மீண்டும் *கஜினிகாந்த்* கூட்டணியில் இணையும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்யா, சயிஷா சைகல், கருணாகரன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கஜினிகாந்த்’.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

‘ஹர ஹர மஹாதேவகி’ மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் ‘யு’ சான்றிதழ் படம் ‘கஜினிகாந்த்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் சந்தோஷ் – ஆர்யா இணைந்து படம் பண்ண முடிவு செய்திருக்கிறார்கள்.

இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமே தயாரிக்கிறது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

உயிர்த்தெழும் தனுஷ்; *ராஞ்சனா* 2-ஆம் பாகத்தில் நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் கோலோச்சும் தனுஷ் முதன்முறையாக நடித்த ஹிந்தி திரைப்படம் ‘ராஞ்சனா’.

இப்படம் வரவேற்பை பெறவே இதற்கு அடுத்தப்படியாக அமிதாப்பச்சனுடன் ‘ஷமிதாப்’ படத்தில் நடித்தார்.

தற்போது ‘ராஞ்சனா’ இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறாராம்.

இப்படம் `ராஞ்சனா’ படத்தின் 2ஆம் பாகமாக உருவாகுகிறது.

முதல் பாகத்தில் ‘உயிர்த்து எழுவேன்’ எனச் சொல்லி இறந்துபோகும் இவரது குந்தன் குமார் கேரக்டர் இதில் உயிர்த்தெழுவது போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் இதில் அவர் அரசியல்வாதியாக நடிக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே கொடி படத்தில் அரசியல்வாதியாக கலக்கியிருந்தார் தனுஷ் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அதிகம் பார்க்கப்பட்டவை – சூரியாவின் NGK யில் தனுஷ் !! 

சூர்யா பிறந்தநாளுக்கு முதல் நாளே விருந்து வைக்கும் *என்ஜிகே* டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்தல் நடித்து வருகிறார் சூர்யா.

இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், ஜெகபதிபாபு, ராம்குமார் கணேசன், இளவரசு, பாலா சிங் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்,

எஸ்ஆர். பிரபுவின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இதில் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடுகிறார்.

வருகிற ஜூலை 23-ல் சூர்யா அவரது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், அன்று சர்ப்ரைஸ் கொடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதாவது , ஜூலை 22ம் தேதியே மாலை 6 மணிக்கு என்ஜிகே படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதிகம் பார்க்கப்பட்டவை : சூரியாவின் NGK யில் தனுஷ் !! 

விஜய் டிவி புகழ் காரைக்கால் பாலாவை சினிமாவுக்கு அழைத்த விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலக்க போவது யாரு? என்ற நிகழ்ச்சி மூலம் யார் இந்த பாலா..? என பலரையும் கேட்க வைத்தவர்.

இவரை பற்றிய சிறிய அறிமுகம்.

காரைக்கால் அருகில் உள்ள நெடுங்காடு என்ற கிராமம் தான் பாலா பிறந்த ஊர்.

மிமிக்ரி திறமையை கொண்டிருந்த இவரை தயாரிப்பாளர் அமுதவாணன் விஜய் டி.விக்கு அழைத்து வந்தார்.

கலக்க போவது யாரு? என்ற நிகழ்ச்சி இவரை தமிழகமெங்கும் கொண்டு சென்றது.

தற்போது இவரை ஜூங்கா படம் மூலம் சினிமாவுக்கு கொண்டு வந்துவிட்டார் விஜய் சேதுபதி.

இவரது அறிமுகம் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது…

பாலா திறமையானவர். தனக்கான காமெடி ஸ்கிரிப்டுகளை அவனே எழுதுகிறான்.

நல்ல காமெடி நடிகனாக வலம் வருவான். அவனை அறிமுகப்படுத்துவதில் எனக்கு பெருமையே.” என்றார்.

பாலா கூறியதாவது: எங்கள் காரைக்காலில் விஜய் சேதுபதி அண்ணாவுக்கு ரசிகர் மன்றம் வைத்து அதன் தலைவராக இருந்தேன். அவரது படத்தில் நான் சினிமாவில் அறிமுகமாவது பெருமை” என்றார்.

Karaikal Bala entering into Tamil Cinema by Vijay Sethupathis Junga

சிறுமியை 17 பேர் கற்பழித்த விவகாரம்; கடும் தண்டனை வழங்க கமல் வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையைச் சேர்ந்த 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 17 பேர் 7 மாதங்களாக கற்பழித்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளது.

தற்போது அந்த 17 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது…

மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இவர்களிடம் மனிதாபிமானம் பார்க்க தேவையில்லை.

இவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும். நீதி விரைவாக செயல்பட வேண்டும், நின்று கொல்வதெல்லாம் நீதிக்கு ஆகாது. தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்ட ஒரு விஷயம் இது.” என கடுமையாக பேசினார்.

Kamal reaction to 17 Men Who Allegedly Raped 11 year old Girl case

கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ் ஸ்டுடியோவை துவக்கி வைத்த யுவன்-சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டப்பிங் சீரியல் உலகில் குறிப்பிடத்தக்க முக்கிய நிறுவனங்களில் ஒன்று தான் ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’.

கடந்த பனிரெண்டு வருடங்களுக்கு மேலாக வெற்றிநடை போட்டுவரும் இந்த நிறுவனம், தற்போது தனது கிரீன் ஆப்பிள் ஸ்டுடியோவின் புதிய கிளை ஒன்றை இன்று திறந்துள்ளது.

ராதாரவி, யுவன்சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கடந்த 12 வருடமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளின் முக்கிய சேனல்களுக்கும் சீரியல்களை டப்பிங் செய்து கொடுத்து வருகிறது இந்த நிறுவனம்.

இன்று தமிழ் சேனல்களில் சக்கைபோடு போடும் விநாயகர், சாயிபாபா, ஹனுமான், நாகினி ஆகிய தொடர்கள் எல்லாம் இவர்கள் ஸ்டுடியோவில் மொழிமாற்றம் பெற்று வந்தவைதான்.

இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான டப்பிங் படங்களை உருவாக்கியது, ஆயிரம் அனிமேஷன் சீரிஸ் படங்களுக்கு மேல் மொழிமாற்றம் செய்தது என இமாலய சாதனையை தங்கள் உழைப்பால் எளிதாக தொட்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல 2008 முதல் தயாரிப்பிலும், திரைப்பட விநியோகத்திலும் கிளை விரித்த இந்த நிறுவனம் இரண்டு படங்களை தயாரித்துள்ளது.

அதுமட்டுமல்ல, காதலில் விழுந்தேன் உட்பட சன் பிக்சர்ஸின் அனைத்து படங்களையும் விநியோகம் செய்துள்ளனர்.

என்றாலும் விநியோகம், தயாரிப்பு என்பது இவர்களின் கிளைகள் தான். டப்பிங் சீரியல், அனிமேஷன் சீரிஸ்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துவரும் இவர்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் புதுப்புது ஆர்டர்களை சமாளிப்பதற்காகவே இந்த புதிய ஸ்டுடியோவை கூடுதலாக திறந்துள்ளனராம்.

Green Apple Productions Studio Launch news updates

More Articles
Follows