என் வாய்ஸ் மைனஸ் சொன்னாங்க.. இப்போ பிளஸ் சொல்றாங்க.. இதான் சினிமா.. – அர்ஜுன் தாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என் வாய்ஸ் மைனஸ் சொன்னாங்க.. இப்போ பிளஸ் சொல்றாங்க.. இதான் சினிமா.. – அர்ஜுன் தாஸ்

*நடிகர் அர்ஜூன் தாஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

‘கைதி’ படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தனக்கு ஆதரவாக, தனக்கு ஊக்கமளித்துவரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வினில்

நடிகர் அர்ஜூன் தாஸ் பேசும்பொழுது…

என்னுடைய இந்தத் திரைப்பயணத்தில் நீங்கள் எனக்கு மிகப்பெரும் உந்துதலாக இருந்துள்ளீர்கள், என் குரலைக் குறிப்பிட்டு பாராட்டி, தனித்தனியாக நான் செய்த எல்லாப்பாத்திரங்களின் நிறை குறைகளை பகிர்ந்து, எனக்கு பெரும் ஊக்கமாக இருந்துள்ளீர்கள்.

என் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் நீங்கள் தான் அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய இந்தப்பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குநர்களும் எனக்காக சிறப்பான பாத்திரங்கள் தந்துள்ளார்கள். அதற்குக் காரணமும் நீங்கள் தான் அதற்கும் நன்றி என்றார்.

மேலும் பத்திரிக்கையாளர்களுடன் உரையாடியவர், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

லோகேஷ் இயக்கும் எல்லாப்படத்திலும் நீங்கள் இருப்பீர்கள், ரஜினி சாரை வைத்து லோகேஷ் இயக்கும் புதிய படத்தில் நீங்கள் இருக்கிறீர்களா ?
லியோவிலேயே நான் இல்லையே சார், லோகேஷ் எப்போதும் எனக்கு சிறந்த நண்பர் தான், அவர் அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் ஆனால் இப்போதைக்கு அப்டேட் எதுவும் இல்லை. ரஜினி சார் படத்தில் இருக்கிறேனா? என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.

நீங்கள் முன்பு டப்பிங் செய்து கொண்டிருந்தீர்கள் ? இப்போது டப்பிங்கை தொடர்கிறீர்களா ?
இப்போதைக்கு நான் வாய்ஸ் டப்பிங், எதுவும் செய்யவில்லை. நடிப்பு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்தி வருகிறேன், ஆனால் லோகேஷ் ஏதாவது காட்சிக்காக கூப்பிட்டால் மறுக்க முடியாது, கண்டிப்பாக செய்வேன்.

வில்லனாக புகழ் பெற்றீர்கள், இப்போது ஹீரோ ஆகிவிட்டீர்கள் மீண்டும் வில்லனாக கூப்பிட்டால் நடிப்பீர்களா ?
இப்போதைக்கு நான் வில்லன் இல்லை. நடிப்பில் வில்லன் என இப்போதைக்கு எதுவுமே வரவில்லை.

தொடர்ந்து பல படங்கள் மெயின் பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. லோகேஷ் கூப்பிட்டால் வில்லனாகத்தான் கூப்பிடுவார், அவர் கூப்பிட்டால் கண்டிப்பாக செய்வேன்.

பல நல்ல இயக்குநர்களோடு வேலை பார்த்துள்ளீர்கள், எப்படி அவர்களை தேர்ந்தெடுக்கிறீர்கள்?
நானாக தேர்ந்தெடுத்து எந்த இயக்குநருடனும் வேலை பார்க்கவில்லை. வசந்தபாலன் சார் முதல், அவர்களாக கூப்பிடுகிறார்கள் நான் நடிக்கிறேன் அவ்வளவு தான்.

எனக்கு மிகச்சிறந்த இயக்குநர்கள் அமைந்தது என் பாக்கியம். இப்போது தான், நிறைய கதைகள் கேட்டு வருகிறேன், எனக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து எல்லோரையும் மகிழ்விப்பேன்.

ரசவாதி எப்படி வந்துள்ளது ? சாந்த குமாருடன் வேலை பார்த்தது குறித்து கூறுங்கள் ?

இயக்குநர் சாந்தகுமார் உடன் வேலை பார்த்தது அட்டகாச அனுபவம். மௌனகுரு எனக்கு பிடித்த படம். அவர் கூப்பிட்ட போது சந்தோசமாக இருந்தது. கதை எனக்கு பிடித்திருந்தது. அவர் படத்தில் நடிப்பது உண்மையில் எனக்கு பெருமை. படத்தைப் பொறுத்தவரையில் ஒரு டாக்டர் ஓய்வுக்காக ஒரு இடத்திற்கு செல்கிறார், அங்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை. இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. படம் பார்த்து நீங்கள் சொல்லுங்கள்.

லோகேஷிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டதாக ஒரு பேட்டியில் கூறினீர்கள், இயக்குநர் ஆகும் எண்ணம் இருக்கிறதா?
கமல் சாரை அவர் நடிப்பதை நேரில் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை.

விக்ரமில் நான் இருப்பது எனக்கு தெரியாது, அதனால் உதவி இயக்குநராக வேலை பார்த்தால் அவரைப் பார்க்கலாம், அதனால் தான் லோகேஷிடம் கேட்டேன். ஆனால் அவர் என்னை நடிக்க வைத்தார், கமல் சார் நடிப்பதை நேரில் பார்த்தேன். இயக்குநர் ஆகும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை.

