30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் அமலா..; ஷர்வானந்த் & ரீத்து வர்மா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜோக்கர், கைதி, அருவி, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட தரமான படங்களை தயாரித்த நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

இந்நிறுவனம் தனது 18வது தயாரிப்பின் படப்பிடிப்புப் பணிகளை மீண்டும் துவங்கியிருக்கிறது.

இப்படத்தை ஸ்ரீகார்த்திக் எனும் அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.

இதில் ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் ஷர்வானந்த் உடன் ரீத்து வர்மா, அமலா அகினோனி, சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட இப்பட இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.

இப்படத்தின் மூலம் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்கிறார் நடிகை அமலா.

Actress Amala returns to Tamil after 30 years

BREAKING விக்ரம் சிம்பு தனுஷ் படங்களின் தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான படம் திருடா திருடி.

இதில் இவருக்கு சாயா சிங் ஜோடியாக நடித்திருந்தார். இப்டத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் எஸ் கே கிருஷ்ணகாந்த்.

விக்ரம் நடித்த கிங், தனுஷ் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சிம்பு நடித்த மன்மதன் & விவேக் ஹீரோவாக டித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களை தயாரித்தவர் எஸ் கே கிருஷ்ணகாந்த்.

இவர் லட்சுமி மூவி மேக்கர் நிறுவனத்தில் பல வெற்றிப்படங்களில் மேனேஜராக பணியாற்றியவர்.

படத்தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் மரணமடைந்தார்.

இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

Vikram Dhanush Simbu movie Producer Krishnakanth passed away

Mr. Krishna Kanth residence address :
Plot No . 163- A, Door No. 7
MGR Street, Kaveri Rangan Nagar, Saligramam, next street to shobha kalyana mandabam

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அம்மா கை காட்டியவரா? சசிகலா கை காட்டியவரா? கருத்து கணிப்பு முடிவுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு வருகிற அக்.7ம் தேதி ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்து சற்றே சலசலப்பை ஓயச்செய்தார்.

ஆனால் மறுநாளே ஓபிஎஸ் இல்லத்தில் கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் முக்கிய தலைவர்கள் சிலர் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல் இபிஎஸ்-ஐயும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்புகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என இருதரப்பில் இருந்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டாலும், தமிழக முதல்வர் நடத்திய மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் புறக்கணித்தது இவர்களுக்கிடையே மீண்டும் புகைச்சலை எழுப்பியுள்ளது.

இதில் அதிமுக முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு ஓபிஎஸ்-க்கு அதிகளவில் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிமுக தலைவர் யார் என்ற கேள்விக்கும் ஓபிஎஸ்-க்கு 75 சதவீத ஆதரவு இருந்தது.

இதுதவிர பொதுமக்களும் தங்களது பங்கிற்கு தனித்தனியாக அதிமுக வேட்பாளராக யார் வரவேண்டும்? என்ற கேள்வியை பதிவிட்டு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர்.

அனைத்து கருத்துக் கணிப்புகளிலுமே ஓபிஎஸ் என இருதரப்பில் இருந்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டாலும், தமிழக முதல்வர் நடத்திய மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் புறக்கணித்தது இவர்களுக்கிடையே மீண்டும் புகைச்சலை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மண் அறக்கட்டளை என்ற அமைப்பும், சில தன்னார்வ அமைப்புகளும் இணைந்து “சட்டமன்ற தேர்தல் 2021” என்ற தலைப்பில் 10 கேள்விகளை உள்ளடக்கி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு 3 ஆயிரம் மாதிரிகள் வீதம் சுமார் 7 லட்சம் மாதிரிகளை மக்கள் மத்தியில் கருத்துக் கணிப்பு நடத்தி சேகரித்தனர். இதில் அதிமுக முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு ஓபிஎஸ்-க்கு அதிகளவில் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிமுக தலைவர் யார் என்ற கேள்விக்கும் ஓபிஎஸ்-க்கு 75 சதவீத ஆதரவு இருந்தது.

இந்நிலையில் அக்.7ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளதால், தமிழக மக்களிடம் இதனை அறிந்து கொள்வதற்கு பேரார்வம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்போது பல்வேறு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் சமூக வலைதளங்களில் இது தொடர்பான கருத்துக் கணிப்பை நடத்தி வருகின்றனர்.

ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக்கணிப்பில் 66 சதவீதம் ஓபிஎஸ்-க்கும், 25 சதவீதம் இபிஎஸ்-க்கும், மற்றவர்களுக்கு 9 சதவீதம் என வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

சாணக்யா சேனல் சார்பில் டிவிட்டரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 643 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் ஓபிஎஸ்-க்கு 63 சதவீதமும், இபிஎஸ்-க்கு 37 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

சவுக்கு சங்கர் இணையதளம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மொத்தம் 36 ஆயிரத்து 761 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் ஓபிஎஸ்-க்கு 38.5 சதவீதமும், இபிஎஸ்-க்கு 22.6 சதவீதமும்.

