அமலாபால் விவாகரத்து குறித்து மனம் திறந்த மாமனார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் இருவரும் காதலித்து கடந்த 2014ஆம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் விரைவில் விவாகரத்து செய்யவுள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் விஜய்யின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான ஏ.எல். அழகப்பன் இப்பிரச்சினை குறித்து பேசியதாவது…

என் மகன் விஜய்-அமலாபால் தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகள் உண்மையே.

கல்யாணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என கூறிய அமலா தொடர்ந்து படங்களில் நடித்தார்.

கணவர் விஜய்யிடம் கூட கலந்தாலோசிக்காமல் அவரே முடிவுகளை எடுத்தார்.

இரு குடும்பத்தாரும் அவரிடம் பேசிபார்த்தும் பலனில்லை. அந்த பெண் யார் பேச்சையும் கேட்க தயாரில்லை.

எங்களுக்கு மகனின் வாழ்க்கை முக்கியம். எனவே சட்டரீதியாக இந்த முடிவை எதிர்கொள்கிறோம்” என்றார்.

தெலுங்குக்காக பெயரை மாற்றிய விக்ரம்–விஷால் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் படங்களுக்கு ஆந்திராவிலும் நல்ல மார்கெட் உள்ளது.

எனவே ஒரு படம் தயாராகும்போதே தெலுங்கு மார்கெட்டையும் குறிவைத்தே படத்தை தயாரிக்கின்றனர்.

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு மற்றும் தருண் அரோரா உள்ளிட்டோர் நடித்து வரும் படத்திற்கு தமிழில் ‘கத்தி சண்டை’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு Okadochaadu (என்னுடன் மோது) எனப் பெயரிட்டுள்ளனர்.

அக்டோபர் 7ஆம் தேதி இப்படம் இரண்டு மொழிகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்து வரும் இருமுகன் படத்திற்கும் தெலுங்கில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Inkokkadu (இன்னொருத்தன்) எனப் பெயரிட்டுள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் தெலுங்கு உரிமையை நீலம் கிருஷ்ண ரெட்டி, ரூ. 11 கோடிக்கு, தன் என்கேஆர் நிறுவனம் சார்பாக வாங்கியிருக்கிறார்.

விஜய்-60 பட உரிமையை கைப்பற்றிய பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி படத்தை தொடர்ந்து தளபதி 60 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

பரதன் இயக்கிவரும் இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் கோயம்பேடு பஸ்நிலையம் போன்ற செட் போடப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடைபெற்றது.

அடுத்தவருடம் பொங்கலுக்கு இப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ஏ அண்ட் பி நிறுவனம் பெரும் தொகைக்கு கைபற்றியிருக்கிறதாம்.

இந்நிறுவனம் பிரபல நடிகர் அருண்பாண்டியனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் வடசென்னை முதல்பாகம் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியின் கனவுப் படமான வடசென்னை படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனுஷ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதற்காக சென்னை மத்திய சிறைச்சாலையை செட் போட்டு படமாக்கி வருகின்றனர்.

இதில் தனுஷ் கைதியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவருடன் சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, அமலா பால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து படக்குழுவினர் தெரிவித்தாவது…

“1977ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையுள்ள காட்சிகளை இக்கதை கொண்டுள்ளது.

எனவே தற்போது 40 ஆண்டுகளுக்கு முன் உள்ள காட்சிகளை படமாக்கி வருகிறோம்.

மூன்று பாகமாக உருவாகவுள்ள இப்படத்தின் முதல் பாகம் மட்டும் 2017ஆம் ஆண்டு ஜூலையில் வெளியாகும்” என்றனர்.

இதனிடையில் கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இந்தி படங்களில் நடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறாராம் தனுஷ்.

இந்திய சினிமாவின் நூறாண்டு சாதனைகளை காலி செய்யும் கபாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி காய்ச்சல் வந்து போனாலும், அப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் மீடியாவை ஆக்ரமித்துள்ளன.

தமிழகத்தைப் போலவே கேரளா மற்றும் கர்நாடகாவில் நல்ல வசூலை குவித்து வருகிறது.

மேலும் வெளிநாடுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் வசூலை குவித்து வருவதாக அங்குள்ள பத்திரிகைகள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன.

வெரைட்டி என்ற பத்திரிகை ஐந்து நாட்களில் மட்டும் ரூ. 248 கோடியை வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

வாரவிடுமுறை நாட்களை கடந்த பின்னும் இன்னும் திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே படம் வெளியாகியுள்ளது.

இவ்வாரம் மலாய் மொழியில் வெளியாகவுள்ளதால் மலேசியாவில் அதிக வசூலை குவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இவையில்லாமல் இந்த வாரம் (ஜீலை 29) வெள்ளிக்கிழமை எந்த படமும் வெளியாகவில்லை. எனவே கபாலியின் வசூல் இன்னும் எகிறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படம் வெளியாகி ஆறு நாட்களில் வெளிநாடுகள் அனைத்திலும் சேர்த்து மொத்தம் 118 கோடியை குவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ 145 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் தாணு, தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

கபாலி செய்துவரும் சாதனைகளை என் வாழ்வில் மறக்கமுடியாது. இந்த நூறாண்டுகளில் இந்திய சினிமா செய்த சாதனைகளை கபாலி முறியடித்து வருகிறார்.

முதல் மூன்று நாட்களில் அமெரிக்காவில் மட்டும் ரூ. 28 கோடியை எட்டியது.

மேலும் மற்ற நாடுகளிலும் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

மீண்டும் சிம்பு-ஹன்சிகா ஜோடி இணையுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்புவின் படங்களை போல், அவரது காதல்களும் சர்ச்சையில் சிக்காமல் இருப்பது இல்லை.

முன்பு நயன்தாராவை காதலித்தார் அது முறியவே ஹன்சிகாவை காதலித்தார். அதுவும் முறியவே ஆன்மிகத்தை காதலித்தார்.

இதனிடையில் இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தார்.

திரையில் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து… சிம்பு தற்போது நடித்து வரும் AAA படத்தில் சிம்புவின் ஜோடியாக ஹன்சிகா நடிக்கக்கூடும் என தகவல்கள் கிடைத்தன.

ஆனால் இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இச்செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

எனவே விரைவில் சிம்புவின் ஜோடி யார்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

More Articles
Follows