தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஓரிரு தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் ஆட்சி குறித்து பேசியிருந்தார்.
அப்போது…
10 ஆண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழ்நாட்டை, பத்து மாதங்களில் தலைநிமிர வைத்திருக்கிறோம்
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி
கேரளாவில் எனக்கு கிடைத்த வரவேற்பு தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த மரியாதை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.
இதனை கலாய்க்கும் வகையில் நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
பத்து ஆண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை, 10 மாதங்களில் தலைநிமிர வைத்து உள்ளோம்’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறிஉள்ளார்.
கட்சிக்காரங்க வருமானத்தை சொல்கிறார் போல. வெளியே வந்து உண்மை நிலவரத்தை பாருங்கய்யா… நல்லது நடக்கவில்லை என சொல்லவில்லை. ஆனால் செய்தது கைமண்ணளவு… நிறைவேற்ற வேண்டியது நிறைய இருக்கிறது. பாராட்டக் காத்திருக்கிறோம்.”
என பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.
Actress Kasthuri tweets against TN govt