சுமந்த் சி.ராமனுக்கு 29.8 சதவீதமும், டிடிவி தினகரனுக்கு 9.1 சதவீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதே போல் இந்தியன் 7 என்ற இணைதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் ஓபிஎஸ்-க்கு 59 சதவீதமும், இபிஎஸ்-க்கு 41 சதவீத வாக்குகளையும் ஆதரவாக பதிவு செய்திருந்தனர்.

இதுதவிர பொதுமக்களும் தங்களது பங்கிற்கு தனித்தனியாக அதிமுக வேட்பாளராக யார் வரவேண்டும்? என்ற கேள்வியை பதிவிட்டு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். அனைத்து கருத்துக் கணிப்புகளிலுமே ஓபிஎஸ்-க்கு ஆதரவு நிலை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளன. கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக வெளிவந்து கொண்டிருப்பதால் இபிஎஸ் தரப்பினர் மௌனம் காத்து வருகின்றனர்.

ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் படையெடுத்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல்களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

Who will be AIADMK’s CM candidate for 2021 polls? – Here are some poll results

#Breaking கொரோனா ஊரடங்கு 5ஆம் கட்ட தளர்வுகள்.; பள்ளிகள் & தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையான ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களாக முழு ஊரடங்கு தொடர்ந்து நிலையில், அதன்பிறகு மாத மாத புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுவருகிறது.

செப்டம்பர் 30-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நிறைவடைகிறது.

தமிழக அரசு சார்பில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில்…

அக்டோபர் 31 வரை நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு.

அக்டோபர் 15 ஆம் தேதிக்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம்

நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது

நோய் கட்டுப்பாடு பகுதிகளில் கட்டுபாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்

அக்டோபர் 31 ஆம் தேதி வரை கட்டுபாடுகளை அமல்படுத்தலாம்.

அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நீச்சல் குளங்கள், தியேட்டர்கள் திறக்க அனுமதி.

* திரையரங்குகள் 50 % இருக்கைகளுடன் இயங்க அனுமதி… திரையரங்குகளில் 50 சதவிகித டிக்கெட்களை மட்டுமே விற்பனை செய்யலாம்

சினிமா தியேட்டர்கள், மல்டி பிளக்ஸ் தியேட்டர்களுக்கான தளர்வுகள் அறிவிப்பு

பொழுது போக்கு பூங்காக்களையும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.

நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அக்.31 ஆம் தேதி வரை தளர்வுகளின்றி பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது

– மத்திய அரசு

Unlock 5 guidelines : Theatres to re open from october 15

மிஸ் யூ வடிவேல் பாலாஜி.; மறைந்த காமெடி நடிகருக்காக விஜய் டிவி நடத்தும் ஷோ..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கவர்ந்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி.

மற்றவர்களை காட்டிலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

42 வயதான இவர் மாரடைப்பு ஏற்பட்டு செப்டம்பர் 11-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரணம் சின்னத்திரை கலைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வடிவேல் பாலாஜியின் குழந்தைகளுடைய கல்விச் செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றார்.

நடிகர் விஜய் சேதுபதி குடுமபத்தினருக்கு பண உதவி செய்திருந்தார்.

ஆனால் அந்த கலைஞனுக்கு அந்த டிவி நிர்வாகம் சார்பில் எதுவும் செய்யவில்லை் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் விஜய் டிவி கலைஞர்கள் இணைந்து வடிவேல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை டிவி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதற்கான புரமோ வீடியோவும் வெளியானது.

இந்த நிகழ்ச்சி ஞாயிறு மதியம் 1 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது.

Vadivel Balaji tribute in Vijay TV on october 4th

‘அண்ணாத்த’ பாட்டு பெருசா பேசப்படும்.; விவேகாவை பாராட்டி தன் கடைசி பாட்டை பாடிய எஸ்பிபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படம் ‘அண்ணாத்த’ .

இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வெற்றி ஒளிப்பதிவு செய்ய இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் (தன் மறைவுக்கு முன்னர்) ரஜினியின் அறிமுகப் பாடலை பாடியிருக்கிறார்.

இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியிருக்கிறார்.

கொரோனா ஊரடங்கால் இப்பட சூட்டிங் 7 மாதங்களாக நிறுத்தப்பட்டது.

அடுத்த மாதம் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் மீண்டும் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் இன்ட்ரோ சாங் குறித்து பிரபல இணையதளத்திற்கு விவேகா பேட்டியளித்துள்ளார்.

அதில்.. இவரின் பாடல் வரிகளை பார்த்த எஸ்பி் பாலசுப்ரமணியம் அவர்கள் “இந்த பாட்டு பெருசா பேசப்படும்” என்று பாராட்டி அந்த பாடலை பாடினாராம்.

பாவம்… அந்த பாடும் நிலா பாலுக்கு… அதுதான் அவரின் கடைசி பாடல் என தெரியாமல் போய்விட்டது.

Lyricist Viveka opens up on SPB’s last song in Annaatthe

More Articles
Follows