லட்சுமி மிட்டல்-டிஆர்பாலு ஆகியோருடன் கஸ்தூரிக்கு இப்படியொரு தொடர்பா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியை தவிர கமல், பிரபு, உள்ளிட்ட எல்லா டாப் ஹீரோக்களுடன் நடித்தவர் கஸ்தூரி.

அண்மைகாலமாக இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜீன் 15ஆம் தேதி இவர் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

அப்போது இவரே எனக்கும் தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கும் என்ன தொடர்பு என்று ஒரு ட்வீட்டும், TR பாலுவிற்கும் கஸ்தூரிக்கும் என்ன? தொடர்பு என மற்றொரு ட்வீட்டையும் பதிவு செய்தார்.

இறுதியாக எங்கள் மூவருக்கும் இன்றுதான் பிறந்தநாள் என பதிவிட்டு கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Actress Kasthuri connection with Lakshmi Mittal and TR Balu

நடிகை கஸ்தூரிக்கும் பெரும்பணக்காரர் தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கும் என்ன தொடர்பு? #கிசுகிசு
— kasturi shankar (@KasthuriShankar)

அதே தொடர்பு திரு TR பாலுவிற்கும் கஸ்தூரிக்கு உண்டு. #கிசுகிசு2 கண்டுபிடிங்க . #openchallenge https://t.co/75sOzUg68R
— kasturi shankar (@KasthuriShankar)

அட, இந்த வம்பு #கிசுகிசு வைரலாகிடுச்சே! TR பாலு அவர்களுக்கும் லட்சுமி மிட்டலுக்கும் எனக்கும் இன்று பிறந்தநாள். #அம்புட்டுதேன். @TRBRajaa
— kasturi shankar (@KasthuriShankar)

கமல்-சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்தார் சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் நாதம்பாள் நிறுவனம் சார்பாக சத்யராஜ் தயாரித்து அவரது மகன் சிபிராஜ் நடித்துள்ள படம் சத்யா.

இதே பெயரில் உருவான படத்தை கமல், அமலா நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படம் 1988ல் வெளியானது.

இப்போது உருவாகும் சத்யா படத்தை சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ரம்யா நம்பீசன், வரலட்சுமி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எனவே இப்படத்தின் தலைப்பை கொடுத்த நடிகர் கமல்ஹாசனுக்கும், டிரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயனுக்கும் சத்யராஜ் நன்றி தெரிவித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

Sathyaraj says thanks to Kamalhassan and Sivakarthikeyan

தனிவழி ஸ்டைலில் தனிக்கட்சி; ரஜினிக்கு திருமாவளவன் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போர் வரும்போது களத்தில் சந்திப்போம் என ரசிகர்கள் மத்தியில் தன் அரசியல் பிரவேசத்தை சூசகமாக தெரிவித்தார் ரஜினி.

இதனையடுத்து அவரது கருத்து தமிழகத்தின் விவாத பொருளாக மாறிவிட்டது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ரஜினி குறித்து பேசியதாவது…

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் புதிதாக கூட்டணி அமையும்.

என் வழி தனி வழி என்று அவர் சொன்னது போல தனிக்கட்சி தொடங்க வேண்டும்.

அவர் தனிக்கட்சி தொடங்கினால் அது பாஜகவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

காங்கிரஸ் அல்லது பாஜக கட்சிகளில் ரஜினி இணைந்தால் அவருக்கு எதிர்பார்க்கும் பலன் இருக்காது.” என்றார்.

விஜய் பிறந்தநாளில் அரசியல் குறித்த அறிவிப்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் தன் பயணத்தை தொடங்கிய போது, காதல் ரூட்டில் பயணித்தார் விஜய்.

ஆனால் சமீபகாலமாக சமூகம் சார்ந்த விஷயங்களை தன் படங்களில் கொண்டு வருகிறார்.

கத்தி படத்தில் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினை, பைரவா படத்தில் கல்வி ஊழல் பிரச்சினை என கலக்கி வருகிறார்.

இதனால் அரசியலில் இறங்க விஜய் ஆழம் பார்க்கிறாரோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

மேலும், அண்மையில் விஜய் பேசிய… விவசாயிகளை காக்க நல்லரசு உருவாக வேண்டும் என்று அவர் கூறிய கருத்து அரசியல் உலகில் அதிகம் கவனிக்கப்படுகிறது.

இந்நிலையில், விரைவில் தேர்தல் அரசியலில் கால் பதிப்பதற்கான பணிகளை விஜய், தனது மக்கள் இயக்கத்தின் மூலம் தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதன்படி, சமீபத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியதாகவும், மன்ற உட்கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான பணிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், விஜய்யின் 43 பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

நெருப்பில்லாமல் புகையாது என்பது இதுதானோ…??

சிவகார்த்திகேயனின் புதுப்பட பூஜை; படக்குழுவை மிஞ்சிய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலைக்காரன் படத்தை முடித்துவிட்டு இன்றுமுதல் தன் 12வது படத்தில் நடிக்கத் துவங்குகிறார் சிவகார்த்திகேயன் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

பொன்ராம் இயக்கவுள்ள இப்படத்தில் சமந்தா, சூரி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் சிம்ரன் மற்றும் நெப்போலியன் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.

இமான் இசையமைக்கும் இப்படத்தை தனது 4வது படைப்பாக்க உருவாக்குகிறது 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம்.

படத்தின் ஒளிப்பதிவை திரு.பாலசுப்ரமணியமும், படத்தொகுப்பை திரு.விவேக் ஹர்ஷனும், கலை இயக்கத்தை திரு.முத்துராஜ் அவர்களும் கையாள உள்ளனர் .

தென்காசியில் ஒரு மாதத்திற்கு இதன் சூட்டிங் நடைபெற உள்ளது.

இதற்கான பூஜை இன்று போடப்பட்டது.

இதே வேளையில் இப்படம் வெற்றி பெற, சிவகங்கை மாவட்ட சிவகார்த்திகேயன் தலைமை மன்றம் சார்பாக கோயிலில் பூஜையும் போடப்பட்டது.

சிவகார்த்திகேயன் படக்குழுவினரையே இந்த ரசிகர்கள் மிஞ்சி விட்டார்களே…

விவசாயிகள் போராட்டம் தெரிகிறது; எங்க உயிர் பிரச்சினை தெரியலையே? தனுஷ் தந்தை ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், கில்டு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து டிவிக்களில் புதுப்படங்களின் பாடல்கள் மற்றும் காட்சிகளை பயன்படுத்தக்கூடாது என உத்தரவை அண்மையில் பிறப்பித்தது.

இதுபற்றி பிரபலஇயக்குனரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா பேசுகையில்….

நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் தெரிகிறது. உயிருக்குப் போராடும் சினிமா தயாரிப்பாளர்கள் முகங்கள் தெரிவதில்லை.

ஒருத்தருக்கு சொந்தமான பொருளை அவருடைய அனுமதி இல்லாமல் வைத்திருப்பதும் பயன்படுத்துவதும் குற்றமே.

அதைத்தான் இன்று நிறைய டிவி சேனல்கள் செய்கின்றன.

நான் தயாரித்த ‘நாட்டுப்புற பாட்டு’ ‘துள்ளுவதோ இளமை’ என்று என்னுடைய எல்லா படங்களுக்கான சாட்டிலைட் உரிமையை குறிப்பிட்ட சேனலுக்கு மட்டுமே விற்று இருக்கிறேன்.

ஆனால் என் படங்களின் எந்தவித உரிமைகளையும் பெறாத இன்னொரு டி.வி என் படங்களை ஒளிபரப்புகிறது. இது எப்படி நியாயம்? ” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows