‘பைரவா’வுக்கு ஒதுங்கிய விஜய்சேதுபதி எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி விஜய் நடித்த பைரவா படம் வெளியானது.

எனவே பைரவாவுக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்த காரணத்தால் மற்ற படங்கள் பொங்கல் ரேஸில் இருந்து விலகின.

இந்நிலையில் அன்று விலகிய விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் படம் இந்த வாரம் ஜனவரி 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijaysethupathi starring Puriyadha Puthir movie release date

ஜனவரிக்குள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் அஜித்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016ஆம் ஆண்டில் ஒரு அஜித் படம் கூட வெளியாகவில்லை.

2017ஆம் ஆண்டு தொடங்கிவிட்ட போதிலும் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் தொடர்பான ஒரு போஸ்டர் கூட வெளியாகவில்லை.

பொங்கலுக்கு ஏதாவது வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் வழக்கம்போலவே ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் இந்த மாதம் ஜனவரி முடிவதற்குள் தல57 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிவிடும் என சொல்லப்படுகிறது.

விஜய்யுடன் 3வது முறையாக இணையும் ‘லக்கி’ ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி மற்றும் பைரவா படங்களை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தின் மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதில் காஜல் அகர்வால் நடிப்பது தற்போது உறுதியாகிவிட்டது.

நிறைய நடிகைகள் விஜய்யுடன் இணைய காத்திருக்கும் நிலையில் இவர் 3வது முறையாக விஜய்யுடன் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஜில்லா, துப்பாக்கி ஆகிய படங்களில் விஜய் நடித்துள்ளார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மற்ற நாயகிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் எனத் தெரிகிறது.

‘அமெரிக்க உணவு வகைகளை சாப்பிட மாட்டேன்..’ ஜிவி. பிரகாஷ் சத்தியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டு ஆதரவாக ஜி.வி. பிரகாஷ் ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இனிமேல் அமெரிக்க உணவு வகைகளை நான் சாப்பிட மாட்டேன். இது சத்தியம் என்று தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதான் நாம் அவர்களுக்கு தரும் பதிலடி. இனிமே எங்கிட்ட வந்து வித்து பாருங்கடா. என்று தெரிவித்திருக்கிறார்.

Inimel idhai oru oruthharum kadaipidikkirom idhuvum oru mukkiya badhiladi avargalukku …. inimel vandhu vithhupaarungada engakitta

Hereafter I wont have Pepsi Coke and American foods says GVPrakash

 

இளைஞர்களை போராட தூண்டியவர்களுக்கு சூர்யா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இளைஞர்களின் இப்போராட்டத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…

பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்து கொண்டிருந்தார்கள்.

இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் தங்களின் பண்பாடு, அடையாளம், வரலாறு குறித்து பேசுவதற்கு காரணமாக ‘ஜல்லிக்கட்டு’ மாறி இருக்கிறது.

ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி பொதுபிரச்சனைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றிகள்.

‘தன்னெழுச்சியான’ போராட்டங்களில் எப்போதுமே உண்மை இருக்கும். பல நூற்றாண்டுகளாக, தமிழகத்தில் நடந்து வருகிற ஜல்லிக்கட்டு, ‘மாடுகளுக்கு எதிரானது’ என்று பொய்ப்பிரசாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற பீட்டா அமைப்பு, மக்கள் மன்றத்தில் தோற்றிருக்கிறது.

நாட்டு மாடு இனம் அழிவதற்கு துணை போகிறவர்கள், ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

சட்டமும், ஆட்சியும் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை, நமது விரல் எடுத்து நமது கண்களை குத்திக் கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது.
அமைதியான வழியில் நமது உரிமைகள் நிலைநாட்ட போராடுகிற அனைவருக்கும் என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்.

போராடுபாவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்.

மக்களின் போராட்டம் வெற்றி பெற்று ‘ஜல்லிக்கட்டு’ விரைவில் நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெற்றதும் நமது போராட்டம் வெற்றி பெற்றதாக அமைதியாகிவிடக்கூடாது.

நமது பண்பாட்டையும் அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் இருந்தாலும் இதேபோல ஒன்றுபட்டு குரல் கொடுக்கும்.

இவ்வாறு சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Suriya support Jallikattu protest of Students

விஜய் ரசிகர் மன்ற தலைவரை கொலை செய்தவர்கள் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘பைரவா’ படத்தை அவரது ரசிகர்கள் கோலாகலமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் அன்றைய தினமே காஞ்சிபுரம் மாவட்ட விஜய் நற்பணி மன்ற தலைவர் ரவி மர்மமான முறையில் இறந்தார்.

அவரது மறைவிற்கு விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார்.

இந்நிலையில் ரவியை கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சீனிவாசன், அப்பு, பாபு ஆகிய மூவரும் ரவியை நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Police arrested persons who involved in Vijay fans assoication leader murder

More Articles
Follows