தி வாரியர் விமர்சனம் 3/5.; ஆந்திரா (மசாலா) மீல்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் போத்தினேனி நடிப்பில் வெளியானது தி வாரியர்.

இந்த படத்தில் கீர்த்தி செட்டி, ஆதி, நதியா, ரெடின் கிங்ஸ்லி, அக்ஷரா கவுடா உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

டாக்டர் ராம் தன் அம்மா நதியாவுடன் மதுரைக்கு வருகிறார். அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார்.

ஒரு கட்டத்தில் வில்லன் ஆதியின் அடியாள்கள் ஒரு நபரை கொல்ல அவன் உயிரை காப்பாற்றுகிறார் டாக்டர் ராம்.

இதனால் இருவருக்கும் மோதல் வெடிக்கிறது. போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை.

டாக்டர் ராமுவை அடித்து ஊரை விட்டு விரட்டுகிறார் ஆதி. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதே மதுரைக்கு போலீசாக வருகிறார் ராம்.

தான் டாக்டராக இருந்தபோது தன்னால் செய்ய முடியாததை ஒரு போலீசாக செய்து காட்டுகிறார் ஆதி.

அதன் பின்னே என்ன ஆனது என்பது மீதி கதை.

கேரக்டர்கள்…

தெலுங்கு சினிமாவில் 20 படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு இது முதல் படம் என்பதால் அறிமுகம் ராம் என்று டைட்டில் கார்டு.

ஆக்ஷன் காட்சியில் அசத்தியிருக்கிறார் ராம்.. ஆனால் ரொமான்ஸ் காட்சியில் இன்னும் மெச்சூரிட்டி தேவை.. ஹீரோயின் கீர்த்தி ரொமான்டிக்கில் தெறிக்கவிட்டு உள்ளார். தன் அழகான க்யூட்டான எக்ஸ்பிரஷன்களால் நம்மை கட்டி போடுகிறார்.

மிரட்டல் வில்லனாக அசத்தியிருக்கிறார் ஆதி. இனி தமிழில் இவருக்கு அதிக வில்லன் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

எம் குமரன் படத்தில் வந்து சென்ற நதியாவை போல இந்த படத்தில் வந்து செல்கிறார் நதியா.

ஜெயப்பிரகாஷ், அக்ஷரா கவுடா உள்ளிட்ட சில சில கேரக்டர்கள் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவியுள்ளன.

டெக்னீஷியன்கள்..

நாலு ஃபைட்.. ஹீரோயினுடன் நாலு டூயட் அம்மா சென்டிமென்ட்.. ஆக்சன்.. என கமர்சியல் சினிமாவுக்கு உள்ள அத்தனையும் இந்த படத்தில் வைத்துள்ளார் லிங்குசாமி.

ஒரு கட்டத்தில் டாக்டராக இருந்தவர் திடீரென இரண்டு வருடங்கள் கழித்து போலீஸ் ட்ரையினிங் எடுத்து ஐபிஎஸ் ஆக வருவார் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்போது தியேட்டரில் சிலர் சிரிப்பதை நாம் காண முடிகிறது.

ஆனால் ஒன்றை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.. கர்நாடகவில் ஐபிஎஸ் ஆக இருந்தவர் இன்று ஒரு தேசிய கட்சியில் தலைவராக இருக்கிறார்.. பல ரவுடிகள் அரசியல்வாதிகள் ஆகி இருக்கிறார்கள்.. பல நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.. இதுபோல பல மாற்றங்கள் இருக்கும்போது நாம் இதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் உண்மையான சில வாரியர்கள் டாக்டராகவும் காவலர்களாக இருந்துள்ளனர் என்பதை என்ட் கார்டில் போடுகிறார் லிங்குசாமி குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் லிங்கு இயக்கிய ரன் சண்டக்கோழி உள்ளிட்ட சில படங்களின் கலவை இதில் தெரிகிறது.

ஹீரோயின் கீர்த்தி ஷெட்டியின் க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் ரசிகர்களுக்கு ஸ்வீட்.

காதலர்களை கவரும் சில வசனங்களை வைத்துள்ளார். இரண்டு பைக்ல வேற வேற காபி ஷாப்புக்கு போக போறோமா.??

நதியாவிடம் கீர்த்தி.. ஆன்ட்டி இவங்க உங்க சிஸ்டரா.? என்று கேட்கும் போது இந்த மாதிரி நிறைய பிட்டு பார்த்தாச்சு.. என்கிறார்.

இதுபோல சின்ன சின்ன விஷயங்களை சரியாக வைத்துள்ளார் டைரக்டர். ஆனால் நதியாவை தமிழில் டப்பிங் பேச வைத்திருக்கலாம். அவருக்கு நடிகை ரோகினின் வாய்ஸ் டப்பிங் கொடுத்துள்ளார். அது செட் ஆகவில்லை.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு பெரிய பலம்.. “விசில் சாங் சூப்பர் என்றால் புல்லட் சாங் சூப்பரோ சூப்பர்.. அந்த பாடலுக்கு ஆடாதவர்கள் இருக்க முடியாது. அதுவும் சிம்பு குரலில் வேற லெவல் சாங்.

படத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து அமைத்துள்ளது.. இது ஒரு நேரடி தமிழ் படமாக ரிலீஸ் செய்துள்ளனர்.. ஆனால் ஹைதராபாத்தை காட்டிவிட்டு மதுரை என்பதெல்லாம் ஓவர் டோஸ்.

என்னதான் இது தமிழ் படமாக காட்டப்பட்டு இருந்தாலும் சில காட்சிகள் ஆந்திரா வாடையே அடிக்கிறது. ஒரு காட்சியில் வில்லன் குருவுக்கு பேனர் வைத்துள்ளனர். அது தமிழில் உள்ளது. ஆனால் சென்ட்ரல் ஜெயில் என்று காட்டும் போது அது தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது.

இது போன்ற விஷயங்களை கவனிக்காமல் விட்டுவிட்டார் டைரக்டர். லிங்குசாமி தமிழ் இயக்குனர் என்பதால் தமிழக ரசிகர்களுக்கான காட்சிகளை வைத்திருக்கலாம்.

சமீபத்தில் வெளியான புஷ்பா ஆர் ஆர் ஆர் கே ஜி எஃப் உள்ளிட்ட படங்கள் மற்ற மொழி படங்களாக இருந்தாலும் அது ஒரு தமிழ் படத்தை பார்த்த உணர்வு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக… தி வாரியார்… ஆந்திரா மசாலா மீல்ஸ்

The Warriorr movie review in Tamil

மை டியர் பூதம் விமர்சனம் 3.25/5.; மாயஜால உலகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பூதங்களின் தலைவனாக வாழ்கிறார் பிரபுதேவா. ஒரு கட்டத்தில் முனிவர் ஒருவரின் சாபத்திற்கு ஆளாகிறார். இதனால் தான் தவமிருந்த பெற்ற மகனை பிரிந்து பூமியில் சிலையாக வாழ்கிறார் பிரபுதேவா.

மீண்டும் பூத உலகத்திற்கு வர வேண்டுமானால் சில நிபந்தனைகளை விதிக்கிறார் முனிவர்.

இந்த நிலையில் திக்கி திக்கி பேசும் திக்குவாய் பள்ளி மாணவன் அஸ்வந்த் கையில் பிரபுதேவா சிலை சிக்குகிறது.

இதனால் பிரபுதேவாவுக்கு உயிர் கிடைக்கிறது. அஸ்வந்துக்கு பலவிதங்களில் உதவி செய்கிறார் பிரபுதேவா.

ஆனால் 48 நாட்களுக்குள் அஸ்வந்த் ஒரு மந்திரத்தை சொன்னால் மட்டுமே மீண்டும் பூத உலகத்திற்கு பிரபுதேவா செல்ல முடியும்.

இறுதியில் என்ன ஆனது அந்த திக்க வாய் பையன் மந்திரத்தை சரியாக சொன்னானா? பிரபுதேவாவுக்கு பூத லோகம் செல்ல முடிந்ததா ? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நீண்ட நாட்களுக்கு பிறகு குழந்தைகளுக்காக மட்டுமே உருவான படம் மை டியர் பூதம்.

அதிலும் ஒரு ஹீரோவாக நடிக்கவும் நாயகி இல்லாமல் நடிக்கவும் ஒப்புக்கொண்ட பிரபுதேவாவுக்கு நாம் பாராட்டுக்களை சொல்ல வேண்டும்.

