உரு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கலையரசன், தன்ஷிகா, மைம் கோபி, டேனியல் மற்றும் பலர்.
இயக்கம் : விக்கி ஆனந்த்
இசை : ஜோஹன்
ஒளிப்பதிவாளர் : பிரசன்னா எஸ் குமார்
எடிட்டர்: சான் லோகேஷ்
பி.ஆர்.ஓ. : சி.என். குமார்
தயாரிப்பு : வையம் மீடியாஸ்

கதைக்களம்…

எழுத்தாளர் கலையரசன். ஒரு காலத்தில் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்டவர். பின்னர் நாளடையில் அவரின் கதைகளுக்கான மவுசு குறையவே விரக்தியில் இருக்கிறார்.

இவரின் மனைவி தன்ஷிகா. கணவருக்கு வேலையில்லாமல் இருப்பதாலும், குழந்தையில்லாமல் இருப்பதாலும் மிகுந்த கவலையில் இருக்கிறார்.

இந்நிலையில் ஒரு த்ரில்லர் கதைக்கான கரு கிடைக்கவே அதை எழுத வேண்டி தனிமைக்காக அடர்ந்த மேகமலைக்கு செல்கிறார்.

அங்கு இருந்து கதை எழுத, அவரை சுற்றி பல அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகிறது.

ஒரு உருவம் இவரை துரத்துகிறது. இந்நிலையில் அங்கு தன்ஷிகா வந்து சேர, அவரையும் கொலை செய்ய முற்படுகிறது.

அந்த உருவம் யார்? எதற்காக இவர்களை கொல்ல வேண்டும்? அந்த கதையை எழுதி முடித்தாரா? தன்ஷிகாவை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.


கேரக்டர்கள்…

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதற்காகவே கலையரசனுடன் கை குலுக்கலாம்.

அதே கண்கள், எய்தவன் என ஒரு படி ஏறியவர் உருவிலும் முன்னேறியிருக்கிறார்.

தனியாகவே நின்று ஸ்கோர் செய்பவர் தன்ஷிகா. இதிலும் அசத்தியிருக்கிறார். குட். கீப் இட் அப்.

இவர்களைத் தவிர மைம் கோபி மற்றும் டேனி ஆகியோர் உள்ளனர். அவர்களுக்கான கேரக்டரில் இன்னும் வலு சேர்த்திருக்கலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். அடர்ந்த காட்டுக்குள் அந்த வளைவான பாதைகள் அதில் கார் செல்லும் காட்சிகள் அசத்தல்.

அந்த இரவு வெளிச்சத்திலும் இவரது கேமரா விளையாடியுள்ளது.

பின்னனி இசை யில் ஜோகன் மிரட்டியிருக்கிறார்.

வித்தியாசமான கதையை கொடுத்த விக்கி ஆனந்துக்கு நன்றி. யார் அந்த உருவம் என ரசிகர்களை சீட் நுனியிலே உட்கார வைத்து விடுகிறார்.

ஆனால் அதே நேரம் அந்த தவிப்பை க்ளைமாக்ஸில் கொடுத்திருந்தால் இந்த உருவின் ரேஞ்சே வேற.

அட இவ்வளவுதானா? என்ற க்ளைமாக்ஸ் எண்ண வைக்கிறது.

மேலும், படத்தில் கொஞ்சம் ரொமான்ஸ், காதல் பாடல், காமெடி என சேர்ந்திருந்தால் படத்திற்கு கூடுதல் பலம் கிடைத்திருக்கும்.

உரு… உருப்படியானவன்

மரகத நாணயம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம், எம்எஸ் பாஸ்கர், மைம் கோபி, முருகானந்தம் மற்றும் பலர்.
இயக்கம் : ஏஆர்கே சரவன்
இசை : திபு நைனன் தாமஸ்
ஒளிப்பதிவாளர் : பிவி ஷங்கர்
எடிட்டர்: ஜிகே பிரசன்னா
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : அக்சஸ் பிலிம் பேக்டரி (ஜி. டில்லி பாபு)

கதைக்களம்…

அரசர் காலத்தில் உள்ள ஒரு மரகத நாணயம் பல பேரிடம் கை மாறி கை மாறி, எம்எஸ் பாஸ்கரிடம் வந்தடைகிறது.

