விஜய் பற்றி பாப்ரி என்ன சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கும் படத்தில் விஜய்யுடன் கீர்த்தி, அபர்ணா மற்றும் பாப்ரி கோஷ் உள்ளிட்ட மூன்று நாயகிகள் நடித்து வருவது பற்றிய செய்தியை நாம் பார்த்தோம்.

இந்நிலையில் விஜய்யுடன் நடித்து வருவது பற்றி பாப்ரி கோஷ் சமீபத்தில் தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில்…

‘சூட்டிங்கில் சற்று ஓய்வு நேரம் கிடைத்தால், ஜஸ்ட் தரையில ஒரு பாய் போட்டு அங்கேதான் ஓய்வு எடுப்பார்.

ஒரு மிகப்பெரிய நடிகரான விஜய் சாரின் அந்த எளிமையை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

‘றெக்க’ கட்டி பறந்த விஜய்சேதுபதி-லட்சுமிமேனன் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதியின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக உள்ளதாலோ என்னவோ அவரது படப்பிடிப்பை இந்தியாவிலேயே நடத்தினர்.

சொல்லப்போனால் பெரும்பாலும் தமிழகத்திலேயே நடத்தினர்.

தற்போதுதான் ஒரு சினிமா படப்பிடிப்புக்காக முதன்முறையாக வெளிநாடு சென்றுள்ளார்.

ரத்னசிவா இயக்கும் றெக்க படத்திற்காக பாங்காங் சென்றுள்ளார்.

இவருடன் நாயகி லட்சுமி மேனன் உள்ளிட்ட படக்குழுவினரும் சென்றுள்ளனர்.

தற்போது இவர்களின் இரண்டு டூயட் பாடல்கள் அங்கே படமாக்கப்பட்டு வருகிறதாம்.

தனுஷுடன் மோதும் ‘கபாலி’ வில்லன் டோனி லீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ்-கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி படம் செப்டம்பர் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நாளில் மற்ற தமிழ் படங்கள் வெளியாகிறதா? என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஜாக்கிசான் நடித்த ஸ்கிப் ட்ரேஸ் (Skip Trace) என்ற படத்தின் தமிழ் பதிப்பு வெளியாகவுள்ளது.

இதில் கபாலி படத்தில் ரஜினியை மிரட்டும் சீன வில்லன் டோனி லீயாக நடித்த வின்ஸ்டன் சவோ நடித்துள்ளார்.

இதிலும் ஜாக்கிசானுக்கு வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு தமிழில் இரு கில்லாடிகள் என பெயரிட்டுள்ளனர்.

பர்த்டே பப்ளி ஹன்சிகா… இவர் மனசு யாருக்கு வரும்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஹன்சிகா தனது 25வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஆதவரற்ற குழந்தைகளை தத்தெடுத்து வருகிறார் இவர்.

திருமணம் ஆகாமலே ஒரு தாயுள்ளதோடு கிட்டதட்ட 27க்கும் மேற்பட்ட குழந்தைகளை வளர்ந்து வருகிறார்.

மேலும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சிகிச்சைக்கும் உதவியுள்ளார்.

விரைவில் மும்பையில், ஒரு இல்லம் அமைத்து, அதில் ஆதரவற்றோருக்கு பாதுகாப்பு அளிக்க இருக்கிறார்.

இந்நிலையில், இன்று தன் ட்விட்டர் பக்கத்தில்….

“25 வயதாகும் முன்னர் என் அம்மா என் தலையை வாரி விடுகிறார்” என கூறி அவர் அம்மா தலை வாரும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

வாழ்த்துக்கள் ஹன்சிகா

சிம்பு-தனுஷ் படங்களின் ரிலீஸ் தேதி உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த தொடரி படத்தின் ரிலீஸ் தேதி பல்வேறு காரணங்களால் தள்ளிக் கொண்டே போனது.

இறுதியாக செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதாவது 09/09/2016 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

புன்னகை இளவரசி ஸ்நேகாவின் நெக்ஸ்ட் மூவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய ரசிகர்களை த(தே)ன் அழகான சிரிப்பால் கவர்ந்தவர் புன்னகை இளவரசி ஸ்னேகா.

நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். இவர்களுக்கு ஓர் அழகான குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் தற்போது தன் அடுத்த இலக்கை சின்னத்திரையை நோக்கி நகர்த்தியிருக்கிறார்.

விரைவில் இந்த அழகு புயல் ஒரு பிரபலமான டிவி சேனல் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக வரப்போகிறாராம்.

வாழ்த்துக்கள் ஸ்னேகா…

More Articles
Follows