தேசிய விருது மகிழ்ச்சி என்றாலும் வருந்தும் ‘ஜோக்கர்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டு தேசிய விருதுகளை பெற்ற ஜோக்கர் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இதில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் ராஜுமுருகன் , நாயகன் சோம சுந்தரம், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜு முருகன் பேசியது…

நான் ஒரு நல்ல படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்தேன் , இப்படம் அனைவரின் ஒத்துழைப்பில் திரையரங்குக்கு வந்ததே மிகப்பெரிய வெற்றி. ஜோக்கர் திரைப்படம் இங்கு இருக்கும் அனைவரும் தங்களுடைய கருத்தை சுதந்திரமாக பேச வழிவகுத்து தந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

இப்படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் பாலிவுட் நடிகர் நாவசுதின் சித்திக் போன்ற மிக சிறந்த நடிகர் என்றார் இயக்குநர் ராஜு முருகன்.

நடிகர் குரு சோம சுந்தரம் பேசியது…
ஜோக்கரில் நர்ஸ் வேடத்தில் நடித்த நடிகை ஒருவர் என்னை கைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துவிட்டு , நானும் இப்படத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று பெருமையாக கூறினார்.

எனக்கு அது சந்தோஷத்தை தந்தது. இந்த படத்தில் எழுத்து , இசை , தயாரிப்பு என்று அனைத்தும் ஒருங்கே இனைந்து மிகச்சிறப்பாக அமைந்தது. நான் இந்த படத்தில் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியது…

ஜோக்கர் கதையை கேட்டதும் நிச்சயம் படத்துக்கு தேசிய விருந்து கிடைக்கும் என்று நான் இயக்குநர் ராஜு முருகனிடம் கூறினேன். அதற்க்கு அவர் கிடைத்தால் நன்றாக இருக்கும், மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கும் என்றார். தேசிய விருது பெற்றுள்ள சுந்தர் ஐயர் “ ஜாஸ்மீன் “ பாடலை வெறும் இருபதே நிமிடத்தில் பாடினார் என்பது அதன் சிறப்பாகும்.

சுந்தர் ஐயர் இப்பாடலில் நிறைய புதிய விஷயங்களை கொண்டு வந்தார் அது மட்டுமல்லாமல் பாடலில் நிறைய எமோஷனை சேர்த்தார் என்றார் ஷான் ரோல்டன்.

தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியது…

ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோசம் இருந்தாலும் எங்கள் நாயகன் குரு சோமசுந்தரம் அவர்களுக்கும் விருது கிடைக்கும் என்று ரொம்பவே எதிர்பார்த்தோம்.

அவருக்கும் கிடைத்து இருந்தால் எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எல்லாம் கூடி வரும்போது ஜோக்கர் திரைப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றார்.

Joker movie team reaction for winning Two National award

‘ரசிகர்களை சந்திக்க மறுப்பு…’ வாட்ஸ் அப்பில் ரஜினி வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கவிருக்கிறேன் என ரஜினி தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது அந்த சந்திப்பு நடைபெற முடியாத சூழ்நிலை உள்ளதாக அவர் வாட்ஸ் அப்பில் தன் குரலை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

என்னை வாழவைத்த தெய்வங்களான என் ரசிக பெருமக்களுக்கு நான், ரஜினிகாந்த் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அணைவருக்கும் ஒரு தகவல், பத்து ஆண்டுகள் ஆயிற்று நான் உங்களை சந்தித்து, உரையாடி, புகைப்படம் எடுத்து. ரசிகர்களாகிய நீங்களும் என்னை சந்திப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தீர்கள். நேரமின்மையின் காரணமாக அது சாத்தியமில்லாமல் போனது.

