இனி மேடையில் அழாமல் இருக்க சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ படத்தின் நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் மேடையிலே கண்ணீர் விட்டு அழுதார்.

இது திரையுலகில் பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இதுபோன்று இனி அழாமல் இருக்க முயற்சி செய்ய உள்ளதாக சிவகார்த்திகேயன் தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது….

நான் சென்சிட்டிங் டைப். எந்த நெகிழ்ச்சி சம்பவம் என்றாலும் எமோஷன் ஆகிவிடுவேன்.

இதற்கு முன்பு ஒரு முறை மேடையில் அழுதுள்ளேன். விருது வாங்கும்போது, என் தந்தையை நினைத்து அழுதேன்.

என் நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார்.

இதுவரை நீ பையன். இனி பெரிய ஆண் மகன் என்றார்.

இனி நிதானமாக யோசிப்பேன். என் எமோஷனலை கன்ட்ரோல் செய்வேன். என்றார்.

முருகதாஸ்-மகேஷ்பாபு-ஆர்.ஜே.பாலாஜி இணையும் படத்திற்கு தலைப்பு உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது மகேஷ்பாபு நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்தாண்டு 2016 தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

இப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதால் இரு மொழிகளுக்கும் பொருத்தமான தலைப்பை தேடி வந்தனர்.

தற்போது ‘ஏஜெண்ட் சிவா’ என்ற டைட்டில் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாயகியாக ராகுல் ப்ரித்தி சிங் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார்.

முக்கிய வேடத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடித்து வருகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசைக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமந்தாவுக்காக விஷாலை எதிர்க்கிறாரா ஆர்யா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஷ்கினின் துப்பறிவாளன் படத்தை முடித்துவிட்டு, பி.எஸ். மித்ரன் இயக்கும் இரும்புத் திரை படத்தில் நடிக்கவுள்ளார் விஷால்.

இதன் படப்பிடிப்பு நாளை தொடங்கப்பட உள்ளது.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார்.

இந்நிலையில் இதில் உள்ள முக்கிய கேரக்டரான வில்லன் கேரக்டரில் ஆர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விஷால் ஆர்யா இருவரும் திரையுலகை தாண்டியும் நல்ல நட்புடன் இருந்து வருகின்றனர்.

தற்போது படத்தின் நாயகிக்காக விஷாலுடன் ஆர்யா மோத வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.

‘ரஜினின்னா அதான் பர்ஸ்ட் ஞாபகம் வரும்…’ – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ படத்தின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் தந்தி டிவியில் இவரது திரையுலக அனுபவம் குறித்த பிரத்யேக பேட்டி ஒளிப்பரப்பானது.

அப்போது சினிமா என்ற வெளிச்சத்தில் இருந்தபோதும், சிகரெட் மற்றும் மது பழக்கம் இல்லாமல் இருப்பது எப்படி? என்று இவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்…

என் தந்தைக்கு சிகரெட், சரக்கு போன்ற எந்த பழக்கமும் கிடையாது.

எனவே எனக்கும் இல்லை. அதுபோல் என் கல்லூரி நண்பர்களுக்கும் அந்த பழக்கம் இல்லை.

எனக்கு அந்த பழக்கம் தேவைப்படவில்லை. ஏன் அப்படி இருக்கக் கூடாது? என முடிவு எடுத்தேன்.

இத்தனைக்கும் நான் சூப்பர் ஸ்டார் ரஜினிசார் ரசிகன்.

எனக்கு ரஜினி சார்ன்னா அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடல்தான் நினைவுக்கு வரும்.

ஒரு ரசிகனான எனக்கு அவர் கொடுத்தது அதுதான்” என்று பேசினார்.

பட்டைய கிளப்பும் பைரவா விநியோகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

விஜய்யின் முந்தைய படமான தெறி நல்ல லாபத்தை பெற்றுக் கொடுத்துள்ளதால் இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனவே, இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ஸ்ரீ க்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தற்போதே இதன் விநியோகத்தை ஆரம்பித்துவிட்டது.

தற்போது வந்துள்ள தகவல்களின்படி ‘பைரவா’ படத்தின் வட ஆற்காடு பகுதியின் ரிலீஸ் உரிமை ரூ.3.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

மேலும் தென்னாற்காடு மற்றும் திருநெல்வேலி-கன்னியாகுமரி பகுதிகளின் உரிமை தலா ரூ.3.9 கோடிக்கும் விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

‘தீராத வெறி; சேராத வெற்றி…’ 26 வருட விக்ரம் ஒரு பார்வை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் சினிமாவில் ஆயிரக்கணக்கான ஹீரோக்கள் உள்ளனர்.

ஆனால், அதில் ஒரு சிலரே சினிமாவிற்காக தன்னை வருத்திக் கொண்டு அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றனர்.

அதில் தமிழ் சினிமாவில் சிவாஜிகணேசன், கமல்ஹாசன் ஆகியோருக்குப் பிறகு விக்ரம் முதன்மையானவராக வருகிறார்.

இவர் நடித்த முதல் படம் ‘என் காதல் கண்மணி’ 1990ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் (இதே நாளில்) வெளியானது.

இன்றோடு 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இவரது ஆரம்ப கால படங்கள் அனைத்தையும் ஸ்ரீதர், பி.சி.ஸ்ரீராம், விக்ரமன், போன்ற முன்னணி இயக்குனர்களே இயக்கினர்.

ஆனால் வெற்றி என்பது இவருக்கு வெறும் கனவாகி போனது.

ஆனால் சினிமா மீதுள்ள தீராத வெறியால், ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு பாலாவுடன் இணைந்து சேது என்ற மாபெரும் காவியத்தை கொடுத்தார்.

இப்படியொரு நடிகர், தமிழ் சினிமாவில் இருக்கிறாரா? என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

இவரது சினிமா வாழ்க்கையையே அப்படம் புரட்டி போட்டது.

இப்படத்தின் கேரக்டர் பெயரான சீயான் என்பதையே இவரது ரசிகர்கள் தற்போது அன்போடு அழைத்து வருகின்றனர்.

இதனையடுத்து “காசி, ஜெமினி, சாமுராய், கிங், தூள், சாமி உள்ளிட்ட பல படங்களை கொடுத்து முன்னணி நாயகனாக உயர்ந்தார்.

இதில், அந்நியன், காசி, பிதாமகன், தெய்வத் திருமகள், ஐ, இருமுகன் ஆகிய படங்களில் இவர் மேற்கொண்ட வித்தியாசமான முயற்சி பலருக்கும் பாடமாக அமைந்தது.

பிதாமகன் படத்திற்காக தேசிய விருதை வென்றார்.

ஷங்கர் இயக்கிய ஐ படத்திற்காக தன் நிஜ உருவத்தையே உருமாற்றிக் கொண்டார்.

சிறந்த இயக்குனர்கள் தங்கள் வித்தியாசமான படைப்புகளை இவர் மூலமே பரிசோதித்து வருகின்றனர்.

முயற்சியும் திறமையும் இருந்தால், வெற்றி வெகு தொலைவில் இருக்காது என்பதற்கு விக்ரமே சிறந்த உதாரணம்.

வாசகர்களுடன் இணைந்து ஃபிலிமி ஸ்ட்ரீட் சார்பாக நாங்களும் வாழ்த்துகிறோம்.

பின்குறிப்பு… இதே நாளில் (17/10/1952) சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி படமும் வெளியானது. அடடே… மிகச் சிறந்த கலைஞர்களுக்குள்தான் என்ன ஒரு அரிய ஒற்றுமை.

More Articles
Follows