செஞ்சுரி அடிக்கத் தயாராகும் காமெடியன் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யோகி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாபு. அந்த படத்தை சுப்ரமணியம் சிவா இயக்கியிருந்தார்.

அந்த படத்திற்கு பின்னரே யோகி பாபுவாக மாறினார் பாபு.

அதன் பின்னர் வந்த கலகலப்பு, பட்டத்து யானை, மான் கராத்தே, யாமிருக்க பயமேன், ரெமோ ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

தற்போது யோகி பாபு இருந்தால் அந்த படத்திற்கு யோகம் என்ற வகையில் எல்லா இயக்குனர்களுக்கும் தேவையான காமெடி நடிகராக உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் 100வது படத்தை நெருங்கி கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது…

என்னை வைத்து படம் இயக்கிய அனைத்து இயக்குநர்கள் மற்றும் கடவுளுக்கு நன்றி.

ரசிகர்கள் இல்லாமல் எந்த நடிகனும் இல்லை. ரசிகர்களுக்கும் நன்றி. சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.” என்றார்.

Comedy Actor Yogi Babu completing 100 movies in short period

அரசியல்வாதிகள் திருடுவதை நிறுத்தினாலே அரசுக்கு வருமானம்தான். : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை இண்டர்நேஷனல் சென்டர் என்ற அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கமல் கலந்துக் கொண்டு பேசினார்.

அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கும் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நடிகன் அரசியலுக்கு வரலாமா என்று கேட்கிறார்கள். நான் அவர்களை கேட்கிறேன் அரசியல்வாதியாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இதுவரை எனது சொந்த பணத்திலிருந்து கட்சி நடத்தி வருகிறேன்.

தேர்தல் கமிஷனில் கட்சியை பதிவு செய்த பிறகு மக்களிடம் நன்கொடை வசூலிப்பேன்.

தேர்தல்களில் நான் வெற்றி பெறுவதைவிட போட்டியிடவும், தோல்வி அடையவும் தயாராக இருக்கிறேன்.

எதிர்க்கட்சி வரிசையில் உட்கார எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

ஆனால் தேர்தலில் வாக்களிக்க ஒரு போதும் பணம் கொடுக்க மாட்டேன். இதை எனது கட்சியின் அடிப்படை கொள்கையாக வைத்திருக்கிறேன்.

ஏழறை கோடி தமிழர்களுக்கும் தலா 45 ஆயிரம் கடன் இருக்கிறது. இந்த கடனை அடைக்க வேண்டும்.

எல்லா வியாபாரத்தையும் போன்று மது விற்பனையும் ஒரு வியாபாரம்தான். அதை ஒரு சிலர் செய்வதுதான் தவறு.

அரசுக்கு மதுவிற்பனை முக்கிய வருமானம்தான். அரசை நடத்துவதற்கு அதுவே முதலான வருமானம் இல்லை.

அரசியல்வாதிகள் மக்களிடமிருந்து திருடுவதை நிறுத்தி விட்டால் அதுவே பெரிய வருமானம்தான்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டம் நடத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நிறுத்தியது சரியானதல்ல. எனக்கு கிரிக்கெட் தெரியாது, பிடிக்காது.

சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் நடந்தபோதுகூட சென்னையில் ரஞ்சி கிரிக்கெட் போட்டி நடந்தது.

22 வீரர்கள் விளையாடும் இடத்தில் போராட்டம் நடத்தாமல் மக்கள் வாழ்க்கையோடு விளையாடும் 234 எம்.எல்.ஏக்கள் இருக்கிற கோட்டை முன் நடத்தியிருந்தால் நானே முதல் ஆளாக சென்றிருப்பேன்.”

இவ்வாறு கமல் பேசினார்.

Politician must stop corruption to make Govt as Profitable says Kamal

படத்தின் லாபத்தை வைத்தே நடிகர்களின் சம்பளம்; தயாரிப்பாளர்கள் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் வேலை நிறுத்தத்திற்கு பிறகு அதிரடியான நடவடிக்கைகள் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்டு வருகிறது.

