தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
2டி நிறுவனம் சார்பாக நடிகர் சூர்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் அமேசான் ஓடிடி தளத்தில் படம் வெளியாகியுள்ளது.
பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்த தவறான சித்தரிப்பு இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்தது..
அதை தொடர்ந்து இயக்குநர் ப்ரெட்ரிக் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ” AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.
அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளக்கிறோம்.
இந்த திரைப்படத்துக்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களில் இருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்” என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