மொட்டை தலை & குறுந்தாடி என வித்தியாசமாக வந்து ஜிங்களி பிங்கிளி என பாடி ஆடியுள்ளார் பிரபுதேவா.

அஸ்வந்தின் அம்மாவாக ரம்யா நம்பீசன். இவருக்கும் இந்த படத்தில் ஜோடி இல்லை. ரம்யா இன்னும் சற்று உடல் எடையை குறைத்தால் கூடுதல் ரசிகர்களை பெறலாம்.

அஸ்வந்த் தன் நடிப்பில் அசத்தியுள்ளார். திக்கி திக்கி பேசும் போதும்.. தன் சக பள்ளி மாணவர்களுடன் சண்டையிடும் போதும்.. தான் சொல்வது யாருக்கு புரியவில்லையே என அழும் போதும்.. என சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார் அஸ்வந்த்.

பூதம் மற்றும் சிறுவன் என இரண்டு கேரக்டர்களை மட்டுமே மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே மற்ற கேரக்டர்கள் (ரம்யா) என்ன வேலை செய்கிறார்கள் என்பதை கூட சரியாக காட்டவில்லை..

டீச்சர்கள் ஒரு திக்குவாய் மாணவனை இப்படியா அசிங்கப்படுத்துவது? ஒரு காட்சியில் இறையன்பு ஐஏஎஸ் வருகிறார். அவர் வந்த பிறகு… ஒரு போட்டியில் பங்கு பெற்ற அஸ்வந்த்தை பாராட்டுகிறார். அதன் பிறகே எல்லா ஆசிரியர்களும் பாராட்டுகிறார்கள்.

டெக்னீஷியன்கள்..

படத்தின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக உள்ளது.. எல்லா காட்சியிலிலும் பூதமாக தோன்றும் பிரபுதேவா ஒரு பாடலில் மட்டும் ஜிங்கிலியா.. பிங்கிலியா… என்ற பாடலில் மட்டும் நாம் அன்றாடம் பார்க்கும் பிரபுதேவா போல வந்து செல்கிறார். அது ஏனோ.?

அந்த பாடல் நிச்சயம் ஆட்டம் போட வைக்கும். பின்னணி இசையும் ஓகே..

மற்றபடி குழந்தைகளுக்கான படம் தானே என எந்த லாஜிக்கும் வேண்டாம் என நினைத்து விட்டார் இயக்குனர் ராகவன். ஆனாலும் ரசிக்கலாம்.. சிரிக்கலாம்..

படத்தில் நிறைய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே தங்கள் வீட்டு செல்ல குழந்தைகளை மகிழ்விக்க இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்.

ஆக…மை டியர் பூதம்.. மாயஜால உலகம்

My Dear Bootham movie review in Tamil

கார்கி விமர்சனம் 4.5/5.. கலியுக கண்ணகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்கி விமர்சனம் : கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி விமர்சனம் இதோ

ஒன்லைன்…

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் வழக்கில் இந்தப் படத்தின் நாயகியின் தந்தையும் கைது செய்யப்படுகிறார். தந்தை நிரபராதி என்பதை நிரூபிக்க போராடுகிறார் கார்கி.

கதைக்களம்…

சாய் பல்லவி ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரின் தந்தை ஆர்.எஸ்.சிவாஜி… வீட்டில் அப்பா அம்மா மற்றும் தங்கையுடன் வசிக்கிறார் சாய்பல்லவி.

ஒரு அபார்ட்மெண்ட் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார் சிவாஜி. ஒருநாள் அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் சரவணின் மகளை 4 வட இந்தியர்கள் பலாத்காரம் செய்கின்றனர். அவர்களுடன் இணைத்து செக்யூரிட்டி சிவாஜியும் கைது செய்யப்படுகிறார்.

தன் தந்தை அப்படிப்பட்டவர் இல்லை அவர் நிரபராதி என்பதை நிரூபிக்க வக்கீல் காளி வெங்கட்டுடன் இணைந்து போராடுகிறார் கார்கி.

இறுதியில் என்ன ஆனது.? நிரபராதி யார்.? குற்றவாளி யார்.? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பிரேமம் படத்தில் மலர் டீச்சர் ஆக காதலர்களை கவர்ந்த இந்த சாய் பல்லவி அதிலிருந்து பத்து மடங்கு உயர்ந்து கார்கி என்ற கண்ணியமிக்க பெண்ணாக உயர்ந்து நிற்கிறார்.