தொடர்ந்து நெகடிவ் அல்லது ஆக்சன் கதாப்பாத்திரங்களாக செய்கிறீர்களே, ரொமான்ஸ் எப்போது ?
ரசவாதி படத்தில் ரொமான்ஸ் நிறைய இருக்கிறது. நானும் ரொமான்ஸ் செய்துள்ளேன், அடுத்து மதுமிதா மேடம் படத்திலும் ரொமான்ஸ் இருக்கிறது, பார்த்து விட்டு சொல்லுங்கள்.

வில்லனாக வந்து ஹீரோவாக வளர்ந்துள்ளீர்கள் எப்படி இருக்கிறது இந்த அனுபவம் ?
நான் வளர்ந்திருக்கிறேனா எனத் தெரியவில்லை. துபாயில் தியேட்டரில் தமிழ்ப்படம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இங்கு வந்து, திரையில் நடிக்க முயற்சித்தேன்.

உங்கள் ஆதரவால் தான் எனக்கு வாய்ப்புகள் வருகிறது. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்து வருகிறேன் என நினைக்கிறேன் அவ்வளவு தான். நான் பெரிதாக வளர்ந்ததாக நினைக்கவில்லை. இப்போது தான் என் பயணம் ஆரம்பித்துள்ளது. இன்னும் திரைப்பயணத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

திரைத்துறையில் ஆரம்ப காலகட்டங்களில் கஷ்டபட்டிருக்கிறீர்களா ?
நானும் நிறைய ரிஜக்சனை சந்தித்துள்ளேன். நிறைய பேர் என் வாய்ஸ் எனக்கு மைனஸ் என சொல்லியிருக்கிறார்கள், இப்போது அது ப்ளஸாக மாறியுள்ளது. இது எல்லார் வாழ்விலும் நடக்கும், திரைத்துறை அப்படித்தான். ஒவ்வொரு நாளும் திரைத்துறையில் நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன்.

நடிகராக இருப்பது மகிழ்ச்சியா ? இல்லை வேறு துறையில் விருப்பம் உள்ளதா?
நடிகராக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. திரைத்துறையில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது, கண்டிப்பாக இது தான் எனக்கு சந்தோசம்.

ஏன் உங்கள் படங்கள் அதிகம் வருவதில்லை ?
ஒரு நேரத்தில் ஒரு படம் தான் செய்கிறேன் அது என் பழக்கம். கடந்த வருடம் நிறைய நடித்திருக்கிறேன். இந்த வருடம் நிறையப் படங்கள் தொடர்ந்து வரும்.

உங்கள் நண்பர் லோகேஷ் நடிகர் ஆகிவிட்டாரே? தொடர்ந்து நடிப்பாரா ?
அந்த ஆல்பம் சாங் வரும் முன்னரே என்னிடம் காட்டினார். உண்மைய சொல்லு மச்சி, எப்படி இருக்கிறது எனக்கேட்டார். நடிப்பதில் அவர் நெர்வஸாக இருந்தார்.

மாஸ்டரில் நடிக்கவே அவர் நிறையத் தயங்கினார். தொடர்ந்து நடிப்பது பற்றி அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். ஆனால் அவர் நடிப்பாரா எனத் தெரியவில்லை. நடித்தால் எனக்கு மகிழ்ச்சி.

லோகேஷ் பற்றி அதிகம் பேசுகிறீர்களே ஏன்?

அவரிடம் தான் இந்த என் நடிப்பு ஜர்னி ஆரம்பித்தது. கைதி தான் நான் இந்த மேடையில் இருக்கக் காரணம், அவர் எனக்கு நிறைய வாய்ப்புகள் தந்துள்ளார். அவர் எனக்கு மிகச்சிறந்த மெண்டார். எனக்கு வாய்ப்பு தரும் இயக்குநர்கள் தான் என் மெண்டார்.

விக்னேஷ் சாரும் என் மெண்டார் தான். லோகேஷுடன் அதிகம் வேலை செய்ததால் அவரைப் பற்றி அதிகம் சொல்கிறேன். என் திரைப்பயணம் முழுக்க அவர் இருக்கிறார் என்பது தான் காரணம்.

கைதி 2 வருகிறதா ?
கைதி 2 இருக்கிறது என லோகேஷும் சொல்லியிருக்கிறார். கார்த்தி சாரும் சொல்லியிருக்கிறார். விக்ரமில் உயிருடன் வந்ததால் நான் இருப்பேன் என நினைக்கிறேன்.

என்ன மாதிரியான பாத்திரங்கள் நடிக்க ஆசை ?
எனக்கு அப்படி வித்தியாசமாக எந்த ஆசையும் இல்லை. வரும் கதாப்பாத்திரங்களில் எனக்கு செட் ஆகும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் அவ்வளவு தான்.

உங்களுடைய அடுத்தடுத்த படங்கள் பற்றி?
மதுமிதா மேடம் உடன் ஒரு படம் செய்கிறேன். அதற்கடுத்து, விஷால் வெங்கட்டுடன் ஒரு படம் செய்கிறேன். இன்னும் சில படங்கள் பேச்சு வார்த்தையில் இருக்கிறது. இப்போது ரசவாதம் வெளியாகவுள்ளது. படம் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.

Actor Arjundass open talk about his movies

கோடை(வை)யில் மாபெரும் இசை நிகழ்ச்சி.: தேனிசை தேவா பாட்டுக்கு ஆட ரெடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோடையில் மாபெரும் இசை நிகழ்ச்சி.: தேனிசை தேவா பாட்டுக்கு ஆட ரெடியா.?

1990 களில் மெலோடி பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தேனிசை தென்றல் தேவா.

கானா மெட்டு போட்டு வயதானவர்களையும் ஆட வைத்தவர் இவர்.

இன்று வரை நாம் திரையில் பார்த்து ரசிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி டைட்டில் கார்டு தேவா இசையில் தான் உருவானது. அண்ணாமலை தொடங்கி ஜெயிலர் வரை இந்த ஆட்டம் ரஜினி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது..

