பகலில் கஜினிகாந்த்; இரவில் முரட்டு குத்து… சந்தோஷை கலாய்த்த ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள கஜினிகாந்த் அடுத்த மாதம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து பட புகழ் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ஆர்யா, சாயிஷா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

அப்போது ஆர்யா பேசும்போது…

ஞானவேல்ராஜா என்னிடம் கால்ஷீட் கேட்ட உடனே ஓகே சொல்லிவிட்டேன். அதன்பின்னர் யார் டைரக்டர் என்று கேட்டேன்? நம்ம சந்தோஷ்தான் என்றார்.

ஆனால் சந்தோஷ் அவர்களோ இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை அப்போது இயக்கி கொண்டிருந்தார். அவர் உடனே எப்படி கஜினிகாந்த் படத்தை தொடங்க முடியும் என்று கேட்டார்.

அதற்கு ஞானவேல்ராஜாவே.. அந்த படத்தை இரவில் சூட்டிங் செய். இந்த கஜினிகாந்த் படத்தை பகலில் சூட்டிங் செய் என்றார்.

அதுபோல் மாறி மாறி இரண்டு படங்களையும் சூட்டிங் செய்தார் சந்தோஷ்.

ஹீரோக்கள் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கலாம். ஆனால் ஒரு டைரக்டர் எப்படி இரண்டு படங்களை ஒரே நேரத்தில் செய்ய முடியும்.

நானே எப்படிடா? இப்படி செய்கிறாய்? என்று கேட்டேன். அவன் வாட்ஸ் அப் இருக்கிறது. பக்கா ப்ளான் இருக்கிறது. செய்கிறேன் என்றான்.

அப்படி ஒரு திட்டமிட்டு எல்லாத்தையும் செய்கிறான்.

சாயிஷா நடனத்தில் செம. நான் இரண்டு மணி நேரம் பயிற்சி செய்வேன். அவர் அசால்ட்டாக 5 நிமிடத்தில் செய்துவிடுவார்.

மாஸ்டர் பாபா பாஸ்கர் சார் என்னை ஆட வைக்க சிரமப்பட்டார். நான் என்னைப் போல் சாயிஷாவை ஆட சொல்லுங்கள்” என்றேன்.

ரஜினி ரசிகருக்கு அம்மாவாக நடிக்கனும்; இம்சை அரசி சித்ரா காஜலின் ஆசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாட்ஸ் அப்பால் பலர் வாழ்க்கையை இழந்தாலும் சிலருக்கு அதுவே வாழ்க்கையை அமைத்து கொடுக்கிறது.

அதாவது ஜிமிக்கி கம்மல், பிரியா வாரியர், பிஜிலி ரமேஷ் என பலர் இதனால் பிரபலமாகியுள்ளனர்.

அதுபோல் சமீபகாலமாக இளைஞர்கள், இளம் பெண்களின் இம்சை அரசியாக மாறியிருப்பவர் சித்ரா காஜல்.

டப்ஸ் மாஸ் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

இவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகை என கூறியிருக்கிறார்.

மேலும் விஜய், விஜய் சேதுபதியை மிகவும் பிடிக்குமாம்.

இவருக்கு சினிமாவில் நடிக்க ஆசையாம்.

அத்துடன் ராகவா லாரன்ஸ்க்கு அம்மாவாக ஒரு முறையாவது நடிக்க வேண்டும்.

அடுத்த ஜென்மத்தில் அவர் எனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

நடிகர் லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

*அடங்காதே* பட டப்பிங்கை தொடங்கிய சரத்குமார்-ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’.

இதில் இவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார்.

மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணியை இன்று தொடங்கி இருக்கிறார்கள்.

இதில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் சரத்குமார் தங்களது காட்சிக்கான டப்பிங்கை பேசியுள்ளனர்.

ஸ்ரீ கிரீன் புரோடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் உருவாக்கி இருக்கிறார்கள்

மம்முட்டிக்கு மகனாக நடிப்பாரா கார்த்தி..? காத்திருக்கும் *யாத்ரா* குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாக பிரபலங்கள் வாழ்க்கை வரலாறு நிகழ்வுகள் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது.

அதுபோல் ஆந்திர முன்னாள் முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதை தெலுங்கில் யாத்ரா என்ற பெயரில் படமாக உருவாகி வருகிறது.

இதில் ஒய்.எஸ்.ஆர். வேடத்தில் நடிக்கிறார் மம்முட்டி.

மகி. வி. ராகவ் இயக்கிவரும் இப்படத்தை அடுத்த 2019ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிட உள்ளனர்.

