யு சான்றிதழுடன் செப்டம்பர் 1-ல் களமிறங்கும் புரியாத புதிர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில் ‘ஜேஎஸ்கே பிலிம் கார்பொரேஷன்’ தயாரித்துள்ள படம் ‘புரியாத புதிர்’.

விஜய்சேதுபதி மற்றும் காயத்ரி இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் கடந்த 2016ஆம் ஆண்டு தீபாவளி சமயத்திலேயே வெளியானது.

ஆனால் பல காரணங்களால் தடைப்பட்ட இதன் ரிலீஸ் தற்போது 2017ல் செப்டம்பர் 1ஆம் தேதி உறுதியாகியுள்ளது.

சிஎஸ். சாம் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Puriyatha Puthir censored U certificate Movie release on 1st September 2017

மூன்றாவது முறையாக விஜய்யுடன் மோதும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் இந்தாண்டு 2017 தீபாவளிக்கு ரிலீஸ் என்பது உறுதியாகிட்டது.

இதே நாளில் கௌதம்கார்த்திக் நடித்துள்ள ஹர ஹர மகாதேவகி படமும் வெளியாகும் என அறித்துள்ளர்.

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்க, கருணாகரன் மொட்டை ராஜேந்திரன், சதீஷ், மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இத்துடன் விக்ரம், தமன்னா நடித்து வரும் ஸ்கெட்ச் படமும் மோதும் என தெரிய வருகிறது.

இப்படத்தின் பணிகளை விறுவிறுப்பாக செப்டம்பர் மாதத்திற்குள் முடித்துவிட இயக்குனர் விஜய் சந்தர் முடிவெடுத்துள்ளாராம்.

இதற்கு முன்பு விஜய் நடித்த திருமலை மற்றும் சிவகாசி படங்கள் விக்ரம் நடித்த பிதாமகன் மற்றும் மஜா படங்களுடன் மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mersal Sketch movies may clash on diwali 2017

வேலைக்காரனுக்கு இப்படியொரு விளம்பரமா? ஒரு கோடி அபராதம் கட்ட விஷால் நோட்டீஸ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன், நயன்தாரா, சிநேகா, பகத்பாசில் ஆகியோர் நடிப்பில் வளர்ந்துள்ள வேலைக்காரன் படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார்.

இப்படத்தை ஆர்.டி.ராஜா தன் 24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரித்திருக்கிறார்.

வருகிற செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இதன் டீசர் வெளியானதை முன்னிட்டு விளம்பரம் படுத்தும நோக்கதில் நாளிதழ்களில் முழு பக்கம் விளம்பரம் செய்திருந்தார் தயாரிப்பாளர்.

இதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் கண்டனங்களை தெரிவித்திருந்தார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

முழுபக்கம் விளம்பரம் செய்யக்கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் விதிமுறைகள் இருக்கும்போது இவர்கள் இப்படி செய்யலாமா? என சங்கத் தலைவர் விஷாலிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனையடுத்து தற்போது இதன் தயாரிப்பாளர் ரூ. ஒரு கோடியை அபராதமாக சங்கத்திற்கு கட்ட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம்.

இந்த விளம்ரத்தில் வேலைக்காரன் சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ள விஜய் டிவியும் இணைந்துள்ளதால் இரு நிறுவனங்களும் இந்த அபராத்தை கட்ட வேண்டும் என சொல்லப்படுகிறது.

ஆனால் மற்றொரு புறம் இது தயாரிப்பாளர் தரப்பு கொடுத்த விளம்பரம் அல்ல. விஜய் டிவி நிறுவனம் கொடுத்துள்ளது.

எனவே தயாரிப்பாளர் சங்க விதிமுறைகள் டிவி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனவும் செய்திகள் வந்துள்ளன.

Producer Council finned Rs 1crore to Vijay TV and Velaikkaran Producer

அஜித்துடன் நடிப்பது எப்போது.? இப்படியா சொன்னார் கீர்த்தி சுரேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ்.

இதனையடுத்து விஜய், தனுஷ் ஆகியோருடன் ஜோடி போட்டார்.

தற்போது சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் விக்ரம் உடன் சாமி2 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் அண்மையில் அளித்த பேட்டியில் இவர் கூறியதாவது…

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் இப்படியொரு இடம் கிடைக்கும் என நினைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் டாப் ஹீரோக்கள் என்னை அவர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு தந்தார்கள்.

அந்த வகையில் நான் ஒரு லக்கியான நடிகை என்றே சொல்லலாம்.

அப்போது அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள்? என்று கேட்டதற்கு…

தெரியவில்லை. நடக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்” என தெரிவித்தார்.

Keerthy Suresh talks about Acting with Ajith

கரகாட்டக்காரன்-AAA புகழ் சண்முக சுந்தரம் மரணம்; நடிகர் சங்கம் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூத்த தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் சண்முக சுந்தரம் (79) இன்று சென்னையில் காலமானார்.

அவரது மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது…

“சண்முக சுந்தரம் அவர்கள் 1963-ம் ஆண்டு ரத்ன திலகம், கர்ணன் ஆகிய படங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

கல்லூரியில் பயிலும் காலத்திலேயே நடிப்பில் ஆர்வம் கொண்டு மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டு தன் கலை வாழ்க்கையை தொடங்கியவர்.

1972-ம் ஆண்டு வாழையடி வாழை படத்தில் நடித்து திரைப்பட நடிகரானார். தொடர்ந்து இன்று வரை கரகாட்டக்காரன், கிழக்கு வாசல், நம்ம ஊரு ராசா, நண்பன், அச்சமின்றி உள்பட நூற்று கணக்கான படங்களில் நடித்து தனது இயல்பான நடிப்பாற்றலால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

அண்மையில் வெளியான சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தான் கடைசியாக வெளிவந்த அவரது படம்.

மேலும் அண்ணாமலை, அரசியல்,செல்வி, வம்சம் ஆகிய சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.

தனது கடினமான உழைப்பாலும் திறமையாலும் நற்பெயரும் புகழும் பெற்று விளங்கியவர் திரு. சண்முக சுந்தரம் அவர்கள். அவரது மறைவு நாடக மற்றும் திரை உலகிற்க்கும் நடிகர் சமூகத்திற்க்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும்.

அன்னாரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் . ” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karagatakkaran AAA fame Actor Shanmugasundaram Passed away

மக்கள் கூடும் இடத்தில் சிவாஜிக்கு சிலை வேண்டும்… – நடிகர் சங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் அதிகமாக கூடும் பொது இடத்தில் வைக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சென்னை கடற்கரைச் சாலையில் இருந்த சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டு, சிவாஜி மணி மண்டப வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை மீண்டும் கடற்கரைச் சாலையில் காமராஜர் சிலை அருகே நிறுவ வேண்டுமென திரையுலகினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில், சிவாஜி சிலையை காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொது மக்கள் அதிகமாக கூடும் இடத்திலோ நிறுவ வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் குறித்து கடிதம் மூலம் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Nadigar Sangam request TN govt to keep Sivaji Statue at Public Place

More Articles
Follows