சமூக பிரச்சினைகளை பார்த்தால் கோபம் வருது: கடுப்பாகும் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படம் வருகிற நவம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படம் பற்றி நடிகர் கார்த்தி கூறியதாவது…

நம்ம எல்லாரும் போலீசை சூப்பர்மேன் போன்றும், வேற்று கிரகத்தில் இருந்து இறங்கிவந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம்.

நமது வீட்டில் அண்ணனோ, தம்பியோ அல்லது நண்பர்களோ போலீசாக இருப்பார்கள். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

போலீஸ் அதிகார்கள் எங்கிருந்து வருகிறார்கள். என்ன மாதிரியான குடும்ப சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள் என்ற விஷயம் தான் அவர்களை ஒரு வகையான போலீஸ் அதிகாரியாக மாற்றுகிறது. போலீஸ் டிரைனிங்கில் அவர்கள் போலீசாக மாற மட்டும் தான் பயிற்சி அளிக்கிப்படுகிறது.

அவர்கள் எப்படிபட்ட போலீசாக இருக்கிறார்கள் என்பது அவர்களுடைய சூழ்நிலை தான் தீர்மானிக்கிறது. நான் தீரன் படத்துக்காக சந்தித்த போலீஸ் அதிகாரி ஒருவர் முதலில் கல்லூரியில் பேராசிரியராக ஆக வேண்டும் என்று தான் முயற்சி செய்துக்கொண்டிருந்திருக்கிறார்.

ஆனால் அவர்கள் சூழ்நிலையின் காரணமாக போலீஸ் அதிகாரியாக பணியாற்ற துவங்கியுள்ளார்.

முதலில் குற்றத்தை கண்டால் அவருக்கு கோபம் தான் வரும் , பதவியேற்றதும் அவர் கண் முன் நடக்கும் குற்றங்களை தட்டி கேட்கவும் முடிந்துள்ளது.

இதனாலேயே போலீஸ் வேலையை அதிகமாக நேசித்து குற்றங்கள் நடப்பதை கட்டுபடுத்தியுள்ளார்.

தீரன்-னில் முற்றிலும் உண்மையான ஒரு போலீஸ் அதிகாரியை நீங்கள் பார்க்கலாம். சாதாரணமாக போலீஸ் அதிகாரி ஒருவர் கேஸ் பைலை படிக்கும் போது எப்படி ரியாகட் செய்வாரோ அதே அளவு தான் தீரனும் இந்த படத்தில் ரீயாகட் செய்வார்.

இதை நான் சிறுத்தை படத்திற்காக ஒரு போலீஸ் அதிகாரியை சந்தித்தபோது சாதாரணமாக எதையும் எதிர்க்கொள்ளும் அவருடைய தன்மை எனக்கு பிடித்திருந்தது.

அதை தான் பல காட்சிகளில் தீரன்-னில் நான் கடைபிடித்துள்ளேன். இயக்குநருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. தீரன்-னில் நீங்கள் வேறு ஒரு கோணத்தில் போலீஸ் அதிகாரிகளை பார்ப்பீர்கள்.

போலீஸ் அதிகாரிகளுக்கு தடங்கல் என்பது கிரிமினல் பக்கத்தில் இருந்து மட்டும் வராது. அதிகாரிகளிடமிருந்து , சமூகத்திடமிருந்து கூட வரும். இதையெல்லாம் தாண்டி தான் ஒவ்வொரு கேஸையும் அதிகாரிகள் கையாள வேண்டியுள்ளது.

இதை சொல்லும் போது சாதரணமாக இருக்கும் திரையில் பார்க்கும் போது உங்கள் வியக்கவைக்கும். இது 1995-2005 வரைக்கும் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள கதையாகும்.

அதை ஒரு போலீஸ் அதிகாரியின் வழ்க்கையின் மூலம் கூறியுள்ளோம். நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்களை மட்டும் தான் மொத்த காவல் துறை நினைக்கிறோம். அது தவறு.

நாம் அனைவரும் 8 மணி நேரம் வேலை செய்ய சம்பளம் வாங்குகிறோம். ஆனால் போலீஸ் அதிகாரிகள் ஒரு நாளைக்கு 22மணி நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது.

நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு மொத்த காவல்துறையும் இப்படி தான் என்று கூறுவது தவறு. மற்ற மாநில போலீஸ் அதிகாரிகளை விட தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரிகள் மேல் அனைவருக்கும் பயம் உண்டு.

போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையாக தீரன் கதை நாம் சொல்கிறோம். தீரன்-னின் வாழ்க்கையை மாற்றிய ஒரு கேஸ் தான் இந்த படத்தின் கதை. நான் நடித்த கதாபத்திரங்களிலேயே எனக்கு “ நான் மகான் அல்ல “ படத்தில் நான் செய்த கதாபாத்திரம் தான் மிகவும் பிடிக்கும்.

என்னென்றால் நான் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ அப்படியே அந்த படத்தில் இருப்பேன். தீரன் வீட்டில் இருக்கும் போது “ நான் மகான் அல்ல “ படத்தில் வருவது போல ஒரு பையனாக இருப்பான்.

போலீசாக ஸ்டேஷனில் இருக்கும் போது வேறு ஒரு விதமாக இருப்பான். மற்ற படங்களில் வருவது போல் சத்தமாக பேசுவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த படத்தில் இருக்க நான் முயற்சி செய்துள்ளேன்.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக என்னை காண்பித்துக்கொள்ள பிட்னசையும், நான் பார்த்த போலீஸ் அதிகாரிகளின் குனாதீசியங்களை , உடல்மொழியையும் பயன்படுத்தியுள்ளோம்.

இப்போதுள்ள இளம் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் மீசை இல்லாமல் தான் இருக்கிறார்கள். விட்டால் அவர்கள் எல்லாம் சினிமாவில் டூயட்யே பாடலாம். நிஜமாக இன்றைய போலீஸ் அதிகாரிகளின் தோற்றம் எப்படி இருக்குமோ அப்படி தான் என்னுடைய தூரமும் இந்த படத்தில் இருக்கும்.

ராஜஸ்தான் மாதிரியான ஒரு flat land-ல் நாம் ஒளிந்திருந்து எதிரிகளை பிடிக்க முடியாது. மண்னுக்குள் மறைந்து தான் பிடிக்க முடியும் அதனால் தான் ட்ரைலரில் அப்படி ஒரு காட்சி இடம்பெற்றது.

அது கிராபிக்ஸ் அல்ல நிஜம் தான். நம் சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகளை காணும் போது எனக்கு கோபம் வரதான் செய்கிறது. சமீபத்தில் கந்து வட்டி பிரச்சனையால் தீ குளித்து பெண் குழந்தையோடு இறந்த அந்த சம்பவத்தை பார்த்த போது கோபம் வந்தது.

இதை போன்ற சம்பவத்தை பார்க்கும் போது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று தோணும் என்றார் கார்த்தி.

Karthi speaks about Social issues and his reaction towards it

லவ் செட்டாகல: மணமகள் தேவை விளம்பரம் கொடுக்கும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் உள்ள பிரம்மச்சாரி ஹீரோக்களில் ஆர்யாவும் ஒருவர்.

அவர் தன் உடம்பை எப்போதும் பிட்டாக வைத்திருப்பவர்.

அதிகாலையில் பல கிலோமீட்டர் சைக்கிளிங் செய்யும் பழக்கமுடையவர் இவர்.

இந்நிலையில் ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவருடன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தன் ப்ரெண்ட் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அந்த ப்ரெண்ட்… “காதலிக்கும் பெண்களையே திருமணம் செய்து கொள்ளலாமே என்று கேட்டதற்கு… “லவ் பண்ணித்தான் பார்த்தேன். லவ் பண்ற பொண்ணுங்க எதுவும் செட்டாகலயே நான் என்ன வச்சிட்டா வஞ்சனை செய்றேன் என ஆர்யா பதிலளிக்கிறார்.

அதன் பின்னர் அடுத்த வருடம் 2018 ஏப்ரல் மாதம் பேப்பரில் மணமகள் தேவை என விளம்பரம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்” என ஆர்யா பதிலளித்துள்ளார்.