இந்த படத்திற்கும் சாய் பல்லவிக்கும் பல விருதுகள் காத்திருக்கின்றன.

குட் டச் பேட் டச் என்று தனக்கு சொல்லிக் கொடுத்த தந்தை சிறை கைதியாக இருக்கும் போது தன் தந்தையின் முகம் பார்க்க முடியாமல் சாய்பல்லவி அழும் காட்சிகள் நம் மனதை கலங்கடிக்கும்.

அவர் என் அப்பா… அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்று மீடியாவிடமும் பொதுமக்களிடம் சொல்லும் போதும்.. “நீங்க விரும்புனத சொல்றது செய்தி அல்ல.. நடந்தத சொல்றது தான் செய்தி.. என்று மீடியாக்களிடம் சாய்பல்லவி சொல்லும் போது சில மீடியாக்களுக்கு நெத்தியடியாக இருக்கும்.

தனக்காக வாதாட எந்த வக்கீலுமே முன் வராத நிலையில் உதவி செய்யும் காளி வெங்கட் இவர் நடத்தும் விதம் சரியில்லை. ஆனால் தன் அம்மாவிடம் காளிக்காக பரிந்து பேசும் போது அதில் நிவர்த்தி செய்து விடுகிறார். ஆனால் காளியை அலட்சியம் செய்வது ஏனோ.?

நீதிபதியாக நடித்துள்ள திருநங்கை டாக்டர் சுதா என்பவரை நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்.. ஒரு பெண்ணின் உடல் வலியும் எனக்கு புரியும் ஒரு ஆணின் திமிரும் எனக்கு புரியும். நான் இரண்டும் கலந்தது தான்.. என்று நீதிபதி கூறும் போது நிச்சயம் கைதட்டாமல் இருக்க மாட்டீர்கள்.

சிவாஜி என்ற பெயரை தன்னுடன் இணைத்து இருப்பதால் தான் என்னவோ நடிப்பிலும் பல மடங்கு உயர்ந்துள்ளார் இந்த சிவாஜி.. கோலமாவு கோகிலா படத்திற்குப் பிறகு இந்த படத்தில் வித்தியாசமான ரோலை ஏற்றுள்ளார்.. ‘எங்கேயோ போய்டீங்க..’ சிவாஜீ சார்.!

கார்கி படத்திற்கு பிறகு காளி வெங்கட் அவர்களை கலக்கல் வெங்கட் என்றும் சொல்லலாம். சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு இதில் சவாலான வேடத்தை ஏற்று சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

அரசு வக்கீலாக கவிதாலயா கிருஷ்ணன் நடித்துள்ளார். படு யதார்த்தமாக அரசு ஊழியர்களின் அலட்சியத்தையும் அவர்களுக்கே உரித்தான ஆணவத்தையும் தன் பாடி லாங்குவேஜ்ஜில் காட்டியுள்ளார் கிருஷ்ணன்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையாக சரவணன் முதல் காட்சிகளும் வேறுபையும் கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்கு நடிப்பையும் கொடுத்துள்ளார்.

பத்திரிக்கையாளராக ஐஸ்வர்யா லட்சுமி பெரிதாக வேலை இல்லை என்றாலும் கொடுத்த பாத்திரத்தில் சிறப்பு. அதிலும் குறிப்பாக சாய் பல்லவியின் தங்கைக்கு இவர் சொல்லும் அட்வைஸ் சூப்பர்.

‘கார்கி’ விழாவில் கண்கலங்கிய நடிகை ஐஸ்வர்ய லட்சுமி.; சாய் பல்லவி சமாதானம்

ஜெயபிரகாஷ், லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர். எஸ் ஐ யாக வரும் கேப்டன் பிரதாப் நம்மை கவனிக்க வைக்கிறார்.

டெக்னீஷியன்கள்..

’96’ படத்தில் காதலர்களை தன் இசையால் கட்டிப் போட்ட கோவிந்த் வசந்தா கார்க்கி படத்தில் தன் இசையால் மனதை வருடி செல்கிறார். முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் இதயத்தை எகிறச் செய்யும் லப் டப்… லப் டப்… என்ற சப்தம் தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் மனதை விட்டு நீங்காது. ஆனால் பாடல்கள் பெரிதாக கவனம் பெறவில்லை.

