Breaking : சிம்புவுடன் இணையும் அளவுக்கு பெருந்தன்மை இல்லாத தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தயாரித்து நடித்துள்ள வட சென்னை படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா வெளியிடுகிறது.

இன்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது தனுஷ் பேசியதாவது…

வட சென்னை படத்தின் கதையை 10 வருடங்களுக்கு முன்பே என்னிடம் வெற்றிமாறன் சொன்னார்.

அப்போது அது உருவாகும் சூழ்நிலை இல்லை.

சில வருடங்களுக்கு பிறகு அதில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறினார் வெற்றிமாறன்.

நானும் சரி என்றேன். பின்பு அமீர் இப்போது நடிக்கும் கேரக்டரில் என்னை நடிக்க கேட்டார் வெற்றி.

நான் பெருந்தன்மையானவன் தான். ஆனால் அந்தளவுக்கு பெருந்தன்மையாக அந்த ரோலில் நடிக்க என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

பின்பு சில காரணங்களால் பட நாயகன் கேரக்டர் என்னிடமே வந்தது. அன்பு கேரக்டரில் நான் நடிக்கிறேன்.

ராஜா என்ற கேரக்டரில் அமீர் நடித்துள்ளார். அதுதான் ஆணி வேர் கேரக்டர்.” என்று பேசினார் தனுஷ்.

எனக்கு நிறைய சவால்கள் நிறைந்த படம் சண்டக்கோழி 2… : வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சண்டக்கோழி2 படத்தில் நடித்துள்ள அனுபவம் பற்றி பேசுகிறார் வரலட்சுமி.

சண்டக்கோழி2 திரைப்படத்தில் வேலைப்பார்க்கும் போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது.

லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். சண்டக்கோழி2-வில் நான் கம்போர்ட் சோணிலிருந்து வெளியேவந்து நான் நடித்துள்ளேன். நாங்கள் திண்டுக்கல், காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம்.

அங்கே நிறைய தொடர்ச்சியாக நிறைய அழகான வீடுகள் இருக்கும். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கே தான் எடுத்தோம். கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது.

கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விருந்தாக இருக்கும். படத்தில் நான் நிறைய சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். வெயிலில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு முகம் மற்றும் உடலில் டேன் ஏற்பட்டது.

இப்படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது என்றார் வரலட்சுமி.

விஷால் நடித்து தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 வருகிற அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார் , ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

தாதா பட விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் அஜித் ரசிகராக அம்சனின் புதுப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் “தாதா 87” படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார்.

“தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

தற்போது AFF நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி நடிகர் அம்சன் நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார்.

தல அஜித்தின் தீவிர ரசிகராகவும், கல்லூரியின் சூப்பர் சினியராகவும் அம்சன் நடிக்கின்றார்.

மற்ற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Breaking *சர்கார்* டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்தது சன் டிவி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ராதாரவி வில்லனாக நடித்துள்ளார்.

இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்கின்றனர்.

இந்நிலையில், சர்கார் டீசர் ரிலீஸ் தேதியை பட தயாரிப்பு நிறுவனமான சன் நிறுவனமே தற்போது வெளியிட்டுள்ளது.

சர்கார் டீசர் அக்டோபர் 19ம் தேதி வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்,

அதர்வாவுக்கு அடுத்து *கூத்தன்* ராஜ்குமார் செய்த ரசிகர் மன்ற சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஒரு அறிமுக ஹீரோ படம் தியேட்டரில் ரிலீஸாவது என்பதே மிக கடினமான விஷயம்.. அப்படியே அந்தப்படம் வந்தாலும், அதற்கு கிடைக்கும் ஓரிரு வார அவகாசத்தில் படத்தின் ஹீரோ ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பது இன்னும் கஷ்டம்.

ஆனால் வரும் அக்-11ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் கூத்தன் பட நாயகன் ராஜ்குமாருக்கு இந்த மாதிரி சிரமம் எல்லாம் இருக்காது என்றே தோன்றுகிறது…

பின்னே..? தமிழ் சினிமாவில் முதல் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர் மன்றம் ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால் அது அதர்வாவுக்கு அடுத்தததாக இந்த ராஜ்குமாருக்காகத்தான் இருக்கும்.

அதர்வாவது பிரபல நடிகரின் வாரிசு.. அவருக்கு ரசிகர்மன்றம் உருவானதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் புதுமுகம் ராஜ்குமாருக்கு என்ன பின்னணி..? கிருஷ்ணகிரி, ஓசூர், கோவை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் எல்லாம் திரும்பிய பக்கமெல்லாம் இவரது புகழ்பாடும் ரசிகர் மன்ற போஸ்டர்கள் தான் நம் கண்களில் படுகின்றன..

காரணம் கூத்தன் பட தயாரிப்பாளரும் ராஜ்குமாரின் தந்தையுமான நீல்கிரீஸ் முருகன் இந்த பகுதிகளில் எல்லாம் செல்வாக்கு பெற்ற மனிதர். அரசியலில் முக்கிய பிரமுகர். அதனாலேயே அவரது மகன் ராஜ்குமாருக்கும் இயல்பாகவே நட்பு வட்டாரம் அதிகம்..

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இவ்வளவு செல்வாக்காக தன்னைத்தானே இவர் விளம்பரப்படுத்தி கொள்கிறாரா என்றால் இல்லை என்கிறார்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள்.

ராஜ்குமாரின் நலம் விரும்பிகள் தான் தங்கள் நண்பனின் முதல் படம் சிறப்பாக வரவேண்டும் என ரசிகர்மன்றம் அமைத்து படத்தை புரமோட் செய்து வருகிறார்களாம்.

இன்னொரு பக்கம் படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவின் தந்தையுமான நீல்கிரீஸ் முருகன் தனது பங்கிற்கு 18 பேருக்கு 18 பவுன் தங்கம் பரிசு என்கிற புதிய விளம்பர யுக்தியை ஏற்கனவே துவங்கிவிட்டார்..

இன்றைய சினிமா வியாபார, விளம்பர உலகில் சினிமாவில் நல்ல அறிமுகம் கிடைக்க பலர் போராடும் நிலையில் இந்த ரசிகர் மன்றத்தினர் படத்தை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்த்து விடுவார்கள் என தாராளமாக நம்பலாம்.

இப்படம் வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகிறது.

ராம் கோபால் வர்மா தயாரித்துள்ள *பைரவா கீதா* அக்டோபர் 26ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா புதுமுகங்கள் நடிக்கும் ‘பைரவா கீதா ’ என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தயாரித்து வெளியிடுகிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராம் கோபால் வர்மா.

இந்திய திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குபவர்.

இவர் தற்போது தன்னுடைய தயாரிப்பிலேயே அதிக பொருட்செலவில் பைரவா கீதா என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இதில் தனஞ்ஜெயா என்ற நாயகனும், ஈரா என்ற நாயகியும் புதுமுக நடிகர் மற்றும் நடிகையாக அறிமுகமாகிறார்கள்.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் தாதூலு என்பவர் இயக்கியிருக்கிறார். சாதீய பிரச்சினைகளின் பின்னணியில் ஆக்சன் கலந்த அழுத்தமான காதல் கதையாக தயாராகியிருக்கும் ‘பைரவா கீதா ’ ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் பாடல்களையும்,ஃபர்ஸ்ட் லுக்கையும் பார்த்த பிரபல தயாரிப்பாளர்கள் அபிஷேக் நாமா மற்றும் பாஸ்கர் ராஷி ஆகியோர் தங்களின் அபிசேக் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இதனை வெளியிடுகிறார்கள்.

ஸிராஸ்ரீ எழுதிய பாடல்களுக்கு ரவிசங்கர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் கோபால் வர்மா தயாரிப்பில், புதுமுகங்கள் தனஞ்ஜெயா, ஈரா ஆகியோர் நடித்திருக்கும் ‘பைரவா கீதா ’அக்டோபர் 26 ஆம் தேதியன்று வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

More Articles
Follows