இந்நிலையில் சீனா நாட்டைச் சேர்ந்த ஒருவர் மைம் கோபியிடம் அதனை தனக்கு பெற்றும் தரும்படி வருகிறார்.

ஆனால் அந்த மரகத நாணயத்தை தொட்ட எவரும் உயிரோடு இருக்கமாட்டார்கள் என்பதால் எல்லாரும் பின்வாங்குகிறார்கள்.

அதனை தொட்ட 130க்கும் மேற்பட்டோர் அந்த மரகத நாணயத்தால் இறந்து விடுகின்றனர்.

இந்நிலையில் ரூ. 10 கோடிக்கு ஆசைப்பட்டு இந்த புரொஜக்டை எடுக்கின்றனர் ஆதி மற்றும் டேனி.

இவர்களுக்கு துணையாக இறந்துபோன முனிஷ்காந்த் வருகிறார். அவருக்கு துணையாக இறந்துபோன நிக்கி கல்ராணி மற்றும் அருண்ராஜா காமராஜ் ஆகியோரும் வருகின்றனர். (அது எல்லாம் எப்படி என்று கேட்டால் லாஜிக் இருக்காது)

இதனிடையே ஆனந்த் ராஜ் கும்பலும் அந்த மரகத நாணயத்தை தேடி அலைகின்றனர்.

மரகத நாணயம் யாருக்கு கிடைத்தது? எப்படி கிடைத்தது? பேய்கள் எப்படி உதவியது என்பதே இந்த மரகத நாணயம்.

கேரக்டர்கள்…

ஈரம் படத்திற்கு பிறகு ஒரு ஆதிக்கு இதில் ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. அவரது உடலுக்கு ஏற்ற ஆக்சன் இல்லையென்றாலும் கதையோடு ஒன்றிவிடுகிறார்.

அழகான நாயகி நிக்கி கல்ராணி அசத்தல். புடவை என்றாலும் ஜீன்ஸ் என்றாலும் அவருக்கு செம பிட்.

இதில் இவரின் கேரக்டருக்கு காளி வெங்கட் வாய்ஸ் கொடுத்திருப்பது கலக்கல். அதற்கான காரணத்தை படத்தில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஆதிக்கு இணையாக ஸ்கோர் செய்பவர் முனிஸ்காந்த் ராமதாஸ்தான். எலுமிச்சை பழத்தை கொண்டு உயிர்தெழுத்துவதும், அதன்பின்னர் இவர் செய்யும் சேஷ்டைகளும் காமெடியின் உச்சம்.

டிவிங்கள் ராமநாதன் கேரக்டரில் அமர்களப்படுத்தியிருக்கிறார் ஆனந்த்ராஜ். இவரின் அடியாட்களும் அவர்களின் யூனிபார்ம் என அனைத்தும் கலக்கல்.

இப்ப காமெடி டிரெண்ன்ட் ஆனதால் வில்லன் நானும் காமெடி பண்ண வேண்டியதா போச்சு என்னும்போது சிரிக்க வைக்கிறார்.

அருண்ராஜா காமராஜ் அருமையான தேர்வு. இவர் முன் ஆனந்த்ராஜின் ரேடியோ பாட்டு பாட இவர் ஆடுவதும், பின்னர் யோவ் உங்க அண்ணன் எதுக்குயா? என்கிட்ட பேசுறாரு? நீ பாட்ட போடுயா? என்று சொல்லும்போது ரசிக்க வைக்கிறார்.

ரங்கூனில் கலக்கிய டேனி இதிலும் நம் கவனம் ஈர்க்கிறார்.

கேரளா நம்பூதிரியாக வரும் கோட்டா ஸ்ரீநிவாச ராவ், எம்எஸ் பாஸ்கர், மைம் கோபி மற்றும் பிரம்மானந்தம் ஆகியோருக்கு இன்னும் நல்ல வாய்ப்பை கொடுத்திருக்கலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பிவி ஷங்கரின் ஒளிப்பதிவில் அந்த ஆவி காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

பாடல்களை விட திபு நைனன் தாமஸ் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.

