தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது…
‘நான் லட்சுமன் மற்றும் கார்த்தி அனைவருமே பள்ளிக்கால நண்பர்கள். எங்களது பள்ளி நாட்களில் நாங்கள் சினிமாவிற்குள் நுழைவது பற்றி கற்பனையாக பேசிக் கொள்வோம். ஆனால் கடவுளின் கருணையால் அது நிஜமாகவே ஆகிவிட்டது.
கார்த்திக்கு எப்போதுமே நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவரால் டென்ஷனை தவிர்க்க முடியும் என்பதும் தான்.
வாழ்க்கையில் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டை விட்டு போகும்போது அவற்றை ஜாலியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஜப்பான் படத்தின் டிரைலரில் அவர் சொல்வதைப் போல அதே தத்துவத்தை அவர் தனது நிஜ வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
மேலும் ஜப்பான் திரைப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு பிளாக் பஸ்டர் பொழுதுபோக்கு படமாக அமையும்” என்று கூறினார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லட்சுமன் பேசும்போது…..
கார்த்தி குழந்தைப்பருவத்தில் இருந்து எனது நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறார். நான் ஐடி துறையில் இருந்தபோது கார்த்தி மற்றும் ஞானவேல் ராஜா இருவரும் தான் என்னை சினிமாவில் நுழைவதற்கு உற்சாகப்படுத்தினார்கள். இவர்கள் இருவருமே என்னுடன் அழகான பிணைப்பை பகிர்ந்து கொண்டார்கள்.
நாங்கள் இப்போது சர்தார் -2வுக்காக தயாராகி வருகிறோம். அது எல்லோருக்கும் மிகப்பெரிய விருந்தாக இருக்கும்” என்று கூறினார்.
Producer Gnanavel raja advice to Actor Karthi