தற்போது அதற்கான சந்தர்ப்பமும்,வாய்ப்பும் கிடைத்த நிலையில் ரசிகர்களாகிய உங்களை நான் சந்திப்பதற்கு ஏப்ரல் 12 முதல் 16 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், உங்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஒரு நாளைக்கு 4 அல்லது 5 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு 300 என்ற வீதம் தோராயமாக 2000 பேருடன் புகைப்படம் எடுத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க, என்னுடைய ஆசை மற்றும் விருப்பத்தின் பெயரில் திட்டமிடப்பட்டிருந்தது. அத்தனை நபர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுப்பது என்பது ஒரு நாளில் நடைமுறையில் கடினமான விடயம் என்பதால், 8 பேர் கொண்ட குழுவாக புகைப்படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்ககூடியதாக இருந்ததால், ரசிகர்கள் அணைவரும் தனித்தனியாக என்னுடன் புகைப்படம் எடுக்க கோரிக்கை வைத்தீர்கள். ரசிகர்களாகிய உங்களின் விருப்பத்தை ஏற்று, தற்போது நடைபெற இருந்த (ஏப்ரல் 12- 16 தேதி) சந்திப்பை ஒத்தி வைத்துள்ளோம்.

இனி வரும்காலத்தில், ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு மாவட்ட ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுக்க தக்க முன்னேற்பாடு செய்யப்படும். இதற்கான தேதி முடிவு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கிறோம்.

என் ரசிகர்களாகிய நீங்கள் இதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

Meeting with fans postponed Rajini voice in WhatsApp

 

தமன்னாவுடன் இணைந்து விக்ரம் போடும் ‘ஸ்கெட்ச்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி, தெறி படங்களை தொடர்ந்து விக்ரம் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவிருக்கிறார் கலைப்புலி தாணு என்பதை பார்த்தோம்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசையமைக்கிறார்.

தமன்னா நாயகியாக நடிக்கவுள்ள இப்படத்தை வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு ஸ்கெட்ச் என பெயரிட்டுள்ளனர்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Vikram Tamannah movie titled Sketch

 

‘வேட்டை நாய்’க்காக சூர்யாவை காப்பியடிக்கும் ஆர்.கே. சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாரை தப்பட்டை, மருது படங்களில் வில்லனாக மிரட்டியவர் தயாரிப்பாளர் ஆர். கே. சுரேஷ்.

தற்போது நான்கு படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

இந்நிலையில், ‘மன்னாரு’ பட இயக்குனர் ஜெய்சங்கர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

இப்படத்தின் கேரக்டர் நந்தா படத்தில் சூர்யா ஏற்ற கேரக்டர் போன்ற முரட்டுத்தனமாக கேரக்டராக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு ‘வேட்டை நாய்’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

படத்தின் நாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் ஒப்பந்தம் ஆனவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

‘என் அண்ணன் ரஜினி பார்த்துப்பார்…’ கமல் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் அண்மையில் காலமானார்.

அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது, இன்றைய இளம் நடிகர்கள் வைத்திருக்கும் பணம் கூட கமல்ஹாசனிடம் இல்லை என தெரிவித்தார்.

இதுவரை சந்திரஹாசன் கமலின் கணக்கு வழக்குகள் பார்த்துக் கொண்டார்.

இனி அடுத்த அண்ணன் சாருஹாசன்தான் கமலை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ரஜினியின் இந்த பேச்சு குறித்து கமல் தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

‘அந்த அண்ணன் இல்லையென்றாலும், இன்னொரு அண்ணனாக ரஜினி இருக்கிறார். அவர் என்னை பார்த்துக்கொள்வார்’ என்றார்.

ஜோக்கர் சிறந்த படம்.. தேசிய விருதுகள் அறிவிப்பு முழு விவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டெல்லியில் 64வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கபட்டுள்ளது.

இயக்குனர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு இந்த படங்கள் இந்தாண்டுக்கு தேர்வு செய்துள்ளது.

தமிழில் சிறந்த படமாக ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான விருதுக்கு தனஞ்செயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த பாடல் ஆசிரியாக வைரமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். (தர்மதுரை படத்தில் உள்ள எந்தபக்கம் என்ற பாடல்)

சிறந்த ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசர் (சூர்யா நடித்த 24 படம்). மேலும் இதே படத்திற்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருது கிடைத்துள்ளது.

