ஜோக்கர் புகழ் ராஜுமுருகன் கதை-வசனத்தில் நடிக்கும் கேட்டரிங் ரங்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனத்தை எழுதுகிறார்.

திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்த படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படம் குறித்து ராஜுமுருகனிடம் பேசிய போது ரங்கா எப்படி இந்த படத்திற்குள் வந்தார் என்கிற விஷயத்தை சுவாரஷ்யமாக சொன்னார்.

“எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வது போலத்தான் வாழ்க்கையிலும் சில ஈரமான சம்பவங்கள் நிகழ்ந்து விடுகிறது. அடர்த்தியான கதை, எளிமையும் அழகியலுமான திரைக்கதை, நல்ல தயாரிப்பாளர் எல்லாம் அமைந்துவிட்டது.

இதன் பிறகு தொடர்ந்து கதாநாயகனுக்கான தேடலில் இருந்தோம். பலரையும் பார்த்து எதுவும் சரியாக அமையாமல் சலித்து போன நேரத்தில் நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு நானும் சரவணன் ராஜேந்திரனும் கோவை சென்றிருந்தோம்.

அங்கே திருமண விழாவில் சாப்பாடு நன்றாக இருந்தது. இந்த அற்புதமான உணவுக்கு காரணமான சமையல்கலை நிபுணரான ரங்காவை நண்பர் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அவரைப் பார்த்து பேசிய தருணத்தில் சட்டென்று இவர் நமது கதைக்கு சரியாக இருப்பாரோ என்று தோன்ற நான் சரவணன் ராஜேந்திரனைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார்.

இருவருக்கும் பிடித்துப்போக அவரிடம் நடிப்பதற்கு உங்களுக்கு விருப்பமா என்று கேட்டோம். முதலில் தயங்கிய ரங்கா சிறிய மௌனத்திற்கு பின் ஒப்புக்கொண்டார். இப்போது அர்ப்பணிப்போடு எங்களோடு இணைந்திருக்கிறார்” என்றார் ராஜுமுருகன்.

இந்தப் படத்தின் நாயகி ஸ்வேதா திரிபாதி. இசை ஷான் ரோல்டன். கேமரா- மாநகரம் செல்வம்.

ஆர்ட் டைரக்‌ஷன்- சதீஷ். ஸ்டண்ட் – பில்லா ஜெகன். இந்த படத்தின் தலைப்பு, மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இன்று காலை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்ற படத்துவக்க விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குடும்பத்தினர், ஆரா மகேஷ் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்து வாழ்த்தினர்.

Chef Ranga acting in Raju Murugan script

ஹாலிவுட்டை மிஞ்சும் அட்வெஞ்சர்; இமேஜ் இல்லாத கௌதம்: இந்திரஜித் பற்றி கலாபிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலாபிரபு… தமிழ் சினிமாவின் தலையாய தயாரிப்பாளரின் மகன். நினைத்திருந்தால் முதலாளியாகவே இருந்திருக்கலாம்.

ஆனால் பிடிவாதமாக இயக்குநர் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சாதித்துக் காட்டும் முனைப்புடன் இரண்டாவது படத்தை இயக்கி முடித்து விட்டார்.

படம் நாளை வெளியாகிறது. அதற்கு முன் கலாபிரபுவிடம் பேசியதில் இருந்து…

இந்திரஜித் ட்ரெய்லர் பார்த்தாலே பெரிய பட்ஜெட்னு தெரியுதே?

என்ன கேட்க வர்றீங்கன்னு புரியுது. இந்தக் கதை எழுதும்போதே இவ்வளவு செலவு ஆகும்னு தெரியும். அட்வென்சர் படம்கறப்போ அந்த செலவு நியாயமானதா இருக்கும்.

டெக்னிக்கலா நிறைய விஷயங்கள் தேவைப்பட்டுச்சு. டெய்லி மூணு, நாலு கேமரா செட்டப்ல ஷூட் பண்ணினோம். ஆனா ஒரு படத்தோட வெற்றியை பட்ஜெட் மட்டுமே நிர்ணயிக்காதுனு ஒரு இயக்குநரா நம்புறேன்.

அதனால ஸ்க்ரிப்ட்லயும் மேக்கிங்லயும் காம்ப்ரமைஸ் ஆகலை. நானே ஒரு காடுகளின் காதலன்கறதால எனக்கு இந்த சப்ஜெக்ட் ஈசியா இருந்தது. இதுல ஹீரோ கேரக்டர் ட்ராவல் பண்ணதுல முக்கால்வாசி நான் ஏற்கனவே பண்ணியிருக்கேன். வேலையா பண்ணாம புடிச்ச விஷயத்தை பண்ற மாதிரி பண்ணேன்.

கதை உருவாக்கம், மேக்கிங் பத்தி?

முதல்ல ஆக்‌ஷன் ப்ளஸ் ட்ராவல் அட்வெஞ்சர்னு ஒரு லைன் பிடிச்சேன். அந்த ஐடியாவை டெவலப் பண்ணும்போது ஒரு இண்ட்ரெஸ்டிங் ஸ்க்ரிப்ட் வந்துச்சு. ஹாலிவுட்லயே இந்த அளவுக்கு ஒரு பியூர் அட்வெஞ்சர் படம் வர்றது இல்லைனு சொல்லலாம்.

அதே மாதிரி அட்வெஞ்சர்னாலே நமக்கு தோணுற க்ளிஷேக்கள் எதுவும் இதுல இருக்காம பார்த்துக்கிட்டேன். முக்கியமா வழிதெரியாம மாட்டிக்கிறது, புதைகுழி, கண்ணி வெடி போன்ற எதையுமே தொடாம ஒரு அட்வெஞ்சர் ஸ்க்ரிப்ட் பண்றது பெரிய சவாலா இருந்தது. அதனால தான் ஹாலிவுட் பட க்ளிஷேக்கள் கூட இருக்காதுனு சவாலா சொல்றேன்.

இப்ப ஓகே… ஆனா நீங்க கமிட் பண்ணப்ப கௌதம் கார்த்தி கடல் கௌதமா தான் இருந்தாரு… அப்புறம் எப்படி இந்த கேரக்டருக்கு…?

ஆமா, நான் கமிட் பண்ணப்ப கடல் மட்டும் முடிச்சுட்டு ஸ்கூல் பையன் மாதிரி இருந்தாரு. பார்த்தாலே கொஞ்சுற மாதிரி இருக்கற ஒரு சாக்லேட் பையனைத்தான் கொண்டு வந்தேன்.

என் கதைக்கு இமேஜே இல்லாத ஒரு ஹீரோ தான் தேவைப்பட்டாரு. மக்கள் மத்தியில ஏற்கனவே நல்லா ரீச் ஆன ஒருத்தர்ன்னா கேரக்டரோட நம்பகத்தன்மை போயிடுமேன்னு பயந்தேன். ஆனா நான் நினைச்சதை விட பெட்டர் ஆப்ஷனா கௌதம் இருந்தாரு.

கௌதம் கார்த்திக்குக்கு செம டஃப் கொடுக்கற வில்லனா சுதான்சு பாண்டே பண்ணியிருக்கார். செம ஸ்ட்ராங்க் கேரக்டர்.

இவருக்கு தமிழ்ல நல்ல எதிர்காலம் இருக்கு. மத்த ஆர்ட்டிஸ்ட்களும் தங்களோட சிறந்த பங்களிப்பை கொடுத்துருக்காங்க.

சக்கரகட்டிக்கு பிறகு ஏன் இந்த இடைவெளி?

இது நானா எடுத்துகிட்ட கேப் தான். இந்த இடைவெளில நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன்.

அப்பாவே தயாரிப்பாளர்ன்னா சுதந்திரமா நெருக்கடியா?

நெருக்கடிதான். மற்ற இயக்குநர்கள்னா ஷூட்டிங் முடிஞ்சதும் வீட்டுக்குப் போயிடலாம். ஆனா நான் வீட்டுக்கு வந்தாலும் அங்கே என் தயாரிப்பாளர்தான் இருப்பார்.

அவர் முகத்துலேயே முழிச்சுட்டு தான் கிளம்பணும். அப்ப நெருக்கடி இருக்காதா? ஆனா அப்பா மற்ற இயக்குநர்களுக்கு என்ன சுதந்திரம் கொடுப்பாரோ அதை அப்படியே எனக்கும் கொடுத்தாரு. அப்பா கேட்கிற அளவுக்கு பண்ணிடக்கூடாதுனு பயந்துட்டே பண்ணினதால தான் படம் நல்லா வந்துருக்கு.