இயக்கம் பற்றிய அலசல்…

எல்லா படத்திலும் உயிரோடு இருப்பவர்களின் உடலில் ஆவி புகுந்துவிடும். ஆனால் இதில் இறந்தவரின் உடலில் சென்று, மற்றவரின் குரலை பெற்று வருகிறது என்று பல வித்தியாசங்களை காட்டியிருக்கிறார்.

பேய்களாக வரும் பிணங்களுக்கு வாய்ஸ் மாற்றி வித்தியாசம் காட்டிய இயக்குனர் ஏஆர்கே சரவனுக்கு வாழ்த்துக்கள்.

ஆவி எப்படி மனிதனுடன் இணையும்? பிணங்கள் எப்படி உயிரோடு வரும்? வாய்ஸ் எப்படி வந்தது? போன்ற லாஜிக்குகளை நீங்கள் பார்க்க மாட்டீர்கள் என்றால் நிச்சயம் இந்த மரகத நாணயத்தை ரசித்து சிரிக்கலாம்.

மரகத நாணயம் மயக்கும் நாணயம்

தங்கரதம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : வெற்றி, அதிதி கிருஷ்ணா, சௌந்தரராஜா, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், ஆடுகளம் நரேன், பாண்டியன் மற்றும் பலர்.
இயக்கம் : பாலமுருகன்
இசை : டோனி பிரிட்டோ
ஒளிப்பதிவாளர் : ஜேக்கப்
எடிட்டர்: சுரேஸ் அர்ஸ்
பி.ஆர்.ஓ. : யுவராஜ்
தயாரிப்பு : சிஎம். வர்கீஸ்

கதைக்களம்…

தங்கரதம் என்ற பெயரிடப்பட்ட டெம்போ வைத்திருக்கிறார் ஆடுகளம் நரேன். இவரின் அண்ணன் மகன் வெற்றி.

இவரின் மற்றொரு உறவினர் மகன் சௌந்தரராஜா. சௌந்தரராஜாவின் தங்கை அதிதி.

வெற்றிக்கும் சௌந்தரராஜாவுக்கும் எப்போதும் மோதல்தான்.

ஆனால் மற்றொரு புறம் நாயகி அதிதிக்கும் வெற்றிக்கும் ரகசிய காதல்.

ஒருமுறை சௌந்தரராஜாவின் டெம்போவை வேறொருவர் அடித்து உடைக்க, அந்த பழி வெற்றி மீது விழுகிறது.

இதனால் கொலைவெறியோடு சௌந்தரராஜா அவரை துரத்த, தன் அண்ணன் மகனை காப்பாற்றவும் குடும்பத்தை சமாதானம் செய்யவும் அதிதியை தன் மகனுக்கு நிச்சயம் செய்கிறார் ஆடுகளம் நரேன்.

அதன்பின் நாயகன் என்ன செய்தார்? நாயகியை மணந்தாரா? அல்லது தன் தம்பியே அவளை மணக்கட்டும் என்று விட்டுவிட்டாரா? அல்லது தன் சித்தப்பாவை பகைத்துக் கொண்டாரா? என்பதை தங்கரதம் க்ளைமாக்ஸ் சொல்லும்.

கேரக்டர்கள்….

வெற்றி மற்றும் சௌந்தரராஜா ஆகிய இருவருக்கும் சரியான அளவு கேரக்டர். வெற்றிக்கு டூயட் இருக்கிறது. அவருக்கு இல்லை. அது மட்டுமே வித்தியாசம்.

இருவரும் தன் கேரக்டர்களில் பளிச்சிடுகிறார்கள். நாயகன் வெற்றி பேசும்போது மலையாளம் கலந்து வருவதை தவிர்த்து இருக்கலாம்.

நாயகி அதிதி குடும்ப பாங்கான முகம். உணர்ந்து நடித்திருக்கிறார்.

க்ளைமாக்ஸ் போது நாயகன் எடுக்கும் முடிவை மனதார ஏற்கும்போது ரசிக்க வைக்கிறார்.

