கதை கேட்காமல் ‘ரெய்டு’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்… – சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

நிகழ்வில் முதலாவதாக பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது…

“இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்கு சிறப்பாக வசனம் எழுதியுள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா இதற்கு முன்பு இணைந்து நடித்தப் படங்கள் வெற்றி பெற்றது போல இதுவும் ஹிட்டாகி தயாரிப்பாளருக்கு லாபம் தரக்கூடியதாக அமையும். சாம் சி.எஸ். இசையில் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். படம் நன்றாக வந்திருக்கிறது. திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுங்கள்” என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் கணேஷ் பேசியதாவது…

“கமர்ஷியல் படத்துக்கு ஏற்ற ஆக்‌ஷன் விஷயங்களை இதில் கொடுத்துள்ளோம். விக்ரம் பிரபு சார் அருமையாக செய்துள்ளார். இயக்குநர் முதல் படத்திற்காக கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளனர். ரெய்டு தீபாவளிக்கு சரவெடியாக இருக்கும்”.

கலை இயக்குநர் வீரமணி கணேசன்…

“இயக்குநரான பின்பு கார்த்தி இதில் இரண்டு மடங்கு உழைப்பைக் கொடுத்துள்ளார். ரெய்டு ஒரு மாஸான படம். அதற்கேற்ப அனைவரும் உழைத்துள்ளனர்”.

நடிகர் ரிஷி, “முத்தையா, விக்ரம் பிரபு சாருக்கு நன்றி. சண்டைக் காட்சிகளை முடிந்தளவு சிறப்பாக செய்துள்ளேன். எல்லோருக்கும் நன்றி”.

நடிகர் செளந்தரராஜன்…

” நாளைக்கு ஷூட்டிங் எனும் போது என்னை அதற்கு முந்தைய நாள் அழைத்தார்கள். முத்தையா அண்ணனிடம் படம் நடிக்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை.

‘குட்டி புலி’ படத்தில் நான் நடிக்க வேண்டியது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போனது. அதனால் இந்தப் படத்தின் வாய்ப்பு வந்தபோது கதை கேட்காமல் ஒத்துக்கொண்டேன்.

இயக்குநர் கார்த்தி சிறப்பாக செய்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளோடு இளைஞர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா என அனைவரும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். எல்லோருக்கும் வாழ்த்துகள்”.

I accepted Raid without asking story says Soundararaja

திருமணமாகாத 78 வயது நடிகரின் ஈமச்சடங்கை செய்த நடிகர் சங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை நடிகர் ஈட்டி கோவிந்தன் அவர்கள், வயது 78.
திருமணமாகாதவர். குடும்பம் யாரும் இங்கு இல்லை.

இவர் கடந்த 23ம் தேதி வடபழனி பஸ்டாண்ட் அருகே மயங்கி விழுந்திருக்கிறார். இவரை சிலர் கே.எம்.சி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள்.

அங்கு கடந்த 28ம் தேதி இறந்துள்ளார். அவர் இறந்த தகவல் இப்போது தான் நடிகர் சங்கத்துக்கு தெரியவந்தது.
அவரது ஈம சடங்கு செலவு மொத்தமும் நடிகர் சங்கமே ஏற்றுக் கொண்டு நடத்தியது.

வடபழனி ஏவிஎம் சுடுகாட்டில் நடந்த இறுதி சடங்கில், நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் கலந்து கொண்டு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார்.

நடிகர் சங்கமும் அன்னாரது இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளது.

Vishal and Naigar Sangam done death funeral for Actor Govindhan

லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டிய ரஜினி பேரன்.; தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்டிங்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நடிகர் தனுஷ்.

இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். தனுஷ் – ஐஸ்வர்யா ஆகிய இருவரும் 18 வருடங்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2022 ஆண்டு பிரிந்தனர்.

ஐஸ்வர்யா விட்டுப் பிரிந்தாலும் ரஜினி குடியிருக்கும் போயஸ் கார்டன் பகுதியிலேயே 100+ கோடியில் புதிய பங்களா ஒன்றை கட்டி குடியேறி இருந்தால் நடிகர் தனுஷ் யாத்ரா மற்றும் லிங்க ஆகிய இருவரும் தனுஷ் வீட்டிலும் ரஜினி வீட்டிலும் வந்து தங்கி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்

இந்த நிலையில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இவருக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை.

ஆனாலும் லைசன்ஸ் இல்லாமல் ரஜினி வீட்டில் இருந்து தனுஷ் வீட்டிற்கு போயஸ் கார்டன் வழியாக சென்றுள்ளார். தற்போது தான் அவர் பைக் ஓட்டி பயில்வதால் பவுன்சர் வரும் கூடவே சென்றுள்ளார். யாத்ராவுடன் பவுன்சர் மற்றொரு பைக்கில் சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகத் வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

லைசன்ஸ் இல்லாமல் யாத்ரா பைக் ஓட்டலாமா ? என் நெட்டிசன்கள் கேள்வி கேட்கின்றனர். ஒரு பக்கம் தனுஷ் ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini grandson Yathra dhanush riding bike without licence

நவம்பர் 24ஆம் தேதி 80s KIDS-களுக்கு BUILDUP கொடுக்கும் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

90ஸ் கிட்ஸ் 2கே கிட்ஸ் என கெத்தாக வலம் வரும் இந்த காலத்தில் 80ஸ் கிட்ஸ்களுக்கு கெத்து காட்ட ஒரு கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் டைரக்டர் கல்யாண்.

