தமிழுக்கு முருகன்; தெலுங்குக்கு விநாயகர்… ஆர்யா எடுத்த அவதாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஞ்சப்பை இயக்குனர் ராகவ் தன் இரண்டாவது படமாக இயக்கியுள்ள படம் கடம்பன்.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்யா, கேத்ரீன் தெரசா இணைந்து நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது.

இதே நாளில் தெலுங்கிலும் இப்படம் வெளியாகவுள்ளது.

தெலுங்கு பதிப்புக்கு கஜேந்திரடு என்று பெயரிட்டுள்ளனர்.

கடம்பன் என்றால் முருகப்பெருமானையும். கஜேந்திரடு என்றால் விநாயகப் பெருமானை குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Aryas Kadamban movie release updates

தாணு தயாரிப்பில் விக்ரம்-தமன்னா நடிக்கும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த கபாலி, விஜய் நடித்த தெறி ஆகிய படங்களை தொடர்ந்து விக்ரம் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவிருக்கிறார் கலைப்புலி தாணு.

இப்படத்தை சிம்பு நடித்த வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கவிருக்கிறார்.

இதில் நாயகியாக தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விக்ரம் தமன்னா இணையும் முதல் படம் இது என்பதும், விக்ரமின் 53வது படம் இது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏப்ரல் 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக இயக்குனர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார்.

Vikram Tamannah teams up for Kalaipuli Thanu project

பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களை தீர்த்துக் கட்டும் த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த்ரிஷா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கர்ஜனை’. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் சுந்தர் பாலு இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

த்ரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுகரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளு சபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சினி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா, சரத் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படம் குறித்து இயக்குனர் சுந்தர் பாலு கூறும்போது, ‘இப்படத்தின் கதைக்களமும், திரைக்கதையும் த்ரிஷாவிற்கு மிகவும் பிடித்தது. கதையை கேட்டவுடனே படத்தில் நடிக்க சம்மதித்தார்.

ஐந்து நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதை படமாக்கி சமூக வலைத்தளங்களில் பேரம் பேசி விற்று வருகிறார்கள்.

இந்நிலையில், காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இதன் பின்னணியில் நடக்கும் கதையை ஆக்‌ஷன் திரில்லருடன் படமாக்கி இருக்கிறேன்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் த்ரிஷா தயங்காமல் டூப்பில்லாமல் நடித்தார்.

அம்ரிஷ் இசையில் 3 பாடல்கள் உருவாகியுள்ளது. இதில் 2 பாடல்கள் கதையோடு அமைத்திருக்கிறேன். மே மாதம் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

காரைக்குடி, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

‘கர்ஜனை’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்த படமாக இருக்கும்’. என்றார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:
இசை : அம்ரிஷ், ஒளிப்பதிவு : சிட்டி பாபு, படத்தொகுப்பு : சதீஷ் சூர்யா, சண்டைக்காட்சி : சுப்ரீம் சுந்தர், பாடல்கள் : விவேகா, சொற்கோ, கருணாகரன், நடனம்: நோபல், படங்கள்: சீனு, மக்கள் தொடர்பு: இரா.குமரேசன்
நிர்வாகத் தயாரிப்பு: ஹேபாஸ்கர்,
தயாரிப்பு: ஜோன்ஸ்,
எழுத்து-இயக்கம்: சுந்தர்பாலு.

பவர் பாண்டியை மதிக்காத மடோனா; விஷாலிடம் செல்லும் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் முதன் முறையாக இயக்கி, தயாரித்து நடித்துள்ள ப பாண்டி படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது.

எனவே இப்படக்குழுவினர் இதற்கான புரோமோசன் நிகழ்ச்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதற்காக இப்படக்குழுவினர் அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இதில் தனுஷ், ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரேவதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டாலும், மடோனா செபாஸ்டியன் கலந்து கொள்ளவில்லை.

இப்படத்தில் ஒப்பந்தம் ஆகும் சமயத்தில் புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக கையெழுத்திட்டு இருந்தாராம் மடோனா.

ஆனால், தற்போது மறுக்கவே, இந்த விஷயம் தற்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கு செல்லக்கூடும் என சொல்லப்படுகிறது.

அப்படியானால், தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்றதும் சந்திக்கும் முதல் புகார் இதுவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Power Paandi action against their heroine Madonna Sebastian

இம்சை அரசனாகிறார் சூரி..? வடிவேலுவை கழட்டிவிட்ட ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2006ஆம் ஆண்டு வடிவேலு நாயகான நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் ரிலீஸ் ஆனது.

இயக்குனர் ஷங்கர் தயாரித்த இப்படத்தை சிம்புதேவன் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தார்.

இதற்கு வடிவேலுவும் ஒப்புக் கொண்டதாக வந்த செய்தியினை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில், ஷங்கருடன் இணைந்து லைக்கா நிறுவனமும் இப்படத்தை தயாரிக்க முன்வந்ததாம்.

இதனையறிந்த வடிவேலு, தன் சம்பளத்தை இரட்டிப்பாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வடிவேலுவை கழட்டிவிட்டு, சூரியை ஹீரோவாக்கும் திட்டத்தில் இருக்கிறார்களாம் புலிகேசி குழுவினர். (அறிவிப்பு வரை காத்திருப்போம்…)

Soori will replace Vadivel in Imsai arasan 23am pulikesi sequel

அமலாபால் மகள் நைனிகா; அர்விந்த் சாமியின் மகனாக நடிப்பது யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சித்திக் இயக்கத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடித்து மலையாளத்தில் ஹிட்டடித்த படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’.

தற்போது இப்படத்தை தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் இயக்கி வருகிறார் சித்திக்.

இதில் அர்விந்த்சாமி, அமலா பால் நடிக்கின்றனர்.

இதில் அமலாபாலின் மகளாக நைனிகா (நடிகை மீனாவின் மகள்) நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில், அர்விந்த் சாமியின் மகனாக நடிக்க, ஜெயம் ரவியின் மகன் ஆரவ்வைக் கேட்டார்களாம்.

ஆனால் அவர் மறுக்கவே, தற்போது ஸ்ரீகாந்தின் மகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் கதை சுருக்கம்…

மனைவி இல்லாமல் தன் மகனுடன் வாழ்ந்து வருபவர் அர்விந்த்சாமி.

கணவன் இல்லாமல் தன் மகளுடன் வாழ்ந்து வருபவர் அமலாபால்.

ஒற்றைப் பெற்றோருடன் வாழ்ந்து வரும் இந்த குழந்தைகள் இருவரும் நட்புடன் பழகி, அர்விந்த்சாமியையும் அமலாபாலையும் சேர்த்து வைப்பதே கதை.

Baskar oru Rascal tamil movie cast updates

 

More Articles
Follows