ஆடுகளம் நரேனுக்கு இதில் வெயிட்டான கேரக்டர்தான். தன் அண்ணன் மகனை தன் மகனாக பாவித்து பாசம் காட்டும் காட்சிகளில் அசத்தல்.

தினமும் குடிக்கும் மது பிரியராக மொட்டை ராஜேந்திரன். மது அருந்தியவர்கள் கடையில் அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகைக்கு அவர் தரும் விளக்கம் செம.

அதிலும் இவரின் மனைவி கேபிள் சரியில்லை என்று கேபிள்காரனை வரவழைத்து ரூட் விடுவது காம நெடியின் உச்சம். (செம கனெக்ஷன்)

சுவாமிநாதன் வந்தாலே படத்தில் சிரிப்பு பஞ்சம் இருக்காது. ஆனால் ஓரிரு டயலாக்குகள் மட்டும் கொடுத்து இவரை டம்மியாக்கி விட்டனர்.

குள்ளமாக வரும் பாண்டியன் நல்ல தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

டோனி பிரிட்டோ இசையில் இரண்டு மெலோடிகள் ரசிக்க வைக்கிறது.

ஜேக்கப் ஒளிப்பதிவில் ஒட்டன் சத்திரம் ஊரின் அழகு படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது.

பாலமுருகன் இயக்கியுள்ள இப்பட க்ளைமாக்ஸ் கொஞ்சம் வித்தியாசமான உணர்வுதான்.

காதல் வெற்றி என்பது தன் குடும்பத்திற்காக செய்யும் தியாகத்திலும் உள்ளது என்பதை சொன்னதற்காக பாராட்டலாம்.

டெம்போ டிரைவர்கள் எப்போதும் ஸ்டைலிஷ்ஷாக  டிரெஸ் செய்துவருவதால் காட்சிகளில் ஒன்றவில்லை.

சில கேரக்டர்கள் மனப்பாடம் செய்து வைத்து பேசுவது போல் உள்ள காட்சிகளை தவிர்த்து இருந்தால் இன்னும் சிறப்பாக ஜொலித்திருக்கும்.

தங்க ரதம்… ஜொலிக்கும் ரகம்

பீச்சாங்கை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுமுகங்களை கொண்டு ஒரு புதுமையான திரைக்கதையை அமைத்து களம் இறங்கியிருக்கிறார்கள் இந்த பீச்சாங்கை குழு.

நடிகர்கள் : கார்த்திக், அஞ்சலி ராவ், எம்எஸ் பாஸ்கர், போலீஸ் ஜெயச்சந்திரன், விவேக் பிரசன்னா,  வெங்கடேஷன் மற்றும் பலர்.
இயக்கம் : அசோக்
இசை : பாலமுரளி
ஒளிப்பதிவாளர் : கௌதம் ராஜேந்திரன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு : ஆர். எஸ். கார்த்திக், பிஜி. முத்தையா

கதைக்களம்…

ஹீரோ கார்த்திக் (படத்தில் ஸ்மூத்) பிக்பாக்கெட் திருடன். தன் பீச்சாங்கையாலே ப்ளேடு போட்டு பர்ஸ் அடிப்பதில் வல்லவன்.

ஒருமுறை இவரின் பிக்பாக்கெட் தோழி, ஒரு பெரியவர் தன் மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 3 லட்ச ரூபாயை அடித்துவிடுகிறார்.

ஆனால் மனம் மாறும் இவர் பணத்தை திருப்பிக் கொடுக்க, அந்த பிக்பாக்கெட் நட்பில் விரிசல் விழுகிறது.
பணம் கொடுத்த இடத்தில் அந்த பெண்ணிடம் காதல் மலர்கிறது.

இந்நிலையில் ஒரு அரசியல்வாதி, தன் முன்னேற்றத்திற்காக சபல புத்திக் கொண்ட மற்றொரு அரசியல்வாதியின் ஆபாச வீடியோ கொண்ட செல்போனை ஒரு கும்பலிடம் திருடச் சொல்கிறார்.