இவர் பிரபுதேவா நடித்த ‘குலேபகவாலி’, ஜோதிகா நடித்த ‘ஜாக்பாட் ய’, காஜல் அகர்வால் நடித்த ‘கோஷ்டி’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இவர் தற்போது உருவாக்கியுள்ள ’80ஸ் பில்டப்’ என்ற படத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார். இவரது தோற்றங்கள் 1980 களில் வெளியான கமல் படத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. மேலும் இதில் அவர் கமல் ரசிகராக நடிப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘நாயகியாக ராதிகா பிரீத்தி நடிக்க இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஃபேண்டஸி டிராமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். அதன்படி நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் ’80ஸ் பில்டப்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

80s Buildup படத்தின் டீசர் நவம்பர் 4ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியானது.

Santhanam starrer 80s Buildup release date

தனுஷ் பட பாணியில் விஜய்சேதுபதி படம்.; இவருக்காவது வெற்றி கிடைக்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் இயக்குனர் பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் மிஷ்கின். இவர் தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்து ‘டெவில்’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவில் தான் அடுத்து இயக்கி வரும் விஜய் சேதுபதி படம் குறித்து பேசி இருந்தார் மிஷ்கின்.

இந்த படம் முழுக்க ரயிலில் நடைபெறும் கதை என தெரிவித்து இருந்தார் மிஷ்கின்.

இதற்கு முன்பு பல படங்கள் ரயிலில் (ட்ரைனில்) எடுக்கப்பட்டிருந்தாலும் பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த படம் ‘தொடரி’.

இந்த படம் முழுவதுமே ரயிலில் எடுக்கப்பட்டது தங்களுக்கு நினைவு இருக்கலாம். ரயில் தீ பற்றி எரியும்போதே நாயகன் & நாயகி பாடுவது போல காட்சிகள் இருந்தன. இமான் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனாலும் படம் படுதோல்வியை தழுவியது.

இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு இந்த ட்ரெயின் படம் கை கொடுக்குமா என்று காத்திருப்போம்..

Mysskin and Vijaysethupathi movie news updates

ஜனனி இசையில் வடக்கனுக்காக பாடிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்டன் மகன், வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களின் வசனத்தை எழுதிய, திரைக்கதை அமைப்பில் பங்களித்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதல் முறையாக எழுதி இயக்கும் படம் `வடக்கன்’

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில், பெரு நகரம் துவங்கி குக்கிராமங்கள் வரை வட இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இன்றைய சூழலைப் பின்னணியாகக் கொண்டு நிகழும் ஒரு உணர்வு மயமான, நகைச்சுவை கலந்த, பொழுது போக்குத் திரைப்படமாக ‘வடக்கன்’ உருவாகியுள்ளது.

அழகர்சாமியின் குதிரை, மேற்குத் தொடர்ச்சி மலை, தரமணி, பேரன்பு, கர்ணன், நண்பகல் நேரத்து மயக்கம், மாமன்னன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முன்னணி ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் வடக்கன் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

புத்தகப் பதிப்புத் துறையில் புகழ் பெற்று விளங்கும், முன்னணிப் பதிப்பாளர் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வேடியப்பன் முதல் முறையாக ‘வடக்கன்’ தபடத்தை தயாரித்து வழங்குகிறார்.

கூத்துப் பட்டறை மாணவரான தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் குங்குமராஜ் கதாநாயகனாகவும், ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் கண்டுபிடிப்பான வைரமாலா கதாநாயகியாகவும், இன்னும் பல புதுமுகங்களின் சிறந்த நடிப்பில் உருவாகி இருக்கிறது ‘வடக்கன்’

கர்நாடக இசைத் துறையில் தனி இடத்தைப் பிடித்தவரும், இந்துஸ்தானி, வெஸ்டர்ன், வெஸ்டர்ன் க்ளாஸிக் முதலிய பல்வேறு இசைப் பிரிவுகளை கற்றுத் தேர்ந்தவரும், தனிப் பாடல்கள் மற்றும் இசைஆல்பங்களை வெளியிட்டு பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றவருமான S.J. ஜனனி ‘வடக்கன் ‘ திரைப்படத்துக்கு இசை அமைக்கிறார்.

படத்தில் பிரதானமாக இடம் பெறும் முக்கியமானதொரு பாடலை கவிஞர் ரமேஷ் வைத்யா அவர்கள் எழுத, “தேனிசைத் தென்றல்’ தேவா அவர்கள் பாடினார்.

பாடலைப் பாடி முடித்ததும் தேவா அவர்கள் காட்சியின் ஆன்மாவைக் கடத்தும் இசையையும், அதற்கு ஒத்திசைந்து உயிரூட்டும் பாடல் வரிகளையும் உருவாக்கிய இசையமைப்பாளர் ஜனனியையும், கவிஞர் ரமேஷ் வைத்யாவையும் மனதாரப் பாராட்டினார்.

சிறந்ததொரு திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘வடக்கன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும்

இசை வெளியீட்டுக்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்.

Music composer Deva sung for Vadakkan movie

More Articles
Follows