இப்பவாச்சும் சொன்னாரே ரஜினி… உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது.. – கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேர்தல் அரசியலுக்கு வர முடியாத சூழ்நிலையை நேற்று நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை மூலமாக வெளியிட்டார்.

அதில்.. “நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது” என்றார்.

மேலும்… “என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

ரஜினியின் அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கும் நல்ல அரசியல் மாற்றத்தை எதிர்ப்பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் முடிவு குறித்து
நடிகை கஸ்தூரி தன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்..

“எதிர்பார்த்ததுதான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம்.

வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை.

கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது.

ரஜினி அவர்களின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழவேண்டும்” என கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

Kasthuri about Rajinikanth political desicion

மாஸ்டர் ரிலீஸ்… விஜய் வேண்டுகோள்.; முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி இணைந்துள்ள படம் ‘மாஸ்டர்’.

இப்படம் தணிக்கை செய்யப்பட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது.

அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி தமிழ், ஹிந்தி & தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

ஹிந்தியில் ‘விஜய் தி மாஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் எனவும் முதல்வரை சந்தித்து நடிகர் விஜய் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் வைத்துள்ள கோரிக்கையை ஆலோசித்து நல்ல முடிவை முதல்வர் அறிவிப்பார் என கடம்பூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.

CM will take good decision about Master release says minister

ரஜினி நீங்க விலைமதிப்பற்றவர்.; உங்க முடிவு தமிழக இதயங்களை உடைத்துவிட்டது.. – குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாகவே ‘ரஜினியும் அரசியலும்’ என்ற நிலை தான் தமிழகத்தில் கால் நூற்றாண்டுகளாக உள்ளது.

இந்த டிசம்பர் மாதம் மட்டுமே தன் பரபரப்பு அறிக்கைகளால் அரசியல் களத்தை சூடாக்கினார் ரஜினிகாந்த்.

ஜனவரியில் கட்சி தொடக்கம்; டிசம்பர் 31 ல் தேதி அறிவிப்பு’ எனஅரசியல் நிலைப்பாட்டை தெரிவித்தார் ரஜினி.

ரஜினியின் இந்த முடிவுக்கு…

“ஒரு வழியாக நீங்கள் அரசியலில் இறங்குகிறீர்கள். மகிழ்ச்சி. உங்கள் புதிய பாத்திரத்துக்கு வாழ்த்துகள்” என வாழ்த்தினார் குஷ்பு.

தற்போது, கட்சி தொடங்கவில்லை என நேற்று அறிவித்தார் ரஜினிகாந்த்.

இது குறித்து குஷ்பூ தெரிவித்துள்ளதாவது…

அன்புள்ள ரஜினிகாந்த் சார், உங்களுடைய முடிவு அனைத்து தமிழர்களின் இதயங்களையும் உடைத்துவிட்டது.

ஆனால் உங்கள் ஆரோக்கியம் & உடல்நலத்திற்கு முன்பு வேறெதுவும் பெரிதல்ல என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

உங்கள் நலம்விரும்பியாக, ஒரு தோழியாக உங்களுடைய முடிவை வரவேற்கிறேன்.

நீங்கள் எனக்கு விலைமதிப்பற்றவர். நன்றாக மகிழ்ச்சியாக இருங்கள்” என தெரிவித்துள்ளார் குஷ்பூ.

Khushbu sundar about Rajinikanth’s political desicion

அரசியலில் வெறி எது.? வீரம் எது.? விளக்கம் கொடுத்த உலக நாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

“எதைச் செய்தாவது ஜெயிக்க வேண்டுமென நினைப்பவர்கள் நாடு பிடிக்க நடிக்கிறார்கள்.

எதையாவது செய்ய ஜெயித்தாக வேண்டுமென துடிப்பவர்கள் நாடு காக்கத் துணிகிறார்கள்.

முன்னது வெறி. பின்னது வீரம்.

நீங்கள் யார் பக்கம்..?

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan’s recent political punch on twitter

அரசியலுக்கு வரமாட்டார் ரஜினி..; அன்றே சொன்ன ‘டிரெண்டிங் ஜோதிடர்’ பாலாஜிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடந்து முடிந்த அமெரிக்கா தேர்தலில் உலகமே டிரம்ப் அவர்கள் ஜெயிப்பார் என கருத்துகளை வெளியிட்ட நேரத்தில் 300 முதல் 310 இடங்களை பெற்று ‘ஜோ பைடன்’ தான் வெற்றி பெறுவார் என கணித்து அசத்தினார் ‘டிரண்டிங் ஜோதிடர்’ பாலாஜி ஹாசன். அதே போன்றே இலங்கை தேர்தலிலும் அவர் கணித்தது போலவே ராஜபக்சே வெற்றி பெற்றார். அதற்கு முன்னரும் 34 க்கும் அதிகமான தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே கணித்து தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டு பார்ப்பவர்களை அதிசயப்படுத்தி வருகிறார்.

இப்படி தொடர்ச்சியாக ஜோதிட உலகில் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தி வரும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் அவர்கள், தமிழக அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே News7 தொலைக்காட்சியிலும், வேந்தர் தொலைக்காட்சியிலும் மிகச் சரியாக கணித்துக் கூறினார் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

YouTube Channel Link : https://youtube.com/channel/UC9ABPCcwLk1_CUstg-GbAxA

Astrologer Balaji Haasan prediction on Rajinikanth’s political desicion

‘பிக்பாஸ்’ அனிதா தந்தை மரணம்..; டாடி வீட்டுக்கு வா உன்கிட்ட பேசனும்.. அனிதா அழுகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கியவர் அனிதா சம்பத்.

3 மாதங்களுக்கு முன்பிலிருந்து பிக்பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளராக இருந்தார்.

84 நாட்களாக பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த அனிதா 10-வது போட்டியாளராக வெளியேறினார்.

இந்த நிலையில் அனிதாவின் தந்தை ஆர்.சி.சம்பத் இறந்துவிட்டார்.

அவர் தரிசனத்திற்காக ஷீரடி சென்ற போது ரயிலில் திடீரென இறந்துள்ளார்.

இது குறித்து அனிதா தனது இன்ஸ்டாகிராம் பதிவில்….

‘என்னால் அவர் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. டாடி நீ வீட்டுக்கு வரனும். உன்கிட்ட நிறைய பேசணும்.

உன் வாய்ஸ் கேட்டு 100 நாள் மேல ஆச்சு’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார் அனிதா.

Bigg Boss Tamil 4 Anitha Sampath father passed away

More Articles
Follows