கீர்த்தி சுரேஷ் உடன் வெற்றி விழாவை கொண்டாடியா சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிங்கம்-3 படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இதன் சூட்டிங் தளத்தில் தனது சி3 படத்தின் வெற்றி விழாவை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் சூர்யா.

பாகுபலி2 படத்தில் கௌரவ தோற்றத்தில் ஷாரூக்கான்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது விறுவிறுப்பாக இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

ராஜமௌலி இயக்கிவரும் இப்படம் வருகிற ஏப்ரல் 28, 2017 அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு கௌரவ தோற்றத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

ஆனால், இதை ஷாரூக்கான் தரப்பு மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லி படத்திலும் விஜய்யின் ராசி பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பைரவா படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இதில் விஜய்யுடன் சமந்தா, காஜல், நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் விஜய்க்கு ராசியான திருவிழா பாடல் ஒன்று படமாக்கப்பட்டு வருகிறதாம்.

அதற்கான செட் அமைக்கும் பணிகளில் படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறதாம்.

தன் கிராமத்து ரசிகர்களை கவர பெரும்பாலும் விஜய் படத்தில் திருவிழா பாடல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி-த்ரிஷா இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா இணைந்து நடிக்கவுள்ளனர் என்ற செய்தியை பார்த்தோம்.

சற்றுமுன் இவர்கள் இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

96 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரேம்குமார் இயக்குகிறார்.

இவர் சுந்தரபாண்டியன் மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பாக நந்தகோபால் இப்படத்தை தயாரிக்க, கோவிந்த் மேனன் இசையமைக்கிறார்.

விக்ரம் வேதா, கருப்பன் உள்ளிட்ட படங்களில் விஜய்சேதுபதியும், ‘சதுரங்க வேட்டை 2’, ‘கர்ஜனை’, ‘1818’ உள்ளிட்ட படங்களில் த்ரிஷா நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi and Trisha Starring 96 movie first look released

சுசீந்திரனின் அடுத்த படைப்பு “அறம் செய்து பழகு”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாவீரன் கிட்டு படத்தை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் படத்திற்கு அறம் செய்து பழகு என்று பெயரிட்டுள்ளனர்.

இத்திரைப்படத்தை “அன்னை ஃபிலிம் பேக்டரி” என்ற நிறுவனம் மூலம் ஆண்டனி தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தில் சந்தீப், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இதில் சந்தீப்க்கு ஜோடியாக “கிருஷ்ணகாடி வீர பிரேமாகாதா” என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹரீன் (Mehreen) இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

’’வெண்ணிலாக் கபடிகுழு’’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் J.லஷ்மண் M.F.I. மீண்டும் இயக்குநர் சுசீந்திரனுடன் இணைந்துள்ளார்.

முதன்முறையாக சண்டை பயிற்சியாளர் அன்பறிவ் சுசீந்திரனுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி பாடல்களுக்கு D.இமான் இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு காசி விஸ்வநாதன், கலை சேகர், நடனம் ஷோபி.

தற்போது வரை 80% சூட்டிங் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Suseenthiran’s next titled ARAM SEIDHU PAZHAGU

‘சிங்கம்3’ படத்தின் தெலுங்கில் பதிப்பில் வேற கதையாம்!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்த சி3 படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியானது.

இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் செம வசூலை அள்ளி வருகிறதாம்.

நாகார்ஜீனாவின் படங்களை விட இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாம்.

இந்நிலையில் இந்த தெலுங்கு பதிப்பில் ஒரு சிறிய மாறுதலை செய்துதான் அப்படத்தை அங்கு வெளியிட்டாராம் இதன் இயக்குனர் ஹரி.

அதாவது தமிழ் பதிப்பில் தமிழ்நாட்டு போலீஸ்காரர் ஆந்திரா சென்று வில்லன்களை வேட்டையாடுவார்.

ஆனால் தெலுங்கு பதிப்பில் ஆந்திரா போலீஸ் ஆக இருக்கும் இவர் கர்நாடகாவுக்கு சென்று வேட்டையாடுவாராம்.

Director Hari changed Singam 3 story in Telugu version

More Articles
Follows