தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அரண்மனை 4 விமர்சனம்.. 3.75/5.. KIDS SUMMER TREAT
ஸ்டோரி…
சுந்தர் சி ஒரு வக்கீல்.. இவர் தன் அத்தை கோவை சரளாவுடன் வசித்து வருகிறார். இவரின் ஆரம்ப காட்சியே ஆக்ஷனில் ஆரம்பிக்கிறது.. அதற்கு அடுத்து கதையின் வேகம் தொடங்குகிறது.
இவரது தங்கை தமன்னா இறந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து ஒரு காட்டுக்குள் இருக்கும் அரண்மனைக்கு ஓடி வருகிறார்… அங்குதான் அவருக்கு சில அதிர்ச்சியான சம்பவங்கள் தெரிய வருகிறது.
ஒரு அரண்மனையில் வசித்து வருகின்றனர் தமன்னா மற்றும் சந்தோஷ் பிரதாப். இவர்களுக்கு ஒரு மகன் & ஒரு மகள் உள்ளனர்..
ஒரு நாள் அதிகாலை சந்தோஷ் வாக்கிங் செல்லும்போது அவரது உடலில் ஒரு தீய சக்தி நுழைந்து விடுகிறது.. இதனை அறிந்து கொள்கிறார் தமன்னா. அப்போதுதான் தன் மகளையே கொல்ல சந்தோஷ் திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது.
இதனையடுத்து தன் கணவனிடம் இருந்து தன் மகளையும் மகனையும் காப்பாற்ற போராடுகிறார் தமன்னா. ஆனால் ஒரு கட்டத்தில் சந்தோஷ் & தமன்னாவையும் கொன்று விடுகிறது தீய சக்தி.
ஆனால் காவல்துறையோ கணவன் இறந்த துக்கத்தில் தமன்னா தற்கொலை செய்து கொண்டார் என வழக்கை முடித்து விடுகிறது.
இதன் பின்னர் இந்த வழக்கை துப்பு துலக்கி நடந்த சம்பவங்களுக்கு என்ன காரணம்? இதில் பின்னணியில் யார்? தீய சக்தி யார்? என்பதற்கு விடை தேடுகிறார் சுந்தர் சி.. இதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
சுந்தர் .சி – சரவணன்
தமன்னா – செல்வி
ராஷி கண்ணா – மாயா
சந்தோஷ் பிரதாப் – இஞ்சினியர்
யோகி பாபு – மேஸ்திரி
டெல்லி கணேஷ் – ஜமீன்
கருடா ராம் – சுவாமி ஜீ
விடிவி கணேஷ் – கார்பெண்ட்டர்
அரண்மனை என்ற தலைப்பு வைத்து விட்டு அரண்மனையை காட்டாமல் இருக்க முடியுமா? கேரளாவில் உள்ள அரண்மனையை அழகாகவே கலை நுணுக்கத்துடன் படம் எடுத்துக் காட்டி இருக்கின்றனர்.
இந்த படத்தில் சுந்தர் சிக்கு ஜோடி இல்லை.. பாடல்களும் இல்லை… ஆனாலும் தங்கைக்காகவும் குடும்பத்திற்காகவும் வாழும் பாசமிக்க அண்ணனாகவே வாழ்ந்திருக்கிறார்.. முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளிலும் எமோஷன் காட்சிகளிலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தமன்னா தாயாக அழகான நடிப்பிலும் பேயாக மிரட்டல் நடிப்பையும் கொடுத்திருக்கிறார்.
தன் கணவரிடமிருந்து குழந்தைகளை காப்பாற்ற அவர் படும் அந்த ஒரு காட்சி தாய்மார்களின் பாசத்தை காட்டுகிறது.
மற்றொரு நாயகி ராசி கண்ணா கவர்ச்சியாகவும் அழகாக வந்து செல்கிறார்.
விடிவி கணேஷ் யோகி பாபு கோவை சரளா மூவரின் காமெடி செம.. கடைசி அரை மணி நேரத்தில் இவர்களின் காட்சிக்கு உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது..