அதன் பின்னர் ரஜினி படங்களுக்கு இளையராஜா ரகுமான் அனிருத் என எவர் இசையமைத்து வந்தாலும் தேவா இசை டைட்டில் கார்டு தான் ரஜினி ரசிகர்களின் ஃபேவரைட்.

விஜய்யின் ஆரம்ப கால படங்களில் தேவா இசை தான் ஹைலைட்டாக அமைந்திருக்கும். அதுபோல அஜித் படங்களுக்கும் தேவா இசை பக்க பலமாக இருந்து வெற்றிக்கு உதவியது.

கமல் – மீனா நடித்த ‘அவ்வை சண்முகி’ படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது. இப்படியாக தமிழில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணிபுரிந்தவர் தேவா.

சமீபகாலமாக இவர்து இசையில் பெரிய படங்கள் வரவில்லை. ஆனாலும் தேவா இசைக்கு என்று தனி ரசிகர் கூட்டம் எப்போதும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த மாதம் ஜூன் 15ஆம் தேதி கோவையில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

‘நினைத்தேன் வந்தாய்’ என்ற பெயரில் இந்த இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.. இதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது

Music composer Deva music concert in Coimbatore

#ThenisaiTendral @ungaldevaoffl
makes his debut in #Coimbatore !!
Catch him live on June 15th for a night of unforgettable music.

#DevaInCoimbatore 🎵 🎤
“நினைத்தேன் வந்தாய்”

Ticket link : https://www.ticketprix.com/l/nxgo?afId=giantfilmsninaithenvanthai

@GiantFilmworks @ticketprix @seedmediacompan @pro_thiru

OTT PLUS – தியேட்டரில் மிஸ் ஆச்சா.? ஒரு நாளைக்கு ₹1 செலவில் படம் பாருங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

OTT PLUS – தியேட்டரில் மிஸ் ஆச்சா.? ஒரு நாளைக்கு ₹1 செலவில் படம் பாருங்க

*சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள ‘ஓடிடி பிளஸ்’

*புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்த இயக்குநர் சீனுராமசாமி*

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகின்றன.

இதற்கு ஒரு தீர்வாக வந்தவை தான் ஓடிடி தளங்கள். இவற்றின் மூலம் தங்கள் மொழி மட்டுமல்லாது வேறு மொழிகளிலும் ஒருவரது படைப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனாலும் தற்போது முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் துவங்கியுள்ளது.

இதற்கு ஒரு புதிய தீர்வாக உருவாக்கப்பட்டுள்ளது தான் ‘ஓடிடி பிளஸ்’ என்கிற புதிய ஓடிடி தளம். அதே சமயம் இதன் பெயருக்கு ஏற்றபடி தன்னுள் இன்னும் சில ஓடிடி தளங்களை ஒன்றிணைத்து இந்த ‘ஓடிடி பிளஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் இயக்குநர்களாக எம்.ஆர் சீனிவாசன், சுதாகர் மற்றும் கேபிள் சங்கர் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர்.

இந்த ‘ஓடிடி பிளஸ்’ துவக்க விழாவும் இதில் ஒளிபரப்பாகின்ற ‘ஃபெமினிஸ்ட்’ என்கிற வெப் சீரிஸின் முதல் பாகம் மற்றும் ‘சென்டென்ஸ்’ என்கிற குறும்படம் ஆகியவற்றின் திரையிடலும் நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபிள் நடைபெற்றது. மேலும் அடுத்தடுத்து இந்த ‘ஓடிடி பிளஸ்’-ல் இடம் பெற இருக்கும் படைப்புகளின் ட்ரெய்லர்களும் திரையிடப்பட்டன.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனுராமசாமி கலந்து கொண்டார்.

மேலும் சமீப காலங்களில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி அதே சமயம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படைப்புகளை கொடுத்த இயக்குநர்கள் ஜான் கிளாடி (பைரி), மணிவர்மன் (ஒரு நொடி), ரா.வெங்கட் (கிடா), பாலாஜி வேணுகோபால் (லக்கி மேன்), கண்ணுசாமி ராஜேந்திரன் (வட்டார வழக்கு), யஷ்வந்த் கிஷோர் (கண்ணகி), விக்னேஷ் கார்த்திக் (ஹாட்ஸ்பாட்), சரத் ஜோதி மற்றும் எழுத்தாளர்கள் வசந்த் பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திர ஹாஸ்மி (கூஸ் முனுசாமி வீரப்பன் வெப்சீரிஸ்) ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டதுடன் இயக்குநர் சீனுராமசாமி கையால் நினைவு பரிசும் புத்தகமும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் சீனுராமசாமி பேசும்போது…

“இந்த ஓடிடி பிளஸ் தளம் எதிர்காலத்தில் உருவாகும் புதிய படைப்பாளர்களுக்கு நல்லதொரு வரப்பிரசாதமாக இருக்கும்” என்று கூறினார். இதில் கலந்துகொண்ட இயக்குநர்கள் அனைவருமே இப்படி தங்களது படைப்பை பெருமைப்படுத்தும் விதமாக தங்களுக்கும் அங்கீகாரம் அளித்து பாராட்டி நினைவு பரிசு வழங்கியதற்காக தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்..

இந்த நிகழ்வில் திரையிடப்பட்ட, கேபிள் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபெமினிஸ்ட்’ வெப் சீரிஸ் முதல் பாகத்திற்கு பார்வையாளர்களிடமும் பத்திரிக்கையாளர்களிடமும் மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தன.

