சூர்யாவுடன் முடித்துக்கொண்டு அஜித்துக்காக ரெடியாகும் தியேட்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுப்படங்களின் ரிலீஸின் போது ரசிகர்களின் பல்ஸை அறிய சில நடிகர்கள் தியேட்டருக்கு நேரடி விஜயம் செய்வதுண்டு.

அப்போது அவர்கள் சத்யம் போன்ற மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களுக்கு செல்ல மாட்டார்கள்.

அதற்கு காரணம் அங்குள்ள ரசிகர்கள் எந்த காட்சியை ரசிக்கிறார்கள்? எதை வெறுக்கிறார்கள் என்பதே தெரியாது. அமைதியாக பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

இதனால் திரையிலகினர் பெரும்பாலும் தேர்வு செய்யும் தியேட்டர் காசி தியேட்டராகத்தான் இருக்கும்.

ஆனால் தற்போது காசி தியேட்டர் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதால், மூடப்பட்டுள்ளது.

இந்த தியேட்டரில் இறுதியாக ரிலீசான படம் சூர்யா நடித்த சிங்கம் 3 படம்தான்.

இத்தியேட்டர் முழுமையாக ரெடியான உடன் ரிலீசாகப் போகும் படம் எது தெரியுமா? அது அஜித்தின் விவேகம் படம்தானாம்.

Chennai Kasi theater under renovation

பாலா இயக்கத்தில் ஜோதிகா-ஜிவி. பிரகாஷின் கேரக்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு எவரும் எதிர்பாராவிதமாக பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தை EON Studios நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது.

இதில் முக்கிய வேடத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்.

இதன் சூட்டிங் ஓரிரு நாளில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தில் இவர்களின் கேரக்டர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜி.வி. பிரகாஷ் இதில் வில்லனாக நடிக்கிறாராம். ஜோதிகாவுக்கு போலீஸ் அதிகாரி வேடம் என கூறப்படுகிறது.

இது முற்றிலும் ஒரு த்ரில்லர் படம் என தகவல்கள் வந்துள்ளன.

Jyothika and GV Prakash characters in Bala direction

சீரியஸ் படங்கள்; சிங்கம் ஸ்டைல் மீசை ஏன்.? எமன் டைரக்டர் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர் அவர்கள் நான் என்ற படம் மூலம் டைரக்டர் ஆனார்.

இதனையடுத்து அமரகாவியம் என்ற படத்தை எடுத்தார்.

இந்நிலையில் மீண்டும் விஜய் ஆண்டனியை வைத்து எமன் படத்தை இயக்கினார்.

இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் ஆதரவை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஜீவா சங்கரிடம் சில கேள்விகளை கேட்டபோது அவர் கூறியதாவது…

நான், எமன் உள்ளிட்ட படங்கள் சீரியஸ் படங்களாகவே உள்ளது. ஏன் என்றதற்கு?

அடிப்படையிலேயே நான் சீரியஸ் டைப்தான். எனவே எனக்கு வருகிற தெரிகிற விஷயத்தை பெஸ்ட்டாக கொடுக்க நினைக்கிறேன்.

முந்தைய காலத்து கிராமத்து மனிதர்களின் போட்டோக்களை பார்த்தபோது ஒரு மீசை ஸ்டைல் பிடித்து இருந்தது.

எனவேதான் அதே போன்ற மீசையை வைத்தேன். மற்றபடி சிங்கம் படத்தில் ஸ்டைல் மீசைக்கும் இதற்கு சம்பந்தமில்லை.

சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு படங்களை இயக்க உள்ளேன். சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றார்.

Director Jeeva Shankar about his yaman movie

தனுஷ்-லாரன்ஸின் மோதலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக தனுஷ் இயக்குனராகி இயக்கிவரும் படம் பவர் பாண்டி.

ராஜ்கிரண் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் இசையை மார்ச் 9ஆம் தேதி வெளியிடவிருக்கிறார் தனுஷ்.

இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நாளில்தான் பி. வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா படமும் வெளியாகிறது.

இந்த இரண்டு படங்களுக்கும் நிறைய எதிர்பார்ப்பு உள்ளதால் இரண்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

SivaLinga and Power Paandi movie clash on 14th april 2017

ரஜினி-ஷங்கரின் ‘2.0’ படம் இந்தியளவில் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்திரன் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் தயாராகி வருகிறது.

ஷங்கர் இயக்கிவரும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க இப்படத்தை மிகமிகப்பிரம்மாண்டமாக லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை ரூ. 350 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்திருக்கிறார்களாம்.

இதன்மூலம் இந்தியாவில் அதிக காப்பீடு பெற்ற படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளதாம்.

2pointO insured for Rs 350 crores and made record in Indian Cinema

கமல்-சிவகார்த்திகேயனை நெருங்குவாரா பரத்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அவ்வை சண்முகி படத்தில் கமல்ஹாசன் மற்றும் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் இருவரும் பெண் வேடமேற்று நடித்திருந்தனர்.

இந்த வேடங்கள் இவர்களுக்கு பொருத்தமாக அமைந்ததாலும், அருமையான நடிப்பை இவர்கள் வெளிப்படுத்தியதாலும் இப்படங்கள் மாபெரும் வெற்றிப் பெற்றன.

இந்நிலையில், வடிவுடையான் இயக்கத்தில் பரத், நமீதா, இனியா, ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ள படம் பொட்டு படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதன் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் பெண் கேரக்டரில் பரத் நடித்திருக்கிறாராம்.

கமல், சிவகார்த்திகேயன் போல பரத்தும் பெண் வேடத்தில் ஜெயிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

In pottu movie Bharath plays in female character

More Articles
Follows