ஒய்.எஸ்.ஆரின் மகனான ஒய்.எஸ்.ஆர்.ஜெகன் வேடத்தில் நடிக்க இதுவரை எவரும் முன்வரவில்லை.

ஜெகன் கேரக்டர் கார்த்திக்கு பொருத்தமாக இருக்கும் அவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இதுவரை கார்த்தியிடம் இருந்து பதில் வரவில்லை என்பதால் யாத்ரா யூனிட் காத்திருக்கிறதாம்.

தெலுங்கு சினிமாவில் கார்த்திக்கு நல்ல பெயர் உள்ளதால் அவர் ஒப்புக் கொள்வார் என ஒரு தரப்பு கூறினாலும், இது அரசியல் சார்ந்த படம் என்பதால் அவர் மறுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Will Karthi teams up with Mammootty in Yatra movie

பிரபுதேவா பெயரை அழித்து பாசிட்டிவிட்டியாக மாற்றிய நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக திகழ்கிறார் நயன்தாரா.

இவர் 33 வயதை தாண்டிவிட்டாலும் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சிம்புவுடன் காதல் கொண்டார். அதன்பின்னர் அது முறிந்து போனது.

பின்னர் பிரபுதேவா காதல் திருமணம் வரை சென்றது. இதற்காக பிரபுதேவா தன் மனைவியை விவாகரத்தும் செய்தார்.

ஆனால் இந்த காதலும் முறிந்துபோனது.

பிரபுதேவா உடன் காதல் கொண்டபோது தனது இடது கையில் பிரபு என பச்சைக் குத்திக் கொண்டிருந்தார் நயன்தாரா.

அந்த பச்சையை தற்போது அழிக்காமல் அதை அப்படியே கொஞ்சம் மாற்றி பாசிட்டிவ்விட்டி என பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

கோலமாவு கோகிலா படத்திலுள்ள நயன்தாராவின் போட்டோக்கள் வெளியாகியுள்ளது. அதில் அந்த Positivity பச்சை க்ளியராக தெரிகிறது.

இப்படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

தற்போது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Positivity tattoos text in Nayantharas left hand

புதுமையான நிகழ்ச்சியை அரங்கேற்றும் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய திரை இசையமைப்பாளர்களில் குறிப்பிடும்படியான ஒரு சிறந்த இடத்தில் இருப்பவர் ரமேஷ் வினாயகம்.

பிரபல இயக்குனர் திரு மௌலி அவர்களுடைய சில தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்த அவர், இயக்குனர் வசந்த் அவர்களின் இயக்கத்தில் உருவான ‘ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படங்களில் தன் கலைப்பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து நள தமயந்தி, அழகிய தீயே, ஜெர்ரி, மொசக்குட்டி போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இயக்குனர் ஞான ராஜசேகர் அவர்களின் அற்புதப் படைப்பான ‘ராமானுஜன்’ திரைப்படத்தின் அவரது இசைக்காக தமிழக அரசு அவருக்கு‘சிறந்த இசையமைப்பாளர்’ விருது வழங்கி கௌரவித்தது.

‘காந்தி’ புகழ் கிங் பென்ஸ்லீ நடித்த ஓர் ஆங்கிலப் படத்திற்கும் அவர் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக இசையில் மிகுந்த தேர்ச்சியுடைய திரு. ரமேஷ் வினாயகம் தற்போது புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

கர்னாடக ராகங்களில் அமைந்த கிருதிகளை இயற்றி, அவற்றிற்கு இசையமைத்து, இசைக்கருவிகளுடன் ஒருங்கிணைத்து அவர் இந்நிகழ்ச்சியை வழங்கப் போகிறார்.

சிறப்பம்சமாக, அக்கிருதிகளை புகழ்ப்பெற்ற இசைக் கலைஞர்களான அருணா சாய்ராம், உன்னி கிருஷ்ணன், அபிஷேக் ரகுராம், ஸ்ரீராம் பரசுராம் மற்றும் அனுராதா ஸ்ரீராம், நித்யஸ்ரீ மகாதேவன், சிக்கில் குருசரண், காயத்ரி வெங்கட்ராகவன், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், திருச்சூர் சகோதரர்கள் ஆகிய கர்நாடக இசைக் கலைஞர்கள் பாடப் போகிறார்கள்.

இதற்காக திரு. ரமேஷ் வினாயகத்துடன் 50 இசைக் கலைஞர்கள் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை ஹாரிங்டன் சாலை, லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கத்தில் இம்மாதம் ஜீலை 28ந்தேதி, மாலை 6.30க்கு இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதற்கான டிக்கெட்டுகள் ‘Book My Show’ தளத்தில் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

Music director Ramesh Vinayakam going to conduct live stage show

 

More Articles
Follows