Actor Arya reveal about his marriage plans on next year 2018

https://www.youtube.com/watch?v=5ZNk0DqTRYg

நெஞ்சில் துணிவிருந்தால் பட காட்சிகளை வெட்டிவிட்டு நாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ நெஞ்சில் துணிவிருந்தால்” திரை படத்தின் எடிடட் வெர்சன் இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது.

நெஞ்சில் துணிவிருந்தால் நவம்பர் 10 கடந்த வெள்ளி கிழமை அன்று வெளியாகி திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விமர்சகர்கள், மக்களின் கருத்து மற்றும் நலம் விரும்பிகளின் கருத்துகளை கருத்தில் கொண்டு நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்பட குழு கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளது.

இது பற்றி இயக்குநர் பேசியது…

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் இருபது நிமிடத்தை நாங்கள் நீக்கி உள்ளோம்.

கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது.

படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. நெஞ்சில் துணிவிருந்தால் திரை படத்தின் புதிய வெர்சன் இன்று நன்பகல் 12 மணி முதல் அனைத்து திரை அரங்குகளிலும் திரையிடப்பட்டு உள்ளது. நாங்கள் 15 நாட்கள் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம்.

மெஹ்ரீன் நடித்த காட்சிகளை சூழ்நிலை காரணமாக நீக்கினோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை D.இமான்.

New trimmed version of Nenjil Thunivirundhal in theatres now

6 அத்தியாயம் படம் தமிழ் சினிமாவின் புதிய முயற்சி: பாரதிராஜா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘6 அத்தியாயம்’ திரைப்படம் சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இந்தப்படத்தை பார்த்துவிட்டு பாரதிராஜா பேசியதாவது..

“பொதுவாக திரைப்படங்களை பார்க்க அழைக்கிறவர்கள் படம் முடிந்து செல்லும்போது என் முன் மைக்கை நீட்டிவிடுவார்கள்.

சம்பிரதாயத்திற்காக ஏதோ ஒன்றை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் பெரும்பாலும் நழுவிவிடுவேன்.

ஆனால் இந்த ‘6 அத்தியாயம்’ படத்தை பார்த்து முடித்ததுமே, நானே இந்தப்படத்தை பற்றி பேசிவிட்டுத்தான் போகவேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.

இந்தப்படம் திரையிடப்பட்டு முதல் அத்தியாயம் முடிந்ததுமே, எங்கேயோ ஒரு குரூப் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறதே என நினைத்தேன்.

இரண்டாவது, மூன்றாவது எபிசோடுகளில் அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசி அத்தியாயத்தில் அப்படியே மிரண்டு விட்டேன்.

பொதுவாக பெங்காலிகள் உட்பட வடக்கில் உள்ள படைப்பாளிகளை நான் பெரிதும் பாராட்டுவேன்.

காரணம் அவர்கள் சின்ன படமாக இருந்தாலும், பெரிய படமாக இருந்தாலும் சிந்திக்கும் விதத்தில் வித்தியாசம் காட்டுவார்கள்.

சமீபத்தில் வந்த நம் தமிழ்ப்படங்களில் பல நம்மை கெடுத்து குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கிற இந்த தருணத்தில், இந்த ‘6 அத்தியாயம்’ படம் பார்த்து நான் உண்மையிலேயே மிரண்டுதான் போனேன்.

எனக்கும் இதுபோன்ற சிந்தனைகள் இருந்ததுண்டு. ஆனால் அதை ஒருபோதும் நான் செயல்படுத்த முயன்றதில்லை. கச்சிதமான சிந்தனை என்பது ஒரு சினிமாவுக்கு செய்யக்கூடிய தர்மம்.

பிரெஞ்ச், ஈரானிய, ஜப்பானிய, சைனீஸ் படங்களையெல்லாம் பார்த்துவிட்டு பாராட்டுகிறோம். தமிழ்நாட்டுல இவ்வளவு பிரமாதமான கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்த்ததுமே, யார் இவர்கள்.. இவர்களை பாராட்டியே ஆகவேண்டும் என்று தான் நானே மைக் பிடித்தேன்.