அந்த கும்பல் பிக்பாக்கெட் திருடனிடம் வர, இவரும் அடித்து வருகிறார். அப்போது விபத்து ஏற்பட்டு, இவரது மூளையில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது.

அதாவது இவரது பீச்சாங்கை இவரது வலது மூளையில் பேச்சை கேட்காமல் செயல்படுகிறது. அந்த நோய்க்கு Alien Hand Syndrome என்றும் சொல்கிறார்கள்.

இதனால் இவருக்கு உண்டாகும் பிரச்சினைகளை என்ன? அந்த செல்போனை வைத்துக் கொண்டு அந்த அரசியல்வாதி என்ன செய்தார்? அந்த கும்பலை இவரை என்ன செய்தது? என்பதை டார்க் ஹியூமர் வழியில் சொல்லியிருக்கிறார்கள்.

கேரக்டர்கள்…

படத்தின் ஹீரோ பீச்சாங்தைதான். அதனை வைத்துக் கொண்டு இவர் செய்யும் சேஷ்டைகள் ரசிக்க வைக்கிறது.

அசல் பிக்பாக்கெட் திருடன் போலவே யதார்த்தமாக இருக்கிறார். பார்ப்பதற்கு நடிகர் விமல் போலவே இவரும் இருக்கிறார்.

ஹீரோயின் அஞ்சலி ராவ் சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். பார்த்த சில நேரத்தில் காதல். பின்னர் மோதல். பின்னர் காதல் என்பதால், சில பெண்களின் ஆழமான மாறும் காதலை உணர்த்துகிறது.

பீச்சாங்கைக்கு அசைன்மெண்ட் கொடுக்கும் ஒரு கும்பலும், அதனை சார்ந்த அரசியல்வாதிகளும் அருமையான தேர்வு. குண்டு மொட்டை, வழுக்கை, அரசியல்வாதியின் அடியாட்கள் என அனைவரும் தங்கள் கேரக்டர்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஹீரோயின் வீட்டில் வந்து ஹீரோவை மிரட்டும் டெரர் மீசை போலீஸ் ஜெயச்சந்திரன் நல்ல கம்பீரம். திருடன் கதையில் இவருக்கான காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம்.

அரசியல்வாதிகளாக வரும் விவேக் பிரசன்னாவும்,  வெங்கடேஷனும் நல்ல தேர்வு.

அரசியல்வாதியாக வரும் எம்எஸ் பாஸ்கர் இந்த காமெடி கூட்டணியில் இருந்திருந்தால் மற்றவர்கள் விட ஸ்கோர் செய்திருப்பார். ஆனால் அவரை சீரியசாக பயன்படுத்திவிட்டார் இயக்குனர் அசோக்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு சிறப்பு.

பாடலுக்கு படத்தில் வேலையில்லை என்று பாடல் வரிகளே சொல்லிவிட்டது. ஆனால் பீச்சாங்கை பாடல் வரிகள் நல்ல தேர்வு.

பாலமுரளி இசையில் பின்னணியில் ஒலிக்கும் பீச்சாங்கை வரிகளும் அந்த பின்னணி இசையும் நன்றாகவே ரசிக்க வைக்கிறது.

98% பேர் வலதுகையை பயன்டுத்தி வருகிறோம். எனவே இந்த பீச்சாங்கை கான்செப்ட் ரசிகர்களுக்கு கொஞ்சம் புதிதாக இருக்கலாம்.

கடைசி அரை மணி நேர காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

அருமையான கான்செப்டை செலக்ட் செய்த அசோக், இன்னும் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

பீச்சாங்கை… கை விடாது

சத்ரியன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன், கவின், ஐஸ்வர்யா தத்தா, ரியோ ராஜ், சௌந்தரராஜா, அருள்தாஸ், விஜய்முருகன், போஸ்டர் நந்தகுமார், சரத் லோகிஸ்த்தவா, ஆடுகளம் நரேன், யோகி பாபு மற்றும் பலர்.
இயக்கம் : எஸ்ஆர். பிரபாகரன்
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : சிவக்குமார் விஜயன்
எடிட்டர்: எம் வெங்கட்
பி.ஆர்.ஓ. : டைமண்ட் பாபு
தயாரிப்பு :சத்யஜோதி பிலிம்ஸ்

கதைக்களம்…

படம் ஆரம்பித்த சில நிமிங்களிலேயே அமைச்சர் போஸ்டர் நந்தகுமார் அவர்கள் திருச்சியை கட்டி ஆளும் தாதா சரத்லோகிதஸ்வாவை அருள்தாஸிடம் சொல்லி கொல்ல சொல்கிறார்.