‘ஓடிடி பிளஸ்’ இயக்குநர்களில் ஒருவரான கேபிள் சங்கர் பேசும்போது…

“ஓடிடி தளங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த ‘ஓடிடி பிளஸ்’-ல் தற்போது ஐந்து ஓடிடி தளங்கள் இணைந்துள்ளன. இனிவரும் நாட்களில் பல ஓடிடி தளங்களையும் ஒரே தளத்தில் கொண்டு வருவது தான் இந்த ‘ஓடிடி பிளஸ்’-ன் நோக்கம்.

குறைந்தபட்சமாக மாதத்திற்கு ரூபாய் 29 கட்டணத்திலிருந்து ரூ 99, ரூ 199 என அதிகபட்சமாக 299 ரூபாய் வரை ஒரே கட்டணத்தில் அதாவது ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் அனைத்து ஓடிடி தளங்களிலும் உள்ள படைப்புகளை ரசிகர்கள் பார்த்து ரசிக்க முடியும்.

இதில் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது அதையும் தாண்டி பல மொழிகளில் வெளியான மற்றும் இனிமேல் வெளியாக இருக்கின்ற திரைப்படங்கள், வெப்சீரிஸ்கள் மற்றும் குறும்படங்கள் என அனைத்தும் இதில் இடம்பெற இருக்கின்றன.

அந்த வகையில் இயக்குனர் கீரா இயக்கத்தில் வெளியான ‘வீமன்’ என்கிற படம் நேரடியாக ஓடிடி பிளஸ்சில் வெளியாகிறது.

அதுமட்டுமல்ல ‘பிகினி சமையல்’ என்கிற கவர்ச்சிகரமான ரியாலிட்டி ஷோ ஒன்று ஏழு எபிசோடுகளாக ஆங்கிலத்தில் வர இருக்கிறது” என்று கூறினார்.

தற்போது ‘ஃபெமினிஸ்ட்’ வெப் சீரிஸ், ‘சென்டன்ஸ்’ குறும்படம், ‘ஜெனி’ ஹாரர் திரைப்படம் மற்றும் ‘மது’ என்கிற 45 நிமிட படம் ஆகியவை ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இதில் ‘மது’ என்கிற படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட இரண்டு நாட்களில் பத்தாயிரம் நிமிடங்களை தாண்டி ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. ‘ஃபெமினிஸ்ட்’ வெப் சீரிஸ் முதல் பாகம் ஸ்ட்ரீமிங் ஆன முதல் நாளிலேயே 5,000 நிமிடங்களை எட்டியுள்ளது.

Seenu Ramasamy wishes Cable Sankar for OTT PLUS

——-

ஹீரோ நான்தான்.. ஆனால் கிங்கு அன்புசெழியன்.; அவரை தேடாத ஹீரோஸ் இல்ல.. – சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோ நான்தான்.. ஆனால் கிங்கு அன்புசெழியன்.; அவரை தேடாத ஹீரோஸ் இல்ல.. – சந்தானம்

*கோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில், நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு*

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’.

உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வினில்….

எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தன் பேசியதாவது…

கோபுரம் பிலிம்ஸ் தயாரித்த முதல் படமான ‘வெள்ளக்கார துரை’ எழுத்தாளரும் நான் தான். 10 வருடம் கழித்து அடுத்த வெற்றிப்படமான ‘இங்க நான் தான் கிங்கு’ படத்திற்கு எழுதியுள்ளேன். அன்புசெழியன் சாரிடம் கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது, உடனே எல்லாம் ஆரம்பித்துவிட்டது. என்னுடன் இக்கதைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள் இந்த காலத்தில் ஒரு படத்திற்கு உயிர் கொடுக்கும் தயாரிப்பாளர் இன்னொரு கடவுள். கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் மற்றும் சுஷ்மிதா அன்புசெழியன் இருவருக்கும் என் நன்றிகள். அடுத்ததாக இப்படம் முழுமை பெற மிகமுக்கிய காரணமான, எனக்கு வழிகாட்டியாக இருந்த சந்தானம் சாருக்கு நன்றி.

என் இயக்குநர் ஆனந்த் சார், எங்களுக்குள் எப்போதும் ஊடல்கள் இருக்கும். என் கதையை முழுமையான சினிமாவாக மாற்றியுள்ள அவருக்கு நன்றி. தம்பி ராமையா சார் அருமையாக வேலை பார்த்துள்ளார் அவருக்கும் என் நன்றிகள். பாடலில் பட்டையை கிளப்பியுள்ள இமான் சாருக்கு என் நன்றிகள். அழகான தமிழ் பேசும் ஹீரோயினுக்கு வாழ்த்துகள். இந்தப்படம் மிகப்பெரிய ஹிட்டாகும். படத்தின் நிறை குறைகளை கூறி ஆதரவு தாருங்கள், அனைவருக்கும் நன்றி.

நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது…

இந்த படத்தில் நடித்ததற்கு நான் மிக சந்தோஷப்படுகிறேன் எனக்கு நல்ல சம்பளம் தந்தார்கள். இதற்கு முன் ‘வெள்ளக்கார துரை’ படம் செய்தேன், என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள்.

மிகச்சிறந்த தயாரிப்பாளர். சந்தானம் சாரை புகழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள் அவர் உங்களுக்கு அதிகம் வாய்ப்பு தரவில்லை என சொல்கிறார்கள்.. ஆனால் என் வாழ்க்கைக்கே அவர் தான் அதிகம் வாய்ப்பு தந்துள்ளார்.

இப்படத்திற்கும் அவர் தான் வாய்ப்பு வாங்கி தந்தார். அவருக்கு என்றும் நன்றியுணர்வுடன் இருப்பேன். இப்படத்தில் இமான் சார் நல்ல பாடல்கள் தந்துள்ளார். என்னை தியேட்டருக்கு வராதே என பலர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் இந்தக்காலத்தில் நேரடியாக சென்று விளம்பரம் செய்தால் தான் படத்திற்கு கூட்டம் வரும். நான் என்னால் முடிந்ததை செய்வேன். ‘இங்க நான் தான் கிங்கு’ மிகப்பெரிய வெற்றியடையும்.

இயக்குநர் ஆனந்த் நாராயண் பேசியதாவது…

இதுவரையிலும் படத்திற்கு ஆதரவு தந்து வரும் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் அன்பு சார் கதை கேட்கிறார் என்றதும் அவரை நெருங்க முயற்சித்தேன். செந்தில் சார் மூலம் தான் அவரை சந்தித்தேன். ஒரு படம் செய்வதாக கதை சொன்னார்கள், உடனே ஒப்புக்கொண்டேன். எனக்காக முழு டீமையே கொடுத்தார்கள். படம் டாக்கி போர்ஷன் முடித்தவுடன் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார்.

சந்தானம் சாரை ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்திற்காக சந்தித்துள்ளேன், அவருக்கு நான் ரசிகன். இப்போது அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதல் நாளே என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். ஷூட்டிங்கில் செட்டிலேயே இருந்து என்னுடன் விவாதிப்பார். அவர் டீமுக்கு முக்கியமாக நன்றி. இமான் சார் மியூசிக் அட்டகாசமாக வந்துள்ளது. சந்தானம் சார் எமோஷன் காட்சி ஒன்று இருக்கிறது, அதில் சந்தானம்? இசையா? என போட்டியே இருக்கும்.

சந்தானம் இணையாக புதுமுகம் லயா சூப்பராக நடித்துள்ளார். தம்பி ராமையா சார் அருமையாக நடித்துள்ளார். எல்லோருடைய பெஸ்ட் இந்தப்படத்தில் தந்துள்ளனர் அனைவருக்கும் என் நன்றிகள். தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் நன்றி. கண்டிப்பாக குடும்பத்தோடு சந்தோஷமாக கொண்டாடும் படமாக இது இருக்கும், அதற்கு ரைட்டருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மே 10 படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.

இயக்குநர் செல்லா அய்யாவு பேசியதாவது…

கோபுரம் பிலிம்ஸ் தயாரித்த ‘வெள்ளக்கார துரை’ படத்தில், நான் அஸிஸ்டெண்ட். தயாரிப்பாளர் அன்பு சார் சினிமாவை எவ்வளவு நேசிப்பார் என்பது தெரியும். ஒரு படம் வெற்றி பெற்றால் அதைப்பற்றி நிறைய பேசுவார்.

திரைத்துறையில் இருப்பவர்களுக்கு பொறுப்பு மிக அதிகம் என்பதை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். கொஞ்ச காலத்திற்கு பிறகு இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.. வருடத்திற்கு நாலைந்து படங்கள் செய்ய வேண்டும். இந்தப்படம் நான் பார்த்துவிட்டேன். சந்தானம் சார் ரசிகன் நான். இந்தப்படத்தில் எல்லோரும் சிரித்து கொண்டே இருக்கலாம். அவருடன் இணைந்து விரைவில் படம் செய்வேன். படம் வெற்றிபெற வாழ்த்துகள்.

தம்பி ராமையா பேசியதாவது…

‘இங்க நான் தான் கிங்கு’, குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். இப்போது படங்கள் நிறைய விவாதிக்கப்படுகிறது. மலையாள படங்கள் பற்றி சொல்கிறார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் தாய் தமிழ் சினிமா தான்.

முன்பெல்லாம் தயாரிப்பு தரப்பில் கதை இலாகா இருக்கும். ஒரு கதை தயாராக பல அடுக்குகள் இருக்கும் தேவரய்யா ஆரம்பித்து ஆர் பி சௌத்திரி வரை கதையை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில் மிகுந்த கவனம் இருக்கும். அது போல் கோபுரம் பிலிம்ஸ் தேர்ந்தெடுத்து படம் செய்கிறார்கள். அன்புசெழியன் சார் தனது மகளை இந்த துறைக்கு கூட்டி வந்துள்ளார். தெளிவானவராக இருக்கிறார், வாழ்த்துகள் மகளே.

இப்படம் காம வாடை இல்லாத காமெடிப்படம். நல்ல கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். அன்பு தம்பி இமான் பெரிய அளவில் சிறப்பான பாடல்கள் தந்துள்ளார். சந்தானத்தின் வெற்றிக்கு காரணம் அவர் மனது தான். அவர் நிஜ ஹீரோ. தன் பழைய நண்பர்களை வைத்து காப்பாற்றுவது மிகப்பெரிய விஷயம்.

ஒரு காட்சியை கடைசி ரசிகன் வரை ரசிக்க வேண்டும் என்பதில் கடும் முயற்சி செய்வார் சந்தானம். அவருடன் பயணிப்பது மிகுந்த சந்தோஷம். லியா அறிமுக நடிகை என்ற தயக்கம் இல்லாமல் எங்களுக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார், நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துகள். இப்படத்தில் முழு நீள காமெடி பாத்திரம் செய்துள்ளேன். அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். மே 10 அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி.

நடிகை பிரியாலயா பேசியதாவது…

இந்த நாள் எனக்கு மிக முக்கியமான நாள். என் முதல் பட மேடை, கடவுளுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் நன்றி. என் தயாரிப்பாளர் அன்பு சார், சுஷ்மிதா மேடம் இருவருக்கும் நன்றி. எப்போதும் ஆதரவாக என்னை விசாரித்து பார்த்துக் கொண்டார்கள். கோபுரம் பிலிம்ஸில் என் முதல் படம் செய்ததை பெருமையாக நினைக்கிறேன். எல்லோருக்கும் பிடித்த சந்தானம் சார், அவருடன் பழகிய யாருக்கும் அவரை பிடிக்காமல் போகாது. அவ்வளவு எளிமையானவர்.

