‘பெப்சி’ சிவா மீது போலீஸில் பி.சி. ஸ்ரீராம் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் கமிஷனர் அலுவலகத்தில் பெப்சி தேர்தல் பிரச்சினை தொடர்பாக பெப்சி சிவா மீது புகார் கொடுத்தார்.

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (SICA) தலைவர் பிசி ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள், சங்கத்தின் முன்னாள் நிர்வாகத்தினர் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் ஊழல் முறைகேடு புகார் அளித்தனர்.

அதில் சொல்லப்பட்டிருந்த புகார்கள்…

1. 2008 முதல் 2014 வரைக்குமான கணக்குகளை சரியாக ஒப்படைக்காதது.

2. மலேசியாவில் நடந்த 2015 ஆம் ஆண்டுக்கான SICA விருது நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட கணக்குகளில், பல லட்சத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது.

3. அது சம்பந்தமாக பலமுறை, கணக்குகளை கேட்டும், தராமல் இருந்தது.

4. இதனால் விருது நிகழ்ச்சியை ஒளிப்பரப்பு உரிமம் பெற்ற சன் TV-வின TDS பணமான 37.5 லட்சத்தை திரும்ப பெற முடியாத நிலை இருக்கிறது.

5. சாலிகிராமத்தில் நில மதிப்புக்கு மீறி 1.25 கோடி ரூபாயை முன் பணமாக செலுத்தி, மேலும் 80 லட்சம் ரூபாய் அந்த நிலத்திற்கு தரவேண்டுமென்று ஒப்பந்தம் செய்து, SICA சங்கத்திற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பையும், பாரம்பரியமிக்க இச்சங்கத்திற்கு அவப்பெயரை திரு.G.சிவா (முன்னால் பொது செயலாளர்) அவர்கள் ஏற்படுத்தி விட்டார்.

6. 8 வருடமாக முறையாக வருமான வரி செலுத்தாதனால், 80G பெற முடியாவில்லை, அதனால், சங்கத்திற்கு வரவேண்டிய நன்கொடைகள் பெற முடியாத நிலை இருக்கிறது.

அதனால் மூத்த உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய உதவித் தொகை மற்றும் உறுப்பினர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியாமல் இருக்கிறது.

இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்குக்கு வயது 86.

அவரது மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், விஜயகாந்த், தனுஷ் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

தனது இளம் வயதில் அதாவது 6 வயதிலேயே தனது இசைப்பயணத்தை துவங்கியவர் பாலமுரளி கிருஷ்ணா.

அவரைப்பற்றி சில தகவல்கள் இதோ…

திருவிளையாடல் படத்தில் வரும் ‘ஒரு நாள் போதுமா’ என்ற பாடல் இவரை பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்தது.

சங்கீத கலாநிதி உட்பட பல விருதுகளை வென்றவர் இவர்.

25,000க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியவர்.

சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக இரு முறை தேசிய விருது பெற்றவர்

சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, செவாலியே உள்ளிட்ட பட்டங்களை பெற்றவர்.

400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் . 1967ல் பக்த பிரகலாதா படத்தில் நாரதராக நடித்திருந்தார்.

இசைத் துறையில் இவர் ஆற்றிய பெரும் பணிகளுக்காக மத்திய அரசு பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ வழங்கி கௌரவித்துள்ளது.

எட்டு வயதில் இவர் விஜயவாடாவில் நடந்த தியாகராஜ ஆராதனையில் பாடிய விதத்தை கண்டு ‘பால’ என்ற அடைமொழி இவருக்கு வழங்கப்பட்டது.

‘கருப்பு பணமும் கமலின் வெள்ளை உள்ளமும்…’ – ஆஸ்கர் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல கோடிகளில் பண புழங்கும் துறைகளில் மிக முக்கியமான துறை சினிமா துறை.

எனவே இங்கு கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் நிறைய விளையாட வாய்ப்புள்ளது.

இதனால் அடிக்கடி வருமான வரித்துறை ரெய்டுகள் இங்கு நடப்பதுண்டு.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் தன் சமீபத்திய பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் பற்றிய கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில்… ”எந்தவிதமான வரவாக இருந்தாலும் கமல்சார் முறையாக வங்கி கணக்குப்படியே காசோலையாக பெறுவார்.

தனது சம்பளத்தை கூட தொகையாக பெறாமல், காசோலையாக பெறுவது அவரது வழக்கம்.

சமீபத்தில் கூட ‘விஸ்வரூபம் -2’ படத்துக்காக பலகோடி ரூபாய் பணத்தை அவருக்கு வெள்ளைப் பணமாகவே கொடுத்தேன்.

தன்னுடை அலுவலக சிறிய செலவுகளை கூட முறையாக பைல்கள் போட்டு வைத்திருப்பார்.

கமலின் அண்ணன் சந்திரஹாசன் அவற்றை கவனமாக பார்த்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

‘ரெமோ’ வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆயுத பூஜை தினத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் ரிலீஸ் ஆனது.

ரசிகர்களின் ஆதரவுடன் இப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.

மேலும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பை வருகிற 25ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இதற்கும் அங்கு நல்ல வரவேற்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரெமோ தமிழ் படத்தின் வெற்றியை வேலூரில் உள்ள கருணை இல்லத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

கருணை இல்லத்தில் உள்ளவர்களுக்கு அன்னதானம். பரிசுகள் மற்றும் கல்வி பாடப்புத்தகங்களை வழங்கியுள்ளனர்.

ஒரு படத்தின் வெற்றியை பலருக்கு பயனுள்ளதாக கொண்டாடிய இந்த ரசிகர்களை நிச்சயம் பாராட்டலாம்.

டிசம்பரில் டபுள் ட்ரீட் தரும் பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன்-விஜய் கூட்டணியில் உருவாகி வரும் பைரவா படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை டிசம்பரில் வெளியிட இருப்பதாக தெரிகிறது.

ஆனால், டிசம்பர் முதல் வாரத்தில் பாடல்களை மட்டும் முதலில் வெளியிட்டுவிட்டு பின்பு, சில நாட்கள் கழித்து அதாவது கிறிஸ்துமஸ் தினத்தில் ட்ரைலரை வெளியிட ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில், டிசம்பரில் இரண்டு விருந்தை பைரவா  தனித்தனியாக தருவார் என எதிர்பார்க்கலாம்.

மீண்டும் தனுஷுடன் டூயட் பாடும் அமலாபால்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்து பெரும் வெற்றி பெற்ற வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

இப்படத்தை தனுஷ் நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்க, அனிருத் மற்றும் ஷான் ரோல்டன் இசையமைக்க உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த அமலாபால் மீண்டும் தனுஷ் உடன் டூயட் பாடவுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் தனுஷின் தந்தை கேரக்டரில் சமுத்திரக்கனியும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இதன் சூட்டிங் தொடங்கப்பட உள்ளதால், கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

 

More Articles
Follows