சரத் லோகிதஸ்வா கொல்லப்பட அவருக்கு நெருக்கமான விஜய்முருகன் அந்த இடத்திற்கு வருகிறார். இவருக்கு அடுத்த இடத்தில் ரவுடியாக விக்ரம் பிரபு இருக்கிறார்.

இந்நிலையில் சரத் லோகிதஸ்வாவின் மகளுக்கு பாதுகாப்பா இருக்க வேண்டிய சூழ்நிலையில் விக்ரம் பிரபு பாதுகாவலராக இருக்கிறார்.

அதன்பின்னர் அவர்களுக்குள் காதல் உருவாகிறது. இதனால் விஜய்முருகனே விக்ரம் பிரபுக்கு எதிரியாகி விடுகிறார்.

மற்றொரு புறம் விக்ரம் பிரபுவை கொல்ல அருள்தாஸ் கூட்டமும் அலைகிறது.

இந்த இரண்டு கும்பலிடம் இருந்து தன்னையும் தன் காதலியையும் இந்த சத்ரியன் எப்படி காப்பாற்றுகிறார் என்பேதே இதன் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

வாகா, வீர சிவாஜி என துவண்டு இருந்த விக்ரம் பிரபு இப்படத்தில் மூலம் கொஞ்சம் தேர்ச்சி பெற்றிருக்கிறார் எனலாம்.

சீரியசான கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். மஞ்சிமா காதலை சொல்லும் போதெல்லாம் விலகிப் போவதில் ரசிக்க வைக்கிறார்.

ஹோம்லியாக வந்து ரசிகர்களை கவர்கிறார் மஞ்சிமா மோகன். அவரது பேச்சும் பார்வையும் ரசிகர்களை இழுக்கும்.

சுடிதார், பாவடை தாவணி என திருச்சி பெண்ணாக வந்து திரும்பி பார்க்க வைக்கிறார்.

சில காட்சிகளில் ரொம்ப டல்லாக இருக்கிறாரே? கண் அருகே கருவளையம் வேறு. என்ன ஆச்சு மஞ்சிமா? மஞ்சள் பூசலையா?

ரியோ ராஜ் மற்றும் கவின் ஆகியோரின் கேரக்டர்கள் சிறப்பு.

ஐஸ்வர்யா தத்தா பாவம். அழகாக வந்து நின்று செல்கிறார்.

அருள்தாஸ் மற்றும் போஸ்டர் நந்தகுமார் கேரக்டர்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

சௌந்தரராஜா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோருக்கு இன்னும் சிறப்பான கேரக்டரை கொடுத்திருக்கலாம்.

பல படங்களில் மிரட்டிய சரத்லோகிஸ்தவா இதில் ஒரே காட்சியில் விடைபெறுகிறார். இவரைப் போலவே யோகிபாபு கேரக்டரும் வீணடிக்கப்பட்டு இருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யுவன் சங்கர்ராஜா பின்னணி இசையில் மிரள வைக்கிறர். மைனா இரண்டு பாடலும் வைரமுத்து வரிகளும் ரசிக்க வைக்கிறது. விஜய் யேசுதாஸ் குரல் இப்பாடலுக்கு கூடுதல் பலம் கொடுக்கிறது.

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில் திருச்சி நகரை சுற்றி பார்க்க ஆசைவருகிறது.

வெங்கட் எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். யோகிபாபு கேரக்டர் படத்தில் ஒன்றையும் செய்யவில்லை. பின்பு ஏன் அந்த காட்சிகள்.?

இயக்கம் பற்றிய அலசல்….