கேமரா, இசை?

ராசாமதி என்கூட சக்கரகட்டிலேருந்து ட்ராவல் பண்ற நண்பன். என்கூட எப்பவும் இருந்து என்னை முழுமையா நம்புறவரு.

கலாபிரபு பண்ணினா அது கரெக்டா இருக்கும்னு அப்படி ஒரு நம்பிக்கை. ஸோ நாம நம்ம வேலையை பார்க்கலாம். ஷூட்டிங்ல தாமதம் ஆகாது. இசையமைப்பாளர் கேபி க்கு இது முதல் படம் மாதிரியே தெரியாது. பாடல்கள் மாதிரியே பின்னணி இசையும் சிறப்பா பண்ணியிருக்கார்.

Director Kalaaprabu shares about Indrajith movie

அஜித் அடுத்த தலைப்பு & ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யஜோதி பிலிம்ஸ் தங்களது அடுத்த படத்தை அறிவிப்பு செய்தது.

பாரம்பரிய பட நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி தியாகராஜன், தங்களது அடுத்த தயாரிப்பை தலைப்புடன் அறிவித்தார்.

அஜித் குமார் நடிக்க, சிவா இயக்கும் இந்த படத்துக்கு
“விசுவாசம்” என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது.

ஜனவரி மாதம் “விசுவாசம்” படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

2018 தீபாவளி அன்று
“விசுவாசம் ரிலீஸ் என தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அறிவித்துள்ளார்

சினிமாவையும் ஆட்டிப்படைக்கும் கந்துவட்டி: அசோக்குமாருக்கு கமல் அனுதாபம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளரும் நடிகர் சசிகுமாரின் உறவினருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்டார்.

நேற்று மாலை அவரது இறுதி மரியாதை மதுரையில் நடைபெற்றது.

இதில் நடிகர் விஷால், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ஆனால் இதுகுறித்து கமல் எதுவும் தெரிவிக்கவில்லை என பாஜக. தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்து இருந்தார்.

தற்போது கமல் தன் அனுதாபம் மற்றும் கந்துவட்டி கொடுமை பற்றி தன் ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 53s53 seconds ago
கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துரையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துரையின் அனுதாபங்கள்.

Kamal condolence to Producer Ashokkumar Suicide

Breaking: கமல்-அஜித் முதல்வரானால் நன்றாக இருக்கும்: சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாக சினிமா துறை கலைஞர்கள் அடிக்கடி அரசியல் பேசி வருகின்றனர்.

இதனால் தமிழ்நாட்டில் திரையுலகமும் அரசியல் களமும் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில் சினிமாத்துறையில்இருந்து யார் அரசியலுக்கு வந்து முதல்வரானால் நன்றாக இருக்கும் என்ற கேள்வியை இயக்குனர் சுசீந்திரனிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் பதிலளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

கமல் அல்லது அஜித் தமிழகத்தின் முதல்வரானால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதை அவர் கைபடவே எழுதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

If Kamal and Ajith became Chief Minister it will be good says Suseenthiran

அன்புசெழியன் உத்தமர்; நான் நியாயத்தின் பக்கம் என சீனுராமசாமி தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சசிகுமாரின் உறவினரும் கம்பெனி புரொடக்சனின் தயாரிப்பாளருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்டார்.

தன் தற்கொலைக்கு தயாரிப்பாளர் அன்புச்செழியன் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார்.

இதனால் விஷால், சுசீந்திரன், அமீர் உள்ளிட்ட பல கலைஞர்கள் அன்புசெழியனை கடுமையாக விமர்ச்சித்திருந்தனர்.

இந்நிலையில் எவரும் எதிர்பாரா விதமாக இயக்குனர் சீனுராமசாமி தன் ட்விட்டரில் அன்பு செழியன் பக்கம் நியாயம் உள்ளது. அவர் உத்தமர் என பதிவிட்டுள்ளார்.

Seenu Ramasamy‏Verified account @seenuramasamy
எம்.ஜீ.ஆர், சிவாஜீ, போல் இல்லை இன்றைய நடிகர்கள்.அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்பவது வேதனை.நான் நியாயத்தின் பக்கமே…

Producer Anbu Chezhiyan is good man says director Seenu Ramasamy

More Articles
Follows