குற்றவாளிகளை உருவாக்கும் அதிகாரம்; *துப்பாக்கி முனை* பற்றி டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

60 வயது மாநிறம்” படத்திற்கு பிறகு விக்ரம்பிரபு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து முடித்திருக்கும் படம் “துப்பாக்கி முனை”.

இந்தத் திரைப்படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ளார்.

கதை தேர்வில் மிகுந்த கவனத்துடன் இருந்த நேரத்தில், “துப்பாக்கி முனை” படத்தின் கதையும், கதைக்களமும் வித்யாசமாக இருந்ததால் படத்தில் நடித்ததாக விக்ரம்பிரபு கூறியுள்ளார்.

“சட்டத்தை இந்த சமூகம் கேடயமாக பயன்படுத்துகிறது.. அனால் நான் வாளாக பயன்படுத்துகிறேன்.

முன்பு வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது.

தேச தந்தை காந்தியை சுட்ட துப்பாக்கி தவிர சமுதாயத்திற்காக சந்தன மரமாய் தேய்ந்து தேய்ந்து மனம் வீசி கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசாரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்பு மிக்கவை என்பது எனக் கொண்டார் ஸ்பெஷலிஸ்ட் பிர்லா போஸின் தினியாய கருத்து.

தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன..? பெற்றது என்ன..? என்பதே இந்த “துப்பாக்கி முனை”யின் கதை சுருக்கம்.

மேலும் போலீஸ் அதிகாரி பிர்லா போஸை கதாபாத்திரத்திற்காக நரைமுடி தலையுடன் 45 வயது தோற்றத்தில் விக்ரம்பிரபு சிறப்பாக நடித்திருப்பதாகவும், படத்தின் கதையும், விக்ரம் பிரபுவின் வித்தியாசமான தோற்றமும் படத்தின் பெரும்பலம் என்று இயக்குனர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் மூலமாக ஹன்சிகா மோத்வானி முதன் முறையாக விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

செண்டிமெண்ட் மற்றும் ஆக்க்ஷனுக்கு முக்கியதுவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கிளைமாக்ஸில் முக்கியமான சமூகப் பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இதுவரை யாரும் படம் பிடிக்கதாக ராமேஸ்வரம், தனுஷ் கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிச்சயம் இது ரசிகர்களுக்கு ஒரு விசேஷ ட்ரீட்டாக அமையும் என படத்தின் ஒளிப்பதிவாளர் கூறியுள்ளார்.

இதுதவிர மும்பை, டெல்லி, மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தொடர் படப்பிடிப்பு நடத்தி 40 நாட்களில் மொத படப்பிடிப்பினையும் முடித்துள்ளனர்.

“துப்பாக்கி முனை”யின் முக்கிய கதாபாத்திரங்களில் வேல. ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், ‘மிர்ச்சி’ ஷா, மாரிமுத்து, தீனா, பரத்ரெட்டி, கல்யாணி நட்ராஜ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை ரசமாதி’யும் இசையை மாபெரும் இசை மேதை எல்.வைத்யனாதனின் மகன்களான எல்.வி.முத்துகணேஷ்’ம், படத்தொகுப்பினை புவன் ஸ்ரீனிவாசனும் கையாள்கிறார்கள்.

படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் கிரீஸ் நாட்டில் உள்ள மெக்கடோனியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

“கபாலி” “வி.ஐ.பி 2″படங்களுக்கு பிறகு “துப்பாக்கி முனை” படத்தின் இசைக்கோர்ப்பு அங்கு நடைபெறுவது குறிப்படத்தக்கது..

இந்தியாவில் மிகச்சிறந்த காதசிரியர்களில் ஒருவரான “அன்னக்கிளி”ஆர்.செல்வராஜின் மகனும், மணிரத்னத்தின் இணை இயக்குனரான தினேஷ் செல்வராஜ் இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவரும் இந்த திரைப்படத்தினை வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

Director Dinesh Selvaraj talks about Vikram Prabhu starring Thuppakki Munai

 

Exclusive உறியடி2 படத்தில் சூர்யா; விஜயகுமார் நடித்து இயக்குகிறார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016ஆம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் உறியடி.