ஒளிப்பதிவு- ஸ்ரயந்தி & பிரம்மகிருஷ்ணா அக்கடு.. படத்தொகுப்பு – ஷபிக்முஹமது.. இருவரும் சிறப்பான தேர்வு. எங்கும் குறை காணாத நேர்த்தியான பணி.

இந்த படத்தை இயக்கி தயாரித்துள்ளார் இயக்குநர் கௌதம்
ராமசந்திரன். தமிழ் சினிமாவுக்கு ஒரு தரமான படைப்பாளி கிடைத்துவிட்டார்.

எல்லா குற்றவாளிகளுக்கும் ஒரு குடும்பம் ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஆனால் குடும்பத்தில் ஒருவர் எப்படி இருப்பார் வெளியில் எப்படி நடந்து கொள்வார் என்பதை அப்பட்டமாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.

கிளைமாக்ஸ் இல் இப்படி ஒரு டிஸ்ட்ட் கொடுக்க முடியுமா? என்று எவருமே எதிர்பாராத வகையில் அனைவரையும் உறைய வைத்து விட்டார் இயக்குனர் கௌதம்.

தரமான படங்களை எவரேனும் தயாரித்தால் அதை வாங்கி வெளியிடும் நடிகர் சூர்யாவிற்கும் அதை விநியோகம் செய்யும் சக்திவேலன் ஃபிலிம் ஃபேக்டரிக்கும் மனதார பாராட்டுக்கள்.. வியாபாரம் என்பதை தாண்டி நல்ல படங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று அண்மைக் காலமாக இவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைவராலும் கவனிக்கப்படுகிறது.

ஆக கார்கி… கலியுக கண்ணகி

Gargi Movie Review in Tamil

இரவின் நிழல் விமர்சனம் 3.5/5.; இறவாத நினைவுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரவின் நிழல் விமர்சனம் : பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான இரவின் நிழல் விமர்சனம் இதோ

ஒன்லைன்..

NON LINEAR SINGLE SHOT MOVIE என பார்த்திபன் மார்த்தட்டி சொல்லி கொள்ளும் படம். அதாவது… நான்-லீனியராக (Non-Linear) தன் கதையை விவரிக்கும் ஒரு படத்தை சிங்கிள் ஷாட்டில் முடித்திருக்கிறார் பார்த்திபன்.

மூன்று மாதங்கள் அதாவது 90 நாட்கள் ஒத்திகை எடுத்து 23 சிங்கிள் ஷாட்டுகளில் எடுத்த திரைப்படம் இரவின் நிழல்.

படம் ஆரம்பிக்கும் போது முதலில் 30 நிமிடம் மேக்கிங் வீடியோ காட்டப்படுகிறது. அதன் பிறகு இடைவேளை விட்டு 90 நிமிடங்கள் படம் ஓடுகிறது.

மேக்கிங் வீடியோவை பார்த்தால் மட்டுமே இந்த படத்தின் வலி புரியும். ஒரு வித்தியாசமான இயக்குனரின் உணர்வு புரியும். ஆரம்பிக்கலாங்களா..??

‘இரவின் நிழல்’ படத்திற்கு உலக அங்கீகாரம்.; இப்படியொரு படமா.? பார்த்திபனை பாராட்டும் பிரபலங்கள்

கதைக்களம்...

நந்து என்ற பார்த்திபன் தனது நடுத்தர வயதில் சில நினைவுகளை அசைப் போடுகிறார். தனது 10 வயது 20 வயது 30 வயது 40 வயது எனது ஒவ்வொரு வயதிலும் தான் சந்தித்த தனக்கு ஏற்பட்ட கசப்பான இனிப்பான அனுபவங்களை அசைபோடும் ஒரு நாள் இரவில் நடைபெறும் பயணமே இந்த ‘இரவின் நிழல்’.

ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு, பிரவீன் குமார், ஜோஷுவா உள்ளிட்டோர் பார்த்திபன் கேரக்டரில் நால்வராக நடித்துள்ளனர்.

நாயகிகளாக பிரிகிடா சகா, சாய் பிரியங்கா ரூத், சிநேகா குமாரி என மூவர் நடித்துள்ளனர். மூவருமே தங்கள் நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர்.