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திருச்சியின் பின்புலத்தில் கதையை கொண்டு செல்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

வசனங்கள் பக்கபலமாய் அமைந்திருக்கிறது.

ஆனால் பல படங்களில் பார்த்த கதை என்பதால் சலிப்பு வருகிறது. ரவுடி திருந்த நினைப்பான். ஆனால் மற்றொரு கும்பல் அவனை விடாது. பின்னர் மீண்டும் கத்தி எடுப்பான்? என்பதையெல்லாம் ட்விஸ்ட் வைத்தாவது சொல்லியிருக்கலாமே பாஸ்..?

விறுவிறுப்பான ரவுடி ஸ்டோரிக்கு இன்னும் வேகம் கூட்டியிருந்தால் சத்ரியன் சதம் அடித்திருப்பான்.

சத்ரியன்… சவுண்ட் ஏத்தியிருக்கலாம்

ரங்கூன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கௌதம் கார்த்திக், சனா மக்புல், சித்திக், ஆனந்த், டேனியல், லள்ளு மற்றும் பலர்.
இயக்கம் : ராஜ்குமார் பெரியசாமி
இசை : விக்ரம் மற்றும் விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவாளர் : அனீஷ் தருண்குமார்
எடிட்டர்: பிரசன்னா ஜிகே
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : இயக்குனர் ஏஆர். முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார்

கதைக்களம்…

ரங்கூன் என்பது பர்மா நாட்டில் உள்ள ஒரு பகுதியின் பெயர்.

“பிறப்பது ஈஸி, சாகறது ரொம்ப ஈஸி ஆனா வாழறது ரொம்ப ரொம்ப கஷ்டம்” என்ற வரிகளோடு படம் ஆரம்பித்து அதே வார்த்தைகளோடு முடிகிறது.

படத்தின் நாயகன் கௌதம்கார்த்திக் அப்படி என்ன கஷ்டப்பட்டார்? என்பதை காட்சிகளோடு விவரிக்கிறார் இயக்குனர்

பர்மாவிலிருந்து அகதியாக சென்னை, சௌகார்பேட்டைக்கு பிழைக்க வருகிறார் கௌதம் கார்த்திக். வந்த இடத்தில் சிறுவயதிலேயே தந்தையை இழக்கிறார்.

வளர்ந்த பெரிய பையன் ஆன பின், பழைய தங்க நகைகளை வாங்கி விற்கும் கடையை வைத்திருக்கும் சித்திக்கிடம் வேலையிலும் சேர்கிறார்.

தனது சுறுசுறுப்பினாலும், ஒரு முறை சித்திக்கின் உயிரை காப்பாற்றியதாலும் சில நாட்களிலேயே சித்திக்கிடம் நல்ல பெயரை பெறுகிறார்.

ஒரு சூழ்நிலையில் தன் கடனை அடைக்க, தங்க கட்டிகளை கடத்தும் பொறுப்பை கௌதமிடம் ஒப்படைக்கிறார் சித்திக்.

கௌதமும் பர்மாவிலுள்ள ரங்கூனில் கொண்டு சேர்த்து அதற்கு பதிலாக அங்கிருந்து தரப்படும் 6 கோடி ரூபாயை கொண்டு வருகிறார். வரும் வழியில், இவருக்கே தெரியாமல் யாரோ? அடித்து சென்று விடுகின்றனர்.

இதனால் ஓரிரு தினங்களில் ரூ. 6 கோடி கடனை அடைக்க தள்ளப்படுகிறார்.

என்னதான் உண்மையாக உழைத்தாலும் ஓரிரு தினங்களில் ரூ. 6 கோடியை சேர்க்க முடியாது. எனவே புது ரூட்டை தேர்ந்தெடுக்கிறார்.

இதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகளே இந்த ரங்கூன்.

கேரக்டர்கள்…

கடல், வை ராஜா வை என படங்களில் தோன்றினாலும் இப்படத்தின் மூலம் நம் மனதில் நிற்கும்படி செய்திருக்கிறார் கௌதம் கார்த்திக்.

