சே குவாரா கெட்டப்பில் சூர்யா; சர்ச்சையை கிளப்பும் செல்வராகவன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இது சூர்யாவின் 36வது படமாக உருவாகி வருகிறது.

செல்வராகவன் பிறந்தநாள் என்பதால் பரிசாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு என்.ஜி.கே. எனப் பெயரிட்டுள்ளனர்.

அந்த போஸ்டரில் ‘சேகுவேரா’வின் கெட் அப்பில் சூர்யா உள்ளார்.

மேலும் என்ஜிகே என்றால் என்ன? என்பதால் ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் உள்ளனர். எனவே இது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இப்படத்தில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி நடிக்க, ஜெகபதி பாபு வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படம் இந்தாண்டு 2018 தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.

In NGK first look Suriya get up reflects Che Guevara

தலைவன் வெற்றிடத்தை நிரப்பவே அரசியலுக்கு வருகிறேன்… : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வருடம் 2017 டிசம்பர் 31ஆம் தேதி ஆன்மிக அரசியல் செய்ய போகிறேன் என ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

அன்றுமுதல் ரஜினியின் இந்த பேச்சு தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆன்மிக அரசியல் என்னவென்றே தெரியாமல் பலரும் பலவிதமாக பேசத் துவங்கினர்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.

அவர் பேசியதாவது…

தூய்மை என்பது தான் ஆன்மீக அரசியல். நேர்மையானது.

இனிமேல்தான் நீங்கள் ஆன்மிக அரசியலை பார்க்கப் போகிறீர்கள்.

கருணாநிதி போன்ற ஒரு எழுத்தாளர், பேச்சாளர், சிறந்த அரசியல் ஞானி இந்தியாவிலேயே கிடையாது.

13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் அவர் கட்சியைக் கட்டிக்காத்தார்.

இதேபோல் இந்தியாவிலேயே கட்சியைக் கட்டுப்பாட்டுடன், நல்ல ஆளுமையுடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா.

இதுநாள் வரை அரசியலுக்கு வராத நீங்கள் ஏன் இப்போது அரசியலுக்கு வருகிறீர்கள் என்கிறார்கள்.?

இந்த 67 வயதில் அரசியலுக்கு வரவேண்டியுள்ளது. ஆமாய்யா தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

தலைவனுக்கும் தலைமைக்கும் வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்பவே நான் அரசியலுக்கு வருகிறேன்.” என்று அதிரடியாக மனதில் உள்ளதை பட்டென பகிரங்கமாக பேசினார் ரஜினிகாந்த்.

There is No good leader in Tamilnadu so I entered in Politics says Rajini

ரஜினியின் கபாலி நஷ்டமா..? தற்கொலை மிரட்டல் நபருக்கு தாணு பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் கடந்த 2016ல் வெளியானது.

இந்தியாவே இதுவரை கண்டிராத விளம்பர யுக்தியை கலைப்புலி தாணு கையாண்டு இருந்தார்.

படமும் இந்தியளவில் நல்ல வசூல் செய்திருந்தாக தாணு குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் கபாலி’ படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை திருப்பித் தரவில்லையெனில், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விநியோகஸ்தர் செல்வக்குமார் என்பவர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ‘கபாலி’ குறித்த விநியோகஸ்தர் செல்வக்குமாரின் குற்றச்சாட்டுகளுக்கு தயாரிப்பாளர் எஸ்.தாணு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

அவர் இந்த சந்திப்பில் கூறியதாவது:-

‘கபாலி’ மாபெரும் வெற்றி படம். சென்னையில் மட்டுமே ரூ.13 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அந்த படம் நஷ்டம் எனக் கூறுவது முற்றிலும் பொய்.

ஜி.பி.செல்வக்குமாருக்கும், ‘கபாலி’க்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

அவர் கபாலி படத்தை வாங்கவே இல்லை. விநியோகஸ்தர் வேணுகோபால் என்பவருக்கு சாட்சி கையெழுத்து போட வந்தவர் தான் செல்வக்குமார்.

வேணுகோபால் தான் வாங்கினார். அவருக்கும், எனக்குமான பணப் பரிவர்த்தனைகள் நேர்மையாக நடந்துள்ளன.

சேலத்தில் அவர் தியேட்டர் எடுத்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், அவருக்கு நான் ரூ 60 லட்சம் பணம் கொடுத்து உதவியிருக்கிறேன்.

யாருக்காவது ஒரு கஷ்டம் என்றால் அவர்களை அழைத்து பிரச்னையை  கேட்டு உதவி செய்வது சூப்பர்ஸ்டார் ரஜினியின் பழக்கம்.  அதை பயன்படுத்தி ரஜினியை ஏமாற்றத்தான்  தான் கபாலி நஷ்டமென்று சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்..
தற்போது கபாலி படம் நஷ்டம் என்று பொய்களை கூறி ரஜினி சாரின் காலா படம் வெளியாகவிருப்பதை முன்னிட்டுத் தேவையில்லாத குழப்பத்தை ஏற்ப்படுத்துகிறார்கள். கடைசியில் நீதியே வெல்லும்.” என பேசினார்.