இதில் பிரிகிடா தன் நடிப்பில் பின்னி எடுத்துள்ளார். கண்ணழகிலும் கவர்கிறார். இவர் எடுக்கும் முடிவு அதிர்ச்சியானது.

இதில் ஒருவர் பார்த்திபனை தீயவழிக்கு கொண்டு செல்கிறார்.. ஒருவர் நல்வழிக்கு கொண்டு செல்கிறார்.. மற்றொருவர் அந்த நல்பாதையில் பயணிக்க வைக்கிறார்.

இவர்களோடு வரலட்சுமி, ரோபோ சங்கர் ஆகியோரும் உண்டு. பெரிதாக வேலையில்லை. ஆனாலும் நித்தியானந்தா ரஞ்சிதா ஆகியோரை இவர்கள் நினைவுப்படுத்துகின்றனர்.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவு ஆர்தர் வில்சன்… இசை : ஏஆர்.ரஹ்மான்.. கலை : விஜய்முருகன்.

சிங்கிள் ஷாட் என்பதால் அனைத்துக்கும் நிறைய செட்கள் போட வேண்டும். அனைத்தையும் ஒரே இடத்தில் போட வேண்டும்.

அதுவும் நான் லீனியர் என்பதால், அதே நடிகர்கள் மீண்டும் அடுத்த காட்சியில், வேறொரு ஆடையில் தோன்ற வேண்டும். கிட்டத்தட்ட நாடகம் போலத்தான்.

அனைவரும் இணைந்து மிகவும் கடினமான ஒன்றைச் சாத்தியப்படுத்தியுள்ளனர்..

பார்த்திபன் பாணியில் பல வசனங்கள் பளிச்சிடுகின்றன.

செருப்பால அடிப்பான்னு பார்த்தா சிரிப்பால அடிச்சா…பணத்தை அமுக்க தெரிஞ்ச உனக்கு பண எண்ணும் மெஷினை அமுக்க தெரியலையே… செஞ்ச பாவம் கங்கைக்குப் போனா தீரும். சிலர் செஞ்ச பாவம் கங்கையோட போனாலும் தீராது என அசத்தியிருக்கிறார்.

ஆனால் தன் புதிய பாதை பாணியை இன்னும் அவர் மேற்கொண்டு வருவது கொஞ்சம் வருத்தமே. பார்த்திபன் அந்த பார்முலாவை மாற்றிக் கொள்வது நல்லது.

ஒரு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட சிறுவன் பின்பு என்ன ஆவான் என்பதை பல படங்களில் பார்த்திபன் காட்டி வருகிறார்.

ஆனால் இந்த படத்தில் பாலியல் பலாத்காரம் என்பது சிறுமிக்கு மட்டுமல்ல சிறுவனுக்கும் ஏற்படும் என்பதை சொல்லிவிட்டார்.

பெற்றோர்கள் தங்கள் ஆண்மகன் விஷயத்திலும் அக்கறை காட்ட வேண்டும் என்று எடுத்துரைத்து இருக்கிறார்.

ஒரு நல்ல படைப்பை கொடுக்கும் போது நல்ல வார்த்தைகளை சேர்த்தால் இன்னும் இனிமையாக இருந்திருக்கும். படத்தில் ஏகப்பட்ட கெட்ட கெட்ட வார்த்தைகள் உள்ளன.

இந்தப் படத்தின் கதைக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை. அதுபோல பாடல்களும் அதன் வரிகளும் நம்மை கவர்கின்றன.

பின்னணியில் இசையில் கதைக்குத் தேவையானதை உணர்ந்து கொடுத்திருக்கிறார்.

முக்கியமாக கலை இயக்குனர் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். ஒவ்வொரு காலகட்டம் சிங்கிள் ஷாட் என்பதால் அது உணர்ந்து ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு விதமான கலையை கொடுத்து 1980 90 2000 என பல்வேறு பரிமாணங்களை கொடுத்துள்ளது சிறப்பு.

அதற்கு ஏற்ப ஒளிப்பதிவாளரும் தன் பணியை சிறப்பாக கொடுத்துள்ளார்.