ரங்கூன் வாழ்க்கையாகட்டும், சென்னை சௌகார் பேட்டை வாழ்க்கையாகட்டும் தன்னை கேரக்டரில் பிட் செய்திருக்கிறார் கௌதம்.

காதலியுடன் கெமிஸ்ட்ரி அவ்வளவு ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் அந்த லிப்லாக் சீன் ஒன்று போதும்.

நாயகி சனாவுக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகம். கொஞ்சம் நேரம் வந்தாலும், அடிக்கடி கிப்ட் என்ற பெயரில் கிஸ் அடித்து இளைஞர்களை சூடேற்றுகிறார்.

நல்லவராக தோன்றி, சைலண்ட் வில்லன் சித்திக் அசத்தல். இவர் மலையாள நடிகர் என்பதால் படத்தில் மலையாளியாக காட்டியிருக்கலாம். மலையாளம் கலந்த தமிழுடன் பேசியது ஏனோ…?

கௌதமுடன் டிப்டாப் என்ற டேனியல், அத்தோ குமார் என்ற லள்ளு ஆகியோரின் கேரக்டர்கள் நிச்சயம் ரசிகர்களை கவரும்.

வெறும் காமெடியை மட்டுமே செய்த டேனியல் இதில் வில்லத்தனமும் காட்டியிருப்பது சிறப்பு.

பிள்ளையராக வரும் போலீஸ், நண்பனை காப்பாற்றுவதும், கடைசியில் நண்பனின் விதவை தங்கைக்கு வாழ்க்கை கொடுப்பது என ரசிக்க வைக்கிறார்.

இவர்களுடன் கௌதம் அம்மா, அப்பா, சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் சிறப்பான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அனீஷ் தருண்குமாரின் ஒளிப்பதிவில் சௌகார்பேட்டை வாழ்க்கை முறை ரசிக்கும் ரகம்.

அதிலும் பர்மாவில் உள்ள ரங்கூன் பகுதியை 20 வருடங்களுக்கு முன்பும் தற்போதும் காட்டியிருப்பது மிகச் சிறப்பு.

அன்பு அறிவு ஆகியோரின் சண்டை பயிற்சியில் அந்த மணலில் அடித்துக் கொள்ளும் சண்டைக் காட்சி யதார்த்தம் கலந்து அருமையான சண்டை.

தொட்டில் மடியில் பாடல் இதம். பாடல்களை விட பின்னணி இசை கூடுதல் பலம்.

இயக்கம் பற்றிய அலசல்…

தங்க கட்டிகள் கடத்துவது என எம்ஜிஆர், ரஜினி காலத்து கதை பார்முலாவை முதல் பாதியில் எடுத்திருந்தாலும் இரண்டாம் பாதியில் வேறு ஒரு ட்விஸ்ட்டை கொடுத்து ரசிக்க வைக்கிறார் இயக்குனர்.

படத்தின் வசனங்கள் கூடுதல் பலத்தை கொடுக்கிறது.

“ஒரு அகதியா ஆரம்பிச்ச என் வாழ்க்கையில என்னை சேர்ந்தவங்களே எனக்கு செய்தது தான் பெரும் துரோகம்” என்பது ஆகட்டும்,

இங்கு யாருமே நல்லவங்க, கெட்டவங்கன்னு கிடையாது.

எல்லாருமே இங்க, அதிர்ஷ்டத்தை நம்பி தான் வாழுறாங்க…” என்பது ஆகட்டும்

“பலம்ங்கறது இருக்கப் பட்டவன் இல்லாதவனை கீழே மிதிச்சு தள்றதுல மட்டுமில்ல அதையும் தாண்டி கீழ இருக்குறவன் மேல வர்றாம் தெரியுமா அதுலதான் இருக்கு பலம்” ஆகிய வசனங்கள் கைத்தட்டலை அள்ளும்.

நண்பன் திடீரென வில்லன் ஆவதில் அழுத்தமான காரணம் இல்லை.

ஒரு சில குறைகளை தவிர்த்து பார்த்தால் ‘ரங்கூன்’ நிச்சயம் ரசிக்கலாம்.

ரங்கூன்… பயமில்லாமல் பயணிக்கலாம்

More Articles
Follows