Kabali is mega hit movie No loss in it says Producer Thanu

பாம்புகள் நிறைந்த அரசியல் பாதை எனக்கும் தெரியும்.. : ரஜினி பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிறுவப்பட்டு இருந்த எம்ஜிஆர் சிலையை திறந்த வைத்து பேசினார் ரஜினிகாந்த்.

அப்போது அவர் பேசியதாவது…

எம்ஜிஆர் சிலை திறப்பதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்ற சந்தேகம் எனக்கே உள்ளது.

இங்கு கூடியிருக்கும் கூட்டம் அரசியல் மாநாடு போல் உள்ளது.

இதில் அரசியல் பேச வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், அரசியல் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

ஏன் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என கேட்கிறார்கள். மக்களை சினிமாவின் மூலம் இத்தனை வருடங்களாக மகிழ்வித்து கொண்டிருக்கிறேன்.

அது என் வேலை. அதை நான் செய்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்யாததால் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

அரசியல் முட்கள், பாம்புகள் நிறைந்த பாதை என்பது எனக்கும் தெரியும்.

கருணாநிதி, மூப்பனார், சோ ஆகியோருடன் பழகியதால் நானும் அரசியல் கற்றுக்கொண்டேன்.

1996 முதல் அரசியல் தண்ணீர் என் மீது தெளிக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு வந்துள்ள என்னை வாழ்த்த வேண்டிய அவசியமில்லை ஏன் கேலி செய்கிறீர்கள்.

திட்டுகின்ற அரசியலை இனி கைவிட்டுவிடுவோம்.” என நல்லதொரு அரசியலை முன்னெடுப்போம் என்ற வகையில் பேசினார் ரஜினிகாந்த்.

I know the difficulties of Politics says Actor Rajinikanth

ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி; மீம்ஸ் வாலாக்களை கலாய்த்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்ஜிஆர் சிலை திறப்பு விழா ஒன்றில் கலந்துக் கொண்டு சிலையை திறந்து வைத்து பேசினார் ரஜினிகாந்த்.

அப்போது மீம்ஸ் போட்டு கலாய்க்கும் கும்பலுக்கும் அவர் பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார்.

அவர் பேசியதாவது…

நான் கடந்த ஆண்டு 2017 டிசம்பர் 31ஆம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் என்று கூறியிருந்தேன்.

ஆனால் அதற்கு முன்பே உங்கள் கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். அதுவும் ஒரு சின்ன மீடியா பையன்.

அதுபற்றி பேசும்போது எனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி. என்று பேசியிருந்தேன்.

கொள்கை இல்லாதவரா? என்றெல்லாம் என்னை பேசினார்கள்.

அது ஒரு விவாதப்பொருளாக மாறியது.

இது எப்படி இருக்கிறது என்றால்…. பெண் பார்க்க செல்கிறேன் என்றால், அப்போதே திருமண பத்திரிகை எங்கே? என்று கேட்பதுபோல் உள்ளது.” என்று மீம்ஸ் போடுபவர்களையும் ஆர்வக் கோளாறு கேள்வியாளர்களையும் சாடினார் ரஜினிகாந்த்.

இந்த விழாவில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர்கள் நாசர், பிரபு, விஜயகுமார், நடிகைகள் சரோஜா தேவி, சச்சு, லதா, அம்பிகா, இயக்குனர் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் தாணு, வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Oru nimisham Thala Suthidichu Rajini criticized Memes creators

எம்ஜிஆர் ஒரு தெய்வப்பிறவி; அவரின் நல்லாட்சியை கொடுப்பேன்.. : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் அரசியல் அறிவிப்பு பிறகு இன்று ஒரு எம்ஜிஆர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டார் ரஜினிகாந்த்.

அப்போது அவர் பேசியதாவது…

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்களை அரசியல்வாதிகள் திட்டுகிறார்கள். ஏளனமாக பார்க்கிறார்கள். வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

எம்ஜிஆர் மாதிரி யாரும் அரசியலில் ஜெயிக்க முடியாது என்கிறார்கள்.

எம்ஜிஆர் ஒரு யுக புருசன். அவர் ஒரு தெய்வப்பிறவி. அவரை போல் இனி எவராலும் வரமுடியாது.

இனி அவரே மீண்டும் மண்ணில் பிறந்தால்தான் உண்டு. நான் ஒப்புக் கொள்கிறேன்.

ஆனால் அவர் தமிழகத்திற்கு கொடுத்த நல்லாட்சியை கொடுப்பேன். என்னால் கொடுக்க முடியும்” என பேசினார் ரஜினிகாந்த்.

I will give good Govt for TN like MGR gave says Rajini

More Articles
Follows