கடைக்குட்டி சிங்கத்திற்கு மற்றொரு பெருமை; தியேட்டரில் இளநீர் விற்பனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக தியேட்டர்களில் உள்ள கேண்டின்களில் பாப்கார்ன், பர்கர், பப்ஸ் உள்ளிட்டவைகளே நாம் பார்த்து இருக்கிறோம்.

ஆனால் திருநெல்வேலியில் உள்ள ராம் முத்துராம் திரையரங்கில் முதன்முறையாக இளநீர் விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதனை அத்திரையரங்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த புதிய முயற்சி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் ‘ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் தற்போதுள்ள விவசாய நலனை கருதி நம் திரையரங்கில் இளநீர் இனி விற்கப்படும்.

விவசாயம் பற்றி பேசும் ‘கடைக்குட்டி சிங்கம் ‘திரையிடும் சமயத்தில் இந்நிகழ்வை நடத்தியதில் மகிழ்ச்சி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Because of Kadaikutty Singam Ram Cinemas theatre started Tender Coconut sales

சென்னையில் அக்-14 தேதியில் இந்திய உலக குறும்பட விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய உலக குறும்பட விழா (இந்திய குளோபல் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல்) வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது.

இறுதிப் போட்டியில் பங்கேற்கும் 80 குறும்படங்கள், சென்னையில் பல்வேறு இடங்களில் திரையிடப்பட உள்ளன. திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொள்ளும் பயிற்சிப் பட்டறைகளும் நடத்தப்பட்ட உள்ளன.

இறுதிப்போட்டியில் பங்கேற்கும் குறும்படங்களின் திரையிடலும், விருது வழங்கும் விழாவும் வரும் அக்-14 ம் தேதி சென்னை ‘பிரசாத் லேப்’பில் நடைபெற உள்ளது.

குறும்படங்கள் அனுப்பிவைப்பதற்கான கடைசி தேதி ஜூலை-30ல் இருந்து அக்-5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறும்படங்களை மெருகேற்றும் விதமாகவும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் கருத்தரங்கம் மற்றும் சிறப்பு பயிற்சி அமர்வுகள் நடத்தப்படவுள்ளன.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் போட்டியிடும் இந்திய மற்றும் சர்வதேச படைப்பாளிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கும் விதமாக இந்தியாவில் நடத்தப்படும் குறும்பட விழாக்களுக்கான முக்கியமான படியாக இந்த விழா இருக்கும்.

தனித்து படம் எடுக்கும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த கதைகளை பகிர்ந்துகொள்ள திட்டமிட்டுள்ளோம்.

நீங்கள் சின்ன பட்ஜெட்டிலோ அல்லது பிரமாண்டமான பட்ஜெட்டிலோ படம் எடுத்தாலும் உண்மையிலேயே பார்வையாளர்களை கவர்ந்திழுப்பது எது என்பதை சொல்லும் விதமாக அந்த கதைகள் இருக்கும்.

பல்வேறு சமூகத்தினரின் ஒருமித்த ஆதரவுடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பொழுதுபோக்கு, தூண்டுதல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை, உலகை சுற்றியுள்ள இந்த கதைகளை காட்டுவதன் மூலம் அந்த சமூகத்தினரிடம் கொண்டு சேர்க்கலாம்.

இந்த குறும்பட விழாவை விகோஸ் மீடியா (Vgosh Media) ஒருங்கிணைக்க, அதனுடன் பல்வேறு கல்வி நிறுவனங்கள், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் (கில்டு), பிக் எப்.எம் (BIG FM), பிலிம்ப்ரீவே (FilmFreeWay), கே எஸ்.கே மீடியா (KSK Media) மற்றும் பலர் இதற்கு தங்கள் ஆதரவை அளிக்க இருக்கின்றனர்.

விருதுக்கான பிரிவுகள் (சர்வதேச அளவில் ) ; சிறந்த குறும் கற்பனை படம், சிறந்த குறும் ஆவணப்படம், சிறந்த குறும் அனிமேஷன் படம் , சிறந்த குறும் சோதனை முயற்சி படம், சிறந்த குறும்படம் (நகைச்சுவை /நாடகம் / திகில்), சிறந்த இந்திய குறும்படம் – சிறப்பு விருதுகள்; சிறந்த குழந்தைகளுக்கான குறும்படம்.

விருதுகளுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வாகும் படங்களுக்கு விழாவுக்கு முன்பும், விழாவின் போதும், விழாவிற்கு பிறகும் கூட அவர்களின் உழைப்பை, திறமையை ஊக்குவிக்கும் விதமாக இந்த திரைப்பட விழா உணர்ச்சிப்பூர்வமாக அமையவுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்த திரைப்பட விழா குறித்த செய்திகளை தொடர்ந்து பகிர்வதன் மூலம் அதில் உள்ள எண்ணற்ற நபர்களுக்கு இந்த விழா குறித்து தெரியவரும்.

