‘என் ரசிகர்களுக்கு இதான் பிடிக்கும்…’ பரதனுக்கு விஜய் உத்தரவு…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் 60 படத்தில் நடித்து வருகிறார் இளையதளபதி.

கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்கள் ஏற்று நடித்து வருவது நாம் அறிந்ததே.

இந்த இரு கேரக்டர்களையும் கிராமத்து வேடங்களாகவே வடிவமைத்து இருந்தாராம் இயக்குனர்.

ஆனால் இரண்டும் ஒன்றாக இருந்தால் சுவாரஸ்யம் இருக்காது.

மேலும் தன் ரசிகர்களுக்காக இரண்டில் ஒன்றை சிட்டி கேரக்டராக மாற்றச் சொன்னாராம் விஜய்.

இவையில்லாமல், தன் நடனத்திற்கு ஏற்ப நிச்சயம் ஒரு குத்து பாடல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

எனவே இயக்குனர் பரதனும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் தளபதியின் அன்பு கட்டளையை ஏற்று மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கபாலியில் நான் யார்…? மனம் திறந்த தன்ஷிகா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்துள்ள கபாலி பாடல்கள் வெளியான நொடி முதல் அப்படம் குறித்த தகவல்கள் இன்னும் அதிக வேகத்துடன் நெருப்பாய் பரவி வருகிறது.

ஏற்கெனவே டீசருக்கு கிடைத்த வரவேற்பில் ஒட்டு மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்தனர்.

தற்போது பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு அவர்களை திக்குமுக்காட செய்துவிட்டதாம்.

விரைவில் இதன் இரண்டாவது டீசர் வெளியாகவுள்ள நிலையில் அதன் சாதனை எந்தளவில் இருக்கும் என எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கபாலி படத்தில் தன் கேரக்டர் குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தன்ஷிகா. அதில்…

“இப்போதுதான் கபாலியில் என் லுக் வெளியாகியுள்ளது. தைரியமாக உணர்கிறேன்.

இப்படி ஒரு கேரக்டர் எனக்கு கொடுத்த ரஞ்சித்துக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை அதிகாரியாக உலகநாயகன்… சபாஷ் கமல் காரு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா நிறுவனத்துடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்தை தயாரித்து வருகிறார் கமல்ஹாசன்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது.

இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் கமல் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறாராம்.

இதனால், அமெரிக்காவின் உளவுத்துறை அலுவலகத்தில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள்.

இதற்கான விசேஷ அனுமதியையும் பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ராஜீவ் குமாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இதன் முழுப்படத்தையும் கமலே இயக்கவிருக்கிறார்.

டிசம்பர் 1ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால், கமல் இந்த இயக்குனர் முடிவை எடுத்தாராம்.

கமல் காரு.. சபாஷ் காருதான்…

சார்லி ரீமேக்கில் விஜய்யுடன் இணையும் மாதவன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த மலையாள படம் ‘சார்லி’.

இவருடன் பார்வதி, அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

ஃபைண்டிங் சினிமா என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

மலையாளத்தில் பெரும் ஹிட்டடித்த இப்படத்திற்கு தமிழ் ரீமேக்குக்கு கடும் போட்டி நிலவியது.

தற்போதுதான் அதற்கான நேரம் கைகூடியுள்ளது போலும்.

துல்கர் சல்மான் வேடத்தில் மாதவன் நடிக்க, இயக்குநர் விஜய் இப்படத்தை இயக்குகிறாராம்.

நவம்பர் 15ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள்.

பஞ்ச பூதங்களுடன் கனெக்ஷன் ஆன கபாலி பாடல்கள்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளைய தலைமுறை இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி பெரும் எதிர்பார்ப்பு உள்ளாகியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்பாடல்கள் இணையத்தில் வெளியாகி ‘நெருப்பாக’ பரவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாடல்கள் குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த சூப்பர் ஸ்டார் தங்கள் நடிகர்தான் என கூறிவரும் சில ரசிகர்களுக்கு

நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு… 25 வருசத்துக்கு முன்னாடி எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துருக்கேன்னு சொல்லு என்று ரஜினி ஸ்டைலில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மேலும் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் இப்படத்தின் பாடல்களை பஞ்ச பூதங்களுடன் ஒப்பிட்டு கூறியிருக்கிறார்.

பாடல்களும் அதன் ஒப்பீடும்…

  • உலகம் ஒருவனுக்கா – நிலம்
  • மாய நதி –நீர்
  • வீரா துறந்தாரா – காற்று
  • வானம் பார்த்தேன் – வானம்
  • நெருப்பு டா – தீ என குறிப்பிட்டுள்ளார்.

கபாலி பாடல் குறித்து விஜய், சிவகார்த்திகேயன் ரியாக்ஷன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி பாடல்கள் வெளியாகும் நாள் அறிவிக்கப்பட்ட முதலே ஜீன் 12ஆம் தேதி கபாலி தினமாகவே பார்க்கப்பட்டது.

பாடல்கள் வெளியானதை தொடர்ந்து, எங்கு திரும்பினாலும் அப்பாடல்கள் பற்றிய பேச்சே காணப்பட்டது.

நெருப்புடா தொடங்கி கபாலிடா வரை இந்த குரல்களுக்கு பஞ்சமில்லை.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் மிதக்கின்றனர்.

இவர்களைப் போல், பெரிய நட்சத்திரங்களாக திகழும் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் தெரிவித்துள்ளதாவது… செம எனர்ஜியான பாடல்கள். மகிழ்ச்சி என கூறினாராம்.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது…

‘கபாலி பாடல்களை கேட்டேன். கலக்கிட்டீங்க சந்தோஷ்… வாழ்த்துக்கள் ரஞ்சித்” என தெரிவித்துள்ளார்.

மேலும் தன் நண்பரான அருண்ராஜா காமராஜக்கு தனது தனிப்பட்ட வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அதில்…

“திரும்ப திரும்ப கேட்கும் பாடல் நெருப்புடா… உன் குரல் மற்றும் பாடல் வரிகள் வேற லெவல்.

உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது. நீ மிகப்பெரிய உயரம் தொட காத்திருக்கிறேன்“ என பதிவிட்டுள்ளார்.

More Articles
Follows