தனுஷ் வருவதற்குள் விஜய்சேதுபதியுடன் இணையும் இயக்குனர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வட சென்னை படத்தில் நடித்துக் கொண்டே பவர் பாண்டி படத்தை இயக்கி வருகிறார் தனுஷ்.

இதனிடையில் கௌதம் மேனனின் என்னே நோக்கி பாயும் தோட்டா படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதன் பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் அப்படம் தொடங்கப்படாமல் இருக்கவே, விஜய்சேதுபதியுடன் ஒரு குறுகிய கால படம் செய்யவிருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ்.

இதற்கு முன்பே பீட்சா, இறைவி உள்ளிட்ட படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றியது இங்கே கவனிக்கத்தக்கது.

வெங்கையா நாயுடுவை ஐஸ்வர்யா தனுஷ் சந்தித்தது ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இயக்குனராகி படங்களை இயக்கி வருகிறார்.

வை ராஜா வை படத்தை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு முன்பு ”சினிமா வீரன்” என்ற ஆவணப்படத்தை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரஜினி வர்ணனை (வாய்ஸ் ஓவர்) கொடுக்கவிருக்கிறார்.

இப்படம் புகழ் வெளிச்சத்திற்கு வராத ஸ்டண்ட் கலைஞர்களை பற்றிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சற்றுமுன் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்துள்ளார்.

இதுகுறித்து தன் ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது…

“தேசிய விருது பட்டியலில் சினிமா ஸ்டண்ட் கலைஞர்களை சேர்க்க வலியுறுத்த வேண்டும்” என கடிதம் மூலம் கேட்டுக் கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.

சினிமாவில் ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி. படத்தில் சூப்பர் ஸ்டார் பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சங்கமித்ரா’ என்ற பிரம்மாண்டமான படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, சுந்தர் சி. இயக்கவிருக்கிறார்.

இதில் மகேஷ்பாபு, ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

படத்தின் நாயகர்கள் கிடைக்கவே படாத பாடுப்பட்ட இந்த படக்குழு நாயகியையும் தேடி வந்தனர்.

தற்போது ரஜினியின் கோச்சடையான் பட புகழ் தீபிகா படுகோனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், இப்படக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

தனுஷ் -5; சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி -7; சிம்பு – 8

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகியோருக்கு பிறகு தமிழ் சினிமாவில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகிய நால்வரும் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர்.

எனவே, இந்த நால்வரின் ரசிகர்கள் இவர்களது பட பாடல்கள், டீசர், மற்றும் படங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கொடி படத்தின் பாடல்களை அக். 5ஆம் தேதி வெளியிட போவதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

விஜய்சேதுபதியின் றெக்க மற்றும் சிவகார்த்திகேயனின் ரெமோ ஆகிய இரு படங்களும் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகிறது.

இதனையடுத்து சற்றுமுன், தன்னுடைய AAA படத்தின் மதுரை மைக்கேல் டீசரை அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கும் 12.00 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார் சிம்பு.

தோனி.? சுஷாந்த்.? சூர்யாவே கன்ப்யூஸ் ஆகிட்டாரு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை அவரது பெயரிலேயே படமாக எடுத்தனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் நேற்று வெளியானது.

தமிழகத்திலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளிலேயே ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் நேற்றே இப்படத்தை சூர்யா பார்த்துள்ளார்.

அதுபற்றி அவர் கூறியுள்ளதாவது…

“படம் மிக அருமை. படத்தின் நாயகன் சுஷாந்த்? இல்லை தோனி? என்று தெரியாத அளவுக்கு சுஷாந்த் நன்றாக நடித்துள்ளார்” என்றார்.

விஜய் போல யாராச்சும் இருப்பாங்களா.? – பிரபல வில்லன் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கும் விஜய்யின் பைரவா படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இப்படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு விறுவிறுப்பாக சூட்டிங்கை நடத்தி வருகின்றனர்.

இதில் வில்லனாக நடிக்கும் டேனியல் பாலாஜி, விஜய்யை பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதில்… ‘விஜய் ரொம்ப எளிமையானவர்.

படப்பிடிப்பில் இருக்கும் டெக்னிஷியன்கள் முதற்கொண்டு ஒவ்வொரு கலைஞரையும் சந்தித்து அவர்கள் குறித்து விசாரித்து தெரிந்துக் கொள்வார்.

விஜய்யை போன்று மற்றவர்கள் இப்படி இருப்பார்களா என தெரியவில்லை’ என்றார்.

More Articles
Follows