ஆக இந்த இரவின் நிழல் இறவாத நினைவுகள்

Iravin Nizhal movie review in Tamil

படைப்பாளன் விமர்சனம்.; பயப்படாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தியான் பிரபு, அஷ்மிதா, நிலோபர் , காக்கா முட்டை புகழ் ரமேஷ் மற்றும் விக்கி , வேல்முருகன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தியான் பிரபு இயக்கியுள்ள படம் ‘படைப்பாளன்’. தியான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.

ஒன்லைன்..

சினிமா வாய்ப்பு தேடி அலையும் உதவி இயக்குனர்களின் பரிதாப நிலையை சொல்லும் படம். பல சிறப்பான கதைகளை படமாக்க முற்படும் ஒரு படைப்பாளனின் வாழ்வியல்.

கதைக்களம்…

சினிமாவில் சாதிக்க நினைக்கும் ஒரு உதவி இயக்குனர் நாயகன் தியான் பிரபு.

ஒரு கதையை தயாரிப்பாளரிடம் சொல்கிறார் தியான் பிரபு.

அந்த தயாரிப்பாளர் இவரின் கதையை மற்றொரு இயக்குனரிடம் கொடுத்து படத்தை தயாரிக்க திட்டமிடுகிறார்.

இதனால் விரக்தியடைந்த தியான் பிரபு, தனது கதையை திருடிவிட்டனர் என்று கூறி நீதிமன்றம் செல்கிறார்.

நீதிமன்ற வழக்கை வாபஸ் பெறக் கூறி தயாரிப்பாளர் குரு மிரட்டல் விடுக்கிறார்.

மிரட்டலுக்கு தியான் பிரபு பணிந்தாரா.? அல்லது தனது படைப்பு உரிமைக்காக போராடினாரா என்பதை படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

படத்தின் பெரிய மைனஸ் எதுவென்றால்..

நாம் ரேடியோவின் திரைச்சித்திரம் காண்பது போல உள்ளது…” நான் உள்ள வந்துட்டேன் இல்ல… நல்ல வேளை நான் தப்பிச்சிட்டேன் இது போன்ற டயலாக்குகள் ஏதோ சினிமா பார்க்காத நபர்களுக்கு சொல்வது போல உள்ளது. இதை கூடவா இயக்குனர் கவனிக்கவில்லை..

அதிலும் அந்த பெண் ஆங்கிலத்தில் பேசும் போது இது போன்ற டயலாக்ஸ் ரிப்பீட் ஆகிறது அதை கவனித்திருக்கலாம்.

நாயகன் தியான் பிரபு, உதவி இயக்குனர் கதாபாத்திரத்தில் ஒன்றியிருக்கிறார்.

ஒரு உதவி இயக்குனரின் வலியையும் வேதனையும் யதார்த்தமாக சில நேரம் ஓவராகவே காட்டியிருக்கிறார் தியான் பிரபு.

வில்லனை பழிவாங்கும் காட்சி ரசிக்கலாம்..

படத்தில் நாயகிகளாக அஷ்மிதா, நிலோபர். இருவரும் வழக்கமான நாயகிகள்.. பெரிதாக வேலையில்லை. மஸ்காரா மஸ்காரா மஸ்காரா பாடலுக்கு நடனமாடிய நடிகைக்கு இந்த நிலையா? ஒரு நல்ல பாடலை கொடுத்தால் ரசிகர்கள் என்ஜாய் செய்திருப்பார்கள்.

காக்கா முட்டை விக்கி, ரமேஷ் ஆகிய இருவரும் நாயகனின் நண்பர்களாக வருகிறார்கள்.

வில்லன்களாக வளவன், பாடகர் வேல்முருகன் ஆகியோர் படத்தில் உள்ளனர்.

திரைப்படத்தயாரிப்பாளராக மனோபாலா நடித்திருக்கிறார்.

வேல் முருகனின் ஒளிப்பதிவில் ஒகே ரகம்.. பாலமுரளியின் பின்னணி இசை படத்திற்கு பலம்.

தமிழ் சினிமாவில் நடந்த கதை திருட்டு சம்பவத்தை மையப்படுத்தி படத்தை உருவாக்கியுள்ளனர்.

உதவி இயக்குனர்களின் வலியையும் வேதனையையும் கண்முன்னே நிறுத்தியதற்காக இயக்குனர் தியான் பிரபுவிற்கு பாராட்டுக்கள்.

