தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர்கள் : ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ், அசுதோஷ் ராணா, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ் மற்றும் பலர்.
இயக்கம் : சாய் ரமணி
இசை : அம்ரீஷ் கணேஷ்
ஒளிப்பதிவாளர் : சர்வேஷ் முரளி
எடிட்டிங்: கே.எல். பிரவீன்
பி.ஆர்.ஓ.: மௌனம் ரவி
தயாரிப்பாளர் : சூப்பர் குட் பிலிம்ஸ்
கதைக்களம்…
போலீஸ் துறையில் மட்டும்தான் சங்கம் இல்லை. அதில் பிரிவினை வரக்கூடாது என்பதால்தான் இந்த விதிமுறை.
ஆனாலும் சில அதிகாரிகளுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினையாலும் அவர்கள் ரவுடியிசத்துக்கு துணை போவதாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.
அதுபோலதான் இங்கே நேர்மையான சத்யராஜ் மற்றும் நேர்மையற்ற லாரன்ஸ் இருவருக்கும் இடையே நடைபெறும் பனிப்போர் தான் இந்த மொட்ட சிவா கெட்ட சிவா.
கதாபாத்திரங்கள்…
டைட்டில் கார்டில் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ லாரன்ஸ் என்றுதான் அறிமுகமாகிறார். (உங்க தலைவர் ரஜினிக்கு தெரியுமா…?)
ஆனால் படத்தின் விளம்பரங்களில் இந்த வாசகம் இல்லையே சார்? என்னமோ திட்டமிருக்கு..?
தனது வழக்கமான பார்முலாவில் ரவுண்ட் கட்டி அடிக்கிறார் லாரன்ஸ்.
தெலுங்கு பட்டாஸ் படத்தின் ரீமேக் என்பதால் வில்லன் ஆட்களை அடித்து பட்டைய கிளப்புகிறார். வில்லனிடம் செய்யும் சேட்டைகளை ரசிக்கலாம்.
லாரன்சுக்கு இணையாக நிக்கி கல்ராணி ஆட்டம் போடுகிறார். ஆனால் பெரும்பாலும் பாடலுக்கு மட்டுமே வருகிறார். இவருடன் குத்து பாட்டுக்கு லட்சுமி ராயும் வந்து கிறங்கடிக்கிறார்.
சத்யராஜ் தன் வேலையை வெகு சிறப்பாக செய்துள்ளார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
அம்ரீஷ் இசையில் பாடல்கள் செம குத்து ரகம். மாஸ் மாஸ் பாடல் தாளம் போட வைக்கும்.
ஒளிப்பதிவு பயங்கர கலர்புல். தெலுங்கில் நேரடியாக ரிலீஸ் செய்துவிடலாம்.
படத்தின் ப்ளஸ் அண்ட் மைனஸ்…
பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. ஆனால் அனைத்தும் செட் போடப்பட்டுள்ளது. கொஞ்சம் லொக்கேஷன் சேஞ்ச் செய்திருக்கலாம். ஒரு மெலோடி கொடுத்திருக்கலாம்.
போலீஸ் ஸ்டேஷன் முன்பு அவர்களே அராஜகம் செய்கின்றனர். ஊருக்கே கேமரா வைக்க சொல்லும் போலீஸ் அங்கே கேமரா வைக்கவில்லையா? அதுபற்றி வில்லனுக்கு சொல்ல தெரியாதா?
சதீஷ், கோவை சரளா சாம்ஸ் இருந்தும் காமெடி சொல்லும்படியாக இல்லை என்பது வருத்தமே.
ஆக்ஷன் பிரியர்கள் மட்டும் ரசிக்கும்படி மேஜிக் செய்திருக்கிறார் டைரக்டர் சாய்ரமணி.
பன்ச் டயலாக்ஸ்களுக்கும் பறந்து பறந்து அடிக்கும் பைட்டுக்கும் பஞ்சமில்லை.
மொட்ட சிவா கெட்ட சிவா… பைட்டு பாட்டு வெய்ட்டு சிவா…