மேலும் இந்த குறும்பட விழாவிற்கு பிறகும் கூட அது உலகளவில் அதிக எண்ணைக்கையிலான பார்வையாளர்களை ஒன்றுதிரட்ட உதவும்.

விபரங்களுக்கு www.igsff.com என்கிற இணையதளத்தை பார்க்கவும்.

மேலும் உங்களது படங்களை Filmfreeway மூலமாக (https://filmfreeway.com/IndiaGlobalShortFilmFestival) வும் சமர்ப்பிக்க முடியும்.

IGSFF 2018 For Immediate Press Release

சிகரெட் காட்சிகளை ஏற்கவே முடியாது; விஜய்க்கு எதிராக கௌதமி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேன்சர் நோயிலிருந்து மீண்டவர்கள் தொடர்பான வாழ்க்கையை கொண்டாடுதல் என்ற நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை கவுதமி பங்கேற்றார்.

இவருக்கும் கேன்சர் நோய் இருந்தது. தற்போது அதிலிருந்து மீண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசுகையில்…

திரைப்படங்களில் நடிக்கும் எந்த நடிகராக இருந்தாலும் திரையுலகில் அவர் எந்த இடத்தில் இருந்தாலும் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது” என்றார்.

அண்மையில் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சிகரெட் பிடிப்பது போல் விஜய் இருந்தார். அன்றுமுதலே இதுபோன்ற சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Gauthami slams Actors for smoking in Cinema

என் ரசிகர்களுக்கு யாருக்கும் அடிமையாக இருக்கக்கூடாது… – சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யாவுக்கு இன்று (ஜூலை 23) பிறந்தநாள்.

இந்திய திரையுலகில் பிரதானமாக உள்ள தமிழ் சினிமா துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக்கொண்டு பெரும் வசூல் வேட்டை நாயகனாக ஓடிக்கொண்டிருப்பவர் நம் சூப்பர் ஹீரோ சூர்யா.
அவர் தன் ரசிகர்களை சந்தித்து பேசியபோது…

வாழ்க்கையை புதிய அனுபவங்கள்தான் மேம்படுத்தும். எப்போதும் புதுப்புது விஷயங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டே இருங்கள் என்று நடிகர் சூர்யா தனது ரசிகர்கள் முன் தெரிவித்தார்.

‘‘நாம குழந்தையாக இருக்கும்போது முதன் முதல்ல சைக்கிள் வேணும்னு ஆசைப்படுவோம். அடுத்து கொஞ்சம் வளர்ந்ததும் பைக் வேணும்னு அப்பாகிட்ட அடம்பிடிப்போம்.

அதுவும் எந்த மாதிரி பைக்னுகூட ஒரு ஐடியாவோட சுத்துவோம். அடுத்து கார். இப்படி வாழ்க்கையில புதுசு புதுசுன்னு எப்பவும் ஒரு உற்சாகம் இருந்துகொண்டே இருக்கும். அது அப்படியே கல்லூரி, வேலை, திருமணம்னு அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்துக்கிட்டே இருக்கும்.

இந்தமாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்துல ஒவ்வொரு ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வம் இப்போ நிறைய பேருக்கு குறையுதோன்னு தோணுது. லைஃப்ல ‘இது போதும்டா’னு சிலர் நினைக்கிறாங்க. ஈஸியா சலிப்படையவும் செய்றாங்க.

எப்பவுமே ஒரு புது அனுபவம் வைத்துக்கோங்க. நம்ம செய்ற வேலையில நாம தான் பெஸ்ட்டா இருக்கணும்னு மனசுல ஆழமா நினைங்க. என்னென்ன விஷயங்கள் கற்றுக்கொண்டே இருக்க முடியுமோ கத்துக்கிட்டே இருங்க. லைஃப்ல ஒரு விஷயம் மட்டும் போதும்னு இங்கே இல்லை.

இப்போ எல்லாம் சந்தோஷம் ரொம்ப முக்கியம். கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடுகிறது. எதுக்காகவோ அந்த சந்தோஷத்தை நாம விட்டுடுறோம். எந்த காரணத்துக்காகவும் அதை இழக்கக்கூடாது. சந்தோஷம் என்பது சுலபமான விஷயம் அல்ல. வீடு, பணம் மட்டுமே சந்தோஷத்தை கொடுத்துடாது. மனதை எப்பவும் சந்தோஷமா வைத்துக்கொள்வதே ஒரு கலை.

நிறைய படித்து, அறிவாளியா இருக்குற ஒருவர் எப்பவும் உர்ர்ர்னு யார்கிட்டயும் எதுவும் பேசாம இருந்தா அவரை யாரும் சீண்டக்கூட மாட்டாங்க. அதுவே எப்பவும் சிரிச்சிக்கிட்டே மகிழ்ச்சியாக இருக்குறவங்கக்கிட்ட காரணமே இல்லாம அவங்களை சுத்தி நிறைய பேர் சூழ்ந்திடுவாங்க.