முதலில் செட்டில் என்னுடன் இங்கிலீஷில் பேசினார். அவருக்கு நான் தமிழ் என்பது தெரியாது, நான் சொன்ன பிறகு ஜாலியாக பேசினார் அவருடன் நடித்தது மகிழ்ச்சி. கேப்டன் கூல் ஆனந்த் சார் ஜாலியாக பேசி வேலை வாங்கி விடுவார். தம்பி ராமையா சாரின் எனர்ஜி பிரமிப்பாக இருக்கும். அவர் தமிழுக்கு ரசிகை நான். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். மியூசிக் தான் படத்தின் ஆன்மா. இமான் சாருக்கு என் நன்றிகள். படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.

இசையமைப்பாளர் இமான் பேசியதாவது…

கோபுரம் பிலிம்ஸில் ‘வெள்ளக்கார துரை’ படம் செய்துள்ளேன். ஒரு இடைவேளைக்குப் பிறகு அன்புசெழியன் சாருடன் இணைகிறேன். என் மீது அவருக்கு தனித்த அன்பு இருக்கிறது. அவர் எல்லாப் படத்திலும் என் இசை இருக்க வேண்டுமென நினைப்பார். அவருக்கு என் நன்றிகள்.

இப்படம் மூலம் அறிமுகமாகும் சுஷ்மிதாவிற்கு வாழ்த்துக்கள். சந்தானம் காமெடி தான் என் வீட்டில் ஓடிக்கொண்டே இருக்கும், அவருடன் வேலை பார்க்க வேண்டுமென பல காலமாக ஆசைப்பட்டேன், அது இந்தப்படத்தில் அமைந்தது மகிழ்ச்சி.

ஒரு ஹீரோயினுக்கு ஒரு வெற்றிப்பாடல் அமைந்தால் அது மிகப்பெரிய விளம்பரமாக இருக்கும் ‘மாயோன்…’ பாடல் லயாவுக்கு மிக அருமையான பாடலாக அமைந்துள்ளது. சந்தானமும் கலக்கியுள்ளார்.

இப்படத்தில் மூன்று பாடல்கள். ‘மாயோன்…’ எனக்கு நெருக்கமான பாடல், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியுள்ளார், அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் காமெடியைத் தாண்டி எமோஷனல் காட்சிகளிலும் சந்தானம் அசத்தியுள்ளார். இசையில் பல காட்சிகள் சவாலாக இருந்தன. மிக மகிழ்ச்சியாகவும் இருந்தது.

தயாரிப்பாளர் அன்புசெழியன் பேசியதாவது…

சந்தானம் சாரை வைத்து ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன். கொஞ்ச காலம் தயாரிப்பில் இல்லை. இந்தக்கதை வந்த போது சந்தானம் சரியாக இருப்பார் எனத் தோன்றியது. அவர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்.

என்னுடைய பார்ட்னராக சரிகமா ஆனந்த் இணைந்துள்ளார், அவருக்கு நன்றி. தம்பி ராமையா சார், நாயகி லயா, கூல் சுரேஷ் எல்லோருக்கும் வாழ்த்துகள். இமான் சார் அருமையான பாடல்கள் தந்துள்ளார்.

சந்தானம் இந்தப்படத்திற்காக ஸ்பெஷலாக உழைத்து தந்தார், நன்றி. செல்லா இந்தப்படத்திற்காக எனக்காக வந்து உழைத்து தந்தார் அவருக்கு என் நன்றிகள். அவருடன் படம் செய்ய பேசிக்கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்து இன்னும் நிறைய படம் செய்யவுள்ளேன், உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

முதன் முதலாக தனது எக்ஸ் தளத்தில் இப்படத்தைப் பற்றி பதிவிட்டு எங்களுக்கு ஆதரவு தந்த உலக நாயகன் கமலஹாசன் சாருக்கு நன்றி. என் மகள் சுஷ்மிதா இப்படம் மூலம் திரைத்துறைக்கு வந்துள்ளார் அவருக்கு ஆதரவு தாருங்கள். படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.

நடிகர் சந்தானம் பேசியதாவது…

‘இங்க நான் தான் கிங்கு’ படத்தில் ஹீரோ என்னவோ நான் தான் ஆனால் கிங்கு அன்புசெழியன் தான். தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அவர் தான். அவர் ஆபிஸுக்கு வராத ஹீரோவே இல்லை.

அவரிடம் நானே பணம் கேட்டுதான் போனேன், என்னை அவருக்கு பிடித்தது, வீடு வாங்க காசு கேட்டுப்போனேன், ஆனால் அப்படி செய்யாதீர்கள், படத்திற்கு அட்வான்ஸ் தருகிறேன், படம் செய்யலாம் என்றார். அவர் மனதளவில் மிக நல்ல மனிதர். என்னுடன் எப்போதும் ஜாலியாக பேசுவார். அவர் என்னிடம் இந்தப்படம் செய்யலாம் என்றார்.

எனக்கும் பிடித்திருந்தது என்றவுடன் உடனே செய்யலாம் என்றார். அவருடன் இணைந்து படம் செய்தது சந்தோஷம். படம் பார்க்க வருபவர்கள் சிரித்துவிட்டு போக வேண்டும் என்றார், தயாரிப்பாளராக இல்லாமல் தியேட்டர் ஓனராக இப்படத்தை எடுத்துள்ளார்.

