ரஜினியின் மூன்று முகத்தை மாற்றும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 3 வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற படம் மூன்றுமுகம்.

தற்போது இதன் ரீமேக்கை தயாரித்து 3 வேடங்களில் நடிக்கவிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.

இந்நிலையில், இதில் ஒரு கேரக்டரில் கொஞ்சம் மாற்றம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது அந்த கேரக்டருக்கு பேய் முகம் கொடுக்கவிருக்கிறாராம்.

ஒருவேளை, தந்தை அலெக்ஸ் பாண்டியனை கொன்ற வில்லன்களை பழிவாங்க இந்த வேஷத்தில் வருவாரோ?

பேய் படங்களை மக்கள் ரசிக்கும்படியாக கொடுப்பதில் வல்லவரான லாரன்ஸ் செய்தால் அது சரியாகதான் இருக்கும் என நம்புவோம்.

சூர்யா படத்தை இலவசமாக பார்க்க அழைக்கும் தியேட்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கியுள்ள எஸ்-3 படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.

இவருடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், ராதாரவி, நாசர்,  விவேக், ரோபா சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று 5 மணியளவில் வெளியாகவுள்ளது.

இதனை தியேட்டரில் இலவசமாக பார்க்க, திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸ் தியேட்டர் நிர்வாகம் அழைத்துள்ளது.

Ram Muthuram Cinemas ‏@RamCinemas
#S3 Teaser Release Function Today At 5PM Entry is free for all !! @StudioGreen2

சிம்புவை இயக்கும் ‘பிரேமம்’ அல்போன்ஸ் புத்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள அச்சம் என்பது மடமையடா படம் வருகிற நவம்பர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையடுத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படத்தை அடுத்த வருடம் 2017 காதலர் தினத்தில் வெளியிடவிருக்கிறார்.

இந்நிலையில் நேரம், பிரேமம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இது பிரேமம் படத்தின் ரீமேக் ஆக இருக்குமோ என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறாராம் அல்போன்ஸ் புத்திரன்

இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் வெளியாக்க்கூடும்.

காளிகாம்பாள் நிறுவனத்திற்காக ரஜ்னி உருவாக்கும் ‘மதம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதம் என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.

அறிமுக இயக்குனர் ரஜ்னி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

காளிகாம்பாள் பிலிம்ஸ் சார்பாக ஹரீஷ் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, நிரோ இசையமைக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக்-நிக்கி கல்ராணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா, கார்த்தி ஆகியோர் நடிப்பில் வெளியான பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் ஞானவேல்ராஜா.

இவர் தனது ஸ்டூடீயோ க்ரீன் சார்பாக தயாரிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பை இன்று மாலை 4 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.

ஹர ஹர மஹா தேவகி எனப் பெயரிட்டுள்ள அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார்.

சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார் இயக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, ரவிமரியா ஆகியோர் நடிக்கின்றனர்.

செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, பாலமுரளி பாலு இசையமைக்கிறார்.

தங்கராஜ் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார்.

அரசு பொதுத்தேர்வில் ஐஸ்வர்யா தனுஷ் பற்றிய கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா படங்களை இயக்கி வருகிறார்.

விரைவில் சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்கவிருக்கிறார்

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரஜினி வர்ணனை (வாய்ஸ் ஓவர்) கொடுக்கவிருக்கிறார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஐஸ்வர்யா பற்றிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இதில் 2016ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் அமைப்பில், பெண்களின் சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக இந்தியாவின் சார்பாக நியமிக்கப்பட்ட தூதர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இதற்கான விடை ஐஸ்வர்யா தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows