ஜெயலலிதாவுக்காக சிவகார்த்திகேயன்-ஆர்யா செய்த காரியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது.

அடுத்த நாள் சென்னை, மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அம்மாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரின் பிரிவை தாங்க முடியாத மக்கள் இன்னும் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.

அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் சிவகார்த்திகேயன், ஆர்யா, விஷ்ணு ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அம்மா புகைப்படத்தை வைத்துள்ளனர்.

இவர்களைப்போல் த்ரிஷா, பிரேம்ஜி அமரன். சாந்தனு பாக்யராஜ் மற்றும் வெங்கட்பிரபு உள்ளிட்டோரும் அம்மா படத்தை வைத்துள்ளனர்.

விஜய்-சூர்யாவை முந்தி, ரஜினிக்கு அடுத்த இடத்தில் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐட்யூன்ஸ் இண்டியா என்ற மியூசிக் நிறுவனம் இந்தாண்டில் வெளியான தமிழ் படங்களின் பாடல்களில் எது முதல் இடத்தை பிடித்துள்ளது என்பதை தெரிவித்துள்ளது.

இதில் இருமுகன் மற்றும் ரெமோ பாடல்கள் ஐந்து, ஆறு இடங்களில் உள்ளது.

நான்காவது இடத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த விஜய்யின் தெறி பாடல்கள் உள்ளது.

3வது இடத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் சூர்யா நடித்த 24 படப்பாடல்கள் உள்ளன.

இரண்டாவது இடத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் சிம்பு அச்சம் என்பது மடமையடா பாடல்கள் உள்ளது.

முதல் இடத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் ரஜினி நடித்த கபாலி படப்பாடல்கள் உள்ளது.

(Info via @blogeswari )

ரஜினி-அஜித் இடத்தை கைப்பற்றிய அர்விந்த்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘ப்ரண்ட்ஸ்’, ‘காவலன்’ ஆகிய படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் சித்திக்.

இவர் இயக்கத்தில் மம்மூட்டி-நயன்தாரா நடித்து வெளியான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இதன் தமிழ் ரீமேக்கில் ரஜினி அல்லது அஜித் நடிக்க வேண்டும் என சித்திக் விரும்பினார்.

ஆனால் தற்போது அதில் அர்விந்த் சாமி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இவையில்லாமல் தனது அடுத்தடுத்த படங்களை உறுதி செய்து வருகிறார் அர்விந்த்சாமி.

தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் அதே வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.

துருவா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் நாளை மறுநாள் (டிச. 9) அன்று ரிலீஸ் ஆகிறது.

இவையில்லாமல் போகன், சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களும் உள்ளன.

மேலும் இயக்குனர் செல்வா இயக்கவுள்ள ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறாராம் அர்விந்த் சாமி.

சுசீந்திரன்-சமுத்திரக்கனி படங்களில் விக்ராந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோவாக நடித்து வந்த விக்ராந்த் கெத்து படத்தில் வில்லனாக நடித்தார்.

அதன்பின்னரும் அவருக்கு சரியாக வாய்ப்புகள் வரவில்லை.

தற்போது டிஆர் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘கவண்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, சுசீந்திரன் இயக்கவுள்ள ‘வெண்ணிலா கபடி குழு படத்தின்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.

மேலும் சமுத்திரக்கனி இயக்கவுள்ள தொண்டன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.

ஆம்புலன்ஸ் ஆப்ரேட்டர்களை பற்றிய கதை இது.

விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.

Vikranth in suseendran and Samuthirakani movies

பாலாவின் அடுத்த பட நாயகன்… சிம்பு? யுவன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகும் படம் என்ன? நாயகன் யார்? என்ற கேள்விகள் எழுந்தன.

இதில் எதிர்பாராவிதமாக சாட்டை, இளமி படப்புகழ் யுவன் நாயகனாக நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியானது.

இது பிராமணர் சம்பந்தப்பட்ட கதை என்றும் அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இதனிடையில் சிம்பு வைத்து பாலா தன் அடுத்த படத்தை இயக்குவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இதனால் பாலா ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அம்மாவுக்கு விஜய்-சூர்யா-சிவகார்த்திகேயன் அஞ்சலி; விக்ரம் இரங்கல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இந்தியாவையே கண் கலங்க வைத்துள்ளது.

அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இன்னும் அந்த துயரத்தில் இருந்து மீளவில்லை.

விஜய், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நேரில் சென்று கண்கள் கலங்கியபடியே அஞ்சலி செலுத்தினர்.

ரஜினிகாந்த் குடும்பத்துடன் தனுஷ் சென்று அஞ்சலி செலுத்தினார்.

சீயான் விக்ரம் அமெரிக்காவில் இருப்பதால், நேரில் வரமுடியாமல் கடிதம் மூலம் தன் இரங்கலை தெரிவித்துள்ளார். அதில்…

“தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த செய்தி கேள்விப்பட்டவுடன் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

அவர் ஒரு சிறந்த தலைவர் மட்டுமல்ல, என்னைப்போன்ற பலகோடி ரசிகர்களின் கண்களுக்கு நட்சத்திரமாகவும் திகழ்ந்துள்ளார்.

அவரது ஆளுமை, உள் வலிமை என அனைத்தையும் தவறவிட்டோம். அவருடைய இழப்பு தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லை. இந்தியாவிற்கே பெரிய இழப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

More Articles
Follows