இரும்புத்திரை மே 11ல் ரிலீஸ்; அந்த தகவல் பொய் என விஷால் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் தயாரித்து நடித்துள்ள படம் `இரும்புத்திரை’.

பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுடன் சமந்தா, அர்ஜூன், டெல்லி கணேஷ், கோபி, ரோபோ ஷங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படம் ரிலீசுக்கு தயாரான போதிலும் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற மே 11-ஆம் தேதி ரிலீஸ் என போஸ்டர்கள் வெளியானது.
ஆனால், அந்த தேதியில் வெளியாகாது. புதிய ரிலீஸ் தேதியை அறிவிப்பேன் என்று விஷால் தற்போது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Irumbu Thirai will not release on 11th May 2018 says Vishal

மே 4ல் தொடங்கும் விஸ்வாசம்; பயமுறுத்த தயாராகும் அஜித்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீரம், வேதாளம், விவேகம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அதே வீ சென்டிமெண்டில் அஜித் சிவா இணைகின்ற படம் விஸ்வாசம்.

இமான் இசையமைக்க, நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ள இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் அறிவிப்பு வந்து ஒரு சில மாதங்கள் ஆகிவிட்டாலும் இதன் சூட்டிங் தொடங்கப்படாமல் இருந்து வந்தது.

தற்போது 50 நாட்கள் கோலிவுட் ஸ்டிரைக்கிற்கு பிறகு இதன் சூட்டிங் வருகிற மே 4ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கப்பட உள்ளதாம்.

இந்நிலையில் அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பு மே மாதம் 4-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில்தான் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது வழக்கமான அஜித்தின் காதல் மற்றும் ஆக்சன் கதையாக இல்லாமல் திகில் படமாக உருவாகவுள்ளதாம்.

Ajith and Nayanthara starring Viswasam movie updates

செஞ்சுரி அடிக்கத் தயாராகும் காமெடியன் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யோகி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாபு. அந்த படத்தை சுப்ரமணியம் சிவா இயக்கியிருந்தார்.

அந்த படத்திற்கு பின்னரே யோகி பாபுவாக மாறினார் பாபு.

அதன் பின்னர் வந்த கலகலப்பு, பட்டத்து யானை, மான் கராத்தே, யாமிருக்க பயமேன், ரெமோ ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

தற்போது யோகி பாபு இருந்தால் அந்த படத்திற்கு யோகம் என்ற வகையில் எல்லா இயக்குனர்களுக்கும் தேவையான காமெடி நடிகராக உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் 100வது படத்தை நெருங்கி கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது…

என்னை வைத்து படம் இயக்கிய அனைத்து இயக்குநர்கள் மற்றும் கடவுளுக்கு நன்றி.

ரசிகர்கள் இல்லாமல் எந்த நடிகனும் இல்லை. ரசிகர்களுக்கும் நன்றி. சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.” என்றார்.

Comedy Actor Yogi Babu completing 100 movies in short period

அரசியல்வாதிகள் திருடுவதை நிறுத்தினாலே அரசுக்கு வருமானம்தான். : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை இண்டர்நேஷனல் சென்டர் என்ற அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கமல் கலந்துக் கொண்டு பேசினார்.

அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கும் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நடிகன் அரசியலுக்கு வரலாமா என்று கேட்கிறார்கள். நான் அவர்களை கேட்கிறேன் அரசியல்வாதியாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இதுவரை எனது சொந்த பணத்திலிருந்து கட்சி நடத்தி வருகிறேன்.

தேர்தல் கமிஷனில் கட்சியை பதிவு செய்த பிறகு மக்களிடம் நன்கொடை வசூலிப்பேன்.

தேர்தல்களில் நான் வெற்றி பெறுவதைவிட போட்டியிடவும், தோல்வி அடையவும் தயாராக இருக்கிறேன்.

எதிர்க்கட்சி வரிசையில் உட்கார எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

ஆனால் தேர்தலில் வாக்களிக்க ஒரு போதும் பணம் கொடுக்க மாட்டேன். இதை எனது கட்சியின் அடிப்படை கொள்கையாக வைத்திருக்கிறேன்.

ஏழறை கோடி தமிழர்களுக்கும் தலா 45 ஆயிரம் கடன் இருக்கிறது. இந்த கடனை அடைக்க வேண்டும்.

எல்லா வியாபாரத்தையும் போன்று மது விற்பனையும் ஒரு வியாபாரம்தான். அதை ஒரு சிலர் செய்வதுதான் தவறு.

அரசுக்கு மதுவிற்பனை முக்கிய வருமானம்தான். அரசை நடத்துவதற்கு அதுவே முதலான வருமானம் இல்லை.

அரசியல்வாதிகள் மக்களிடமிருந்து திருடுவதை நிறுத்தி விட்டால் அதுவே பெரிய வருமானம்தான்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டம் நடத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நிறுத்தியது சரியானதல்ல. எனக்கு கிரிக்கெட் தெரியாது, பிடிக்காது.

சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் நடந்தபோதுகூட சென்னையில் ரஞ்சி கிரிக்கெட் போட்டி நடந்தது.

22 வீரர்கள் விளையாடும் இடத்தில் போராட்டம் நடத்தாமல் மக்கள் வாழ்க்கையோடு விளையாடும் 234 எம்.எல்.ஏக்கள் இருக்கிற கோட்டை முன் நடத்தியிருந்தால் நானே முதல் ஆளாக சென்றிருப்பேன்.”

இவ்வாறு கமல் பேசினார்.

Politician must stop corruption to make Govt as Profitable says Kamal

படத்தின் லாபத்தை வைத்தே நடிகர்களின் சம்பளம்; தயாரிப்பாளர்கள் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் வேலை நிறுத்தத்திற்கு பிறகு அதிரடியான நடவடிக்கைகள் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்டு வருகிறது.

அதில் முக்கியமான விஷயமாக நடிகர்களின் சம்பளம் குறைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, நடிகர் சங்கத்தினர் சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனை செய்தனர்.

தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் வந்திருந்தனர்.

இவர்களுடன் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, ஆர்யா, கலையரசன், சுஹாசினி, கஸ்தூரி, நகுல், ஜிவி பிரகாஷ், பரத், கவுதம் கார்த்திக், கணேஷ் வெங்கட்ராம், கிருஷ்ணா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் நடிகர் கார்த்தி பேசினார். அவர் பேசியதாவது…

“படத்தின் லாபத்தை வைத்து நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும். ஊதிய நிர்ணயம் விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அமல்படுத்தப்படும்” என்றார்.

TFPC decided to fix Tamil heros salary based on Profit of their movies

யுவன் இசையமைப்பில் டூயட் பாடும் விஜய்சேதுபதி-அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’ படத்தில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்ஜே சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்திருந்தனர்.

இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். இந்த ஜோடி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற நிலையில் தற்போது இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் மூன்றாவது முறையாக விஜய்சேதுபதி படத்தை இயக்கவுள்ளார்.

கே புரடொக்சன்ஸ் சார்பாக ராஜராஜன் இந்த படத்தை தயாரிக்க, யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

தென்காசி மற்றும் மலேசியாவில் இதன் சூட்டிங் நடைபெறவுள்ளது.

Vijay sethupathi and Anjali romance again for new movie

More Articles
Follows