இப்படத்தை தயாரித்து இயக்கி நாயகனாகவும் நடித்திருந்தார் விஜயகுமார்.

தன் முதல் படத்திலேயே அனைத்தையும் செய்து இவரே இப்படத்தின் பின்னணி இசையையும் மேற்கொண்டு இருந்தார்.

தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு இதன் 2ஆம் பாகத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.

இந்த முறை இப்படத்தை தன் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரிக்கிறார்.

இதில் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த விஷ்மயா என்பவர் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

சுதாகர் என்பவர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

தென்காசியில் இதன் சூட்டிங்கை நாளை தொடங்குகின்றனர்.

Suriya will produce Uriyadi 2 and it will be directed by Vijayakumar

சசிகுமார்-கீர்த்தி சுரேஷ் இணையும் *கொம்பு வச்ச சிங்கம்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்கிறார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது முதன்முறையாக நடிகர் சசிகுமாருடன் இணைய இருக்கிறார்.

இப்படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவுள்ளார்.

ஏற்கெனவே இவர் சசிகுமாரை வைத்து ‘சுந்தர பாண்டியன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் 2012-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.

அதன்பின்னர் இவர் இயக்கிய ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்கள் சரியாக போகவில்லை.

தற்போது இவர்கள் இணையும் புதுப்படத்திற்கு ‘கொம்பு வச்ச சிங்கம்’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இதில் பிக் பாஸ் ஆரவ், சூரி, யோகிபாபு ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

விரைவில் இதன் சூட்டிங் காரைக்குடி மற்றும் பொள்ளாச்சிப் பகுதிகளில் நடைபெறவுள்ளது.

Keerthy Suresh to romance with Sasikumar in Kombu Vacha Singam

Exclusive மீண்டும் RD ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன்; மித்ரன் இயக்குகிறார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படம் கடந்த செப். 13ல் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது.

தற்போது ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் சிவாவின் ஆஸ்தான தயாரிப்பாளர் 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர். டி. ராஜா தயாரிக்கிறார்.

இந்நிலையில் சிவாவின் அடுத்த படத்தையும் சீமராஜா தயாரிப்பாளரே தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தை இரும்புத்திரை டைரக்டர் பி.எஸ். மித்ரன் இயக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இது 15வது படமாக உருவாகவுள்ளது.

இதுவும் இரும்புத்திரை போல் பக்கா விறுவிறுப்பான சோஷியல் மெசேஜ் உள்ள படமாக உருவாகவுள்ளதாம்.

Sivakarthikeyan 15th film will be directed by Mithran and produced by RD Raja

Breaking சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம்; செப். 24ல் சிங்கிள் ட்ராக் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் இசையை அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இன்று முதல் சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

அதன்படி இன்று சற்றுமுன் அதற்கான தகவலை வெளியிட்டுள்ளனர்.

செப்டம்பர் 24ஆம் தேதி படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலை அன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.

Sarkar single track will be released on 24th Sept 6pm

*நோட்டா* படத்திற்கு நோட்டு தரல; ஞானவேல் ராஜா மீது புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து தமிழிலும் தெலுங்கிலும் வெளியாக உள்ள படம் “நோட்டா”.

இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்கள் ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு வசனத்தை தாம் எழுதியதாகவும், ஆனால் அண்மையில் வெளியான டீசரில் வசனம் என்ற இடத்தில் வேறு ஒருவரின் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும், வசனகர்த்தா ஷசாங் வெண்ணிலகண்டி என்பவர் புகார் கூறியுள்ளார்.

மேலும் ஞானவேல் ராஜா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி தனக்கு சேர வேண்டிய பணத்தையும் கொடுக்கவில்லை என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

Dialogue writer files complaint against Nota producer Gnanavel Raja

More Articles
Follows