தனுஷ்-சிவகார்த்திகேயனை தொடர்ந்து ரஜினி பட டைட்டிலில் விஜய்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டைப் போல் தமிழ் சினிமாவிலும் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

தமிழகத்திற்கு தண்ணீர் பிரச்சினை என்றால், சினிமாவிக்கு தலைப்பு பஞ்சம்.

எனவே பழைய படங்களின் தலைப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

அதிலும் ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களுக்கு கிராக்கி அதிகம்.

பொல்லாதவன், மாப்பிள்ளை என ரஜினியின் பல படத்தலைப்புகளை தனுஷ் பயன்படுத்திக் கொண்டார்.

அண்மையில் சிவகார்த்திகேயன் படத்திற்கும் ரஜினியின் ஹிட் படமான வேலைக்காரன் தலைப்பை பயன்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு மூன்றுமுகம் என தலைப்பிடப்படலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

Rajinis Moondru Mugam title for Vijay 61

கதிர் நடிக்கும் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிருமி, என்னோடு விளையாடு படங்களை தொடர்ந்து சிகை படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, ஸ்ருஷ்டி டாங்கேயுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார் கதிர்.

இப்படத்திற்கு தற்போது சத்ரு எனப் பெயரிட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு தன் வெளியிட்டார்.

கதிர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தை நவீன் நஞ்சுண்டன் இயக்க, அம்ரீஷ் இசையமைத்து வருகிறார்.

Simbu launched Kathirs Chatru movie first look

பாதிக்கப்பட்ட பெண்களின் தகப்பனாக பேசுகிறேன்… சத்யராஜ் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஒரு வாரமாக கோலிவுட்டின் ஹாட் டாப்பிக் சுசித்ராவின் ட்விட்டர் பக்க செய்திகள்தான்.

இதனால் திரையுலகமே கலக்கமடைந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் ஒரு ஆடியோவில் இதுபற்றி கூறியுள்ளதாவது…

‘நல்ல நண்பர்களை, காதலரை தேர்ந்தெடுங்கள். விளையாட்டாக எடுக்கும் போட்டோ, எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கைக்கு வினையாக மாறலாம்.

நம்முடன் வசிப்பவள்தான் பெண். அவள் வேற்றுகிரகவாசி அல்ல.

இதுபோல் படங்கள் வெளியாவதால் பலர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதனால் இது போன்ற செயலை செய்ய வேண்டாம்.

பாதிக்கப்பட்ட பல பெண்களின் தகப்பனாக உங்களிடம் இதை கேட்டுக்கொள்கிறேன்’ என்று சத்யராஜ் உருக்கமாக பேசியுள்ளார்.

அட்லி இயக்கும் விஜய்-61 பர்ஸ்ட் லுக் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்-ஏ.ஆர்.ரஹ்மான்-அட்லி-தேனாண்டாள் பிலிம்ஸ் உள்ளிட்டவர்கள் கொண்ட மாபெரும் கூட்டணி விஜய் 61 படத்திற்காக இணைந்துள்ளது.

இத்துடன் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, நித்யா மேனன், காஜல், சமந்தா ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏப்ரல் 14ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2016ஆம் வருடம் இதே நாளில்தான் தெறி படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம் 23 வசூல் மழையால் அருண் விஜய் ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள படம் ‘குற்றம் 23’.

இப்படம் கடந்த மார்ச் 3ஆம் தேதி வெளியானது.

இப்படம் வெளியாவதற்கு முன்பே மாபெரும் எதிர்பார்ப்பு உருவானது.

அதற்கு சற்றும் குறைவில்லாமல் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மூன்று நாட்களில் சுமார் ரூ.4 கோடி வசூல் செய்துள்ளது.

நான்கு நாட்களில் ரூ 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

இதனால் குற்றம் 23 படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாம்.

எனவே, விரைவில் வெற்றிவிழா சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தங்கள் படைப்பு அபூர்வம்…’ தனுஷை பாராட்டிய இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகராக அடையாளம் காணப்பட்ட தனுஷ், முதன்முறையாக பவர் பாண்டி படத்தை இயக்கியுள்ளார்.

சீன் ரோல்டான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வருகிற மார்ச் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இப்படத்தை இசையமைப்பாளர் சீன் ரோல்டான் பார்த்துள்ளார்.

இதனையடுத்து, தனது சமூக வலைத்தளத்தில் இப்படி ஒரு அபூர்வமான படத்தை கொடுத்த தனுஷூக்கு நன்றி. இதில் என் பங்கும் இடம் பெற செய்தமைக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

Sean Roldan‏ @RSeanRoldan
Watched #powerpandi today. What a film by Mr #dhanush. Thanks for creating this beauty and making me a part of it!

Music composer Sean Roldan appreciates Dhanush direction

More Articles
Follows