பிரசாந்துடன் இணைந்து தன் மகன் விக்ரம் உடன் மோதும் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தியாகராஜனின் மகன் பிரசாந்த் நடித்துள்ள படம் ஜானி.

சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நடித்துள்ள படம் துப்பாக்கி முனை.

இந்த இரு படங்களும் அடுத்த வாரம் டிசம்பர் 14ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுப்பற்றிய விவரம் வருமாறு….

ஜானி படத்தில் பிரசாந்த் உடன் சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

வெற்றிச்செல்வன் இயக்கியுள்ள இப்படத்தை பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள `துப்பாக்கி முனை’ படத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஹன்சிகா முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார்.

60 வயது மாநிறம் படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள இந்த படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இளையதிலகம் பிரபு நடித்துள்ள ஜானி படத்துடன் அவரின் மகன் விக்ரம் நடித்துள்ள துப்பாக்கி முனை மோதுவது இங்கே குறிப்பிடத்தக்கது.

Prabhu team up with Prashanth and clash with his son Vikram

ரஜினியை எவ்ளோ பிடிக்குமோ *பேட்ட* அப்படியிருக்கும்.: விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட.

சன் பிக்சர்ஸ் தயாரித்து இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சசிகுமார், நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து நடிகர் விஜய்சேதுபதி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது….

பேட்ட படம் பற்றி எதுவும் சொல்லமுடியாது. ஆனால் படம் எப்படி இருக்கும் என்பதை சொல்கிறேன்.

ரஜினியிடம் ரசிக்க நிறைய விஷயங்கள். மாஸ், ஸ்டைல், ஈர்ப்பு இப்படி நிறைய. அவரை எந்தளவு பிடிக்குமோ அந்தளவு பேட்ட படம் மாஸாக இருக்கும். படம் பொங்கலுக்கு வருகிறது” என தெரிவித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

பேட்ட படத்தில் ஜித்து என்ற கேரக்டர் பெயரில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இந்த போஸ்டர் நேற்று முன் தினம் வெளியானது.

Makkal Selvan Vijay Sethupathi talks about Petta and Rajinikanth

நெல் ஜெயராமன் மரணம்; அனைத்து செலவுகளையும் சிவகார்த்திகேயன் ஏற்றார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்.

இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 11 வயதில் மகனும் உள்ளனர்.

இவர் 170 அரிய வகை நெல் விதைகளை சேகரித்து வைத்திருந்தார்.

மேலும் பாரம்பரிய நெல்வகைகள காப்பாற்றுவதற்காக தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தினார்.

கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்தனர்.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், கார்த்தி, சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் சந்தித்தனர். இதேபோல தி.மு.க தலைவர் ஸ்டாலின், சீமான், திருநாவுக்கரசர், வைகோ உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.

இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, காமராஜ் உள்ளிட்டோரும் சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் காலமானார்.

அவரது உடல் சென்னையிலுள்ள தேனாம்பேட்டையில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அரசியல் பிரபலங்கள் முதல் நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டு நாளை மதியம் 12 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

இதனையறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் நெல் ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கான மொத்த செலவு மற்றும் அவருக்கான மருத்துவ செலவையும் ஏற்றுள்ளார்.

இவையில்லாமல் அவரின் மகன் படிப்புச் செலவையும் ஏற்றுள்ளார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

Nel Jayaraman passed away Sivakarthikeyan takes his funeral and his sons education expenses

ரூ.500 கோடியை அள்ளியது 2.0; தமிழ் சினிமாவிற்கு ரஜினி தந்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ரூ. 550 கோடியில் 2.0 படத்தை தயாரித்து கடந்த நவம்பர் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 15000 தியேட்டர்களில் வெளியிட்டது.

ஷங்கர் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஏஆர். ரஹ்மான் இசையைமக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் வெளியானது முதல் உலகமெங்கும் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது.

தற்போது ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் உலகமெங்கும் ரூ. 500 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் ரூ 500 கோடியை கடந்த நடிகர் என்ற பெருமையை நடிகர் ரஜினியும் இயக்குனர் என்ற பெருமையை ஷங்கர் ஆகிய இருவரும் பெற்று தந்துள்ளனர்.

இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு உலகளவில் பெருமை தேடித் தந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Proud moment for Tamil Cinema Rajinis 2pointO collected Rs 500 crores

நாம் தமிழர் கட்சியே இல்லை; தவம் இசை விழாவில் சீமான் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு நடித்த ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீமான்.

அதன் பின்னர் ‘இனியவளே’, ‘வீரநடை’, ‘தம்பி’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இதில் ‘பாஞ்சாலங்குறிச்சி’, ‘தம்பி’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரு சில படங்களிலும் அவர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

அதன்பின்னர் அரசியலில் ஆர்வம் காட்டி நாம் தமிழர் என்ற கட்சியை தொடங்கினார். இதனையடுத்து மேடைகளில் அனல் பறக்க பேசி வருகிறார்.

தன் பேச்சின் மூலம் தமிழர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விவசாயப் புரட்சியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘தவம்’ என்று படத்தில் நடித்துள்ளார்.

வசி என்பவர் தயாரித்து நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ஆர். விஜய் ஆனந்த் மற்றும் ஏஆர். சூரியன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, வேல்முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீமான் பேசும்போது…

நாட்டில் ஒரு பிரச்சினை நடந்தால் எவரும் கண்டுக் கொள்வதில்லை.

சினிமாவில் சமூக பிரச்சினையை பேசுபவர்கள் நேரில் பிரச்சினையை பேசுவதில்லை.

ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் என்னிடம் ஒரு குரல் கொடுக்க சொல்கின்றனர். நான் என்னய்யா டப்பிங் ஆர்ட்டிஸ்டா? இது நம்ம பிரச்சினை. எல்லாரும் பேச வேண்டும்.

நான் பேசுவதெல்லாம் படமாக வந்து கொண்டிருக்கிறது. பால் வேண்டும் என்கிறவன் மாடு வளர்ப்பதில்லை.

அழகான பெண் வேண்டும் ஆனால் பெண் குழந்தை வேண்டாம். இவர்கள் எல்லாம் பேசவே கூடாது. அவர்களின் நாக்கை அறுக்க வேண்டும்.

காரை இறக்குமதி செய்வதில் காட்டும் அக்கறை சோறை உற்பத்தி செய்வதில் காட்ட வேண்டும். அதைச் சொல்வதற்காகத் தான் இப்படியான படங்கள்.

என்னை விமர்சிப்பவர்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். “என்னை விமர்சிப்பது உன் வேலை. உனக்கும் சேர்த்து போராடுவதுதான் என் வேலை.

நாம் தமிழர் என்பது ஒரு அரசியல் கட்சி கிடையாது. அது தமிழ் இனத்தின் அடையாளம்.

தவம் படம் விவசாயப் புரட்சியை பற்றி பேசியுள்ளது. படம் நன்றாக வந்துள்ளது.” என்று பேசினார் சீமான்.

Naam Tamilar is not a political party says Seeman at Thavam Audio launch

IRON LADY ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நித்யா மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக மக்களால் அம்மா என அன்புடன் அழைக்கப்பட்டார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

நடிகையாக பிரபலமாகி அரசியலில் ஆளுமையாக உயர்ந்தவர் இவர்

அவர் மரணமடைந்து இன்றுடன் (5-12-18) 2 ஆண்டுகள் ஆகிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க உள்ளதாக இயக்குனர் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் தனி தனி படமாக எடுப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில் ப்ரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு ‘THE IRON LADY’ என அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நித்யா மேனன் நடிக்க இருக்கிறார் என கூறப்பட்டது. தற்போது அது உறுதியாகியுள்ளது.

இன்று ஜெயலலிதாவின் நினைவு நாள் என்பதால் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘THE IRON LADY’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் ஜெயலலிதா தோற்றத்தில் நித்யா மேனன் படம் இடம் பெற்றுள்ளது.

Nithya Menon playing as Iron Lady in Jayalalitha biopic

More Articles
Follows