவரே செய்துவிட்டார் இந்த துறையின் மீதான காதலில் அவர் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்து, இதைச் செய்து வருகிறார்.

சினிமாத்துறை மீது காதலுடன் இருப்பவர்கள் உருவாக்கியிருக்கும் படைப்பில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த டீமில் வேலை என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்பாடல் மிகச்சிறப்பாக வந்துள்ளது. விரைவில் இணையத்தில் வெளியாகும்..உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிப்பு : எழில்வாணன் EV, பிக்பாஸ் ரவீனா & ரேணுகா

கருத்து, பாடல் மற்றும் இயக்கம் – எழில்வாணன் EV

இசை: தீபன் மற்றும் வைபவ்

நடன அமைப்பு: மான்சி & எழில்வாணன் EV

எடிட்டர்: கலைவாணன் (SK21 எடிட்டர்)

தயாரிப்பு – ES Production & Macha Swag Dance

Ezhilvaanan and Bigboss raveena in Half Bottle Album

சொல்லி அடிச்ச ‘கில்லி’ விஜய்..; அஜித் பிறந்தநாளில் ‘பில்லா’ ரீ-ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சொல்லி அடிச்ச ‘கில்லி’ விஜய்..; அஜித் பிறந்தநாளில் ‘பில்லா’ ரீ-ரிலீஸ்

தரணி இயக்கத்தில் விஜய் – த்ரிஷா – பிரகாஷ்ராஜ் – ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கில்லி’.

வித்யாசாகர் இசை அமைத்து இருந்த இந்த படத்தை ஏ.எம் ரத்தினம் தயாரித்திருந்தார். 20 வருடங்களுக்கு பின்னர் இந்த படம் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் ரீ-ரீலீஸ் உரிமையை பெற்ற சக்திவேலன் ஃபிலிம் ஃபேக்டரி தமிழகமெங்கும் வெளியிட்டது. திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக கில்லி படம் ஓடிக் கொண்டிருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனர் சக்திவேலன் நடிகர் விஜய்யை சந்தித்து.. “நீங்கள் அரசியலுக்கு வந்தாலும் வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து மாலை அணிவித்து இருந்தார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் சகப் போட்டியாளராக கருதப்படும் நடிகர் அஜித் நடித்த பில்லா படத்தை ரீ-ரீலீஸ் செய்ய படக்குழு முடிவு எடுத்துள்ளது.

அதன்படி மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தில் அஜித் பிறந்தநாளில் பில்லா படத்தை ரீ-ரீலீஸ் செய்கின்றனர்.

‘பில்லா’ படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் திறமையாக மறுஉருவாக்கம் செய்திருந்தார்.

ஜிபி என்டர்டெயின்மென்ட்டின் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி ஆகியோர் மே 1, 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் மூலம் 150+ திரைகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.

ஜிபி என்டர்டெயின்மென்ட் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி ‘பில்லா’ படத்தை மீண்டும் வெளியிடுவதில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

விஷ்ணுவர்தனின் ஸ்டைலான மேக்கிங்கில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘பில்லா’ பாக்ஸ் ஆஃபிஸில் அற்புதமான சாதனையைப் படைத்தது. அஜித்குமாரின் இரட்டை வேடத்தில் நடித்திருக்க, நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார்.

நீரவ் ஷாவின் கண்கவர் காட்சியமைப்பு மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் பவர் பேக் இசை ஆகியவை பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்கின.

Ghilli and Billa movies re release news

More Articles
Follows