என் மகளுக்கு உன்ன மாதிரி ஆண் வேண்டும்; பிரியாவின் புதிய காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிய தலைமுறை டிவியில் செய்தி தொகுப்பாளராக தன் ஊடக வெளிச்சத்தை தொடங்கியவர் பிரியா பவானி ஷங்கர்

பின்னர் டிவி சீரியல்களில் நடிக்க தொடங்கி அதன் வழியாக சினிமாவில் காலடி வைத்தார்.

’மேயாத மான்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறர்.

இந்த நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பாய் புரெண்டுக்கு வித்தியாசமாக காதலை சொல்லி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ராஜ்வேல் ராஜ் என்பவருக்கு..’பத்து ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் என்னுடன் காதலில் விழுந்தபோது நான் ஆச்சரியப்படவில்லை.

ஆனால், இந்த ’புதிய என்னுடன்’ இருக்க முடிவு செய்தது தான் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. காயங்களை மறக்க சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருப்பதே பேராண்மை.

எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

MAN vs WILD நிகழ்ச்சியில் பங்கேற்க காட்டுக்கு சென்ற ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மேன் vs வைல்ட் என்ற நிகழ்ச்சி சில மாதங்களுக்கு இந்தியா முழுவதும் பிரபலமானது. இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சிதான்.

இந்த நிகழ்ச்சி பியர் கிரில்ஸ் எனப்படும் முன்னாள் பிரிட்டிஷ் பாதுகாப்பு படை வீரரால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தும் இதில் கலந்துக் கொண்டுள்ளார்.

இதற்காக கர்நாடகா – கேரளாவை இணைக்கும் பந்திபூர் காடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கே மான்கள், புலிகள், யானைகள் அதிக அளவில் காணப்படுகிறது.

காடுகளில் எப்படி வாழ்வது? அங்கு மனிதர்கள் வாழ்வதற்காக வழிகள் உள்ளதா? உள்ளிட்டவைகளை பியர் கிரில்ஸ் கற்றுத்தருவதாக கூறப்படுகிறது.

போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பு சாதனங்கள், உணவுகள், மருத்துவ சாதனங்களுடன் இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ரஜினி உயிருக்கு ஆபத்து; பாதுகாப்பு அளிக்க ரசிகர்கள் வேண்டுகோள்

இந்த சூட்டிங்கில் ரஜினியுடன் அவரின் 2வது மகள் சவுந்தர்யாவும் பங்கேற்றுள்ளார்.

ரஜினியின் தனிப்பட்ட பாதுகாவலர்களும் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துக் கொள்கிறார்.

இது கர்நாடக காட்டுப் பகுதி என்பதால் ஏன் தமிழக காடுகளை ரஜினி தேர்ந்தெடுக்கவில்லை? என சிலர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் காட்டின் அடர்த்தி, உயிர் பாதுகாப்பு, ஷூட்டிங் வசதி அனைத்தையும் பரிசோதித்த பின்னர்தான் ஏற்பாட்டாளர்கள் இடத்தை தேர்வு செய்வார்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

Actor Rajini participate in Bear Grylls Man vs Wild show

https://twitter.com/filmistreet/status/1222058747586998272

கருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்ட கலைப்புலி எஸ். தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அணி கிரியேஷன்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன் G, தயாரித்து இயக்கும் புதிய படத்தின் தலைப்பை பிரம்மாண்ட திரைப்படங்களைத் உருவாக்கித்தந்த பெருமைமிக்க தயாரிப்பாளர் திரு கலைப்புலி எஸ். தாணு அவர்களால் இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டது.

