‘வடசென்னை தாமதத்திற்கு காரணம் தனுஷின் பெருந்தன்மை..’ வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் வடசென்னை படம் சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பம் ஆனது.

இது தனுஷ் கேரியரில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் என சொல்லப்படுகிறது.

ஆனால் இப்படத்தின் நடுவே, தனுஷ் மற்ற படங்களில் நடித்து, அப்படங்களையும் ரிலீஸ் செய்துவிட்டார்.

இதனால் இப்படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

தற்போது விஐபி 2 படத்தை முடித்துவிட்டு இதன் சூட்டிங்கில் தனுஷ், கலந்துக் கொண்டு நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் தாமதத்திற்கு என்ன காரணம்? என்று வெற்றிமாறன் தன் பேட்டியில் கூறியுள்ளதாவது…

“விசாரணை’ படத்தின் ஆஸ்கர் பரிந்துரைக்காக நேரம் வேண்டும் என தனுஷிடம் கேட்டேன். அவரும் பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டார்.

மற்ற தயாரிப்பாளராக இருந்தால் நிச்சயம் ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்., என்று தெரிவித்துள்ளார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் இப்படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Reason for Dhanushs Vada Chennai delay – Director Vetrimaaran open talk

நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டாரா..? வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாரை தப்பட்டை படத்தில் தைரியமான பெண் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார் வரலட்சுமி சரத்குமார்.

கடந்த மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தில் ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை தொடங்கி, பெண்களின் பாதுகாப்புக்கு வழிவகை செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை இவர் கடத்தப்பட்டுள்ளதாக செய்திகளும் ஒரு படமும் வெளியாகியுள்ளது.

ஒரு கட்டிலில் படுத்திருக்கும் இவரை, யாரோ ஒருவர் கயிற்றால் கட்டிப் போட்டு இருக்கிறார்.

ஆனால் இது கடத்தப்பட்ட செய்தி அல்ல என்றும், வரலட்சுமி நடித்து வரும் ‘விக்ரம் வேதா’ படத்தின் விளம்பர செயல் என்றும் கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, #VaralaxmiGotKidnapped என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கான விடை இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Varalaxmi Got Kidnapped a photo became viral on net

ரெண்டாவது ஆட்டத்திற்கு தயாரான சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரத்குமார் தற்போது நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘ரெண்டாவது ஆட்டம்’. இந்த படத்தின் வேலைகள் வருகின்ற ஜூன் மாதம் முதல் துவங்க இருக்கின்றது.

“என்னுடைய சிறு வயது முதல் நான் ஹோலிவுட் நடிகர் அல் பசினோவின் படங்களை பார்த்து தான் வளர்ந்து இருக்கின்றேன்.

அவருடைய படங்கள் அனைத்தும் என்னுடைய மனதில் ஆழமாக பதிந்து இருப்பது மட்டுமில்லாமல் ஒருவித தாக்கத்தையும் என்னுள் ஏற்படுத்தி இருக்கின்றது. என்னுடைய கதையில் வரும் கதாப்பாத்திரத்திற்கு என்னுடைய முன்மாதிரி அல் பசினோவின் சாயல் இருப்பதை நான் கதை எழுதும் போதே உணர்ந்து கொண்டேன்.

மேலும் இந்த கதையை நான் என்னுடைய தயாரிப்பாளர் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ ஐ பி கார்த்திகேயன் மற்றும் நண்பர்களிடம் கூறும் போது, இந்த கதாபாத்திரத்திற்கு மிக சரியானவர் சரத் சார் தான் என்று அனைவருமே கூறினர்.

அவருடைய முகமும், உடலமைப்பும் இந்த கதாபாத்திரத்துக்கு கன கச்சிதமாக பொருந்தி உள்ளது. இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கின்றார். சமீபமாக ரசிகர்கள் பெரும்பாலானோர் நடுத்தர வயது நிரம்பிய கதாநாயகர்களின் படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், அவர்களின் எதிர்பார்ப்பை எங்களின் ‘ரெண்டாவது ஆட்டம்’ முழுவதுமாக பூர்த்தி செய்யும். அதோடு சரத் சாரின் இந்த மாறுபட்ட தோற்றம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும்.

தற்போது எங்கள் படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் அறிமுக இயக்குநர் பிரித்திவி ஆதித்யா.

விக்ரம் பிறந்தநாளில் ‘ஸ்கெட்ச்’ டீம் தந்த சர்ப்ரைஸ் பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சீயான் விக்ரம் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

எனவே அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தர, விக்ரம் நடித்து வரும் ஸ்கெட்ச் படக்குழுவினர் சற்றுமுன் ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர்.

கனவே… கனவே… என்று தொடங்கும் அந்த பாடலை விக்ரம் தன் சொந்த குரலில் பாடியிருக்கிறார்.

தமன் இசையமைத்து வரும் இப்படத்தை விஜய் சந்த்ர் இயக்கி வருகிறார்.

நாயகியாக தமன்னா நடிக்க, கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார்.

 

Vikram crooned in Kanavae Kanavae in Sketch movie

மோகன்லால் நடிக்க ரூ.1000 கோடி பட்ஜெட்டில் மகாபாரதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவே வியக்கும் அளவில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் டாக்டர்.பி.ஆர். ஷெட்டி அவர்கள் ரூ 1000 கோடி செலவில் மகாபாரதம் காவியத்தை சினிமாவாக தயாரிக்கிவிருக்கிறார்.

பிரபல இயக்குநர் வி.ஏ. ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் உருவாகும் இதில் பீஷ்மர் கேரக்டரில் மோகன்லால் நடிக்கவிருக்கிறார்.

இவருடன் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்களாம்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாம் கட்டமாக மற்ற உலக மொழிகளிலும் இப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் 2018-ம் ஆண்டு செப்டம்பர் இறுதியில் இப்படத்தை துவக்கி, 2020ஆம் ஆண்டில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Mohanlal to Play Bheem in Rs 1000 Crore Mahabharata

அட்லி படத்துடன் ‘கில்லி’யை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கி

வரும் தளபதி 61 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்காக இதுநாள் வரை தாடியுடன் முறுக்கு மீசை கெட்டப்புடன் நடித்து வந்தார்.

இதே கெட்டப்புடன் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.

எனவே இது தொடர்பான போட்டோக்களை விஜய் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வந்தனர்.

நேற்று திடீரென தாடி ஷேவிங் செய்துவிட்டு மீசையுடன் இருக்கும் விஜய்யின் படம் வெளியானது.

இது அட்லி படத்தின் அடுத்த கெட்டப் என்பதால், இதையும் ரசிகர்கள் இணையங்களில் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் தரணி இயக்கத்தில் விஜய் நடித்த கில்லி படத்தின் 13வது ஆண்டு நிறைவு நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படம் விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய சாதனை படைத்த படம் என்பதால், இதையும் #13yearsofGhilli என்ற ஹேஷ்டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

Vijay fans celebrates 13 Years of Ghilli movie

More Articles
Follows