சுஷ்மிதா என் படம் மூலம் தயாரிப்பாளராக வந்துள்ளார், வாழ்த்துகள். இமான் இதுவரை என் படத்தில் இல்லாத கலரில் எனக்கு மிக வித்தியாசமான இசையை தந்துள்ளார், நன்றி.

இயக்குநர் ஆனந்த் அருமையாக படத்தை எடுத்துள்ளார். தம்பி ராமையா சார் மாதிரி இண்டலிஜண்ட் பார்க்க முடியாது, அவருடன் பேசும்போது பிரமிப்பாக இருக்கும். அவர் இப்படத்தில் அருமையான பாத்திரம் செய்துள்ளார்.

ஹீரோயின் பிரியா லயா நம்ம சேலத்துப் பெண், அவரை பாலிவுட் என நினைத்தேன் நன்றாக நடித்துள்ளார். என் படத்தில் எப்போதும் இருக்கும் மாறன், சேஷு, கூல் சுரேஷ், மனோ பாலா என நிறைய பேர் இதிலும் இருக்கிறார்கள்.

‘கட்டா குஸ்தி’ படம் ஹிட் தந்துவிட்டு இப்படத்தில் வந்து எங்களுக்காக உழைத்து தந்த செல்லா அய்யாவு சாருக்கு நன்றிகள். 90 கிட்ஸ் 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப்படம். எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக்காக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.

தம்பி ராமையா, சேஷு, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், பால சரவணன், விவேக் பிரசன்னா, மாறன், சுவாமிநாதன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது.

சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். D. இமானின் இசையில் பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியுள்ளார். பல்வேறு வெற்றி படங்களுக்கு இவர் எழுத்தாளராக பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு – ஓம் நாராயண், எடிட்டிங் – எம். தியாகராஜன்,
கலை – எம். சக்தி வெங்கட்ராஜ், ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல், பிரமாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் கல்யாண் – பாபா பாஸ்கர்.

‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்கியுள்ளார். கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரித்துள்ளார். மே 10 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Santhanam speech about Inga Naanthan Kingu Producer Anbuchezian

***

மாற்றுத்திறனாளி குறித்த என் பார்வையை மாற்றியவர் ஸ்ரீகாந்த்… – ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாற்றுத்திறனாளி குறித்த என் பார்வையை மாற்றியவர் ஸ்ரீகாந்த் பொல்லா.. – ஜோதிகா

*ஜோதிகா நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!*

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தி திரைப்படம் மே 10ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் துஷார் ஹிர நந்தானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஆலயா எஃப், சரத் கெல்கர், ஜமீல் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரதம் மேத்தா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் மிலிந்த், தனிஷ் பக்ஷி, சாஸெட் -பரம்பரா மற்றும் வேத் சர்மா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.‌

பார்வை திறன் சவாலுள்ள மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் சாக் இன் சீஸ் பிலிம் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், கிருஷ்ணகுமார் மற்றும் நிதி பார்மர் ஹிராநந்தானி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை விமான நிலையத்தில் உள்ள பிவிஆர் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது ஜோதிகா, இயக்குநர் துஷார் ஹிராநந்தானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை ஜோதிகா பேசுகையில்…

” ஸ்ரீகாந்த் திரைப்படம் மிகவும் இன்ஸ்பிரேஷனான ஸ்டோரி. துணிச்சலாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நானும் பங்களிப்பு செய்ததற்காக பெருமிதம் கொள்கிறேன்.

என்னுடைய திரையுலகப் பயணத்தில் இந்த திரைப்படம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீகாந்த் பொல்லாவின் கதை கேட்டதும் எனக்கு வியப்பு ஏற்பட்டது. அவரை நேரில் சந்தித்து பேசியதும், அவரது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை கேட்ட பிறகு வாழ்க்கை பற்றிய எனது பார்வை முற்றாக மாறிவிட்டது.

அதிலும் குறிப்பாக பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த என்னுடைய பார்வை மாறிவிட்டது. அவர்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் என்பதையும் .. பொது வெளியில் அவர்கள் அவர்களை எப்படி நாம் நடத்துகிறோம் என்பதையும் குறித்தும் பல வினாக்களை என்னுள் எழுப்பியது.

இப்படம் பலருக்கும் அவர்களது அகக்கண்களை திறந்து விடும் படைப்பாக இருக்கும். இந்தப் படம் வெளியான பிறகு பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளை பற்றி நாம் கொண்டிருக்கும் பார்வையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

இப்படத்தில் நான் ஆசிரியை வேடத்தில் நடித்திருக்கிறேன். ‘காக்க காக்க”, ‘ராட்சசி’ அதன் பிறகு ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தப் படத்தில் 3வது முறையாக ஆசிரியையாக நடித்திருக்கிறேன்.

பாலிவுட் திரையுலகில் நான் நடிக்கும் மூன்றாவது ஹிந்தி திரைப்படம் இது.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் இனிமையானது. அற்புதமானது. பணியாற்றுவதற்கு மொழிகள் தடையில்லை. மலையாள திரையுலகமாக இருந்தாலும்.. தமிழ் திரையுலகமாக இருந்தாலும்.. பாலிவுட் திரையுலகமாக இருந்தாலும்.. திறமையான கலைஞர்களுடன் தான் பணியாற்றியிருக்கிறேன்.

இப்படத்தை டி சிரீஸ் நிறுவனமும் , நிதி ஹிராநந்தனியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். துஷார் ஹிராநந்தனி இயக்கியிருக்கிறார்.

மே 10ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் துஷார் ஹிராநந்தானி பேசுகையில்…

” ஸ்ரீகாந்த் பொல்லாவின் சுயசரிதையை திரைப்படமாக உருவாக்குவதற்காக ஹைதராபாத்தில் அவரை சந்தித்தேன். மூன்று நாட்கள் அவருடன் செலவழித்தேன். நிறைய விசயங்கள் குறித்து விவாதித்தோம். அதன் போது அவர் திரைப்படத்தை உருவாக்குவதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். ” என்றார்.