இந்த யோசனையே புதிதாக உள்ளது. தமிழ்சினிமாவிற்கு இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை. 6 அத்தியாயங்களை எப்படி ஒன்று சேர்ப்பது..?

ஒரு அத்தியாயம் முடிந்ததுமே எழுந்து போகக்கூடிய அபாயம் இருக்கிறது. ஆனால் இந்தப்படத்தில் முதல் அத்தியாயம் முடியும்போதே இரண்டாம் அத்தியாயத்தை பார்க்கும் விதமாக நம்மை இழுத்து பிடித்து அமர வைத்து விடும் யுத்தியை இதில் கையாண்டிருக்கிறார்கள்.

இப்படி ஆறு அத்தியாயங்களுக்கும் நம்மை கட்டிப்போட்டு கடைசியில் அனைத்திற்கும் சேர்த்து 6-வது அத்தியாயம் முடிவில் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு முடிவு சொல்லியிருக்கிறார்கள்.

இது மிகச்சிறந்த யோசனை. மிகப்பெரிய சாதனையும் கூட. இதுபோல நல்ல கலைஞர்கள் வந்தார்கள் என்றால் தமிழ் திரையுலகை பற்றி உலகம் முழுதும் பேசுவார்கள்.

குறும்படத்திலேயே இவ்வளவு கெட்டிக்காரத்தனம் காட்டினால், அதை ஒரு முழுநீள திரைப்படத்திலும் நிச்சயம் கொண்டுவரமுடியும்.. உலகளவில் நம் படங்களை கொண்டுபோய் சேர்க்கமுடியும் என்கிற நம்பிக்கையை இந்த திரைப்படம் கொடுத்திருக்கிறது. 6 அத்தியாயம் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என பாராட்டி பேசினார் பாரதிராஜா.

‘6’ அத்தியாயம்’ பற்றி…

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் ‘6 அத்தியாயம்’. பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள்.

ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது.

பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார்.

இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் மீதி நான்கு அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத், பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர். தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

படத்தின் ப்ரோமோ சாங்கை ‘விக்ரம் வேதா’புகழ் சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். இந்தப்பாடலை விஜய் டிவி புகழ் மா.கா.ப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

படத்திற்கான கேம் ஆப் “RunForUrLife” எனும் பெயரில் கூகிள் பிலே ஸ்டோர் மற்றும் ஐடியூன்ஸ் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் படக்குழு விரைவில் வெளியிடயிருக்கிறது.

‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

Director Bharathiraja praising 6 Athiyayam Movie

சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை; பிரகாஷ்ராஜுக்கு எஸ்வி.சேகர் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனை போல் பிரகாஷ்ராஜ் அவர்களும் அண்மைக்காலமாக அரசியல் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

கர்நாடகாவில் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை சம்பவம் தொடர்பாக தனது கண்டத்தை தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் மற்றொரு பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி தன்னை விட சிறந்த நடிகர் என பேசியிருந்தார்.

இதனையடுத்து ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகை பற்றி கேட்டபோது… நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்கு பேரழிவு என தன் கருத்தை பகிரங்கமாக வெளியிட்டார்.

இந்நிலையில் பிரகாஷ்ராஜிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்வி சேகர் தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ்ராஜின் செய்தி வெளியான நாளிழை பதிவிட்டு அதற்கு சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SVe Shekar reaction to Prakashraj about political speech

மெர்சலை ஓட்டிய தியேட்டருக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருப்பூர் முருங்கபாளையத்தில் சரண் சினிமா தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரின் உரிமத்தை புதுப்பிக்குமாறு வருவாய்த்துறை சார்பில் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் உரிமத்தை அவர்கள் உரிய காலத்திற்குள் புதுப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திரைப்படம் திரையிடக்கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

எனவே அந்த சினிமா தியேட்டரில் படம் திரையிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதி இல்லாமலும், உரிமம் புதுப்பிக்கப்படாமலும் தியேட்டரில் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரையிடப்பட்டது.

இதனை அறிந்த அதிகாரிகள் சரண் சினிமா தியேட்டருக்கு சென்று ‘சீல்’ வைத்தனர்.

இதையடுத்து தியேட்டர் மூடப்பட்டு சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

More Articles
Follows