‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா…’ சூர்யா பாட்டு ஹிட்டாச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எப்படி நடிகர்-நடிகைகளின் கெமிஸ்ட்ரி முக்கியமோ, அதுபோல படத்தின் டைரக்டர் மற்றும் மியூசிக் டைரக்டரின் கெமிஸ்ட்ரியும் ரொம்ப முக்கியம்.

டைரக்டர் நினைப்பதை இசையமைப்பாளர் தன் இசையால் சொல்லி ரசிகர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

அப்படியொரு சிறப்பான கூட்டணி ஒரு சிலருக்குதான் அமையும்.

அதுபோன்ற கூட்டணி அமைத்தவர்கள்தான் செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா.

நீண்ட நாட்களுக்கு பிறகு இவர்கள் இணைந்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.

இதில் எஸ்.ஜே. சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கௌதம் மேனன் தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

இதில் இடம் பெற்ற ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா…’ என்ற பாடல் வரிகள் தற்போது ஹிட்டாகி வருகிறது.

பவர்புல் ‘பாட்ஷா’… ரஜினி ரசிகர்களுக்காக ரஞ்சித் டார்கெட்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தையடுத்து ஷங்கர் இயக்கும் 2.ஓ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இதனையடுத்து மீண்டும் கபாலி இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இப்படத்தை ரஜினியின் மருமகன் தனுஷே தயாரிக்கிறார்.

இப்படத்தை கபாலி படம் போல் இல்லாமல் பாட்ஷா படம் போல் அதிரடியாக உருவாக்கவிருக்கிறாராம் ரஞ்சித்.

அதாவது ரஜினியின் கேரியரில் பாட்ஷாவை மிஞ்ச ஒரு படம் வரவில்லை என ரசிகர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்க போகிறார் ரஞ்சித் என சொல்லப்படுகிறது.

கடந்த வாரம் இப்படத்தின் லொக்கேஷன் காண மும்பை சென்று வந்தாராம் ரஞ்சித்.

எனவே, பாட்ஷாவை போல் இதுவும் மும்பை பின்னணியில் எடுக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அஜித்துடன் சஞ்சிதா ஷெட்டி எப்படி கனெக்ஷன் ஆனார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் ஒரு படத்திலாவது நடித்து விட மாட்டோமா? என்பதே பல நடிகைகளின் கனவாக இருக்கிறது.

அவர் படத்தில் எப்படியாவது கனெக்ஷன் ஆகிவிட வேண்டும் என துடியாய் துடிக்கின்றனர்.

இந்நிலையில் தில்லாலங்கடி, சூது கவ்வும் உள்ளிட்ட படங்களில் நடித்த சஞ்சிதா ஷெட்டி வேறு ஒரு வகையில் அஜித்துடன் கனெக்ஷன் ஆகிறார்.

அவரின் சமீபத்தில் பேட்டியில் அவரே அதை கூறியிருக்கிறார்.

‘வேதாளம்’ படப்பிடிப்பின் லட்சுமி மேனனை சந்திக்க சென்றாராம் சஞ்சிதா.

அப்போது அஜித்தையும் சந்தித்து பேசியுள்ளார்.

பல வருடங்கள் பழகிய நபரிடம் பேசுவது மிக இயல்பாக அஜித் இவரிடம் பேசினாராம்.

மேலும் இருவரும் நன்றாக சமைக்க தெரிந்தவர்கள் என்பதால், இருவரும் வெகுநேரம் சமையல் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்” என தெரிவித்துள்ளார்.

‘தெறி’யை வென்று ‘கபாலி’யிடம் தோற்ற ‘பைரவா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த அக். 27ஆம் தேதி விஜய்யின் பைரவா பட டீசர் வெளியானது.

இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டீசர் வெளியாகி 185 மணி நேரத்தில் 7 மில்லியன் (70 லட்சம்) பார்வையாளர்களை பெற்றுள்ளது.

சில மாதங்களுக்கு முன் வெளியான ‘தெறி’ பட டீசர் 197 மணி நேரத்தில்தான் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.

இதன் மூலம் ‘தெறி’யின் சாதனையை ‘பைரவா’ முறியடித்துவிட்டார்.

ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கபாலி’ பட டீசர் ஜஸ்ட் லைக் தட் என்பது போல 40 மணி நேரத்தில் 7 மில்லியன் (70 லட்சம்) பார்வையாளர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தியின் பாவாடை ஏன் பறக்கல.? ரசிகர்களின் ரசனை பற்றி பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘மாவீரன் கிட்டு.’

இமான் இசையமைத்துள்ளார்.

இதில் கருப்பு சட்டை போட்ட போராளியாக பார்த்திபன் நடித்துள்ளார்.

ஐஸ்வேர் சந்திராசாமி, தாய் சரவணன், ராஜீவன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பார்த்திபன் கலந்து கொண்டு பேசியதாவது…

“நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. கன்டெய்னரில் இருந்த ரூ.570 கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை? காவிரி பிரச்சினை தீரவில்லை.

ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் ‘தொடரி’ படத்தில் 150 கிமீ வேகத்தில் செல்லும் ரயிலில் கீர்த்தி சுரேஷின் பாவாடை ஏன் பறக்கவில்லை? என்று கேட்கிறார்கள் ரசிகர்கள்.

ஒரு சினிமாவை அந்தளவு அவர்கள் கவனிக்கிறார்கள். எனவே படம் எடுப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

ஸ்ரீதிவ்யா இந்த படத்தில் அடக்கமான பெண்ணாக நடித்து இருக்கிறார்.

‘மாவீரன் கிட்டு’ சுசீந்திரனுக்கு பெரும் வெற்றிப் படமாக அமையும்.”

இவ்வாறு பார்த்திபன் பேசினார்.

குஷ்பு-ராதிகா-சுஹாசினி-ஊர்வசி இணையும் படத்தலைப்பு ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குஷ்பு, ராதிகா சரத்குமார், சுஹாசினி மற்றும் ஊர்வசி… இவர்கள் தமிழ் சினிமாவை தன் நடிப்பால் கவர்ந்தவர்கள்.

இவர்கள் நால்வரும் இணையும் படத்தை ஜேம்ஸ் வசந்தன் இயக்கி வருகிறார் என்பதை பார்த்தோம்.

இதன் முழு படப்பிடிப்பையும் ஆஸ்திரேலியாவில் படமாக்கி விட்டு தற்போது இந்தியா திரும்பியிருக்கிறது படக்குழு.

இதுநாள் வரை தலைப்பிடாத இப்படத்திற்கு தற்போது இப்படத்துக்கு ‘ஓ! அந்த நாட்கள்’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

இதன் இறுதிகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

More Articles
Follows