இப்படத்திற்கு படக்குழுவினர் “கருப்பு கண்ணாடி” என தலைப்பிட்டு இருக்கின்றனர். கருப்பு கண்ணாடி திரைப்படம் சைக்கோ த்ரில்லர் வகையை சார்ந்தது.
இப்படத்தில் கலைஞர் டிவி தொகுப்பாளர் தனிகை கதாநாயகனாகவும், புதுமுக நடிகை குவின்ஸி கதாநாயகியாகவும் நடிக்க உள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் சரன் ராஜ், நடிகர் கஜரஜ் , பாடகர் வேல்முருகன் நடிகை சுபாஷினி மேலும் சில முக்கிய பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

சம்சாத் இப்படத்தில் ஒளிப்பதிவாளராகவும், சித்தார்த்தா பிரதீப் இப்படத்தின் இசை அமைப்பாளராகவும். . எழுமின், உருமி ஆகிய திரைப்படங்களின் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கார்த்திக் ராம் இப்படத்திற்கு படத்தொகுப்பாளர் ஆகவும்,
மெட்ரோ மகேஷ் இப்படத்திற்கான சண்டை காட்சிகள் வடிவமைப்பாளர் ஆகவும் பணியாற்ற உள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அதி விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

VELAMMAL EXCELS IN SKATING

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Jayesh Vinay L, Class 7 of Velammal Main School, Mogappair campus won the gold medal in the (U-10 to U-12) category in 500m and 1000m rink race at the National level in the 20th SSFI Meet 2020 organized by Speed Skating Federation of India held between 25th and 26th January, 2020 at NIT International Skating Stadium, Nagpur. Over 1500 participants across various states took part in this tournament.

The school Management congratulates the achiever on his remarkable feat.

ரஜினி உயிருக்கு ஆபத்து; பாதுகாப்பு அளிக்க ரசிகர்கள் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் ராமர் முதல் பெரியார் வரை ரஜினிகாந்த் பேசியிருத்தார்.

ரஜினி பேசியதாலோ என்னவோ உடனே மிகவும் பரபரப்பாகி அதுவே சர்ச்சையானது.

அவரின் கருத்துக்கு பெரியார் ஆதரவாளர்கள் கண்டன தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். மேலும் காவல்துறையிலும் புகார் அளித்தனர்.

இந்த போராட்டத்தின் போது ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பேசியிருந்தனர்.

ரஜினிக்கு எதிரான மனுக்கள் வாபஸ்; திராவிடர் விடுதலை கழகம் பல்டி

இது குறித்த ஆதாரத்துடன் மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரஜினி மக்கள் மன்றத்தினர் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் ரஜினிக்கு பாதுகாப்பு வழங்க ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். கோவை மற்றும் விழுப்புரம் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளும், அந்தந்த மாவட்ட கமி‌ஷனர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஏற்கெனவே தமிழக அரசு சார்பில் ரஜினி வீட்டிற்கு விசே‌ஷ பாதுகாப்பு அளித்துள்ளது.

ரஜினிக்கு எதிரான போராட்டத்தால், அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஏற்கெனவே உள்துறை அமைச்சகத்திற்கு உளவுத்துறை ரகசிய அறிக்கை அளித்துள்ளதாம்.

TN fans petition for Rajini protection

சைக்கோ படத்துல CCTV இல்லையே? ஜெயலலிதா மரணம் காட்டி உதயநிதி பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையில் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியான படம் ‘சைக்கோ’.

இந்த படத்தில் உதயநிதி, நித்யா மேனன், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படத்தை பார்த்த பலரும் பாராட்டினாலும் ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

அதாவது முக்கியமாக சைக்கோ கேரக்டர் சில கொலைகளை செய்யும் போது அந்த இடத்தில் இரு சிசிடிவி கேமரா கூடவா இல்லை.

15 கொலைகளை செய்த ஒரு சைக்கோவை எப்படி ஒரு பெண் மன்னிக்கலாம் என பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளன.

மாஸ்டர் ஆஃப் மர்டர்… சைக்கோ விமர்சனம் (18+)

இந்த நிலையில் சிசிடிவி கேமரா குறித்த காட்சிக்கு உதயநிதி தன் ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதா மரணம் காட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த சிசிடிவி இல்லாத காட்சிகள் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது… கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடந்த போது..

அதாவது அந்த காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் என கிண்டலடித்துள்ளார்.

Udhayanidhi clarifies Why No CCTV in murder scenes of Psycho

அட. அது கூட சரிதானே..

https://twitter.com/Udhaystalin/status/1221472124612726784

More Articles
Follows