அதில் முக்கியமான விஷயமாக நடிகர்களின் சம்பளம் குறைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, நடிகர் சங்கத்தினர் சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனை செய்தனர்.

தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் வந்திருந்தனர்.

இவர்களுடன் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, ஆர்யா, கலையரசன், சுஹாசினி, கஸ்தூரி, நகுல், ஜிவி பிரகாஷ், பரத், கவுதம் கார்த்திக், கணேஷ் வெங்கட்ராம், கிருஷ்ணா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் நடிகர் கார்த்தி பேசினார். அவர் பேசியதாவது…

“படத்தின் லாபத்தை வைத்து நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும். ஊதிய நிர்ணயம் விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அமல்படுத்தப்படும்” என்றார்.

TFPC decided to fix Tamil heros salary based on Profit of their movies

யுவன் இசையமைப்பில் டூயட் பாடும் விஜய்சேதுபதி-அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’ படத்தில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்ஜே சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்திருந்தனர்.

இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். இந்த ஜோடி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற நிலையில் தற்போது இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் மூன்றாவது முறையாக விஜய்சேதுபதி படத்தை இயக்கவுள்ளார்.

கே புரடொக்சன்ஸ் சார்பாக ராஜராஜன் இந்த படத்தை தயாரிக்க, யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

தென்காசி மற்றும் மலேசியாவில் இதன் சூட்டிங் நடைபெறவுள்ளது.

Vijay sethupathi and Anjali romance again for new movie

ஏன்டா அரசியலுக்கு வந்தீர்கள்? என ஆட்சியாளர்களை கேட்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் நீதி மைய கட்சி தலைவரும், நடிகருமான கமல் யூடிப்யூப் மூலம் இன்று நேரடியாக உரையாற்றினார். கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் பலர் கடிதம் மூலம் கேட்ட கேள்விகள் சிலவற்றிற்கு கமல் பதிலளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :

நீர்நிலைகளை சுத்தப்படுத்த வேண்டியது நமது கடமை பள்ளிகள், அதற்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் தன்னார்வலர்கள் வேண்டும்.

முதல்கட்டமாக அதிகதூர் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளோம். கிராமத்தை தத்தெடுப்பதற்கு முதலில் அந்த கிராம மக்களுடன் பேச வேண்டும்.

ஊர் பெரியவர்களுடன் பேச வேண்டும் அதற்கு பின் தான் தத்தெடுக்க முடியும். அடுத்து தத்தெடுக்கப் போகும் கிராமங்களின் பட்டியல் பின்னர் வெளியிடப்படும்.

மய்யம் விசில் செயலி மூலம் மிகப்பெரிய அளவில் குறைகளை சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக அரசாங்கம் தீர்வை நோக்கி நகர்ந்தே தீர வேண்டும்.

குடிநீருக்காக நடைபெறும் போராட்டம், குறிப்பிட்ட காலத்துக்கு பின் முடிந்துவிடும் என நினைத்தால் அது ஒரு அரசியல் அறியாமை.

அரசியலுக்கு வர வேண்டும் என்பது ஒரு கன நேரத்தில் எடுத்த முடியவல்ல. பல பல வருடங்களாக யோசித்து எடுத்த முடிவு. ஓட்டு அரசியலுக்கு ஏன் வர வேண்டும் என்று நினைத்து தான் அரசியலுக்கு வராமல் இருந்தேன்.

நம்முடைய அஜாக்கிரதையால் அரசியலை மோசமான நிலைக்கு தள்ளி விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி உள்ளது.
எல்லோரும் கண்டுகொள்ளாமல் விட்டதால் யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற நிலை வந்து விட்டது.

அதை மாற்ற மீடியாக்கள் மூலம் முயற்சித்தேன். மீடியா ஒரு ஆராய்ச்சி மணி தான்.