அதுபோல் சாமியாருடன் நடந்து செல்லும் போது நடிகர் சேஷு செய்யும் காமெடிகளும் சிரிக்க வைக்கிறது..
சந்தோஷ் பிரதாப், ராமசந்திர ராஜு, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, சஞ்சய், கே.எஸ்.ரவிகுமார்… மற்ற நட்சத்திரங்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
டெக்னீசியன்ஸ்…
இசை – ஹிப்ஹாப் தமிழா
திரைக்கதை வசனம் – வேங்கட்ராகவன்
ஒளிப்பதிவு – ஈ.கிருஷ்ணமூர்த்தி
படத்தொகுப்பு – பென்னி ஓலிவெர்
கலை இயக்குனர் – குருராஜ்
சண்டைப்பயிற்சி – ராஜசேகர்
நடனம் – பிருந்தா
பாடல்கள் – கோசேஷா, விக்னேஷ் ஶ்ரீ காந்த், முத்தமிழ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
கதை, திரைக்கதை, இயக்கம் – சுந்தர்.சி
தயாரிப்பு – குஷ்பு சுந்தர் (Avni Cinemax P Ltd), ஏ.சி.எஸ் அருண்குமார் (Benzz Media Pvt Ltd)
பேய் படங்களின் ஃபார்முலாவை அறிந்தவர் சுந்தர்சி. பேய் கதையை குடும்பக்கதையுடன் இணைத்து எப்படி ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பது என்ற கலையை அறிந்திருக்கிறார்.. அதற்கு ஏற்றபடி கதையை அழகாக அமைத்திருக்கிறார்.
இடைவேளைக்கு முன்பு வரை மெதுவாக நகரும் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு ஜெட் வேகத்தில் பறக்கிறது.. முதலில் கதையை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. அதனுடன் கனெக்ட் ஆக வேண்டும் என்பதற்காக கதையை மெதுவாக நகர்த்தி அதில் ரசிகர்களை இணைத்து திரைக்கதையின் வேகத்தை அதிகரித்து இருக்கிறார்.
கிளைமாக்ஸ் காட்சிகள் தீய சக்தி மற்றும் அம்மன் சக்தி இரண்டுக்கும் நடக்கும் அந்த அம்மன் பாட்டு செம ஹைலைட்டு.. அதுவும் அந்த பாடலுக்கு குஷ்புவையும் சிம்ரனையும் இணைந்து ஆட வைத்து ரசிகர்களை அம்மன் அருள் வந்து கொண்டாட வைத்து விட்டார் இயக்குனர் சுந்தர் சி.. நடன மாஸ்டர் பிருந்தாவின் நடனமும் பிரகாசிக்க செய்கிறது..
தீய சக்தி உருவ பொம்மைக்குள் நுழைந்து அங்கு தன் தங்கை தமன்னாவின் மகளை காப்பாற்ற போராடும் சுந்தர் சி பைட் அசுரவேகம்.. அதற்கு ஏற்ப வில்லனும் ஆறு அவதாரங்களை எடுத்து ரசிகர்களை கதறவிட்டிருக்கிறார்.
அம்மன் அருள் வந்து ரசிகர்கள் அமைதி காக்கும் வேளையில் திடீரென ‘அச்சச்சோ… என்ற பாடலை இணைத்து அதில் தமன்னா & ராசி கண்ணாவின் கவர்ச்சியும் காட்டி இந்த கோடை வெயிலுக்கு ஜில் ஐஸ்கிரீம் கொடுத்திருக்கிறார்..
மற்ற பாடல்கள் பெரிதாக கவனம் பெறாத நிலையில் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி..
குழந்தைகளுக்குப் பிடித்த பேய் கதையில் குழந்தைகளையே நடிக்க வைத்து மிரட்ட வைத்து அவர்களை தியேட்டரில் அலற விட்டு விருந்து படைத்திருக்கிறார் சுந்தர் சி.
Aranmanai 4 movie review