சிறந்த பாடகருக்கான தேசிய விருது ஜோக்கர் படத்தின் ஜாஸ்மின் பாடலுக்காக சுந்தர அய்யருக்கு வழங்கப்படுகிறது

சிறந்த துணை நடிகை – ஜாய்ரா வாசிம் – டங்கல்

சிறந்த மலையாளத் திரைப்படம்: மகேஷிண்டே பிரதிகாரம்

சிறந்த தெலுங்கு திரைப்படம் – பெல்லி சூப்லு

சிறந்த ஹிந்தி திரைப்படம் – நீர்ஜா

சிறந்த திரைப்படம் கசாவ் (மராத்தி)

24 படத்துக்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர்

சிறந்த நடிகர் –  ரஷ்டம் திரைப்படத்துக்காக அக்ஷய் குமார்

‘புலி முருகன்’ மலையாளத் திரைப்படத்துக்காக  பீட்டர் கெய்னுக்கு சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருது.

தேசிய விருதுகள் பட்டியல்:

சிறந்த படம்: மராட்டிய மொழிப் படம் – காசவ்

சிறந்த இயக்குநர்: ராஜேஷ் மபுஸ்கா – மராட்டிய படம்- வென்டிலேட்டர்

சிறந்த நடிகை: சி.எம்.சுரபி – மலையாளப் படம் மினாமினுகு படத்தில் நடித்தமைக்காக

சிறந்த உறுதுணை நடிகை: ஜாய்ரா வாசிம் – தங்கல்

சிறந்த பாப்புலர் திரைப்படம் – சதாமனம் பவதி (தெலுங்கு)

சிறந்த குழந்தைகள் திரைப்படம் – தனக்

சிறந்த அனிமேஷன் திரைப்படம்- மஹோயோத ரானா (இந்தி)

சிறந்த சண்டை வடிவமைப்பு: பீட்டர் ஹெய்ன் (புலிமுருகன்)

சிறந்த குழந்தை நட்சத்திரம்: அதீஷ் பிரவீன் (படம்: குஞ்சு தெய்வம்), சாஜ் (படம்: நூர் இஸ்லாம்), மனோகரா (படம்: ரயில்வே சில்ட்ரன்)

சிறந்த பின்னணி பாடகி: இமான் சக்ரபர்த்தி

சிறந்த பின்னணி பாடகர்: சுந்தரா ஐயர் (ஜோக்கர்)

சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்): ஷ்யாம் புஷ்கரன்

சிறந்த திரைக்கதை (தழுவல்): சஞ்சய் கிருஷ்ணஜி படேல்

சிறந்த நடன அமைப்பு: ராஜூ சுந்தரம் (ஜனதா கார்கே)

சிறந்த இசையமைப்பு: பாபு பத்மநாபா (அலமா)

சிறந்த ஒப்பனை: எம்.கே.ராமகிருஷ்ணா

சிறந்த எடிட்டிங்: ராமேஷ்வர் – வென்டிலேட்டர்

சிறந்த ஒப்பனை: சைக்கிள் திரைப்படத்துக்காக சச்சின் லவேல்கர்

சிறந்த ஒலி வடிவமைப்பு: காடு பூக்கும் நேரம் – ஜெயதேவன் சக்கா தத்

சிறந்த துணை நடிகர்: தசாகிரியா – மராத்தி

சுற்றுச்சூழல் நலன் பேணும் சிறந்த திரைப்படம் – தி டைகர் வூ கிராஸ்ட் தி லேன் (The Tiger who crossed the lane)

சமூக பிரச்சனைகள் சார்ந்த சிறந்த திரைப்படம் – அமிதாப் பச்சனின் ‘பிங்க்’

தேசிய ஒறுமைப்பாட்டை பறைசாற்றியதற்காக நர்கீஸ் தத் விருது பெறும் திரைப்படம்: திக்சோவ் பனாத்

அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெறும் சிறந்த திரைப்படம்: அலிபா (வங்கமொழி) இயக்குநர்- தீப் சவுத்ரி

சினிமா துறைக்கு இணக்கமான மாநிலம்: உத்தரப் பிரதேசம்.

More Articles
Follows