விஷால் படத்தில் ஞானவேல் ராஜாவை கலாய்க்கும் காட்சிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் இந்த வாரம் மே 11ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் ‘இரும்புத்திரை’.

மித்ரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாகம் (அதாவது இடைவேளை) மட்டும் இன்று பத்திரிகையாளர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது.

இப்படத்தில் நடிகர் காளி வெங்கட்டின் கேரக்டர் பெயர் ஞானவேல்.

அவர் இரு காட்சிகளில் வருகிறார். அதில் ஞானவேல் என்று பெயரை கூறி ஒரு பெண்ணிடம் தன்னை அறிமுகம் செய்துக கொள்வார்.

ஆனால் அந்த பெண் இவரை மதிக்காது சென்றுவிடுவார். மற்ற பெண்ணிடம் பேசும் போது அவர் பேசாமல் சென்றுவிடுவார்.

ஏன் ஞானவேல் என்ற பெயரை கேட்டால் இப்படி தவிர்க்கிறார்கள். என்று காளி வெங்கட் தன்னிடமே கேட்டூக் கொள்வதை போல காட்சிகள் இருக்கின்றன.

இது செய்தியாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அந்த கேரக்டரில் எந்த உள் அர்த்தமும் இல்லை என்றார் டைரக்டர்.

காளான் போல காலா காணாமல் போகும்… ரஜினிக்கு அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சித் இயக்கியுள்ள இப்பத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையக்க் தனுஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மே 9-ஆம் தேதி) மாலை நடைபெறவுள்ளது.

ஆனால், இன்று காலை 9 மணியளவில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இதன் பாடல்களை வெளியிட்டார்.

இந்த பாடல்கள் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

ஆனால், படத்தின் இடம் பெற்றுள்ள சில பாடல்கள் (நிக்கல் நிக்கல்) உள்ளிட்ட சில பாடல் வரிகள் தற்போதைய தமிழக அரசியலுக்கு எதிரான பாடல் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பாடல்கள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது…

‘காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. திரைப்படம் மூலம் மக்களை தூண்டிவிட நினைத்தால் அரசு ஏற்றுக்கொள்ளாது.

‘காலா’ போன்ற காளான்கள் காணாமல் போகும்’ என்றார்.

எம்ஜிஆர்..? ரஜினி..? விஜய் 62 படத்திற்கு யார் படத்தலைப்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்தை ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, விஜய் நாயகனாக நடித்து வருகிறார்.

ஏஆர். முருகதாஸ் இயக்கி வரும இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர், பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

2018 தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இப்படத்தின் கதைப்படி தமிழக விவசாயிகளுக்கும் தமிழக மீனவர்களுக்கும் நல்லது செய்ய நினைக்கும் பணக்காரர் ஆக வருகிறாராம் விஜய்.

இதனால் அவருக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்புகள் வருகிறதாம்.

இதனால் மீனவ நண்பன் (எம்ஜிஆர் படத்தலைப்பு) அல்லது பணக்காரன் (ரஜினி படத்லைப்பு) என்ற தலைப்பை வைக்கலாம் என கோலிவுட்டில் கிசுகிசுகின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி தான் படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் டைட்டில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

BREAKING: காவிரி வரும் வரை காலா இசை வெளியீட்டை நடத்தக்கூடாது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சில மணி நேரங்களில் சென்னையில் நடைபெறவுள்ளது.

இதனால் சென்னையை நோக்கி மற்ற மாவட்டங்களில் இருந்து ரஜினி ரசிகர்கள் திரளாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சில அமைப்புகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் காலா இசை வெளியீட்டை நடத்தக் கூடாது.

ஐபிஎல் போட்டியால் காவிரி போராட்டம் தடை பட்டது, அதுபோல் மோடிக்கு நெருக்கமான ரஜினி தன் இசை வெளியீட்டை நடத்த கூடாது-

காவிரி நீர் வரும் வரை ரஜினி உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படத்தை வெளிய்யிட கூடாது எனவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் ஒய்எம்சிஏ மைதானம் அருகே பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

முரட்டு குத்து ஓடினால் சினிமாவுக்கு நல்லதுல்ல; விளாசும் விஜய்மில்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஆபாச படம் வெளியாகி தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார் ஆகியோர் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

தற்போது ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் அந்தப் படம் ஓடக்கூடாது என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சினிமாவில் இருந்துக் கொண்டே, இந்தப் படம் ஓடக்கூடாது என்று சொல்லும் போது எனக்கே ரொம்ப கஷ்டமாக இருந்தது.

ஒரு படம் ஓடினால் தான் திரைத்துறைக்கு நல்லது. வேற யாராவது தயாரித்திருந்தால் எதுவும் தெரிந்திருக்காது.

மிகவும் மதிக்கக் கூடியவரே இந்த படத்தை தயாரித்திருப்பது, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

ஆனால், இந்தப்படம் ஓடக்கூடாது என்று எனக்கு ஏன் தோன்றியது என்றால், திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று பலர் வருகிறார்கள்.

இந்தப் படம் ஓடியது என்றால், இளைஞர்களுக்கு இதுதான் பிடிக்கும் போல, இதுதான் சினிமா என்று நினைத்துக் கொண்டு எல்லாரும் இதுபோன்ற படங்கள் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இந்த கால கட்டத்திற்கு இது சரிபட்டு வராது.

ஏதோ பேசனும்னு தோன்றியது, பேசாமல் இருந்தால் தப்பு என்று தோன்றியது. அதான் பேசிவிட்டேன். இதனால் வரும் எதிர்வினையை சந்திக்கவும் தயார்’ என்று ஓபனாக பேசியுள்ளார்.

காலையில் இசை; மாலையில் விழா… கலக்கும் காலா சேட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் ‘காலா’. இதில் காலா சேட்டு என்ற கேரக்டரில் ரஜினி நடித்துள்ளார்.

இவருடன் ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார்.

படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ அண்மையில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் உள்ளன.

இதன் இசை வெளியீட்டு விழா இன்று மே 9ஆம் தேதி மாலை நடைபெறவுள்ள நிலையில், பாடல்களை மட்டும் இன்று காலை 9 மணிக்கு, அனைத்து விதமான டிஜிட்டல் தளங்களில் வெளியிடவுள்ளனர்.

இதனை தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows