ஒரு மனிதனால் இவ்வளவு முடியுமா?… மித்ரனை வியக்கவைத்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் ஆகியோர் இணைந்துள்ள படம் ‘இரும்புத்திரை’.

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் எடிட்டராக பணிபுரிந்து வருகிறார். யுவன் இசையமைத்து வரும் இப்படம் 2018 ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ளது.

‘இரும்புத்திரை’ குறித்து இயக்குநர் மித்ரன் கூறியிருப்பதாவது:

‘இரும்புத்திரை’ கதையை முதலில் விஷாலிடம் சொல்லும் போது, கதை பிடித்தால் வேறு யாரையாவது வைத்து தயாரிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் கேட்டார். கதையைக் கூறி முடித்தவுடன் நானே நடிக்கிறேன். ஆனால் வில்லனாக நடிக்கிறேன் என்றார்.

எனவே விஷாலுக்காக நாயகன் கதாபாத்திரத்தை ராணுவ வீரராக மாற்றினேன்.

சமூக வலைதளத்தில் நமக்கு தெரியாமல் நடக்கும் நிறைய மர்மங்களைப் பற்றியும் அது ஏற்படுத்தும் விளைவு பற்றியும் இப்படத்தில் தெரிவித்துள்ளேன்.

இன்னும் நாம் அறியாத பல விஷயங்களை பற்றிப் பேசும் படமாக இருக்கும்.

படத்தில் சமந்தாவுக்கு முக்கியமான கதாபாத்திரம். அதைப் பற்றி இப்போது கூற முடியாது.

விஷால் சாரிடம் பிடித்தது அவருடைய பன்முகத் திறமை.

ஒரே நேரத்தில் இங்கு படத்தில் நடித்துக்கொண்டிருப்பார் பின்பு நடிகர் சங்க வேலை, தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்து, செக் கையெழுத்திடுதல் என ஒரு மனிதனால் இத்தனை வேலைகளைச் செய்ய முடியுமா என்று வியக்க வைப்பார்.” இவ்வாறு மித்ரன் தெரிவித்திருக்கிறார்.

Mithran talks about Vishal hardwork and Irumbu Thirai movie

தனுஷ்-மெர்சல் படத்தயாரிப்பாளர் கூட்டணியில் தெலுங்கு நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசியர் என பன்முக கொண்ட தனுஷ், முதன்முறையாக இயக்கிய படம் பவர் பாண்டி.

இப்படம் மாபெரும் வெற்றி பெறவே தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் என்ன? என்ற கேள்வி எழுந்தது.

அதற்குள் ஹாலிவுட் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் தனுஷ்.

இந்நிலையில் தற்போது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தை தனுஷ் இயக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தின் பணிகள் அடுத்தாண்டு 2018 ஜூன் மாதத்திற்கு மேல் தொடங்கவுள்ளது.

இதனை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கவுள்ளதாம் தயாரிப்பு நிறுவனம்.

எனவே முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவரை இதில் நடிக்க வைக்கவுள்ளதாம்.

இப்படத்தில் தனுஷ் நடிப்பாரா? அல்லது டைரக்சன் மட்டுமா? என்பது குறித்த தகவல்கள் இல்லை.

Dhanush going to direct Telugu actor for Mersal producers next film

ரஜினி-கமல் கலந்துக்கொள்ளும் நட்சத்திர விழா; ஜனவரி 5,6 தேதிகளில் ஆல் சூட்டிங் கேன்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் பிரமாண்டமான ‘நட்சத்திர விழா 2018’ வரும் ஜனவரி 6-ம் தேதி மலேசியாவிலுள்ள புக்கட் ஜலீல் இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அன்று முழுவதும் நடைபெறுகிறது.

இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் மூத்த நடிகர் நடிகைகளும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்.

மேலும் எல்லா நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்ள வசதியாக ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்குமாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தது.

இதனை ஏற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது.

3 கெட்-அப்களில் வந்து சிவகார்த்திகேயன் சொல்லும் மெசேஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் வருகிற டிசம்பர் 22ந் தேதி வெளியாகவுள்ளது.

இவருடன் நயன்தாரா, பகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா, சதீஷ், ரோபோ சங்கர், ஆர்ஜே. பாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.

24ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.‘

இப்படத்தில் சிவகார்த்திகேயன், 3 விதமான கெட்-அப்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி கூறியதாவது:

சென்னை வெள்ளத்தின் போது வேலைக்காரன் படத்தின் ஒரு வரிக்கதையை எனக்கு சொன்னார் டைரக்டர் மோகன் ராஜா.

அவர் சொன்ன அந்த கான்செப்ட் என்னை கவர்ந்தது, இந்த படம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரிடம் உறுதி அளித்தேன். வேலைக்காரன் வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா, வருங்கால தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான படம்.

இதுவரை சிவகார்த்திகேயன் இப்படி ஒரு படத்தில் நடித்ததில்லை. இந்த படத்தில் அவரின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம்.

அவர் மூன்று விதமான பரிணாமங்களில் தோன்றுவார், அதற்கேற்ப அவரின் தோற்றத்தையும் காட்சிகளையும் உருவாக்கினோம்” என்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.

அருவி நாயகி அதிதி அன்பாக பழகினார்… நெகிழும் திருநங்கை அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருவி படம் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

இதில் அருவி கேரக்டர் உடன் திருநங்கை எமிலி கேரக்டரில் அஞ்சலி என்பவர் நடித்துள்ளார். அவர் தன் பட அனுபவங்கை இங்கே பகிர்கிறார்.

நானும் (திருநங்கை அஞ்சலி) இன்னொரு திருநங்கையும் அருவி திரைப்படத்தின் நடிகர் – நடிகையர் தேர்வுக்கு (ஆடிசன்) சென்றிருந்தோம்.

இருவரையும் நடித்து காட்ட சொன்னார்கள் நடித்து காட்டினோம். ஒரு மாதம் கழித்து நீங்கள் தான் இந்த படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளீர்கள் என்று சொன்னார்கள்.

ரொம்ப சந்தோஷமாக இருந்தது அதே சமயம் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

ஒவ்வொரு மாதமாக என் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றது போல் எனக்கு பயிற்சி கொடுத்தார்கள். பட பிடிப்பு தளத்தில் நான் திருநங்கை என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவரும் நட்பாக பழகினார்கள்.

சில காட்சிகளில் எனக்கு நடிப்பு வரவில்லை அதை இயக்குநர் ஒரு முறைக்கு பத்து முறை முயற்சி பண்ணுங்கள் என்று தட்டி கொடுத்தார். கேரளா போன்ற வெளியிடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

படத்தின் கதாநாயகி என்னை சகமனுஷியாக நினைத்து என்னிடம் ரொம்ப அன்பாக பழகினார். இந்த படத்தில் நான் எமிலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றேன்.

இயக்குநர் என் கதாப்பாத்திரம் பற்றி கூறும் போது வித்தியாசமாக தான் இருந்தது. எனக்கும் நடிப்புக்கும் சம்பந்தமே இல்லை ஆனால் எப்படி தேர்வாகினேன் என்று தெரியவில்லை.

இந்த கதாப்பாத்திரம் கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம் திருநங்கை என்ற பாகுபாடு இல்லாமல் படம் முழுவதும் வருவது போல் காட்சி உள்ளது. ஒரு பெண்ணோடு என்னையும் சேர்த்து ஒரு கதாப்பாத்திரமாக தான் கொண்டு வந்தார்கள்.

ஒரு திருநங்கையும், ஒரு பெண்ணும் எப்படி நட்பு ரீதியாக பழகிக்கொள்கிறார்கள் தன்னுடைய சந்தோஷம், துக்கம் என எல்லாவற்றையும் எப்படி பகிர்ந்து கொள்கிறார்கள் என்ற விஷயம் இருக்கும்.

பொதுவா திருநங்கைகள் பற்றி பல திரைப்படங்களில் கேலி கதாபாத்திரமாக வைத்திருப்பார்கள்.

ஆனால் அருவி திரைப்படத்தில் படம் முழுவதும் வருவது போல் இருக்கிறது இதற்கு முன்பு எந்த திருநங்கையும் படம் முழுவதும் வந்தது இல்லை.

இந்த சமூகம் எங்களை புறம் தள்ளுகின்றது ஆனால் நாங்கள் இந்த சமூகத்துடன் ஒன்ற வேண்டும் என்று தான் நினைக்கின்றோம். சிலர் எங்களை கேலி, கிண்டல் செய்தாலும் ஒரு சிலர் எங்களை ஆதரிக்கின்றனர். திருநங்கைகளின் நடவடிக்கை அவர்கள் வாழும் சூழல் பொறுத்தது.

எனக்கு சொந்த ஊர் பாண்டிச்சேரி எனக்கு சகோதரியாகவும், தோழியாகவும் தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கை பொன்னி உள்ளார்.

அவர் தான் எனக்கு பரத நாட்டிய குரு. பரத நாட்டியம் கீழ் தட்டு மக்களுக்கு எட்டாத கனியாக இருப்பதினால் அணைத்து தரப்பினருக்கும் சென்று அடைய வேண்டும் என்பதற்காக வியாசர்பாடி பகுதியில் பரதம் கற்று கொடுத்து கொண்டு இருக்கின்றோம்.

வீணை கற்றுள்ளேன் அதையும் மற்றவர்களுக்கு கற்று கொடுக்கின்றேன். மேலும் கை வினை பொருளும் செய்து அதனை வியாபாரம் செய்வதன் மூலம் எங்களுக்கு வருமானம் வருகிறது. அருவி படம் தான் என் முதல் படம் அதனை தொடர்ந்து பட வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

அருவியில் என்னை திருநங்கையாகவே நினைக்க வேண்டாம் கதாநாயகியின் தோழியாகவே வருவேன். நங்கள் இருவரும் சேர்ந்து எப்படி எங்களுடைய வாழ்கை சூழலை கொண்டு போறோம் என்பதையே காட்டியுள்ளார்களே தவிர என்னை திருநங்கையாக சுட்டிக்காட்டவே இல்லை.

ஆனால் நான் திருநங்கை என்பதனால் இதை சுட்டிக்காட்டுகின்றேன். திருநங்கை அஞ்சலி

Transgender Anjali talks about Aruvi movie and Aditi Balan

 

விஜய்-சூர்யாவுக்கு அடுத்த இடத்தை பிடித்த பவர்ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் வெளியாகி என்ன வசூல் படைக்கிறது? அது மற்ற படங்களின் சாதனையை முறியடிக்குமா? என்பதை அறிந்துக் கொள்வதற்கு முன்பே அந்த படத்தின் டீசர், ட்ரைலர் படைத்த சாதனை என்ன? என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்திய அளவில், மட்டுமல்லாது உலக அளவில் யு டியூபில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற பெருமையை ‘மெர்சல்’ படம் அண்மையில் பெற்றது.

இதனை வேறு பட டீசர்கள் முறியடிக்குமா? என ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஓரிரு தினங்களுக்கு முன் தெலுங்கு பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடித்த ‘அஞ்ஞாதவாசி’ பட டீசர் வெளியானது.

இந்த டீசராலும் மெர்சல் சாதனையை முறியடிக்க முடியவில்லை.

ஆனால் தெலுங்கு சினிமாவில் முதன்முறையாக 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகள், அதிக லைக்குகளை இந்த டீசர் பெற்றுள்ளது.

வெளியான சில மணி நேரங்களிலேயே 40 லட்சம் பார்வைகளையும், 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

தற்போது 78 லட்சம் பார்வைகளையும், 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்று யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இதற்கு முன் வெளியான சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘கேங்’ தெலுங்கு படங்களில் அதிக லைக்கான 3 லட்சம் லைக்குகளைத் தாண்டி சாதனை புரிந்தது.

அந்த சாதனையை அன்றே ‘அஞ்ஞாதவாசி’ டீசர் முறியடித்துவிட்டது.

ஆனால் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் (தமிழ் பதிப்பு) படத்தின் டீசர் சாதனையை முறிடியக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மெர்சல்- 728K லைக்ஸ்
தானா சேர்ந்த கூட்டம்- 308K லைக்ஸ்
Agnyaathavaasi- 382K லைக்ஸ் (பவர் ஸ்டார் பவன்கல்யாண் தெலுங்கு படம்)

More Articles
Follows