மக்கள் மற்றும் மீடியாவின் கேள்விக்கு ஏன் பதிலளிக்க வேண்டும் என்ற ஆணவம் ஆட்சியாளர்களுக்கு வந்துவிட்டது. இதற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்திருக்கிறேன்.

நிஜமாக அரசியல் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் நிறைய படி ஏறி செல்ல வேண்டும். இறங்கி வர வேண்டும் என்பது கர்வம்.

ஏன் அரசியலுக்கு வந்தோம் என்று தோன்றவில்லை. ஆனால் சிலரை பார்த்து “ஏன்டா அரசியலுக்கு வந்தீர்கள்” என கேட்க தோன்றுகிறது.

நல்ல அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

அடுத்த தேர்தலில் நான் முதல்வரா, எதிர்க்கட்சி தலைவரா எது ஆக வேண்டும் என நினைக்கிறீர்கள் என என்னிடம் கேட்கிறீர்கள். ஆனால் நான் என்ன ஆக வேண்டும் என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

Why some peoples entered in politics asks Kamal to Current Ministers

கோடையை குளிர வைக்க சென்னையில் வாட்டர் வேர்ல்ட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையை பொறுத்தவரை கோடை விடுமுறை என்றாலே தீவுத்திடலில் பிரமாண்டமாக நடைபெறும் இந்திய சுற்றுலா பொருட்காட்சி தான் முதலில் ஞாபகத்திற்கு வரும்.

அந்தவகையில் சென்னையின் இந்த வருட கோடை விடுமுறை கொண்டாட்டமாக அமைய இருப்பது, ஏப்-27 ல் தொடங்கி ஜூன்-4 ஆம் தேதிவரை நடைபெற இருக்கும் 44வது இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அமைந்திருக்கும் வாட்டர் வேர்ல்டு (Water World) ஆகத்தான் இருக்கும்.

வழக்கமான ஜெயன்ட் வீல் மற்றும் அது சார்ந்த கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல் இந்தமுறை, வாடிக்கையாளர்களுக்கு சலுகை தரும் விஷயமாக சத்யா எலெக்ட்ரானிக்ஸின் மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் மேளா நடைபெற இருக்கிறது.

இந்தமுறை கோடையின் தீமாக நீர் உலகம் (water world) இருக்கும். ஆகையால் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக ராட்சத நீர்வீழ்ச்சி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நிஜ நீர்வீழ்ச்சியில் குளிப்பது போலவே இதிலும் ஆனந்தமாக குளிக்கலாம்.. அதையொட்டி அமைந்துள்ள நீச்சல் குளத்தில் நீந்தி மகிழலாம்.

படகு சவாரி, பனி விளையாட்டுக்கள் என இப்படி நீரை மையமாக வைத்து த்ரில்லிங்கும் பொழுதுபோக்கும் கலந்த 15க்கும் மேற்பட்ட நீர் விளையாட்டுக்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்த காத்திருக்கின்றன.

இந்தமுறை ஐ.பி.எல் போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டதன் காரணமாக இந்த தீவுத்திடலில் பிரமாண்டமாக நடைபெறும் இந்திய சுற்றுலா பொருட்காட்சிக்கு சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை போக்ஸ் லேண்ட் (Folks Land) கவனிக்க, சந்தைப் படுத்தும் பொறுப்பை விகோஷ் மீடியா (Vgosh Media) ஏற்றுக்கொண்டுள்ளது. லட்மண் ஸ்ருதியின் மியூசிக் ஸ்டால், விதவிதமான ஆடை வகைகள், உணவுப்பொருட்கள், மின் சாதனங்கள், குழந்தைகளை கவரும் விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றுக்கான கடைகள் (stalls) இதில் ஏராளமாக இடம் பிடிக்கின்றன.

கடைகள் (stalls) முன்பதிவு மற்றும் மேலதிக விபரங்களுக்கு:

8608201000, 8608301000, 8428701000, 8428801000 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

More Articles
Follows