Jothika 3rd hindi movie about Srikanth biopic

FILM STUDIES ஐசரி கணேஷ் & வெற்றிமாறன் கூட்டணியில் இலவச திரைக் கல்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

FILM STUDIES ஐசரி கணேஷ் & வெற்றிமாறன் கூட்டணியில் இலவச திரைக் கல்வி

வேல்ஸ் பல்கலைக்கழகமும் பன்னாட்டுத் திரைப்பண்பாட்டு மையமும் இணைந்து வழங்கும் இலவச திரைப்படக் கல்வி

வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக
மூன்றாண்டுத் திரைப்படக் கல்வியை வழங்குகிறது

சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி B.Sc Film Studies (3 Years) , M.Sc. Film and culture studies (2 years), PG Diploma in Media skills (1 year) ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஏட்டுக்கல்வியுடன் செயல்முறைக்கல்வியும் சிறந்த முறையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தரும் திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ், பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தின் நிறுவனத்தலைவர் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் (03.05.2024) கையெழுத்தானது..

பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையம் :

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் திரைத்துறை கனவுகளை நிஐமாக்குவதே பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தின் நோக்கமாகும்.

இதன் நிறுவனத்தலைவர் இயக்குநர் வெற்றிமாறன் கூறுகையில்…

தன்னை மேம்படுத்திய இந்தச் சமூகத்திற்கு தான் ஆற்ற வேண்டிய கடமை இது, எனவே இந்த மையத்தை நடத்துவதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார். மேலும் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து B.Sc,M.Sc, Diplomo ஆகிய பாடப்பிரிவுகளை நடத்துவதால் மாணவர்களுக்கு செயல்முறைக் கல்வியுடன் ஏட்டுக்கல்வியும் கிடைக்கிறது.

இதனால் அவர்கள் எளிதாக திரைத்துறையில் வெற்றி நடை போடலாம் என தெரிவித்தார். வேல்ஸ் கல்விக்குழுமம் தற்போது வேல்ஸ் கல்விக்குழுமம் 42000 மாணவர்கள் மற்றும் 7500 பணியாளர்களுடன் சுமார் 43 நிறுவனங்களுடன் கல்வி சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

வேல்ஸ் குழுமம் லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் தங்கள் கல்விசேவையை விரிவுபடுத்தியுள்ளது. வேல்ஸ் பல்கலைக்கழகம் நிகர்நிலை பல்கலைக்கழகம் என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது.

100 க்கும் மேற்பட்ட இளநிலை (யுஜி) முதுகலை (பிஜி) பாடப்பிரிவுகளை வழங்குகிறது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சமுதாயத்தொண்டு வேல்ஸ் கல்வி நிறுவனம், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களும் கல்வி பயில வழிவகை செய்யும் வகையில் வி-சாட் என்னும் தகுதித்தேர்வை நடத்தி அதில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்கிவருகிறது.

அதேபோல இயக்குநர் சங்கம், நடிகர் சங்கம், நலிந்த நாடகக்கலைஞர்கள் மற்றும் பெப்சி உள்ளிட்டை அமைப்புகளில் இருக்கும் ஏழை தொழிலாளர்களுக்கும் பொருளாதார உதவிகள் மற்றும் அவர்கள் குழந்தைகள் இலவசமாக கல்வி பயில தேவையான உதவிகள் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு ஆண்டும் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

சமுதாய சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தொடர்ந்து பல சேவைகளை செய்து வரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் பின்வருமாறு கூறினார்.

தமிழ் சினிமாவிற்கும் இந்திய சினிமாவுக்கும் உலக அளவில் பெருமை சேர்ந்து வரும் தேசிய விருது நாயகன் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடலூரில் பிறந்து திரைப்படக் கனவுகளுடன் சென்னை வந்து இயக்குநர் பாலுமகேந்திராவிடம் பயின்று இன்று பல தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரராக இருப்பவர் அருமை நண்பர் இயக்குநர் வெற்றிமாறன்.

இவருடைய விசாரணை திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதை அனைவரும் அறிந்த விஷயம் பலருக்கும் தெரியாத விஷயம் என் நண்பரைப் பத்தி சில இங்கு நான் சொல்கிறேன்.

வெற்றிமாறனுக்கு இயற்கை விவசாயத்தின் மேல் தீராத காதல் உண்டு. உத்திரமேரூரில் இயற்கை விவசாயம் பண்ணிட்டு இருக்கிறார். அதேபோல் மருத்துவ உதவியையும் கல்வி உதவியையும் அவர் கிட்ட யாரு போய் கேட்டாலும் உடனே உதவிசெய்யும் குணம் கொண்டவர். இதையெல்லாம் பொதுவெளியில் எங்கேயும் சொல்லிக்கவும் மாட்டார்.

அத்தோட தமிழகத்தின் குக்கிராமங்களில் இருந்து திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னை வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், திரைத்துறையில் நுழைவதே குதிரைக்கொம்பு.

அந்த மாதிரியான மாணவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பன்னாட்டு திரைப் பண்பாட்டு மையம் இலவசமாக மூன்றாண்டு திரைப்படக் கல்வியை வழங்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இதில் திறமையுள்ள மாணவர்கள் சேர்ந்து இலவசமாக பயிலலாம். நாங்கள் இருவரும் இனி வரும் காலங்களில் சேர்ந்து இத்தகைய கல்விச் சேவையை அளிப்போம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

Free Film Studies for talented students

More Articles
Follows