‘ரஜினிக்கு அடுத்து சூர்யாதான் மாஸ்; சம்பளம் நெக்ஸ்ட்’ – ஞானவேல்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்தை பிடிக்கவும், அவரது வசூல் சாதனைகளையும் நெருங்கவும் பல நடிகர்கள் முயற்சித்து வருகின்றனர்.

ஆனால், அவரை நெருங்க முடியாமல் போனதால், அவரை ஒப்பிட்டு பேசாமல், Non-Rajini Record என்று தங்கள் சாதனைகளை கூறிவருகின்றனர்.

வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி சூர்யா நடித்துள்ள சி3 படம் ரிலீஸ் ஆகிறது.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

வழக்கம்போல இச்சந்திப்பிற்கு ஹீரோயின்கள் வரவில்லை.

அப்போது படத்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது…

“சில விஷயங்களை இங்கே சூர்யா அனுமதியுடன் கூற விரும்புகிறேன்.

ஆந்திராவில் ரஜினிக்கு அடுத்த மார்க்கெட்டை சூர்யா பிடித்துள்ளார்.

நடிகர்களின் சம்பளத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது.

அவர்களின் மார்கெட் வேல்யூவையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சி3 படம் இப்போதே லாபத்தை நெருங்கிவிட்டது.

அது ரூ. 200 கோடியை தாண்டி வசூலிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசினார்.

Suriya is next to Rajinis market says Gnanavelraja

சிக்ஸ் பேக் ஹீரோக்களுக்கு ராதாரவி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்சி தயாரித்திருக்கும் ‘நிசப்தம்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படத்தின் நாயகன் அஜய், நாயகி அபிநயா, பேபி சாதன்யா, பழனி, பாடகர் தாமஸ் ஆண்ட்ரூஸ் மற்றும் இயக்குநர் மைக்கேல் அருண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் ‘டத்தோ’ ராதாரவி, ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இயக்குநர்கள் மீரா கதிரவன், மிஷ்கின், கிருத்திகா உதயநிதி, அறிவழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினகர்ளாக கலந்து கொண்டனர்.

விழாவில் ராதாரவி பேசியதாவது…

“இப்படத்தின் நாயகி அபிநயாவை நான் நேரில் சந்தித்திருக்கிறேன்.

அவரை நான் நடிகர் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினாராக சேர்த்து இருக்கிறேன்.
அவர் மிகவும் திறமையான பெண்.

என் தந்தை எம். ஆர். ராதாவின் குரல் கரகரப்பாக இருக்கும். ஆனால் அதற்கே இசையமைத்தவர் சங்கர் கணேஷ்.

அவர் இங்கே வந்திருப்பது மகிழ்ச்சி.

அதுபோல் இங்கு வந்திருக்கும் நட்ராஜ் நல்ல உயரமான திறமையான நடிகர்.

அவர் இப்போ ஒல்லியாக இருக்கிறார். ஏன்? என்று கேட்டேன்.

அதற்கு அவர் அடுத்த படத்திற்காக இந்த முயற்சியில் இறங்கியிருப்பதாக சொன்னார்.

இவரைப் போல நிறைய நடிகர்கள் சிக்ஸ்பேக் வைக்கிறார்கள்.

ஆனால் எம்ஜிஆர் சிவாஜி எல்லாம் உடம்பை குறைக்கவும் இல்லை. ஏற்றவும் இல்லை. அவர்கள் நன்றாக நடிக்கவில்லையா?

உடம்பை ஏற்றி இறக்கிய சில ஹாலிவுட் நடிகர்கள் இன்றைய நிலையை பார்த்தால் பாவமாக இருக்கிறது.

சினிமாவுக்காக இப்படி செய்கிறீர்கள். ஆனால் உங்கள் உடலையும் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று பேசினார்.

சிவகார்த்திகேயன்-நயன்தாரா நடிக்கும் படத்தின் கதைக்களம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, ஸ்னேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படம் உணவு கலப்படம் மற்றும் அதனைச் சார்ந்த அரசியலைப் பற்றிய கதைக்களத்தை கொண்டுள்ளதாக கூற்ப்படுகிறது.

மேலும் இதில் சென்னையைச் சார்ந்த இளைஞனாக நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

‘144 தடை ஏன்..? என்னையும் கைது செய்யுங்கள்..’ சீறிய சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் சிம்பு, இன்று சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது…

“அரசுக்கு நான் மூன்று கோரிக்கைகளை வைக்கிறேன்.

வன்முறையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

அவர்களை விடுதலை செய்யமுடியாது என்றால், அவர்களின் போராட்டத்திற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்.

அதனால், என்னையும் கைது செய்யுங்கள்.

கைதானவர்களை விடுவிக்கவில்லை என்றால் அவர்களுக்காக அஹிம்சை வழியில் நான் போராடுவேன்

கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு தொடர்பான இந்த எழுச்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

எனவே இதை கொண்டாட அரசு ஒருநாள் ஒதுக்கித் தரவேண்டும்.

கலவரத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மெரினாவில் 144 தடை உத்தரவு போடப்படுவதற்கு அவசியம் என்ன?” என்று பல கேள்விகளை அவர் அடுக்கடுக்காக பேசினார்.

தல57 நிச்சயம் ஹிட்டு… அஜித் ரசிகர்கள் அடித்துச் சொல்ல காரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் அவரது 57வது படமாகும்.

இதில் சில படத்தலைப்புகளின் முதல் எழுத்துக்கள் அஜித்துக்கு ராசியாக அமைந்து பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.

அதாவது வான்மதி (1996), வாலி (1999), வில்லன் (2002), வரலாறு (2006), வீரம் (2014), வேதாளம் (2015) ஆகிய வீ என்ற ஆங்கில எழுத்துக்கள்தான்.

தற்போது உருவாகிவரும் படத்திற்கும் வியூகம், வதம், விவேகம், வேந்தன் ஆகிய வீ எழுத்தை சார்ந்தே தலைப்பிடப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

வி எழுத்தில் தொடங்கும் இந்த டைட்டில் சென்டிமெண்ட் அஜித்துக்கு 7வது முறையாகும்.

எனவே இப்படமும் செம ஹிட்டடிக்கும் என அஜித் ரசிகர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

சிவா இயக்கும் ‘தல 57’ படத்தலைப்பு உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்கு இன்னும் பெயரிப்படவில்லை.

இருந்தபோதிலும் இதன் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

இப்படத்திற்கு வியூகம், வதம், விவேகம், வேந்தன் ஆகிய 4 தலைப்புகள் பரிசீலனையில் உள்ளதாம்.

இதில் ஒன்றை நிச்சயம் தேர்வு செய்து விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதற்கு முன்பு சிவா இயக்கிய அஜித் படங்களான வீரம், வேதாளம் ஆகியவையும் வீ (ஆங்கில) எழுத்திலேயே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Thala 57 title sentiment new updates

More Articles
Follows