Padaippaalan movie review in Tamil

பன்னி குட்டி விமர்சனம்.; மூடநம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

பன்னிக்குட்டியால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார் கருணாகரன். அதே பன்னு குட்டியால் தன் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும் என நம்புகிறார் யோகி பாபு.

பன்னிக்குட்டிக்காக இந்த இருவருக்கும் நடக்கும் பிரச்சினையே படத்தின் ஒன்லைன்.

கதைக்களம்…

ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர் தங்கைக்கு திருமணம் ஆனாலும் புகுந்த வீட்டில் பல பிரச்சினைகள். எனவே அடிக்கடி அம்மா வீட்டுக்கு வந்து செல்கிறார். அப்பா டி பி கஜேந்திரன் குடிகாரர். இதனாலும் பல பிரச்சினைகள்.

கருணாகரனுக்கு பலமுறை முயன்றும் பெண் கிடைக்கவில்லை. அப்போதுதான் ஒரு பெண் இவர் காதலியாக வாழ்வில் நுழைகிறார்.

தன் பிரச்சினைகள் தீர ஒரு நாள் தனது நண்பர் ராமர் மற்றும் தங்கதுரையுடன் சாமியார் திண்டுக்கல் லியோனியை சந்திக்கிறார்.

லியோனி ஒரு திருட்டு பைக் எடுத்துக்கொண்டு நீங்கள் செல்லுங்கள் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்கிறார.

ஒரு பைக்கை திருடி கொண்டு செல்லும் போது ஒரு பன்னி மீது மோதி விடுகிறார் கருணாகரன். அப்போது முதல் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்.

இந்த கதை ஒருபுறம் இருக்க அந்த பன்றி குட்டியை தன் செல்ல பிராணியாக வளர்க்கிறார் யோகி பாபு.

அந்தப் பன்னி குட்டியால் தன் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என யோகி பாபு காத்திருக்கும் நிலையில் அந்த பன்னிக்குட்டி மீது மீண்டும் விபத்து ஏற்படுத்த முயற்சிக்கிறார் கருணாகரன்.

அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் என்ன நடந்தது என்பதுதான் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகனாக கருணாகரன் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நடிப்பில் கவர்கிறார். ஒரு சராசரி நடுத்தர குடும்பத்து இளைஞனாக நடித்திருக்கிறார்.

பன்னிக்குட்டிக்காக அலையும் கேரக்டரில் யோகி பாபு. தன் பிள்ளையாக வளர்த்து அதன் மேல் அன்பு காட்டுகிறார்.

கருணாகரன் மற்றும் யோகி பாபு காதலிகள் நல்ல தேர்வு. அழகிலும் நடிப்பிலும் நம்மை கவர்கின்றனர்.

ராமர் மற்றும் தங்கதுரை இருந்தும் பெரிதாக சிரிப்பு வரவில்லை. ஆனால் ஓரிரு இடங்களில் ஓகே.

இதே கூட்டணியில் சிங்கம் புலியும் வருகிறார். அவர் தன் குடும்பத்துடன் அமர்ந்து கொண்டு ஹோட்டலில் சாப்பிடும் காட்சிகள் நல்ல நகைச்சுவை.

டிபி கஜேந்திரன் & நளினிகாந்த் ஓரிரு காட்சிகளில் வருகின்றனர். இவர்கள் படத்தில் ஏனோ என்பது புரியவில்லை.

20 வருடங்களுக்குப் பிறகு ஐ லியோனி சினிமாவில் நடித்துள்ளார். அவருக்கு பெரிய காட்சிகள் இல்லை என்றாலும் கொடுத்த காட்சியில் சிறப்பு.

டெக்னீஷியன்கள்…

கிட்டத்தட்ட காமெடி நடிகர்கள் மட்டும் பத்து பேர் இருந்தும் படத்தில் காமெடிக்கு பெரிய பஞ்சம் உள்ளது. காமெடி செய்ய மறுத்துவிட்டார் இயக்குனர் அனுச்சரன்.

ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

பின்னணி இசையும் பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை என்றாலும் ரசிக்கலாம்.

ஆக மொத்தம் இந்த பன்னிக்குட்டி… மூடநம்பிக்கையின் உச்சம்

Panni Kutty movie review in Tamil

More Articles
Follows