விஜய்யுடன் விஜய்சேதுபதி மோத இதான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2017 பொங்கல் தினத்தில் விஜய்யின் பைரவா ரிலீஸ் ஆகவுள்ளது.

இத்துடன் யாக்கை, அதே கண்கள், புரூஸ் லீ, எனக்கு வாய்த்த அடிமைகள், புரியாத புதிர் மற்றும் குற்றம் 23 உள்ளிட்ட 6 படங்களும் அதே நாளில் ரீலீஸ் ஆகவுள்ளது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் புரியாத புதிர் படத்தை பொங்கல் தினத்தில் வெளியிடவிருப்பது ஏன் என்று தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் கூறியதாவது…

“நல்ல படங்கள் மூலம் மக்களை மகிழ்விப்பது எங்களின் கடமை.

தமிழக ரசிகர்களுக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு இணை பிரியாத நல்ல உறவு இருக்கிறது.

பொங்கலன்று வெளியாகும் எங்களின் புரியாத புதிர் படம் அந்த உறவைஉறுதிப்படுத்தும்” என்றார்.

Reason for vijay sethupathi movie clash with Vijay

‘பைரவா’ பட்டைய கிளப்ப இத்தனை ஹைலைட்ஸ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா பட டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

எனவே படத்திற்கும் கூடுதல் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி படத்தின் ஹைலைட்ஸ் குறித்து தெரிவித்துள்ளார்.

அதில்…

சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை போன்ற ஒரு செட் மிகப்பிரம்மாண்டமாக போடப்பட்டது.

இதற்காக நிறைய பேருந்துகள் கடைகள் செட் போடப்பட்டு அச்சு அசலாக பஸ் ஸ்டாண்டை வடிவமைத்திருந்தார் ஆர்ட் டைரக்டர்.

இதில் 1000க்கும் மேற்பட்ட துணை நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு நடித்தனர்.

பைரவர் கோயில் செட் ஒன்றும் சென்னை பின்னி மில் அருகே போடப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் ஆடியுள்ள நடனம் நிச்சயம் பேசப்படும். எழில் கொஞ்சும் சுவிட்சர்லாந்தை அழகாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர்.

மேலும் கட்டி முடிக்கப்படாத 12 அடுக்கு மாடி கட்டிடத்தில் அதி பயங்கர சண்டைக் காட்சி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.” என்றார்.

High lights of vijay starrer Bairavaa

அரவிந்த் சாமிக்கு ஜோடி சோனாக்ஷி? அமலா பால்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மம்மூட்டி, நயன்தாரா நடித்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.

இதில் அரவிந்தசாமி நாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக நடிக்க லிங்கா பட நாயகி சோனாக்ஷி சின்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு புறம் அமலா பாலிடமும் பேச்சுவார்த்தை நடைப்பெறுகிறதாம்.

யார் முதலில் ஒப்புக் கொள்கிறார்களோ? உடனே அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தனுஷால் அஜித்திற்கு வரும் ‘தல’வலி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலும் ரஜினி, கமல், விஜய், சிம்பு படங்களுக்குதான் வெளியாகும் சமயத்தில் எதிர்ப்பு வரும்.

தற்போது இவர்களைப் போன்ற சிக்கல் பிரச்சினையில் அஜித்தும் சிக்க இருக்கிறார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதன் சூட்டிங் தற்போது பல்கேரியா நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதே நிறுவனம் தயாரித்த தனுஷின் தொடரி படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

ஆனால் படம் எதிர்பார்த்த லாபத்தை விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே அஜித் படம் வெளியாகும் சமயத்தில் அந்த விநியோகஸ்தர்கள் பிரச்சினை எழுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சந்தானத்திற்கு மட்டும் ஓகே… மக்கள் தீர்மானிக்கட்டும்..’ சிம்பு ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் ‘சக்கப் போடு போடு ராஜா’.

இப்படத்தில் வைபவி ஷாந்தலியா, விவேக், ரோபோ சங்கர், சம்பத் உள்ளிட்டோர் நடிக்க, விடிவி கணேஷ் தயாரிக்கிறார்.

இப்படத்தில் ‘சர்வர் சுந்தரம்’ நாயகியான வைபவி ஷாந்தலியா இதிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

இப்படம் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இதுகுறித்து சிம்பு தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது.

“கதை பிடித்தது எனவே இசையமைக்க ஓகே சொன்னேன்.

சந்தானம் படம் என்பதால் ஓகே. மற்றவர் என்றால் கொஞ்சம் யோசிப்பேன்.

முதன்முதலாக ஒரு படத்துக்கு இசையமைக்கப் போகிறேன் என்ற பயமெல்லாம் எனக்கு இல்லை.

என் இசை எப்படி என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்” என்றார் சிம்பு.

ஐஸ்வர்யா ராய்க்கு தனுஷ் வலை… சிக்கியது வேறொருவர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிக்க, வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினி இயக்கி வருகிறார்.

இதில் பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இது நீலாம்பரி கேரக்டரைப் போல நெகட்டிவ்வான கேரக்டர் என்று கூறப்படுகிறது.

முதலில் இந்த கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராயைதான் கேட்டார்களாம்.

அவர் மறுக்கவேதான் கஜோல் ஒப்புக் கொண்டாராம்.

அமலாபால் நாயகியாக நடிக்க, இப்படத்தை கலைப்புலி தாணு உடன் இணைந்து தயாரிக்கிறார் தனுஷ்.

More Articles
Follows