தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த திரைப்படத்தை நேரடியாக ஆன்லைனில் வெளியிடுவது குறித்து சூரயா தெரிவித்துள்ளதாவது…
‘தியேட்டர்களில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் ஈடே கிடையாது. அதே சமயம் தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் புறம் தள்ள முடியாது.
ஒவ்வொரு வாரமும் தியேட்டர்களை பிடிப்பதில் கடும் போட்டியுள்ளது.
இதற்கு மாற்று வழியை கண்டறிவது அவசியம்.
வணிக எல்லைக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் சினிமாக்களுக்கு ஓடிடி நல்ல தளமாக உள்ளது. இதனால் சினிமா தியேட்டர்களை புறக்கணிக்கிறோம் என்று அர்த்தமல்ல.
கொரோனா பிரச்சினையால் படப்பிடிப்பு துவங்க இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். முதலில் இன்டோர் படப்பிடிப்பு பின்னர் அவுட் டோர் படப்பிடிப்பை துவங்கலாம். ஆனால் அதிலும் கட்டுப்பாடு அவசியம்.”
என தெரிவித்துள்ளார் சூர்யா.