நாம வேலை செய்ற இடத்துல தொடங்கி எல்லா இடங்கள்லயும் சந்தோஷத்தை காட்டுறது ரொம்ப முக்கியம்.

யாரோடயும் யாரும் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டாம். அது தேவையில்லாம மன உளைச்சலை கொடுக்கும். நம்ம வாழ்க்கை நம்ம ஓட்டம்னு இருக்கணும். நம்ம வேலை நமக்கு பெஸ்ட்னு இருக்கணும். அதுல என்ன புது அனுபவம் கிடைத்ததுன்னு பார்க்கணும். எதிலும் தனித்து நிற்கணும். இங்கே போதும்னு லைஃப் கிடையாது.

ரசிகர்கள் என் மேல் எவ்வளவு அக்கறை வைத்திருக்கீங்களோ அதே அளவுக்கு எனக்கும் உங்க மீது அக்கறை உண்டு. வயசு போய்க்கிட்டே இருக்கும். அதுக்குள்ள நல்ல உயரத்தை தொடணும்.

உடல் உறுப்பு தானம், ரத்த தானம்னு செய்ற என் ரசிகர்கள் ஒவ்வொருவரும் யாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது. இருக்க மாட்டீங்க. நல்ல பழக்கங்களை கடைபிடிங்க. மற்ற எல்லாத்தையும்விட முதல்ல குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம்’’

இவ்வாறு நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

Suriya message to his fans on this Birthday

இரட்டை வேடம் போட்டு த்ரிஷா ஆடும் *மோகினி* ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக த்ரிஷா இரட்டை வேடங்களில் நடித்துள்ள மோகினி திரைப்படம் வருகிற ஜீலை 27ஆம் தேதி வெளியாகிறது.

எனவே மோகினி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் நாயகி த்ரிஷா, இயக்குனர் மாதேஷ், தயாரிப்பாளர் லட்சுமன், நகைச்சுவை நடிகர்கள் சுவாமிநாதன், கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் மாதேஷ் பேசியது :

இந்த படத்தை மிகபிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம். படத்தில் நாயகி த்ரிஷா சிறப்பாக நடித்துள்ளார். த்ரிஷா நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம்.

ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். இந்த படம் ஹாரர் படமாக இருந்தாலும் படத்தில் நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தை கவரும் வகையில் இருக்கும். இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது.

படத்தில் எபி ஜெனெடிக்ஸ் என்ற கான்செப்ட் உள்ளது. டிஎன்ஏ தொடர்பு பற்றிய விஷயங்கள் தான் படத்தின் முக்கியமான விஷயம். இப்படத்தின் vfx காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டது.

இப்படம் தமிழகத்தில் வெளியாவது போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகுகிறது. படத்தில் த்ரிஷா நிறைய சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார். படத்தில் சோட்டானிக்கரை கோவிலில் நாங்கள் கண்ட உண்மையான விஷயங்களை கிளைமாக்ஸ் காட்சிகையாக உருவாக்கியுள்ளோம் என்றார் இயக்குநர் மாதேஷ்.

த்ரிஷா பேசியது :-

நான் இப்படத்தில் மோகினி மற்றும் வைஷ்ணவி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் முதன் முதலில் நடித்துள்ள இரட்டை கதாபாத்திரம் இது தான்.

தினம் தினம் காலை எழுந்து செய்திதாளை படித்தால் அதில் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றி தான் செய்தி அதிகமாக உள்ளது. அந்த செய்திகளை படிக்கும் போது மனதுக்கு வருத்தமாக உள்ளது.

அந்த செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்பு தான் இருக்கும். மோகினி படத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம்.

இப்படத்தில் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் வகையில் நிறைய விஷயங்கள் உள்ளது. படத்தை நாங்கள் லண்டன் , பாங்காக் போன்ற இடங்களில் படமாக்கியுள்ளோம் என்றார் த்ரிஷா.

First time Trisha done dual roles in Mohini releasing on 27th July 2018

கமல்-ரஜினியை விட முதல்வரை ஆதரிக்கலாம் என சாருஹாசன் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும் நடிகருமான சாருஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தாதா 87 என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வருவதை அடுத்து அவர்கள் பற்றிய கருத்துக்களை அவ்வப்போது கூறி வருகிறார்.

ரஜினியை உயர்வாகவும் கமலை கடுமையாக விமர்சித்தும் பேசி வருகிறார்.

தற்போது முதன்முறையாக ஒரு எப்எம். நிகழ்ச்சி ஒன்றில்… அவர்கள் இருவரை விட முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இருவரும் தங்களின் சுறநலத்துக்காக அரசியலுக்கு வந்துள்ளதாகவும் ரஜினி பா.ஜ., உடன் கூட்டணி வைப்பார் என்றும் தமிழக கட்சிகளுடன் கமல் கூட்டணி வைப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

TN CM Edappadi Palaniswami is better than Rajini and Kamal says Charuhassan

More Articles
Follows